Court state vs a nobody!!(with spoiler)

VanishaAdmin

Moderator
Court state vs a nobody!!(with spoiler)
OTT-- Netflix

இந்த மாதிரி படங்கள சட்டுன்னு பார்க்கனும்னு யாருக்கும் தோணாது! கோர்ட் சீன் வரும், நெறய மனச கஷ்டப்படுத்தற மாதிரி கதைப் போகும்னு ஸ்கிப் பண்ணிடுவோம்! நானும் அப்படித்தான் பார்க்க விருப்பப்படல!

ஹவுஸ் ஓனரும் பாப்பாவும் ஏற்கனவே பார்த்துட்டு, நீ பார்த்தே ஆகனும்னு வம்பு! ரெண்டுப் பக்கமும் உக்காந்துட்டு, பாப்பா கதைய சொல்ல ட்ரை பண்ண, அவங்கப்பா சொல்லாதேன்னு சத்தம் போட, நடுவுல மண்டைக் காஞ்சிப் போச்சு எனக்கு!

19 வயசுப் பையனுக்கும் 17 ப்ளஸ் பொண்ணுக்கும் வரக் காதல் எப்படி POCSO சட்டத்துல வர ஓட்டைய வச்சி கேஸா மாத்தப் படறதுன்றதுதான் கதை! அந்தப் பையன எப்படி காப்பாத்தப் போறாங்கன்னு நம்மள முழிக்க விடறாங்கா!

அந்தப் பொண்ணுக்கும் பையனும்க்கும் லவ் வர சீன்லாம் அவ்ளோ நேச்சுரலா கியூட்டா இருக்கு! செம்ம நடிப்பு ரெண்டு பேருக்கும்! வக்கீலா வர கேரக்டர், மோஸ்ட்லி தெலுங்குப் படத்துல ஹீரோ ப்ரெண்டா பார்த்திருக்கேன்! இதுல செம்ம பர்போர்மன்ஸ்!

POCSO சட்டத்தப் பத்தி பேசிருக்கு இந்தப் படம். அடலசண்ட் பசங்களுக்கு இதை பத்தி விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய அவசியத்த பேசிருக்கு!

படம் முடிஞ்சதும் பாப்பா கிட்ட லவ் இஸ் நாட் அ க்ரைம்! ஆனாலும் அததுக்கு வயசு இருக்கு! அப்படின்னு சொல்லி வச்சிருக்கேன்! அண்டர் ஏஜ் லவ்வ இதுல கொஞ்சமா க்ளோரிப்பை பண்ணிருக்கற ஃபீல் எனக்கு! அதனால வர கஷ்டங்களையும் சொன்னதால கண்டிப்பா படத்த பார்க்கலாம்! நல்ல எண்டெர்டெயின்மெண்டா இருந்தது!
 
Back
Top