kodi sundar
Well-known member
அத்தியாயம் 36
"கீத்"
"ம்ம்"
"தலையில ஏதோ கிரீடம் வச்சா மாதிரி கர்வமா இருக்கு"
வர்ஷினி சிரிக்க,
"அப்பா, அம்மா சும்மா என்னப் பார்த்து சிரிச்சா கூட கூச்சமா இருக்கு கீத்து"
"அப்புறம்?"
"உன் பையனுக்கு நான் கிரிக்கெட் கத்துக் குடுப்பேன்னு தினேஷ் சொல்றான். என்னால நம்ம பிள்ளையப் பத்தி அப்படி வெளிப்படையா பேச முடியல கீத்"
"ஹாஹா அப்புறம்?"
"போற வழியில ஏதாவது சின்ன பசங்களப் பார்த்தா தூக்கிக் கொஞ்சணும் போல இருக்கு"
வர்ஷினி பாசத்துடன் பார்த்தாள்.
"இந்த பஷர் ரெண்டு மூணு நாளா என் முகத்தை முகத்தைப் பார்க்கிறார். அவர்கிட்ட எப்படி சொல்வேன் கீத்து?"
வர்ஷினி வாய்விட்டு சிரிக்க,
"ப்ச் சிரிக்காத பொண்ணு. நீ ஒழுங்கா சாப்பிட மாட்டுற, மயக்கம் வேற வருது. எப்படி தான் பிள்ளையை சுமப்பியோ'னு பயமாவும் இருக்கு"
"அவ்ளோ பயமிருந்தா நீங்க சுமக்க வேண்டியது தான?"
கார்த்திக் சட்டென்று எழுந்து நின்றான்.
"என்ன சுமக்க மாட்டேன்னு நினைச்சியா, பாரு இப்போ"
என்றவன், வர்ஷினியை அப்படியேத் தூக்கிவிட்டான்.
"அய்யே! இறக்கி விடுங்க"
"ம்ஹூம், நீ பிள்ளையப் பெத்தெடுக்குற வரை, நான் உங்க ரெண்டு பேரை சுமக்குறேன்"
அன்றிலிருந்து, இப்படிக் கொஞ்ச நேரம் மனைவி, பிள்ளையைத் தூக்கி சுமப்பது அவன் வழமையாயிற்று. தாய்மை என்று பெரிதாய் புகழ்ந்து விடுகிறோம். ஆனால் தந்தைக்கும் ஒரு "மை"யுண்டு. அவன் தன் கடமைகளில் அதிகம் சுழன்று விடுவதால், பெண்ணைப்போல் அதிகம் பேசாததால் அந்த மை கண்ணுக்குத் தெரிவதில்லை.
அடுத்தநாளும், கார்த்திக் முகத்தில் இருந்த பூரிப்பைப் பார்த்து, பஷர் கேட்டே விட்டான்,
"சார், எதுவும் ஸ்பெஷலா?" என்று.
"உங்கப் பிள்ளை எப்படியிருக்கான் பஷர்?
என்று இவன் பதிலுக்குக் கேட்க, பஷருக்குப் புரிந்துவிட்டது. கார்த்திக்கை அவன் வாழ்த்த, புன்னகையுடன் தலையசைத்தான்.
கமிஷனர் அலுவலகம் சென்று கொண்டிருந்தார்கள்.
"சார், போற வழியில எத்திராஜைப் பார்த்துட்டுப் போயிடலாம்"
"ஏன் பஷர்?"
"அவர் ஏதோ கேஸ்ல மாட்டியிருக்கார் போல"
"ஓஹ், அப்ப போலாம்"
போனார்கள்.
எத்திராஜ் சல்யூட் அடித்து நின்றார்.
"என்னாச்சு?"
ஒரு ஃபைலை எடுத்துக் கொடுத்தார் அவர்.
"சார், இவ பேரு பேட்டை முனியம்மா. ஸ்கூல் வாசல்ல நின்னு, பிள்ளைங்களுக்கு கஞ்சா சாக்லேட் கொடுத்து, கடத்திட்டுப் போறது தான் இவ வேலை. நானும் இவளப் பிடிக்க எவ்ளோ முயற்சிக்கிறேன். நழுவிட்றா"
கார்த்திக் முகம் கோபமானது. பஷர் சொன்னான்..
"எனக்கு சாயந்திரம் வரை டைம் கொடுங்க. நான் பிடிக்கிறேன் இவளை"
"அதுக்கு அவசியமே இல்ல. நம்மப் பேட்டைல இப்படி ஒருத்திய நாங்க விட்ருவோமா? பிடிச்சிக்கிட்டு வந்துட்டேன் பாருங்க"
என்றபடி செந்தில் அவன் நண்பர்கள் மற்றும் பேட்டை முனியம்மாவோடு நின்றிருந்தான்.
எத்திராஜுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. செந்தில் கேட்டான்..
"கம்பத்திலக் கட்டிடலாமா அண்ணா?"
கார்த்திக்கிற்கு அதில் சம்மதமில்லை. பெண் போலீஸிடம் அவன் கண்காட்ட, அவர் உள்ளே இழுத்துச் சென்றார், அந்தப் பெண்ணை. செந்திலை அன்புடன் பார்த்தான் கார்த்திக்.
செந்தில் சொன்னான்..
"அட என்ன'ண்ணா? நம்மத் தலைவரைக் கல்யாணம் பண்ணதுல இருந்து சக்தி அக்காவையும் ஆளக் காணோம். பத்திரிக்கை ஆஃபீஸ்ல வேலைப் பார்த்து எனக்கு அலுத்துப் போச்சு. என்னை உங்கக் கூடே வச்சிக்கோங்க"
"டேய், நீ இன்னும் ப்ளஸ் டூவே முடிக்கல. உனக்கு சார் கூட இருக்கணுமா?" என்றான் பஷர்.
கார்த்திக் சிரித்துவிட்டு சொன்னான்..
"சீக்கிரமே உன்னைக் கூட்டிக்கிறேன் டா"
"ஆன் அது"
என்று சிரித்தான் செந்தில்.
நந்தகுமாரிடம், கார்த்திக் இவ்விஷயத்தைப் பகிர்ந்து கொண்டான். வீட்டில், பள்ளியில் பாதுகாப்பாக இருக்கும் பிள்ளைகள், சமூகத்தோடு கலக்கும்போது நேரிடும் அபாயங்கள் அவனுக்கு அதிர்வைக் கொடுத்திருந்தது.
"ஏதாச்சும் செய்யணும் நந்துப்பா"
என்றான்.
இரவு சாப்பிடும் நேரம், இதேப் பேச்சு தொடர, வர்ஷினி சொன்னாள்..
"ஏன்? நீங்க'லாம் விஐபிங்களுக்கு தான் பாதுகாப்புத் தருவீங்களா, ஸ்கூல் பிள்ளைங்களுக்குத் தர மாட்டீங்களா?"
"தடுக்கி விழுந்தா ஒரு ஸ்கூல் இருக்கு கீத்து. சென்னையில மொத்தம் நூத்தி முப்பத்தஞ்சு போலீஸ் ஸ்டேஷன் தான் இருக்கு. எல்லா ஸ்கூலுக்கும் எப்டி பாதுகாப்பு கொடுக்க முடியும்? இத்தனைக்கும் நாங்க ஸ்கூல் டைமிங்ல ரோந்து போறது வழக்கம்"
"சரி, எல்லா ஸ்கூலுக்கும் வேணாம். முதல்ல கவர்ன்மெண்ட் ஸ்கூலுக்கு மட்டும் கொடுங்க. உங்களைப் பார்த்து பிரைவேட் ஸ்கூல், தானா ஸ்ட்ராங்கான பாதுகாப்பு வைப்பாங்க தான?
"....."
"தனக்கு ஏதாவது சிரமம்'னா சொல்லிக்க போலீஸ் இருக்காங்க அப்படிங்கிறது, அந்தப் பிள்ளைகளுக்கு எவ்ளோத் தெம்பா இருக்கும்?"
வர்ஷினி விடாமல் வாதித்ததைப் பார்த்து நந்தகுமார் சிரித்தார்.
"நீ சொன்னதுக்காகவே செஞ்சிடலாம் வர்ஷினி'மா" என்றார்.
அறைக்கு வந்தபின்பு சொன்னான்..
"இப்பப் புரியதுடி, உன் ஸ்கூல் வாசல்ல துப்பாக்கியோடக் காவல்காரனா நிப்பேன்னு, நான் அன்னைக்கு சொன்னதை மனசுல வச்சிக்கிட்டு தான இந்தப் பிளான் போடுற?"
வர்ஷினி சிரித்தாள்.
"ஏன் நிக்க மாட்டீங்களா மிஸ்டர் போலீஸ்கார்?"
"நிப்பேன்டி நிப்பேன், பதிலுக்கு இந்தப் போலீஸ்காரனுக்கு என்ன தருவ?"
"உங்கப் பிள்ளையைத் தருவேன்"
என்றவள், அவன் மடியில் அமர்ந்துவிட, ஒழுங்காக சாப்பிடாமல் ஒட்டிக்கிடந்த அவள் வயிற்றில் அவன் கை ஊர்ந்து, அவனுக்குப் பிடித்த இடத்தை நெருடியது. வர்ஷினி அவனைப் பார்த்து திரும்பி அமர்ந்தாள். இருக்கும் அன்பையெல்லாம் சேர்த்துப் பிசைந்து காமம் செய்தார்கள்.
பின்பான நாட்களில், குமரனை வயிற்றில் சுமந்து பள்ளிக்கு சென்று வந்தாள் வர்ஷினி. கார்த்திக்கும் தன் பணியில் மும்மரமாக இருந்தான். கமிஷனர் நந்தகுமார் போடும் திட்டங்களில், காவல் அதிகாரிகள் செயல்பட, மாநகர மக்களுக்கு,
"காவல்துறை உங்கள் நண்பன்"
என்ற பழைய நம்பிக்கை திரும்பி வந்திருந்தது. எனினும் கார்த்திக்கின் தனிப்பட்ட விருப்பம் என்பது, போதைப் பழக்கத்தை ஒழிப்பதுதான். அரசாங்கமே குடிக்கும், போதைக்கும் மறைமுக ஊக்கம் தந்ததில் அடியோடு அதை ஒழிக்க முடியாது போனாலும், போதை மருந்து கடத்தலை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, கபிலனைப் போன்றோர் கொஞ்சம் அடக்கியே வாசித்தனர்.
இந்த நேரத்தில்,
"தாஸ்" படம் முழுதும் தயாராகிவிட, அதன் சிறப்புக் காட்சியைத் தன் குடும்பத்திற்குப் போட்டுக் காட்டினார், அதன் தயாரிப்பாளரான ஆனந்தன். முன்னர் சொன்னது தான்..
பெயர் போடும் தொடக்கக் காட்சியில், கார்த்திக் தன் அரசாங்க வாகனத்தை, வேகமாக ஓட்டிக்கொண்டு வர, அவனுக்கு இணையாக ரிஷி ஓடிவரும் காட்சி போடப்பட்டு, ரிஷியின் நிஜவாழ்வின் நண்பன்...
"கார்த்திகேயன் ஐபிஎஸ்"
என்று பெயர் காட்டப்பட்டதோடு, படம் முடிகையில், கார்த்திக், ரிஷியை உள்ளங்கையில் தூக்கி நிற்கும் காட்சியும் இருக்க, கார்த்திக் திகைத்தான்.
"டேய், என்னங்கடா இது?" என்றான்.
"ண்ணா, என் மொபைல்ல வச்சிருந்த வீடியோவை டைரக்டர் சார் பிடுங்கிட்டார்" என்றான் தினேஷ்.
"நீயே எடுத்துக் கொடுத்துட்டு பொய்யா சொல்ற"
என்றவன், வர்ஷினி, சக்தியைத் தாண்டி தம்பியைத் தொட முயல,
"டிஸ்டர்ப் பண்ணாம படம் பார்க்க விடு'ண்ணா"
என்று சிணுங்கினாள் சக்தி.
"ஓஹ், இந்த ரௌடிப் பயலுக்கு நீங்க எல்லாரும் சப்போர்ட்டா?"
என்று சொல்லி தன் பக்கத்தில் அமர்ந்திருந்த ரிஷியைப் பார்க்க, ரிஷியின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. அன்பாகச் சொன்னான்..
"இந்தப் படமே உனக்காக தான கார்த்தி, நீ இல்லாம எப்படி?"
பதிலாகக் கார்த்திக் சொன்னான்..
"கீத்துவ கூட சமாளிச்சிருவேன்டா. உனக்கு சொல்ல தான், என்கிட்ட எந்த பதிலும் இருக்க மாட்டுது"
ரிஷிதர் சிரிக்க, வழமைபோல் அவன் சுருண்ட முடிக்கற்றையைப் பிடித்து ஆட்டினான் கார்த்திக்.
படம் மிகவும் நன்றாக வந்திருக்க, அடுத்தநாள் தியேட்டரில் வெளியானது. முதல் நாள் காட்சி ரசிகர்களின் ஆரவாரத்தோடுத் தொடங்க, ஆட்டம்போட்டு சீழ்க்கையடித்து, தன் நண்பர்களுடன் கொண்டாடித் தீர்த்தான் செந்தில். அடுத்தடுத்த நாட்களில் படம் அத்தனை மொழிகளிலும் சக்கைபோடு போட்டது.
இந்த வெற்றியைக் கொண்டாட, கடற்கரை வீட்டில் வந்து தங்கினர் இரண்டு ஜோடிகளும். மாலையில் காற்று வாங்கியபடி, வீட்டின் முன்புறம் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போது தயாரிப்பாளர் ஒருவர் அங்கு வந்து நின்றார். ரிஷி சொன்னான்..
"எதுவா இருந்தாலும், ஆஃபீஸ்ல போய் என் பிஏ கிட்ட பேசுங்க. இங்க நான் யாரையும் பார்க்க மாட்டேன்"
"சார், நான் பார்க்க வந்தது, இவரை"
என்று அவர் கார்த்திக்கைக் காட்ட,
"என்ன வேணும்?"
என்றான் கார்த்திக்.
"என்னோட அடுத்தப் படத்தில நீங்க ஹீரோவா நடிக்கணும்"
என்றார்.
வர்ஷினியும், சக்தியும் திகைக்க, கார்த்திக் ரிஷியை தான் முறைத்தான்.
"ஹாஹாஹா, கார்த்தி இதுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. தாஸ் படத்துல உன்னைப் பார்த்துட்டு வந்திருப்பார்"
"அதுக்கும் நீதானடா காரணம்?"
"இல்ல கார்த்தி, நீ ஹீரோ மாதிரி இருக்க. அதான் காரணம்"
"டேய் உன்ன?"
என்றபடி, கார்த்திக் ரிஷியை விரட்டிச் சென்றான். சக்தி அந்த நபரிடம் எதையோ சொல்லி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்ப, விளையாட்டும் சண்டையுமாக இருவரும் மோதிக் கொண்டிருந்தனர். அதை, வர்ஷினியோடு சேர்ந்து ரசித்துப் பார்க்க, வர்ஷினி சொன்னாள்..
"ஒரு புறாவைக் காப்பாற்றத் தன் தசையை வெட்டிப் பருந்துக்குக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தி பெயரை இந்தப் படத்துக்கு வச்சது எவ்ளோ பொருத்தம். இல்ல சக்தி?"
"எப்படி சொல்ற வர்ஷி?"
"ரிஷியண்ணாவும், தன் நட்பைக் காப்பாற்ற, தன் சுயத்தை விட்டுக் கொடுத்தார் தான?"
சண்டையை நிறுத்திவிட்டு, ரிஷி வர்ஷினியை அன்புடன் பார்க்க,
"இப்படி தான்டா பேசிப்பேசி ஆளை மயக்குவா"
என்றான் கார்த்திக்.
கிடைத்த சின்னத் தனிமையில், வர்ஷினி அவனிடம் கேட்டாள்...
"அப்படி என்ன நான் பேசி மயக்கினேன், அப்படி என்ன நீங்க மயங்கிட்டீங்க?"
"சொல்லிடுவேன், ரிஷி பைய காதுல விழுந்துடும்'னு பாக்குறேன்"
"அவர் காதுல விழாம, என் காதுல மட்டும் சொல்லுங்க"
கார்த்திக் திரும்பிப் பார்த்தான். இவர்கள் போல் அச்சமெதும் இல்லாமல் தங்களை மறந்து காதல் செய்திருந்தார்கள் ரிஷியும், சக்தியும். எனவே அவளை இழுத்து தன் முன்னே நிறுத்திக் கேட்டான்..
"சொல்லட்டா?"
"ம்ம்ம். சொல்லுங்க"
"வாய் மொழியில் தமிழ் பேசி மயக்கின"
வர்ஷினி சிரிக்க, விரலால் தொட்டுத்தொட்டு சொன்னான்..
"இதோ கன்னக்குழியில் என்னைக் கட்டி மயக்கின"
"அப்புறம்?"
"கழுத்துக் குழியில் தாகம் காட்டி மயக்கின"
"ஆஹான், அப்புறம்?"
"நெஞ்சுக்குழியில் காமம் தந்து மயக்கின"
வர்ஷினி அமைதியாகிவிட,
"வயிற்றுக்குழியில் பிள்ளை தந்து மயக்கின"
என்றவன், அவள் மீது சாய்ந்து, காதுக்குள் பாடினான்..
"மயக்கம் தந்தது யார் தமிழோ, அமுதோ, இவளோ"
இப்போது மயங்கி நின்றாள் வர்ஷினி.
"நீ சொல்லுடி"
என்றான்.
பட்டென்று கண்களைத் திறந்து சொன்னாள்..
"பார்த்த நிமிஷமே காக்கிச் சட்டையில் மயக்கினீங்க"
வாய்விட்டுச் சிரித்தான் அச்சு வெல்லக்கட்டி கார்த்திக்.
இத்தனை மகிழ்வுக்கும் காரணமான "சிபிதாஸ்" படத்தின் வருமானத்தை, பள்ளிக்கூடம் கட்ட மட்டுமே செலவிட்டார் ஆனந்தன். கட்டிடத்தை அழகாக எழுப்பியிருந்தான் வீரா. வர்ஷினியின் வயிற்றுப் பிள்ளை போலவே அதுவும் வளர்ந்து கொண்டிருந்தது.
கல்விக்கூடம், விளையாட்டுத் திடல், கலையரங்கம் என்று பார்த்துப் பார்த்து ரசித்து வரைந்த அழகான ஓவியமாக உருவானது.. அந்த வள்ளுவர் கல்விக்கூடம்.
இது, இவ்விதம் இப்படியிருக்க,
ஷூட்டிங் என்ற பெயரில் தன் மனைவியை நாடுநாடாக அழைத்துச் சென்று, பல ஹனிமூன்கள் கொண்டாடினான் ரிஷிதர். ஒவ்வொரு முறையும் அவனோடு சந்தோஷமாகவே பயணித்த சக்தி,