Rage Of Angels--Sidney Sheldon

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

MV5BMTI2Nzc3NzY4M15BMl5BanBnXkFtZTcwOTkyOTQyMQ@@._V1_.jpg

சுடச் சுட இப்போத்தான் படிச்சு முடிச்சேன் இந்தக் கதைய. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. அதாவது ஆண் எழுத்தாளர்கள் கதைய அவ்ளவா விரும்பிப் படிக்க மாட்டேன். எனக்கு என்னமோ இமோஷனலா அவங்க கதை கனேக்ட் ஆகாது. மோஸ்ட்லி ஆங்கிலத்தில பெண் ரைட்டர்தான் என்னோட சாய்ஸ். இந்த சிட்னி ஷெல்டன் கூட நான் லேடி ரைட்டர்தான்னு நெனைச்சேன். பாதி படிச்சிட்டு கூகுள் பண்றப்பத்தான் தெரியுது அவர் ஒரு ஆண் ரைட்டர்னு! ஆரம்பிச்சிட்டோம், முடிச்சிடுவோம்னு உக்காந்த்தேன். அதோட அந்த எழுத்து நடை அப்படியே பிடிச்சு வச்சிக்கிச்சு!!!

கதைய படிக்கனும்னு நெனைக்கறவங்க, நான் எழுதறத படிக்காதீங்க! ஏன்னா இதுல ஸ்பாயிலர் இருக்கு. ரொம்ப பவர்புல்லான ஒரு பெண் கேரெக்டர செம்மையா ரசிச்சு எழுதிருக்காரு ரைட்டர். கோர்ட்லதான் கதை ஆரம்பிக்குது! மாஃபியா தலைவன்(மைக்கல்) ஒருத்தன கோர்ட்டுக்கு கொண்டு வராங்க! கிட்டத்தட்ட அவன் கதை அம்பேல்னு நினைக்கற அளவுக்கு மாட்டிட்டு இருக்கான் அவன். அதே நேரம் ஜெனிபர்(ஹீரோயின்) முதன் முதலா வக்கீலா பொறுப்பெடுக்க வரா அங்க! அவளோட பாஸ்தான் மைக்கல உள்ள போட துடிச்சிட்டு இருக்கறவன். அப்போ ஜினெபர் போஸ் கிட்ட பேசிட்டு வர ஒருத்தன், என்வலப்ப இவட்ட குடுத்து, சாட்சி கிட்ட குடுக்க சொல்வான். இவ பாஸ்தான் செய்ய சொன்னாருன்னு சொல்வான். இவளும் யோசிக்காம அதை கொண்டு போய், பலத்த காவல்ல இருக்கற சாட்சி கிட்ட குடுத்துட்டு வந்திடுவா. அதுக்குள்ள செத்து போன பறவை இருக்கும். அதை பார்த்து அந்த சாட்சி பயந்து இனிமே சாட்சி சொல்ல மாட்டேன்னு நின்னதுல மைக்கல் தப்பிச்சிடறான். இவளுக்கு வேலை போய்டுது. இவ மைக்கலோட ஆளுன்னு சொல்லி இனிமே வக்கிலா இவ இருக்கக் கூடாதுன்னு கேஸ் ஃபைல் பண்ணறாங்க.

ஆரம்பிக்கற முன்னமே இவளோட வக்கீல் தொழில் பாய் போட்டு படுத்துக்கிச்சு! பேப்பர், டீவின்னு இவ மூஞ்ச காட்டி சிரிப்பு வக்கீலா ஆக்கிடறாங்க! தளர்ந்து போகாம, போராடுறா! அப்போ இவ கேச விசாரிக்க வர ஆள், இவ நல்லவன்னு செர்டிபிகேட் குடுத்துடுறான். அவன் பேரு ஆடம்! சோ இந்தக் கதை ஆடம், ஜெனிபர், மைக்கேல் மூனு பேர சுத்தித்தான் நடக்குது! இதுல இவனுங்க ரெண்டு பேருமே கல்யாணமானவனுங்க!

ஜெனிபருக்கு ஆடம் மேல ஓர் ஈர்ப்பு! பிறகுதான் தெரியுது அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு! அவன் அரசியல்லயும் குதிக்கற ஸ்டேஜ்ல இருக்கான். அவனுக்கும் இவ மேல செம்ம ஈர்ப்பு! மனைவிய விட காதலும் இவ மேலத்தான். ரெண்டு பேரும் ஈர்ப்ப தள்ளி வைக்கப் பார்த்தும் முடியல. ஒன்னு மண்ணா கலந்திடறாங்க! அவன் மனைவி கிட்ட டிவோர்ஸ் கேக்க நெனைக்கறான். அதுக்குள்ள அவன் மனைவி கேம் விளையாடிடறா! நானே உனக்கு டிவோர்ஸ் தரேன். முதல்ல அவன் செனெட்டர் பதவிக்கு நிக்கற கேம்பேன் முடியட்டும்னு ப்ராமீஸ் பண்றா! இதான் நமக்கு கடைசி உறவுன்னு சொல்லி அவன யூஸ் பண்ணி ப்ரேக்னெண்ட் ஆகிடறா! ஜெனிபரும் மாசமாகிடறா! இதெல்லாம் நடக்கறப்ப ஜெனிபர் முட்டி மோதி தன் தொழில்ல கொடி கட்டி பறக்க ஆரம்பிக்கறா! அதை சுவாரசியமா பார்த்துட்டு இருக்கான் மைக்கேல். அவள நெருங்க மைக்கேல் முனைய இவ வண்ண வண்ணமா கேட்டுத் தள்ளி வைக்கறா!

ஆடமோட மனைவியும் மாசமா இருக்கான்னு தெரிஞ்ச ஜெனிபர் அவன விட்டு விலகற! இவளோட தாய்மைய அவன் கிட்ட மறைக்கிறா! தனியா இருந்து பிள்ளையும் பெத்துக்கறா! அந்தக் குழந்தை மேல உசுரயே வச்சிருக்கறா. ஆடம் வோட்டிங்ல ஜெயிச்சு செனட்டரும் ஆகிடறான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குது. இப்படியே போய்ட்டு இருக்கறப்ப, மைக்கேல் இவள நெருங்க முயற்ச்சி பண்ணிட்டே இருக்கான். அவ மறுக்க, இவனுக்கு இன்னும் இண்ட்ரெஸ்ட் ஆகுது இவ மேல! ஒரு கட்டத்துல இவளுக்கு கேசா வர சைக்கோ ஒருத்தன் இவ மகன கடத்திடுவான். அப்போ மைக்கேலுக்குத்தான் கால் பண்ணி ஹெல்ப் கேப்பா! அவனும் உதவி செய்வான். பிறகென்ன, உதவிக்கு உதவின்னு இவள யூஸ் பண்ணிப்பான். இவளும் அவனோட பவருக்கும். ஆளுமைக்கும் மயங்கி நிப்பா! அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா இவ அந்த மாபியா குருப்புக்கு லாயரா மாற ஆரம்பிக்கறா! அவள சுத்தி இருந்த நல்லவங்க எல்லாம் விலகி போறாங்க!

ஒரு தடவை மகன ஒரு ட்ரீப் கூப்டு போவா. 7 வயசு அவனுக்கு. ஸ்கி போட் போறப்போ, அவனுக்குத் தலைல அடி பட்டுடும். நல்லாத்தான் இருப்பான். ரெண்டே நாளுல வீக்காகி இறந்துடுவான். இதுலாம் ரொம்ப சேட்டான பார்ட் இந்தக் கதைல.

ஆடம் ப்ரெசிடெண்ட் ஆக ட்ரை பண்றான். அவனுக்குள்ள லவ்னா இன்னும் ஜெனிபர்தான். அவள மறக்கவே முடியல அவனால! இங்க உடைஞ்சி போய் கிடக்கற ஜெனிபர கொண்டு போய் தன்னோட வச்சிப்பான் மைக்கேல்.

கொஞ்ச நாளுல மைக்கேல புடிக்க போலீஸ் எல்லா முயற்சியும் எடுக்கும். அந்த விஷயம் ஆடம் காதுக்கும் போகும். அவங்க பிடிக்கப் போற ஆளுங்க லிஸ்ட்ல ஜெனிபர் பேர பார்த்து திகைச்சிடுவான். நான் அவள ஒழுங்கா என்னோடயே கல்யாணம் பண்ணி வச்சிருந்தா இந்தளவுக்கு அவ வாழ்க்கை மாறி இருக்குமான்னு வருத்தப்படுவான். அவளுக்கு ஒரு குழந்தை இருந்ததும்னு பிறகுதான் ஆடம்கு தெரியும்! தன்னோட குழந்தையா இருக்குமோன்னு அவ்ளோ ஃபீல் ஆகுவான்.(என் மனசுக்குள்ள, போடாங்க!! நீ எல்லாம் ப்ரெசிடெண்டா வந்து என்னத்த கிழிக்கப் போறன்னு கடுப்பு)

மைக்கேலுக்கு இவ ஆடம் கூட பேசிட்டு இருந்தான்னு துப்பு கிடைக்கும். பழசெல்லாம் விசாரிச்சு பார்த்தா இவ முன்னாடி ஆடமோட லவ்வர்னு தெரிஞ்சிடும். நான் இவ மேல இவ்ளோ லவ் வச்சிருக்க, இவ அவன் கூட சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கப் போறான்னு நெனைச்சு, அவங்க ரெண்டு பேரயும் முடிக்கப் பார்ப்பான். இவன் இடத்துல போலீஸ் குமிஞ்சுட ஜெனிபர சுட்டுடுவான். இஅவன போலீஸ் சுட்டுடுவாங்க! சாவரப்ப கூட அவள சுட்டுட்டோமேன்னு சோகத்துலத்தான் சாவான்!(அடீங்!!! அசிங்க அசிங்கமா வருது வாய்ல!!!!)

ஆடம் கொலை முயற்சில இருந்து தப்பிச்சிடுவான். இவ ஹாஸ்பிட்டல்ல கிடப்பா! வந்து பார்ப்பான். கவலைப் படுவான்.

ஆடம் ப்ரேசிடெண்டா ஆகிடுவான். இவ பொழச்சதும், அவங்கப்பா ஊருக்கே போய்டுவா! கூட யாருமே இல்ல! செத்தா நாம தனியாத்தானே சாவோம்னு மனச தேத்திட்டு, மறுபடி அந்தச் சின்ன ஊருல வக்கீல் வேலைப் பார்க்க போவா!!!! முடிஞ்சது!!!!


இதுக்குத்தான் நான் ஆம்பளைங்க கதை எழுதனா படிக்கறது இல்ல!!!! மனசே சரியில்ல!!!!! நான் போய் டீ போட்டுக் குடிக்கறேன்!!!!
 
😄😄😄😄
I read this I was in college, it’s been 15 years, I finished all the Sidney Sheldon books, right from his biography 😃😃, reading Sidney Sheldon is a taboo thing, esp from village like Madurai, I started reading from school days, other side of me, other side of midnight, etc, but no time now, and taste has changed, even anniyan character is Ashley(Sidney Sheldon’s) only..,
Thank you for sharing, makes me to remember all the wonderful memories of my school and college days
 
😄😄😄😄
I read this I was in college, it’s been 15 years, I finished all the Sidney Sheldon books, right from his biography 😃😃, reading Sidney Sheldon is a taboo thing, esp from village like Madurai, I started reading from school days, other side of me, other side of midnight, etc, but no time now, and taste has changed, even anniyan character is Ashley(Sidney Sheldon’s) only..,
Thank you for sharing, makes me to remember all the wonderful memories of my school and college days
Thanks dear!! Enaku pothumda saami nu agiduchi!! Kadasile yarum illama thaniyagitta!! Sad sad!!
 
One more story was there, in the climax she will push the hero in swimming pool, and kill him, don’t know which novel but Sidney Sheldon only, hero name is Toby (play boy) , but when I was 15-20 years old had a great interest in Sheldon’s but nowadays don’t even feel like reading it again.. but you can try.. we started reading because those days it was easy to understand with simple English, our English language wasn’t that good , so started , infact it improved my vocabulary and understanding…
for me Jeffrey archer is little boring, haven’t finished anything completely,
Have you read Sujatha’s short story collection in Tamil- science fictions
 
One more story was there, in the climax she will push the hero in swimming pool, and kill him, don’t know which novel but Sidney Sheldon only, hero name is Toby (play boy) , but when I was 15-20 years old had a great interest in Sheldon’s but nowadays don’t even feel like reading it again.. but you can try.. we started reading because those days it was easy to understand with simple English, our English language wasn’t that good , so started , infact it improved my vocabulary and understanding…
for me Jeffrey archer is little boring, haven’t finished anything completely,
Have you read Sujatha’s short story collection in Tamil- science fictions
Mostly English writers nan latest thaan padiciruken. Sujatha, yes I like him!!
 
Back
Top