தயை காட்டு நீ விமர்சனம்

தயை காட்டு நீ! - வநிஷா

மகளின் கல்யாணத்திற்கு, ஒரு குடும்பத்தையே நிர்பந்திப்பதில் ஆரம்பிக்கிறது கதை.

தாட்சாயணி - 'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்'-ன்ற மாதிரி பலருக்கும் பல எண்ணவோட்டம், தாட்சாயணி குடும்பத்தில்; ஆனால், அவளை வெறுத்து ஒதுக்கிவைப்பதில் மட்டும் அத்தனை ஒற்றுமை. சந்திரன், பூரணி பாட்டியைத் தவிர.

உச்சக்கட்ட கோபத்தில்/விரக்தியில் தாட்சாயணி எடுக்கும் முடிவு, அவள் வாழ்வையே ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறது; அதன்மூலம் வரும் வீரபத்ரன் உறவு அவளது காயத்தை/பாதுகாப்பின்மையை நீக்கியதா என்பதை வநிலிங் அவங்களோட பாணியில் சூப்பரா எழுதிருக்காங்க.

பார்த்திபனுக்குத் தேவையான தண்டனைதான்!

தன்னை முற்றுமுழுதாக நேசிக்க உறவுகள் கிடைக்கப்பெற வேண்டுமென்பதாலோ என்னவோ, தாய்-தந்தை உட்பட தன் சொந்த குடும்பத்தினரின் வெறுப்பில் வளர்ந்த தாட்சாவுக்குக் கிடைத்தது அலமேலு குடும்பத்தினரின் அன்பு.

வீரபத்ரன் - தாட்சாயணியின் 'பாகு'. முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொண்டாலும், அடுத்தடுத்து வரும் எபிகளில் தாட்சாவிடம் 'தயை' எதிர்பார்ப்பதுன்னு அழகா வெளிப்படுத்துறான்.

தாய் அலமேலுடம் தன் காதலை வெளிப்படுத்துவதாகட்டும், புரிந்துகொள்ள (முயற்சிக்காத) தன் நட்புகளை முறித்துக்கொள்வதாகட்டும், நம்பியிடம் ஐடியா கேட்பதாகட்டும், தாட்சாயணிட்ட சரிக்குச்சரியா பேசமுடியாமல் 'ச்சீ போடி'னு புறமுதுகிட்டு ஓடுவதாகட்டும், அவளின் 'தயை' கிடைக்கக் காத்திருப்பதாகட்டும்னு இப்படிப் பல இடங்களில் ஸ்கோர் பண்ணிடுறான்.

நம்பி-வீரபத்ரன் உரையாடல், வீராவுக்கு ஐடியா தரும் நம்பி🤣🤣🤣👌அடுத்த ஜென்மத்திலாச்சும் நம்பியோட ஆசை நிறைவேறட்டும்😂😂😂

தாட்சாயணி தன்னைத்தானே புடம் போட்டுக்கொண்டவள்!

சொன்ன கருத்துக்கள், சொல்லப்பட்ட விதம் சூப்பர் வநிலிங்👌👏👏👏👏👏
inbound214647219322157022.jpg
தாட்சாயணிக்கு ஏற்ற வீரபத்ரன்! இவர்களின் வாழ்வை இன்னும் சந்தோஷமாக்க மகள் சந்தோஷி!!

One of the best writings @VanishaAdmin sis💐

'எட்டி நில்லு எச்சரிக்கிறேன்!' கதை re-run பண்ணுங்களேன் @VanishaAdmin sis.
 
Hats off sis unmayil ippadi oru aluthamana kathai Karu eduthu romba alaga story kondu poirukinga Awesome sis ❣️ ❣️ ❣️ ❣️ story sema sema superrrr unga story hero ellam romba super cute 🥰 🥰 🥰 thatcha character sema sema ❤️ ❤️ bagu vasanthi nambi alamu ❤️❤️ poorani super ❤️ ❤️
 
அன்புக்கு எங்கும் அழகிய பெண். நட்பு எனும் உறவில் வந்தது துரோகி என அறிந்தும் மனம் உடையாத அவளின் நிமிர்வை எப்படீ சொல்வது, அவளின் வலி நிறைந்த பாதையை அழகாய் உணரவைத்த உங்கள் எழுத்துக்கள் அருமை...பாகு அன்பின் காதலன்....திருந்தாத தாட்சாவின் உறவுகள்....இப்படியும் தாய் தந்தையா ....வேற லெவல் உங்க எழுத்துக்கள் .....😍😍😘😍😘😍😘
 
வாவ் அருமையான கதை, தாட்சா தைரியமான பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு இருந்த சிறு குறையாகும், வீட்டினர் நிராகரிப்பாலும் நண்பனென்று நம்பி ஒரு துரோகியிடம் ஏமாறுகிறாள். இருந்தாலும் கடவுள் அவள் பக்கம் இருப்பதால் தான் வெல்லப் பாகு, சர்ககரை பாகு ஸ்வீட் வீரபாகு அவளுக்கு கிடைச்சு இருக்கான். ❤❤❤❤
 
Wow story ma....really dhatchayini thanu thane poradi last vara getha irundha... baagu soo sweet person ...alamelu ,nambi ellam semma characters... As usual unga ella novels maathiri idhu oru unique superb wow story ma...semma 😍😍😍❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
 
தயை காட்டு நீ..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 25 எபிலாக்)


வாவ்...ஸோ க்யூட் டா பாகு..!
ஹவ் நைஸ் ஃபேமிலி. இப்படி உன்னையும் தாட்சாவையும் குடும்பமா பார்க்க நாங்க எப்படி துடிச்சோம் தெரியுமா... ?
போத் ஆர் மேட் ஃபார் இச் அதர்ஸ். அன்புக்குண்டோ அடைக்கும் தாழ்...???!!


பாவம் தாட்சா..! இன்னும் அந்த துரோகி பண்ண துரோகத்துல இருந்து வெளியவே வர முடியாம தவிச்சிட்டிருக்கா...!
செத்தவனுக்கு நிரந்தர விடுதலை. உயிரோட இருக்கிறவங்களுக்கு, உயிருள்ள வரை தண்டனைங்கற மாதிரி ஆகிடுச்சு நிலைமை. ஆனா, பாகு தாட்சாவோட இந்த மனநிலையையும் ஸ்போர்ட்டிவாவே எடுத்துக்கிறான். எஸ்.. அவளால அதை கடந்து வர முடியும், பட்.. மறந்து போக முடியாது தானே.
நினைவலைகள்ல அந்த துரோகம் உயிருள்ளவரை நீக்கமற நிறைந்திருக்கும் தானே... ? ஆனா, பாகுவால
அதை கடந்து வரவும் முடியும், தன் முழு அன்பாலேயும், காதலாலேயும் அவளோட கடந்த கால நினைவுகளை மறக்க வைக்க தன்னாலான முயற்சிகள் செய்துட்டே இருப்பான் தானே. விடாமுயற்ச்சி, ஒரு நாள் விஸ்வரூப வெற்றி..!


இப்பக் கூட இவளால அந்த சித்துவை சீண்டாம இருக்க முடியலை போல.. தட் இஸ் எ
ஸ்பிரீட்..! என்ஜாய்..! ஹ..ஹ..ஹ...!


அடேய் நம்பி...! நீ உளறதை மட்டும் தாட்சா கேட்டிருக்கணும்..
அப்புறம் உனக்கு வைச்சிருப்பா ஆப்பு...! யோவ்..நம்பி..! போன ஜென்மத்துல அவளா நீ..!


வாவ்...! உண்மையிலேயே ஒரு நல்ல ஹேப்பியான கதையை படிச்ச திருப்தி. எஸ்... உண்மையிலேயே கதையில எந்த இடத்துலேயும் நம்மளை அழுக்காச்சி ஆக்கலை, தாட்சாவும், பாகுவும். அதுக்கு காரணம் அவங்க ரெண்டு பேரோட கோக்கு மாக்கான வாய் சவடால் தான். போதாக்குறைக்கு நம்ம நம்பியாண்டார் நம்பி வேற தாட்சாக்கு இணையா வாயை விடறதுலயும், ஜொள்ளு விடறதுலேயும் ஒரு அத்தியாயத்துல கூட அந்த அழுத்தம் நமக்கு கொஞ்சம் கூட ஏற்படவேயில்லை. சொல்லப்போனா, ரேப்ங்கிறது எத்தனை பெரிய விஷயம்..? அதுவும் தான் நண்பனா நினைச்சு நம்பி பழகுன நண்பனோட புத்தியே எச்சமா இருக்கிறதோட, எத்தனை கீழ்த்தரமா நடந்துக்கிட்டான்னு நினைக்கிறச்ச நமக்கு நெஞ்சு பதறுது, கொதிக்குதுன்னா... தாட்சாவோ தனக்கு நடந்ததை இன்ச் பை இன்ச் சொல்ல வரச்ச, அதோட தாக்கம் முழுக்க இருந்தாலும்.... என்னோட திமிரும் தைரியமும், துணிச்சலும், என் பக்கத்துல இருக்கிறவரைக்கும் என்னை எந்தவித நெகட்டிவ் தாட்ஸூம் ஒண்ணும் பண்ணிடாதுங்கிற மாதிரியே ஒரு கெத்தை கொடுப்பா பாருங்க... வாவ், வாவ்.... ரியலி ஹாட்ஸ் ஆஃப் டூ யூ தாட்சா..! இந்த வில் பவர் மட்டும் எல்லாருக்கும் இருந்துட்டா.. அதுவும் பாகு மாதிரி ஒரு நல் இதயம் கொண்ட உயர்ந்த உள்ளம் இணையா கிடைச்சிட்டா....
இந்த உலகத்தையே ஜெயிச்ச ஃபீலிங் ஆட்டோமெட்டிக்கா
வந்துடும். வாழ்க வளமுடன்.


இந்த மாதிரி கதைகள் இப்போதைய சூழ்நிலைக்கு ரொம்பவே தேவை.... நம்மளை மோட்டிவேஷன் பண்ற மாதிரி.


இந்த வநி ஜீ மேம்... எப்பவுமே இப்படித்தான்...! அடிக்கடி இப்படி ஒரு ஹார்ட் டச்சிங் கதையை கொடுத்து நம்மளை சொக்கிப் போக வைச்சிடுவாங்க. தவிர, நெகட்டிவ் தாட்ஸ்ஸையும் பாஸிடீவ்வா கொடுக்கிறதுங்கறது இவங்களோட ஹை லைட்டட் டச்சிங்.. அண்ட் மாஸ்டர்பீஸ் டேலண்ட்.


ஹாட்ஸ் ஆஃப் யூ மேம் &
வாழ்த்துக்கள்..!
😃🙏😃🙏😃🙏
CRVS (or) CRVS 2797
 
தயை காட்டு நீ. கதை அருமை அன்பு கிடைக்காமல் ஒருத்தி ஏங்கினாலும் கிடைத்த அன்பை பற்றுகோளாய் வாழ்ந்து கிட்டு இருக்கும் போது ஏமாற்றி கலங்க படுத்தினாலும் வந்த கருவை தனக்கு துணையாக எடுத்து பாதுகாப்பதும் அப்பன் ஒருத்தன் பேருக்கு இருந்து வீரபத்திரன் கணவனாக அமைத்து நல்ல காரியம் செய்கிறான். வீரபத்திரன் மனுஷன் தானே முதலில் தயங்கி பின்னர் அவளின் குணம் நடவடிக்கையில் காதலிக்க ஆரம்பிக்க செம. பாகு குடும்பம் செம தாட்சா குடும்பம் மாமா பாட்டி தவிர மற்ற எல்லோரும் சுயநலவாதி. தாட்சா அவனுக்கு குடும்பம் உருவாக பிரிவு சொல்ல இருந்தாலும் அவனின் அன்பு கொண்டு தள்ளி நின்றே இருக்கிறான் அவனின் அன்பு புரிந்தாலும் அவள் பட்ட அடி நம்ப மறுக்க இருந்தாலும் பிரிவு முடியாது என்று புரிந்து தயை காட்டுகிறாள் அவனும் கேட்க சுபம் பாப்பா தாட்சா அவனுக்கு போட்டி போடுவது அவனும் சமாளிப்பது செம. தாட்சா செம எழுதி சம்பாதித்து தனது வாழ்வை தன்னம்பிக்கை தைரியம் கொண்டு வாழ்வது அழகு. பாகு தாட்சா பாப்பா கியூபா குடும்பம் அமெரிக்காவில் முடிப்பது செம. வாழ்த்துகள்dear.வாழ்க வளமுடன்
 
Barani D

வநிஷாவின் ' தயை காட்டு நீ '
எதுகை மோனை எழுத்துகள்
வநிஷாவின் சிறப்புன்னு
சொல்லலாம். 👍👍👍
கதை முழுதும் தனது தனிப்பட்ட
எழுத்துக்களால் கதையை சுவாரசியமாக
நகர்த்தியிருக்கும் எழுத்தாளரை
என்னவென்று சொல்வது.🤗
மிகவும் சிறப்பு. 👍👍👍
சந்தர்ப்ப சூழ்நிலையால்
கர்ப்பமாகும் தன் அராத்து மகள்
தாட்சாயினியை தனது நிறுவனத்தில் சூப்பர்வைசராக
பணிபுரியும் குருசாமியை
அவரது வேலை மற்றும் கடனை
காரணம் காட்டி மிரட்டலில்
அவரது மகன் வீரபத்ரனுக்கு
திருமணம் செய்து வைக்கிறார்
ராமனாதன். 😒
குடும்ப சூழ்நிலையால்
சிறப்பாக படித்து ஐடி வேலையில்
இருக்கும் வீரபத்ரன் பொறுப்பான
ஆண்மகனாக மனைவி தாட்சாவை
அரவணைக்க நினைக்க
அராத்து மொழிகளில் அவனிடம்
வம்பு வளர்க்கறாள் பாவை. 😏
ஆனாலும் இருவரும் அவரவர்
குணநலன்களில் ஈர்க்கப்படுவதுதான் நிஜம். 👍
தாட்சா தயை காட்டு நீ என
அவளிடம் சரணடையும்
இந்த சீனிபாகு வெல்லப் பாகு
சர்க்கரை பாகு ம்ம் ம்
மைசூர்பாகு வீரபத்ரன்
ரொம்பவே ஸ்வீட்டான
நாயகன்தான்.❤️
சந்தர்ப்பவசத்தால் தங்களின்பெண்மையை
இழக்கும் பெண்களுக்கான
சமர்ப்பண
கதையாக இந்தக் கதையை
படைத்திருக்கும் எழுத்தாளர் வநிஷாவின் சிறப்பை
என்னவென்று சொல்வது. 👍
கதை மிகவும் அருமை.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

 
Thanks dear Meenakshi Rajendran :)

#meenakshirajendran #meenureviews #MRNovels

Vanisha Novels
தயை காட்டு நீ! - வநிஷா.

வநிஷா அக்கா எப்போதும் ஒரு வித்யாசமான கதைக் கருவை எடுப்பாங்க. அடாவடி அடமன்ட் தாட்சா. அக்மார்க் அம்மாஞ்சி பாகு. கர்ப்பமாக இருக்கும் தாட்சாவுடன் கட்டாயத்தில் நடக்கும் திருமணம். தாட்சா வாழ்வில் நடந்தது என்ன?
தாட்சா ரொம்ப மனவுறுதி கொண்ட பெண். சிறுவயதிலிருந்தே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட வள். வீட்டில் அன்பு கிடைக்காதவள் வெளியில் தேடுகிறாள். எல்லா பெண்களும் ஏதோ ஒரு வகையில் ஆண்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அழுத்தமான கதைக்களத்தில் கூட புன்னகைக்க வைத்திருந்தார். மாம்ஸ் மச்சான் வேற லெவல்‌.

அவங்களோட வழக்கமான டைமிங்கில் ரைமிங்கில் எழுதி இருக்காங்க. டோன்ட் மிஸ் இட்.

ஒரு ஒரு எபியாக போடாமல் மொத்தமாக போட்டு ஆத்தர் கொஞ்சம் தயை காட்டி இருக்கலாம். அடுத்தடுத்த ரிவியூவில் சந்திக்கலாம்.
 
Thanks dear Sudhakar!!

தயை காட்டு நீ _vanisha

எப்படி சொல்றதுன்னு தெரியல எவ்வளவு ஒரு அழுத்தமான கதைக்களம் அதையும் இவ்ளோ எதுகை மோனை ஓட உங்களோட அக்மார்க் காமெடி சென்ஸ் ஓட அவ்ளோ ரசிக்கும் படியா இருந்தது 💞💞💞💞💞💞💞😍😍😍😍💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰
தாட்ஷா பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் என்ன ஒரு தைரியம் என்ன ஒரு மெச்சூரிட்டி அவ்வளவு திமிரா காட்டி இருந்தாலும் உள்ளுக்குள்ள எவ்வளவு வலி வைத்திருந்தால் எப்படி ஆறுதலுக்கு பிரண்டு என்று சொல்லி ஒரு கயவனை நம்பி இருப்பாள். நெஜமா திமிரா இருக்கிற பெண்களிடம் நிறைய சொல்ல முடியாத வலி இருக்கும் அது இவள் விஷயத்துல நண்பன்னு நம்புன துரோகியால் அவள் எதிர்காலத்தில் யாரையும் நம்ப முடியாத அளவுக்கு பண்ணிருச்சு ❤️❤️❤️
பாகு நிஜமாவே அவன் சக்கர பாகு வெல்லப்பாகு மைசூர்பாகுதான் அவன் சூழ்நிலையால் கல்யாணம் பண்ணி இருந்தாலும் அவளை எல்லாம் விஷயத்திலும் புரிஞ்சு அப்படி அவளை care எடுத்துக்கிறான் சாதாரண ஒரு குடும்பத்து மூத்த பையன் எப்படி இருப்பானோ அப்படி ஒரு ஹீரோயிசம் இல்லாம நார்மலா நம்ம பக்கத்து வீட்டு பையன் போல கதை முழுதும் வந்தது சிறப்பு 😍😍😍😍😍
நம்பி வீரபத்திரன் புரிதலான மாமன் மச்சான் உறவு சிரிக்கும்படியாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது. இவங்களோட இந்த கான்வர்சேஷன் பார்க்கும் போது என் ஹஸ்பண்ட் என் அண்ணன் ஞாபகம் கதை ஃபுல்லா வந்தது 💞💞💞💞💞 நம்பி வசந்தியை அவளுக்காகவே அவளை விரும்பி ஏற்றுக் கொண்டது அவனோட அபரிதமான காதலை தான் காட்டுது🥰🥰🥰🥰🥰
அலமேலு அம்மா என்ன ஒரு மனிதாபிமான கேரக்டர் இவங்கள போல ஒரு மாமியார் எல்லாம் நிஜ வாழ்க்கையில கண்டிப்பா சாத்தியமில்லை. அவங்க பையனுக்கு கொடுக்கிற அறிவுரை எல்லாம் ஒரு பெண்ணுக்கு பெண்ணாக அவளோட வலி வேதனை எல்லாம் புரிஞ்சு அவளை முதல்ல ஒரு மனுஷியா பாருன்னு சொல்றப்ப நிஜமாவே அலமேலு அம்மாவுக்கு கை தட்டணும்னு தோணுச்சு Sis👏👏👏👏👏 அவளை அவளோட கடந்த காலம் தெரியறதுக்கு முன்னாடியே மருமகளா ஏத்துக்கிட்டதுக்கு கண்டிப்பா ரொம்ப பெரிய மனசு வேணும் 😘😘😘😘😘
நண்பன்னு சொல்லி துரோகம் பண்ண அந்த நாயே அப்படியே வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிருச்சுன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது ஆனால் சந்திரன் என்கிற ஒரு மனிதனால் அவனுக்கு தண்டனை கிடைத்தது ரொம்ப திருதப்தி தான். ஆனாலும் அந்த நாய் அதனாலதான் சாகணும்னு தெரியாம செத்தது கொஞ்சம் மன வருத்தம் தான்.
சிவகாமி தாய்க்குலத்துக்கு கேடு இது போல ஒரு அம்மாவை நான் எங்கேயும் கேள்விப்பட்டதே இல்லை அவளோட அப்பா சுத்த வேஸ்ட் பீஸ்
ரொம்ப அழுத்தமான கதை கருவையே அவ்ளோ அழகா ரசிக்கும்படியாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போய் இருக்கீங்க வாழ்த்துக்கள் Sis💐💐💐💐💐
 
Thanks Selvarani sis :)

தயை காட்டு நீ.
எனக்கு இந்த தாட்சாவை பிடிக்கலன்னு ஆரம்பத்தில் சொல்லிட்டேன்!ஆனா எதுகை மோனையில் கவுண்ட்டரா கொடுத்து என் கிட்ட மல்லுக்கு நின்னா!சரி அவ கதை வரட்டும் பார்ப்போம் என இருந்தா, என்ன இப்படி வீக்கா இருந்து தொலைச்சுருக்கான்னு தான் அப்பவும் கடுப்பாக இருந்தது.

தெய்வத்தாய் சிவகாமி பத்தி தெரிஞ்சதும் தான் கொஞ்சம் பாவமா தெரிஞ்சா.பாட்டியின் பாசம் நெகிழ வைத்தாலும் அவங்க புரிதலில் தான் நானும் இருந்திருப்பேன்.மகிழ்ந்து சிரித்துக்கொண்டே ஒரு வீடியோ வந்தா அதை நம்பத்தானே தோணும்?பாகு கிட்ட சொல்லும் போது தான் அட கடவுளே ன்னு இருந்தது.அன்பு வீட்டில் கிடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை?? கழுகு மாதிரி கூடவே இருந்து கொத்தி இருக்கானே?
கால் பார்த்து காமம் வரதெல்லாம் படிக்கவே ஒரு மாதிரி இருக்கு.என்ன ஜென்மங்களோ.இனி வருங்காலத்தில் பொண்ணுங்க இப்படி கடந்து போகும் மனநிலைக்கு வரது பெட்டர்.அத்தனை அநியாயங்கள் நாட்டில் நடக்குதே.பாகு மாதிரி அலமேலு மாதிரி மக்களின் மனமும் மாறினா நல்லா இருக்கும்.
 
Back
Top