என்னைப் பற்றி சில வார்த்தைகள்

வாழ்த்துகள் வநிஷா
💐♥️
உங்க எல்லா கதையும்
பிடிக்கும்
ஆனா எப்பவும் மறக்காத
சிமியும் அவ மனசுக்குள்ள
திட்டும் அவ பிக்காஸூம்
😀😜

பிளாக்கியும் துரையும்
🩷🤩 நிறைய பிடிக்கும்
அருமையான இந்த எழுத்து பயணம் சிறப்பாய் தொடருட்டும் 👏👏💐
 
அறிமுகம் இல்லாமலே
அகத்துக்குள் வந்தவர்
அறிமுகம் ஆன பின்
அன்பில் தொடர்ந்தேன்....
அழுகையிலும் கரைந்துள்ளேன்....
அதிக சிரிப்பிலும் திளைத்துள்ளேன்....
அனைத்து கதைகளும்
அலாதி இன்பம் கூடும்...
அற்புதமாக இருக்கிறது அற்புதா....

வாழ்த்துக்கள் டார்லிங் ( வநிஷாலிங்).... 💐👏🏻🙏🏻👍🏻❤️❤️❤️😘😘😘
 
வணக்கம் டியர்ஸ்,

பலருக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும். சுமார் ஏழு வருஷமா நான் எழுதிட்டு இருக்கேன்! சுமார் முப்பது கதைகள் எழுதிருப்பேன் நினைக்கிறேன்.

புனைப் பெயர் : வநிஷா

சொந்தப் பெயர் : அற்புதா

சின்னதுல இருந்தே ஸ்கூல் புக்க விட்டுட்டு கதைப் புத்தகம் படிச்ச கேஸ் நானு! வாய் பேச வராதப்பவே புக்ஸ தலை கீழா திருப்பி வச்சு இஷ்டத்துக்குப் படிப்பேன்னு அம்மா சொல்வாங்க! இந்தப் படிக்கற பழக்கம்லாம் கூட அவங்க கிட்ட இருந்து ஒட்டிக்கிட்டதுதான். ஆனா சத்தியமா நான் ஓர் எழுத்தாளரா வருவேன்னு நெனைச்சிப் பார்த்தது இல்ல. எழுத்தாளர்னு நானே என்னை ஒத்துக்கிட்டது இல்ல. ஏதோ கிறுக்கித் தள்ளும் கிறுக்கின்னு வேணும்னா வச்சிக்கலாம்!!! :)

இதுக்கும் மேல என்ன சொல்ல என்னைப் பத்தி??? அவ்ளோ சுவாரசியமான விஷயம் ஏதுமில்ல. இப்போதைக்கு நான் ஒரு முழுநேர குடும்பத் தலைவி!! வீட்டு வேலை, சமையல், ட்ரைவர் வேலை, கதை படிக்கறது, எழுத்துன்னு ரெக்கைக் கட்டிட்டுப் பறக்குது நேரம்.

வேற எதாவது என்னைப் பற்றித் தெரியனும்னா நீங்க கமேண்ட்ல கேக்கலாம்!!!

லவ் யூ ஆல் :)
இத்தனை நாட்கள் எப்படி இந்த site பார்காமல் miss paninan nu theriala. "Arputha" nice name sis. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
 
Back
Top