• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

கேப்ஷன் குடுங்கப்பா!!!

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

கதைக்கு சீன் யோசிக்கறத விட முதல் வரில போடற கேப்ஷன் யோசிக்கத்தான் மண்ட காயுது!! நீ. ....... நான். ..... கோடிட்ட இடத்தை நான் போடற மாதொயே கமேடியா இல்லாம இமோஷனலா குடுங்க ப்ளீஸ்!! கேப்ஷன சைட்ல மட்டும்தான் கமேண்டா இடனும். கூடவே உங்க பேர் போடுங்க! புக்கா வரப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்ஷன் உங்க பேரோட வரும்!!

ப்ளீஸ் ஹெல்ப் கரோ!!!!
 
இந்த கதைக்கு தொடர்பாகவா? இல்லை பொதுவாகவா? நான் இன்னும் இந்த கதை படிக்கவில்லை. அதனால் பொதுவாக....

'நீ அறியா நான் அறிவாயோ??????'
 
வணக்கம் டியர்ஸ்,

கதைக்கு சீன் யோசிக்கறத விட முதல் வரில போடற கேப்ஷன் யோசிக்கத்தான் மண்ட காயுது!! நீ. ....... நான். ..... கோடிட்ட இடத்தை நான் போடற மாதொயே கமேடியா இல்லாம இமோஷனலா குடுங்க ப்ளீஸ்!! கேப்ஷன சைட்ல மட்டும்தான் கமேண்டா இடனும். கூடவே உங்க பேர் போடுங்க! புக்கா வரப்ப தேர்ந்தெடுக்கப்பட்ட கேப்ஷன் உங்க பேரோட வரும்!!

ப்ளீஸ் ஹெல்ப் கரோ!!!!
Story la enna content nnu theriyaama enna solla ma 🙄🙄🙄
 
இந்த கதைக்கு தொடர்பாகவா? இல்லை பொதுவாகவா? நான் இன்னும் இந்த கதை படிக்கவில்லை. அதனால் பொதுவாக....

'நீ அறியா நான் அறிவாயோ??????'
Kathaiye padikarapo every episode la ipdi varumpa.. Athe pola venum
 
நீ காற்று என்றால் நான் உன்னை வருடும் தென்றல் ஆவேன்

நீ மலர் என்றால் நான் உனை கொய்யும் வண்டாவேன்.

நீ மேகம் என்றால் நான் உனை குளிர்விக்கும் மழை ஆவேன்

நீ பாடல் என்றால் நான் அதன் ஜீவனாவேன்

நீ சிந்தனை என்றால் நான் எண்ணம் ஆவேன்‌

நீ குயில் என்றால் நான் அதன் ஓசை ஆவேன்.

நீ காடு என்றால் நான் அதில் உலவும் மான் ஆவேன்‌.

அம்முக்கா இதை உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கோங்க
 
நீ காற்று என்றால் நான் உன்னை வருடும் தென்றல் ஆவேன்

நீ மலர் என்றால் நான் உனை கொய்யும் வண்டாவேன்.

நீ மேகம் என்றால் நான் உனை குளிர்விக்கும் மழை ஆவேன்

நீ பாடல் என்றால் நான் அதன் ஜீவனாவேன்

நீ சிந்தனை என்றால் நான் எண்ணம் ஆவேன்‌

நீ குயில் என்றால் நான் அதன் ஓசை ஆவேன்.

நீ காடு என்றால் நான் அதில் உலவும் மான் ஆவேன்‌.

அம்முக்கா இதை உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கோங்க
Thank you da Narms :)
 
நீ கவிதை என்றால் அதன் கருப்பொருள் நானாவேன்

நீ இசை என்றால் அதன் இனிமை நானாவேன்

நீ உடல் என்றால் நான் உயிராவேன்

நீ அலைபேசி என்றால் நான் உயிரூட்டி (charge) ஆவேன்

நீ கண் என்றால் நான் கருவிழி ஆவேன்

நீ மழை என்றால் நான் குடை ஆவேன்.
 
😍😍😍

1. நீ நிழலானால் நான் சூரியனாவேன்.

2. நீ வானவில்லானால் நான் மழையாவேன்.

3. நீ சாவியானால் நான் பூட்டாவேன்.

4. நீ புத்தகமானால் நான் எழுத்தாவேன்.

5. நீ தீபமானால் நான் திரியாவேன்.

6. நீ இசையானால் நான் பாடலாவேன்.

7. நீ விதையானால் நான் மண்ணாவேன்.

8. நீ கரையானால் நான் கரையைத் தொடும் அலையாவேன்.

9. நீ மழையானால் நான் குடையாவேன்..

10. நீ ஹீரோயினியானால் நான் ஹீரோவாவேன்..😁😁😁
 
Last edited:
நீ அணிச்சல் என்றால் நான்
சர்க்கரையாவேன்

நீ பகல் என்றால் நான் சூரியனாவேன்

நீ கடவுள் என்றால் நான் கோயிலாவேன்/ சரணாகதியாவேன்

நீ அணு என்றால் நான் கருவாவேன்

நீ தண்ணீர் என்றால் நான் தாகமாவேன்

நீ அரசன் என்றால் நான் மகுடமாவேன்
 
Last edited:
நீ பெண் என்றால் நான் ஞானச்செருக்காவேன்

நீ குழந்தை என்றால் நான் உன்
பொம்மையாவேன்/ அன்னையாவேன்

நீ தமிழ் என்றால் நான் காப்பியமாவேன்
 
Last edited:
நீ பூ என்றால் நான் அதன் சுகந்தம் ஆவேன்

நீ முத்தம் என்றால் நான் கிறங்கும் வெட்கமாவேன்/ அளவில்லாத எண்ணிக்கையாவேன்

நீ தீண்டல் என்றால் நான் விருப்பம் ஆவேன்

நீ என் வாழ்க்கை என்றால் நான் ஆயுள் கைதியாவேன்
 
Last edited:
நாமளும் ஏதாச்சும் சொல்லனுமே.🤔🤔🤔🙄🙄🙄
சரி சொல்லுவோம்.
ஆத்தா 😁 😁 😁 😁 🫣 🫣 🫣
மகமாயி எந்த சேதாரமும் இல்லாம கூட்டி போயிடு.

நீ சட்னி ஆனா நான் கறிவேப்பிலை ஆவேன்.

நீ ராணி ஆனா நான் நீ அமரும் பல்லக்கு ஆவேன்.

நீ இதயமானால் நான் அதன்
துடிப்பாவேன்.

நீ கண்ணானால் நான் பார்வையாவேன்.

நீ உடலானால் நான் உயிராவேன்.

நீ பூவானால் நான் அதில் வாசமாவேன்.

நீ கடவுளானால் நான் ஆராதிக்கும் பக்தனாவேன்.

நீ அணுவானால் நான் அதன் கருப்பொருளாவேன்.
 
நீ காதலென்றால் நான் அன்பாவேன்...

நீ இளமையென்றால் நான் துள்ளலாவேன்..

நீ கீதமென்றால் நான் கவியாவேன்...

நீ மென்மையென்றால் நான் மலராவேன்...

நீ இனிமையென்றால் நான் தேனாவேன்...

நீ பெண்மையென்றால் நான் ஆண்மையாவேன்..😉

நீ இதழென்றால் நான் மலராவேன்....

நீ மலரானால் நான் மணமாவேன்...

நீ நிறமென்றால் நான் வானவில்லாவேன்...

நீ தீயென்றால் நான் தகிப்பாவேன்/அனலாவேன்...

நீ இதயமென்றால் நான் துடிப்பாவேன்...

நீ விரலென்றால் நான் மோதிரமாவேன்...

நீ இடியானால் நான் மின்னலாவேன்...

நீ மழையானால் நான் சக்கவாகப் பறவையாவேன்...

நீ தாளானால் நான் எழுதும் மையாவேன்...

நீ அடுப்பானால் நான் எரியும் நெருப்பாவேன்...

நீ நெருப்பானால் நான் உனை அணைக்கும் நீராவேன்...

நீ பொன்னானால் நான் அணியாவேன்...
 
Last edited:
நீ கதையானல் நான் கருப்பொருள் ஆவேன்

நீ பூ ஆனால் நான் வண்டாவேன்

நீ கரு ஆனால் நான் உயிராவேன்

நீ மலை ஆனால் நான் பனி ஆவேன்

நீ கூந்தல் ஆனால் நான் மலர் ஆவேன்
 
நீ சக்தியானால் நான் சிவமாவேன்...

நீ ஒளியானால் நான் தீபமாவேன்....

நீ கதிரானால் நான் சுடராவேன்...

நீ நித்திரையானால் நான் இரவாவேன்....

நீ அறிவானால் நான் சிந்தையாவேன்/தெளிவாவேன்....

நீ சுவையானால் நான் செங்கனியாவேன்....

நீ தனிமையானால் நான் இனிமையாவேன்/துணையாவேன்....

நீ பனியானால் நான் புல்லாவேன்...

நீ கவிதையானால் நான் கவிஞனாவேன்....

நீ இசையானால் நான் ஸ்வரமாவேன்...

நீ இறையானால் நான் பக்தியாவேன்...

நீ இதழானால் நான் சிரிப்பாவேன்...

நீ வானானால் நான் மழையாவேன்...

நீ குரலானால் நான் ஒலியாவேன்...

நீ கல்லானால் நான் உளியாவேன்...

நீ நதியானால் நான் கடலாவேன்...

நீ சிப்பியானால் நான் முத்தாவேன்...

நீ கடலானால் நான் அலையாவேன்...
 
Last edited:
Back
Top