• 🚨 நமது தளத்தில் எழுத விருப்பமுள்ளவர்கள் vanishanovels@gmail.com எனும் மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ளலாம்! 🚨

Day 5--(16/7/2024)

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

இன்னைக்கு அஞ்சாவது நாள். எழுந்து கிளம்பி ரூமை செக் அவுட் பண்ணியாச்சு! கிரிவலம் போகிற வழில காலை உணவு சாப்பிட்டுக்கலாம்னு முடிவு எடுத்து கிளம்பியாச்சு.

கிரிவலம்னா நடந்து போனோம்னு தப்பு கணக்குலாம் போட்டுட கூடாது! அவ்வ்வ்! கார்லயேதான் ஒவ்வொரு இடமா நின்னு நின்னு போனோம்! முதல் லிங்கம் இந்திர லிங்கம். நாங்க போறப்ப வெளி கதவு திறந்திருந்துச்சு. தங்கம் சொன்னாங்க அவங்க வரப்பலாம் எப்பவும் பூட்டிருக்கும். வெளியே நின்னே கும்பிட்டுத்தான் போயிருக்கோம்னு! உள்ள வரைக்கும் போய் கேட் வழியா லிங்கத்த பார்த்திட்டு ஒரு வலம் வந்திட்டு, வெளிய வந்தோம். அடுத்தடுத்து எல்லாம் லிங்கமும் போனோம். பாப்பா ராசிக்கு இந்திர லிங்கம், இவருக்கு குபேர லிங்கம், எனக்கு ஈசான்ய லிங்கம்னு கூகுள் பண்ணிப் பார்த்துட்டு வேண்டிக்கிட்டோம்! இவ இருக்காளே, நாநா லிங்கமும் உங்க லிங்கமும் மட்டும் நல்லா பூலாம் போட்டு அலங்காரம் பண்ணிருந்துச்சு! என்னோட லிங்கம்ல அலங்காரம் இல்லன்னு அதுக்கொரு பஞ்சாயத்து!!!!

IMG_8653.jpg
இந்த வெதர்லதான் கிரிவலம் போனோம்.



IMG_8654.jpg

ஆரா அமுதே எந்தன் அன்பே ரமணான்னு பவதாரிணி பாடுன பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்! அப்படியே கரைஞ்சு மறைஞ்சு போகிற மாதிரி ஒரு ஃபீல் வரும்! அந்தப் பாட்டோட தாக்கத்துலத்தான் ரமண மஹரிஷி ஆசிரமம் பார்க்கனும்னு சொல்லிருந்தேன். ஆஸ்ரமம் முன்னாடி ஸ்லிப்பர்ஸ கழட்டி வச்சிட்டு நாங்க நாலு பேரும் உள்ள போனோம்! அப்படிப்பட்ட ஒரு காம்ல் ஃபீல்! பசேல்னு, அழகா, அமைதியா இருந்தது அந்த இடம். கொஞ்ச நேரம் உக்காந்து கண்ணை மூடி தியானம் பண்ணிட்டு, அந்த இடத்தோட சரவுண்டிங்க சுத்திப் பார்த்துட்டு கிளம்ப இருந்தோம்! அப்போ இந்த மூனு பேருல யாரொ ஒருத்தர் என்னமோ சொல்ல, நான் கெக்கெபெக்கென்னு சிரிச்சுட்டேன்! தியான பில்டிங் வெளிய வந்துதான் இது நடந்தது! சைலன்ஸ் பிளிஸ்னு பதாகை வச்சிட்டு சுத்துவாங்களே, அவங்க என் பின்னாடி வந்து நின்னு சைன் போர்ட்ட காட்டவும், கப்புன்னு வாயை மூடிட்டேன். அதுல இருந்து அங்கிருந்து கிளம்பற வரைக்கும் அந்த சைலன்ஸ் பிளிஸ் என் பின்னாடியே வந்தாங்க!!!! டோட்டல் டேமேஜ் :) ஹவுஸ் ஓனர் வேற என்னை முறைச்சிப் பார்த்தீங்!!!! அந்த சம்பவத்துல ஸ்லிப்பர அங்க வைச்ச ஞாபகமே இல்லாம கார்ல ஏறியாச்சி! பாதி தூரத்துல, ம்மா ஸ்லிப்பர காணோம்னு இவ சொல்லவும்தான் அடடான்னு இருந்துச்சு! மறுபடி அங்க போய் ஸ்லிப்பர் எடுத்துட்டு வந்தோம்!

அதுக்கு அப்புறம்தான் காலை உணவு சாப்பிட இடம் தேடுனோம்! அங்காளம்மன் தேநீர் விடுதின்னு ஓரிடம். அங்கத்தான் சாப்பிட உக்காந்தோம். இட்லி பூப்போல செம்ம ருசி. சரியான கூட்டம். பூரியும் செம்ம டேஸ்ட்!!! கடை லேடிகிட்ட உங்க சாப்பாடு சூப்பர்னு சொல்லிட்டுத்தான் வந்தேன்!!!

IMG_8657.jpg

நிருதி லிங்கம் பார்த்துட்டு ஒரு இடத்துல மான்கள் இருந்தது! பாப்பா பார்க்கனும்னு நிறுத்தி போட்டோ எடுத்தோம்.

IMG_8663.jpg

சூரிய லிங்கம், வருண லிங்கம்லாம் பார்த்துட்டு அடி அண்ணாமலையும் போய் பார்த்தோம்.

IMG_8668.jpg

IMG_8669.jpg

IMG_8672.jpg

IMG_8676.jpg

அவரையும் கும்பிட்டுட்டு, அடுத்த லிங்கம் பார்க்கப் போனோம். வாயு லிங்கம், சந்திர லிங்கம், குபேர லிங்கம்னு வரிசையா ஒவ்வொன்னா போனோம். குபேர லிங்கம் வெளிய குட்டியா சைனீஸ் குபேரன் பச்சை கலர்ல வாங்கி ஹவுஸ் ஓனருக்குக் குடுத்து, பேர்த்டே கிப்டுன்னு சந்துல சிந்து பாடியாச்சு!

அம்மா சொல்லி சொல்லி அனுப்பனாங்க, இடுக்குப்பிள்ளையார பார்த்துட்டு அதுக்குள்ள நுழைஞ்சுட்டு வான்னு! அங்க பார்த்தா கியூ கட்டி நிக்கறாங்க! நெக்ஸ்ட் காஞ்சிபுரம் வேற போகனுமே! சோ புள்ளயார மட்டும் கும்பிட்டுட்டு வந்துட்டோம்.

IMG_8693.JPG

அதை கடந்து ஒரு கும்பகோணம் டிகிரி காபி கடை! கும்பகோணத்துக்குத்தான் போகல, காபியாச்சும் குடிப்போம்னு, நின்னு வாங்கிக் குடிச்சாச்சு.

IMG_8698.jpg

காபி குடிச்சிட்டு ஈசான்ய லிங்கம் பார்த்துட்டு காஞ்சிக்குக் கிளம்பிட்டோம்!









 
Last edited:
காஞ்சில நெறைய திட்டம் வச்சிருந்தோம்! முதல்ல ஒரு காஞ்சிப்பட்டு வாங்கனும்னு ப்ளான். யாருக்கு? எனக்குத்தான் மை லார்ட்! என் கிட்ட காஞ்சிப் பட்டு இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? நம்பனும்!!!

IMG_8718.jpg
காஞ்சிக்குப் போகிற வழில இவர போட்டோ புடிச்சேன்! செம்ம அழகுல!!!

நம்ம பாப்பா வேற எனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தாங்கன்னு ஒரே பாட்டு! மும்பைல இருந்தே சென்னைல வாங்கித் தரேன், திருவண்ணாமலைல வாங்கித் தரேன்னு தட்டிக் கழிச்சிட்டே வரேன்! இவளுக்கு சட்டுன்னு சளி புடிக்கும்! எவ்ளோதான் ஏமாத்த!!! நாங்க புள்ளய ஏமாத்திட்டே இருக்கோம்னு தங்கமே வாங்கிக் குடுத்துட்டாங்க! அருண் ஐஸ்க்ரீம்! ரொம்ப சாப்பிட்டா சீக் ஆகிடுவான்னு நான் வாங்கி சாப்பிட்டு நோய வாங்கிக்கிட்டது கிளைக் கதை!!!!!!

காஞ்சிபுரத்துக்கு வந்து சேர்ந்தாச்சு! லன்ச் ஒரு ஹோட்டல்ல சாப்பிட்டோம்! பேர மறந்துட்டேன்! கோபி 65 அண்ட் பன்னீர் 65 செம்ம டேஸ்ட்டி அங்க! அடுத்து அவசர பட்டுச் சேலை ஷாப்பிங்! மூனு கோயில் வேற லிஸ்ட்ல இருக்கு. அரை மணி நேரத்துல பட்டுச் சேலை செலெக்ட் பண்ண என்னை பாராட்டலாமே ப்ரேண்ட்ஸ்!!! பியூர் சில்க் வாங்கல! மிக்ஸ்ட்தான் வாங்கனேன்! அவ்ளோ பணத்த சேலைல கொண்டு போடறதுல எனக்கு இஷ்டமில்ல!!! கோச்சிக்காதீங்க சேலைப் பிரியர்களே!!!!

IMG_8736.jpg
இது நால செலெக்ட் பண்ணிட்டு, வேற ஒன்னை வாங்கனேன்!!! ஹஹஹ!

இங்க முடிச்சிட்டு நேரா கைலாசநாதர் கோயில். என்ன ஒரு அழகு சாமி அந்தக் கோயில்!!! இந்தக் கோயில பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான் தஞ்சை பெரிய கோயில கட்டுனாங்களாம்! அப்படின்னு யூடியூப்ல சொன்னாங்க! அங்க கைட் மாதிரி ஒருத்தர் இருந்தாரு! அவரும் சொன்னாரு! கருவறை பின்னாடி ஒரு சுரங்கப்பாதை மாதிரி இருக்கு! அதுல உடம்ப குறுக்கி உள்ள போய் அப்படியே நகர்ந்து இன்னொரு பக்கம் வரனும்! வெளிய வந்தவங்க எல்லாம் வேர்த்து விறுவிறுத்து வந்தாங்க! தாயோட கருவறைல இருக்கற மாதிரி இருக்குமாம் அதுக்குள்ள! எனக்குப் போகனும்னும் ஆசை! ஒரு பக்கம், இருட்டு, குட்டி இடம், மூச்சு விட முடியுமான்னும் பயம்! கடைசில போய்த்தான் பார்க்கலம்னு நெனைச்சா, நம்ம பாப்பா அழுகை! அம்மா வேணாம்மா! போகாதீங்க! எனக்கு நீங்க போறத நினைச்சா பயமா இருக்குன்னு! அடியேய்!!! கடைசில போகல நானு!!!!!!!!

IMG_8757.jpg

IMG_8759.jpg

IMG_8769.jpg

IMG20240716162132.jpg
அப்பவே எவ்ளோ ஸ்டைலா ஷூ போட்டிருக்காங்க பாருங்க!!! அந்தக் கோயில்ல நிறைய கிளிகள் வேற! செம்ம வைபரேஷன் இங்க! காஞ்சிக்குப் போனா கண்டிப்பா இங்க போகனும் நீங்க!

அடுத்து ஏகாம்பரநாதர் கோயில். இங்க கோயில் திருப்பணி நடக்குது! ஆனாலும் கோயில் திறந்திருக்கு!

IMG_8790.jpg

ஏகாம்பரநாதர தூரத்துல இருந்தே பார்த்துட்டு வந்தோம்! எல்லாரும் கியூல ஃபிரீயா போறாங்க! எங்கள மட்டும் நிறுத்தி காசு கேட்டாரு ஒருத்தர்! இதென்ன கடவுள் இடத்துல பாராபட்சம்! டிக்கெட் வாங்கனும்னா நாங்களே வாங்கனும்! எப்படி டிக்கேட் எடுத்துத்தான் போகனும்னு அவர் சொல்லலாம்!!! சோ தூரத்துல இருந்தே கும்பிட்டுட்டு, தெப்பக்குளம் போனோம். அது எனக்கு ரொம்பப் பிடிச்சது!!

IMG_8795.jpg
அந்த மண்டை மேல கொண்டை, கொண்டை மேல முல்லைப்பூ இஸ் மீ!!!!

தென் அங்க வெளில வந்து ஒரு டீ! பிறகு நேரா காஞ்சி காமாட்சி கோயில்.

IMG_8800.jpg

IMG_8812.jpg

பாப்பாக்கு முடியல! சோ அவளயும் ஹவுஸ் ஓனரையும் கார்ல விட்டுட்டு, நானும் தங்கமும் அம்மனைப் பார்க்க கியூல நின்னுட்டோம்! நடை இன்னும் திறக்கல! சோ கொஞ்ச நேரம் வெயிட் பண்ண வேண்டியதாச்சு! எங்க முன்னாடி ஒரு டிப்டாப்பான பேமிலி! அதுல பாப்பாவோட சின்ன வயசு பொண்ணு ஒன்னு! ஒரு பாட்டி வேற! ஒரு முக்கால் மணி நேரம் கழிச்சுத்தான் கியூ நகர ஆரம்பிச்சது! அம்மன் கிட்ட வந்தாச்சு! ஒரே பரபரப்பு எனக்கு! அம்மன் என்ன ஓர் அழகா இருந்தாங்க தெரியுமா! சொல்ல வார்த்தையே இல்ல! ஆன்னு பார்த்தேன்! என் முன்னாடி பேமிலின்னு சொன்னேன்ல, அவங்க பிரான்ஸ்ல இருந்து வந்திருக்காங்க போல. அந்த பாட்டியோட பேத்திக்கிட்ட இந்த ஐயர் எங்கிருந்து வரீங்கன்னு கதை! எனக்கும் ப்ரேன்ச் தெரியும்னு ஒரே கதை! அவ்ளோ நேரமும் எனக்கு இங்க ஜாக்பாட் அடிச்ச ஃபீல்! நகராம அம்மனையே பார்த்துட்டு இருந்தேன்! அந்தப் பாட்டியும் ஐயர் கிட்ட பேசிட்டு இருந்தனால எனக்கு நல்ல தரிசனம்! கியூவ விட்டு வெளிய வந்து அந்தப் பொண்ணோட பாட்டிக் கைய புடிச்சு, ரொம்ப தேங்க்ஸ்மா! உங்களால எனக்கு நல்ல தரிசனம் இன்னைக்குன்னு சொல்லிட்டு வந்தேன்! அவங்களுக்கு அதிர்ச்சி அதோட சந்தோஷமும் கூட!

பிறகு வெளிய வந்து காஞ்சி காமாட்சியும் பால சரஸ்வதியும் ஒன்னா இருக்கற போல ஒரு படம் வாங்கிட்டு காருக்கு வந்துட்டேன். உள்ள வந்ததும் ஹவுஸ் ஓனர்,

"நீ பாப்பாவ பார்த்துக்க! நான் உள்ள போய்ட்டு வரேன்"னு சொல்ல, எனக்கு அதிர்ச்சி!

மலேசியால இருந்து கிளம்பறப்ப இதென்ன டெம்பிள் ரன்னான்னு கேட்ட ஆளா இது????

ஆனா பாருங்களேன், நாங்க இங்க கியூல நின்னு சாமிய பார்த்துட்டு வந்தா, இவர் கியூவே இல்லாம நேரா முதல் வரிசைல அம்மன தரிசிச்சுட்டு வந்திருக்காரு! அதோட அம்மன் தேர்ல வேற வலம் வந்திருக்காங்க! இவர் பாத்துட்டு போட்டோ எடுத்துட்டு வந்தாரு!






 
Last edited:
0A7645F1-4BBF-4B84-9443-53B706D16B0E.jpg

IMG_8822.JPG

IMG_8824.JPG

IMG_8818.JPG

இங்க முடிச்சதும் கிளம்பியாச்சு சென்னைக்கு! மூனு நாள் சைவமா இருந்துட்டு, இவங்க ரெண்டு பேருக்கும் நான் வேஜ் வேணும்னு ஒரு கடைல உக்காந்தாச்சு! நானும் இவரும் பிரியாணி ஷேர் பண்ணிக்கிட்டோம். பாப்பா சூப் குடிச்சா! தங்கம் ப்ரைட் ரைஸ் சாப்ட்டாங்க போல! முட்டைக் குழம்பு ஒன்னு ஆர்டர் பண்ணாரு! நான் அதை தொடல! பார்க்கவே காரமா தெரிஞ்சது! மறுநாள் தட் முட்டை குழம்பு ப்ளேய்ட் ஃபுட்பால் இன் ஹவுஸ் ஓனர் ஸ்டமக்!!!

மீதிய நெக்ஸ்ட் போஸ்ட்ல பார்ப்போம்!!!!

தொடரும்....
 
சிக்கனமாக உங்க ஹவுஸ் ஒனருக்கு கிஃப்ட் கொடுத்திட்டிங்க 🤣🤣முட்டைகொழம்பு ஹவுஸ் ஒனர் வயித்துல புட்பால் விளையாண்டது உங்களுக்கு ரொம்ப சந்தோசபையிங் 😂😂நானும் நீங்க போன கோயில்களுக்கு போகனும்ன்னு ரொம்ப நாளாக ஆசை எப்ப போக முடியுமென தெரியல
 
Back
Top