• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

Bubur ChaCha & Matcha

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

பாப்பாவுக்குப் பிறந்தநாள் உடுப்பு எடுக்க ஐசிட்டி மாலுக்குப் போனோம். ரெண்டு மணி நேரம் தேடி அலைஞ்சு ஒரு வழியா வாங்கிட்டோம். அப்புறம் என்ன!! வெளிய வந்தாத்தான் புள்ளைங்களுக்குப் பசிச்சிடுமே. சோ ஒரு கஃபேல சாப்பிடப் போனோம்.

செண்பகமே கதை படிச்சவங்களுக்கு அதுல ஒரு கஞ்சி வகை சொல்லிருப்பேன்னு தெரியும். பூபூர் சாச்சா அதோட பேரு. நெறய கிழங்கு வகைகள் இருக்கும் அந்த இனிப்பு கஞ்சில. இங்க நான் சாப்பிட்டதுல வாழைப்பழம் போட்டு வச்சிருந்தானுங்க. எனக்குப் புடிக்கல. கிழங்கு வகைகள், ஜவ்வரிசி மட்டும்தான் எனக்குப் பிடித்தம்.

WhatsApp Image 2025-11-07 at 11.06.58 AM (1).jpeg

WhatsApp Image 2025-11-07 at 11.06.58 AM.jpeg

அப்புறம் பாப்பா மாட்சான்னு ஒரு ட்ரிங்க் ஆர்டர் செஞ்சா!!! இப்போ இதுதான் வைரலாமே!! எனக்கு என்னமோ கைய கழுவுன தண்ணிய குடிச்ச மாதிரி ஒரு ஃபீல்!!! அவ்வ்வ்வ்வ்.

WhatsApp Image 2025-11-07 at 11.06.58 AM (2).jpeg

சில சமயம் சில உணவு வகைகள ஓவர் ஹைப் பண்ணிடறாங்க! எனக்குத்தான் புடிக்கலையோ என்னவோ!!!
 
Back
Top