Uyir Vangum Rojave--EPI 32

VanishaAdmin

Moderator
“இத்தனை வருஷமா இந்த வீட்டுல இது உன் பொருள் என் பொருள்னு பிரிச்சுப் பார்க்கல. நான் மட்டும் வந்தவுடனே இது என் பாத்திரம்னு பிரிச்சுக் காட்டனுமா? ராமன் லஷ்மன் மாதிரி இருக்கற இந்த குடும்பத்துல நானும் ஒன்னாயிட்டேன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டு இருக்கேன்”



மீனா--- வானத்தைப் போல





ஹாஸ்பிட்டலுக்கு சென்று குடும்பமே தாமரையையும், மதனையும் பார்த்துவிட்டு வீடு திரும்பி இருந்தனர். தேவி மிகுந்த களைப்பாக இருந்ததால் விருந்தினர் அறையிலேயே தங்கிக் கொள்ள சொல்லி வற்புறுத்தி தங்க வைத்தார் இந்து. வீங்கி இருந்த அவள் கால்களுக்கு அம்மாவும் மகனும் மாறி மாறி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார்கள். தேவிக்கு அவர்களின் பாசத்தில் கண் கலங்கிவிட்டது. கண்களை துடைத்து விட்ட இந்து,

“ஏண்டாம்மா கண் கலங்குது? பழைய ஞாபகம் வந்துருச்சா? நாங்கள்லாம் இருக்கோம் உனக்கு. கண்ண துடைச்சிக்கம்மா. நான் போய் பால் கொண்டு வரேன். குடிச்சிட்டு தூங்குவியாம்” என மருமகளின் தலையைக் கோதிக் கொடுத்தவர், கீழே இறங்கி சென்றார்.

“அம்மாவுக்கு உன் கதை தெரியுமா ரோஜா?” ஆச்சரியமாக கேட்டான் வேந்தன்.

“உங்களுக்கு முன்னாலேயே தெரியும்”

“என்னடி சொல்லுற? அம்மா என் கிட்ட இது வரைக்கும் வாயையே தொறக்கலையே!” அதிர்சியுடன் கேட்டான் அவன்.

மெலிதாக சிரித்தாள் அவள்.

“என் கஸ்டடில இருந்தப்போ அவங்கள பார்க்க போனேன். பார்த்த உடனே எனக்கு கண்ணு கலங்கிருச்சு. என்னை மடியில சாய்ச்சுகிட்டாங்க. என்ன ஏதுன்னு கேக்காம, தலையை வருடிக்கிட்டே இருந்தாங்க. கண்ணீர் நிக்கற வரைக்கும் அவங்க மடியிலேயே படுத்துருந்தேன். அவங்க கையாலே சாப்பாடு ஊட்டுனாங்க. ஒன் டே அவங்க கூடவே இருந்தேன் மலர். என்னோட கதைய சொல்லி, உன்னைப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டேன். முதல்ல தயங்குனாங்க உன் விருப்பத்தை நினைச்சு. அப்புறம் ஒத்துக்கிட்டாங்க” சொல்லி நிறுத்தினாள்.

பாலுடன் உள்ளே வந்த இந்து, மருமகளிடம் கொடுத்து விட்டு,

“நீ தான் வேணாம் வேணாம்னு ஒத்தைக் காலுல நின்ன. அதனால கொஞ்சம் யோசிச்சேன். ஆனாலும் நீ சொன்ன காரணம் எல்லாத்துலயும் அந்தஸ்து, அழகு, சுயகௌரவம் இப்படின்னு இருந்துச்சே தவிர தேவிய பிடிக்கலன்னு ஒரு வார்த்தை இல்ல. அப்புறம் ரித்வி ரித்வின்னு பகலெல்லாம் பேனாத்திட்டு, தேவிய பாக்கறப்போ கண்ணு அப்படியே அலைபாயுது. உன்னப் பத்தி எனக்குத் தெரியாதாடா? அதான் தேவிம்மாகிட்ட சரின்னு சொல்லிட்டேன். அவ காயத்துக்கெல்லாம் நீ மருந்தா இருப்பன்னு எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. அதனால தான் நீ எங்க குடும்ப விஷயத்துல தலையிடாதன்னு தேவிய சொன்னவுடனே எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. எப்படியோ என் முடிவு தப்பாகல. இப்போ உங்க ரெண்டு பேரோட பிணைப்பை பார்க்கறப்போ எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?” கண் கலங்கினார்.

மகனும் மருமகளும் இரு பக்கமாக அவரை அணைத்துக் கொண்டனர்.

“மாமியாரும் மருமகளும் எனக்குத் தெரியாம பிளான் பண்ணி என்னைக் கவுத்துருக்கீங்க. தினம் நாலு சுவத்துக்குள்ள அடி வாங்கிகிட்டு வெளிய நானும் ரவுடிதான்னு சுத்துற நான் தான் அழுவனும். நீங்க இல்ல.” என வராத கண்ணீரைத் துடைத்தான் வேந்தன்.

“தேவிம்மா, என்னம்மா என் மகனை ரூமுக்குள்ள கும்மாங்குத்து குத்துறீயாம். இதெல்லாம் நல்லா இல்ல. பப்ளிக்கா உதை, நாங்க எல்லாம் கமான் கமான்னு உனக்கு சப்போர்ட் பண்ணுறோம்” என சிரித்தார் இந்து. அவருடன் சேர்ந்து இவர்கள் இருவரும் சிரித்தனர்.

“ஏண்டா வேந்தா, உங்க மாமாகூட போலிஸ் ஸ்டேசன் போனீயே என்ன சொன்னாங்க?” என திடீரென ஞாபகம் வந்தவராய் கேட்டார் இந்து.

“கொள்ளை அடிக்க வந்துருக்கலாம், இல்லைனா முன் பகையா இருக்கலாம்னு சந்தேகப் படுறாங்கம்மா. சூப்பர்மார்கேடுல ரைடு, அப்புறம் பொம்பள புள்ள மேட்டருல ஏற்கனவே சிக்கி தலைமறைவா இருந்தாங்க. அப்புறம் காச குடுத்து கேச கலைச்சிட்டு, தைரியமா வெளிவந்துருக்காங்க ரெண்டு பேரும். சென்னையில காலு வச்ச மறுநிமிஷமே இப்படி நடந்துருக்கு”

“பாவம்டா உங்க அத்தை. வளையல தான் புடுங்கனானுங்களே, அப்படியே விட்டுட்டுப் போக வேண்டிதானே. ரெண்டு கையையும் எதையோ வைச்சு கிழிச்சு விட்டுட்டுப் போயிருக்கானுங்க பார்க்கவே பாவமா இருக்கு. அத்தையயாச்சும் பொம்பளன்னு அதோட விட்டுட்டானுங்க, மதன கையையும் காலையும் ஒடச்சி படுக்க வச்சிட்டானுங்க. எழுந்து நடக்கவே சில வருஷம் ஆகுமாம். பாவிபயலுக. நல்லா இருப்பானுங்களா?” புலம்பினார்.

“அத்தை, இப்போ எதுக்கு சாபம் குடுக்கறீங்க? யாருக்கு என்ன கிடைக்கனுமோ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கடவுள் குடுப்பாரு. அவங்க சிக்கல அவங்களே தீர்த்துக்கட்டும். நீங்க போய் படுங்க” என செல்லமாய் அதட்டி அனுப்பி வைத்தாள் தேவி.

“யெ விக்கலு விக்கலு விக்கலு வந்தா
தண்ணிய குட்சிக்கமா.

சிக்கலு சிக்கலு சிக்கலுனாக்க
ஓரமா ஒத்திக்கோமா

சோகமா சோகமா
ஹே ஜால்லி இலோ ஜிமு கான் தாமா.

ஹே மாமா பனாமா
போயி பார்ட்டி பண்ணலமா” என பாடிக் கொண்டே வெளியேறினார் இந்து.

“இந்த வயசுக்கு எங்கம்மா படுற பாட்ட பார்த்தியா? சரியான லொள்ளு” என சிரித்தப்படியே மனைவியின் காலை அமுக்கி விட்டான் வேந்தன்.

குளித்துவிட்டு வெளியே வரும் வீராவை கட்டிலில் உட்கார்ந்தவாறே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.

“ஏய் போண்டா டீ(பொண்டாட்டி). என்ன இன்னிக்கு பார்வையெல்லாம் பலமா இருக்கு? மாமன அந்த முட்டைக்கண்ணாலேயே முழுங்கிருவ போல இருக்கு.” என்றவாறே அவள் பக்கத்தில் வந்து நெருங்கி அமர்ந்து கொண்டான்.

“இன்னிக்கும் என் சோப்பு தான் பாவிச்சிங்களா?” அவனை வாசம் பிடித்தவாறே முறைத்தாள் அவள்.

“உன் சோப்பை தேய்ச்சிக் குளிச்சுக்கிட்டா உன்னையே தேய்ச்சிகிட்டு குளிச்ச மாதிரி சோக்கா இருக்குடி” வழிந்தான் அவன்.

“ஜொள்ளு ஊத்துது துடைச்சிக்கிங்க” சிரித்தாள் அவள்.

“போடி, என் பாடு எனக்கு தான் தெரியும். நாலு மாசம் ஆகற வரைக்கும் டாக்டர், உன் கிட்ட கூட வரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் என்ன தான் செய்யறது சொல்லு”

அவன் மடியில் சாய்ந்து படுத்துக் கொண்டாள் அனு. இப்பொழுது அவள் ஒன்றரை மாத கர்ப்பிணி. அவள் கர்ப்பப்பை வீக்காக இருப்பதால், கவனமாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டரின் உத்தரவு. வீட்டில் எல்லோரும் அவளை தாங்கோ தாங்கேன தாங்கினார்கள். விட்டால் வீரா அவளை நடக்க கூட விடாமல் இடுப்பிலேயே தூக்கி வைத்து சுற்றுவான். அப்படி தாங்கினான் மனைவியை.

“மாமு, இதுல உனக்கு ஏதாச்சும் வருத்தமா?” பாவமாக கேட்டாள் அவள்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அனும்மா. உன்னோட நலன் தான் முக்கியம். நான் உனக்கு உடம்பு தேறி பலமா இருக்கறப்போ பெத்துக்கலாம்னு சொன்னேன். அடம் புடிச்ச கழுதை, பாவ முகத்தைக் காட்டியே என்னை சரிகட்டிட்ட. நீ நல்ல படியா பெத்து எடுக்கற வரைக்கும் என் உயிர் என்கிட்ட இருக்காது” மனைவியின் மணிவயிற்றை மென்மையாக தடவிக் கொடுத்தான் வீரா.

இருக்கமாக அவனை வயிற்றோடு கட்டிக் கொண்டாள். பின் அவன் முகத்தைப் பார்த்து,

“சரி, சொல்லுங்க!” என கேட்டாள்.

“என்னத்த சொல்லனும்” என அவள் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தான் வீரா.

“மதன் மாமா கை காலை உடைச்சக் கதைய சொல்லுங்கன்னு கேக்குறேன்”

“எவன் மாமா? அவனா? இனிமே மாமான்னு அவன கூப்பிட்ட, உதட்டைக் கடிச்சு வச்சிருவேன்” கோபப்பட்டான்.

“சரி கூப்புடல. இப்ப சொல்லுங்க”

“உன் கதைய கேட்துல இருந்து அவன போடறதுக்கு நாள் பார்த்துக் கிட்டு தான் இருந்தேன். பாவி எஸ்கேப் ஆயிட்டான். சென்னைக்கு திரும்ப வந்துட்டான்னு தெரிஞ்ச கையோட போட்டு தாக்கிட்டேன். சாவடிச்சிருப்பேன், ஆனா எனக்கு என் பொண்டாட்டி கூட நூறு வருஷம் வாழனும். அதான் முகமூடி போட்டுட்டுப் போய் வெளுத்து வாங்கிட்டேன்” ஆனந்தமாக சிரித்தான் அவன்.

கண்கலங்க, அவன் உதட்டில் ஆவேசமாக தன் உதட்டைப் பொருத்தினாள் அனு.

“ஏய்! விடுடி! டாக்டர் தள்ளி இருக்க சொல்லிருக்காருடி என் ராட்சசி. இப்படி என்னைக் கொல்லாதடி” என தன் மனைவியை கெஞ்சி கொஞ்சினான் வீரா.

லட்டுவின் அறையில் முக்கியமான மின்னஞ்சல் ஒன்றை லாப்டாப்பில் டைப் செய்து கொண்டிருந்தான் கார்த்திக். அம்மாவிடம் கொஞ்சிவிட்டு ரூமுக்கு வந்த லட்டு,

“மங்கூஸ், என்னடா செய்ற?”

“முக்கியமான ஈமெயில் ஒன்னு அனுப்பனும் கக்கூஸ்”

“யார பார்த்துடா கக்கூஸ் சொன்ன?” கடுப்பானாள் லட்டு.

“இங்க வேற யாரு இருக்கா? உன்னைப் பார்த்துதான். என்னை மங்கூஸ்னு கூப்பிட்டா நான் உன்னை அப்படித்தான் கூப்புடுவேன்”

“சரி விடு. இனிமே வேற பேரு வைக்கிறேன். இப்ப கீழே போய் எனக்கு பால் எடுத்துட்டு வா”

“கீழே இருந்து தானடி வந்த. குடிச்சுட்டு வர வேண்டிதானே?” பார்வையை லாப்டாப்பில் வைத்த படியே கேட்டான்.

“அது வந்து, அப்போ குடிக்கனும் போல இல்ல. இப்ப இருக்கு. போறியா இல்லையா?” கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
நிமிர்ந்து பார்த்து முறைத்தவன்,
“மனுஷன் வேலை செய்யறது கண்ணுக்கு தெரியல? போடி போய் குடிச்சுட்டு வா” என்றான்.
“இன்னிக்கு காலேஜ்ல ரொம்ப நடந்துட்டேன். அப்புறம் வேற ஹாஸ்பிட்டல் அங்க இங்கன்னு அலைச்சல். கால் வலிக்கிதுடா மாமா”
அவளின் மாமா எனும் மந்திர மகுடிக்கு மயங்கிய நாகமாய் ஊர்ந்து நெளிந்து கிச்சனுக்கு சென்றான் கார்த்திக். மேலே ரூமுக்கு வரும் போது, கதவு பூட்டி இருந்தது.
 
Last edited:
“லட்டு!” என கூப்பிட்டவாறே கதவைத் தட்டினான். அவள் திறக்கவில்லை.

இன்னும் கொஞ்சம் சத்தமாய் அழைத்தான். லட்டுவை தவிர மற்ற எல்லோரும் தத்தம் அறைகளில் இருந்து வெளியே வந்து பார்த்தார்கள்.

“ஏன் மாமு, என்ன பண்ண? தங்கச்சி வெளிய தொறத்திருச்சு. கல்யாணம் ஆகி இத்தன மாசத்துலயும் நாவடக்கம் வரலையே உனக்கு” பலமாக சிரித்தான் வேந்தன்.

“என்ன சகல இது? இப்படி வெளிய தள்ளிருச்சே கொழுந்தியா. நான் அப்போவே ‘கண்ணாட்டியின் காலில் விழுவது எப்படி’ன்னு புக்கு வந்துருக்கு. வாங்கி படின்னு சொன்னேன். இப்ப பாரு உன் நிலைமைய” என வெறுப்பேத்தினான் வீரா.

இதையெல்லாம் கூட அவனால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் இந்து பேசியதை தான் அவனால் தாங்க முடியவில்லை. பல்லை நற நறவென கடித்தான் கார்த்திக்.

“ஏன்டாப்பா கார்த்திக், நல்லதா ஒரு பாட்டை எடுத்து விடு. கதவு தானா தொறக்கும்” அவன் திரு திருவென முழிக்கவும் அவரே எடுத்துக் கொடுத்தார்.

“பூங்கதவே தாள்திறவாய்

பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்

பூவாய் பெண் பாவாய்”

டென்சன் ஏறியது அவனுக்கு. தேவி எழுந்து வெளியே வந்து நடக்கும் கூத்தைப் பார்த்து, ஸ்பேர் கீயை தூக்கி போட்டாள் கார்த்திக்கிடம். கேட்ச் பிடித்தவன், வேந்தனை திரும்பி பார்த்து,

“உள்ளுக்குள்ள அய்யோ அம்மான்னு சத்தம் கேட்டா கூட யாரும் வந்து கதவை தட்ட கூடாது. இன்னிக்கு உன் தங்கச்சிய பிச்சி பேன் பார்க்காம விடமாட்டேன்டா” சவால் விட்டான்.

“யாரு நீயா? போடா டேய்! மண்ட பத்திரம்” என அதற்கும் குடும்பமே அவனை கலாய்த்தார்கள்.

“கிரேட் இன்சல்ட்” என முனகிக் கொண்டே சாவியிட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே போனான் அவன். ரூம் கும்மிருட்டாக இருந்தது.

‘என்னடா நடக்குது? லைட்ட அமிச்சுட்டு தூங்கிட்டாளா?’ என கறுவியபடியே சுவிட்சைப் இருட்டிலேயே தேடி லைட்டைப் போட்டான். போட்டவன் அப்படியே வாய் பிளந்து நின்றான்.

அங்கே பூத்தூவிய கட்டிலின் நடுவே அழகிய பட்டுடுத்தி பதுமையாக அமர்ந்திருந்தாள் லட்டு. கோபம் நீராவி போல் காற்றோடு கலந்துவிட்டது அவனுக்கு.

“லட்டும்மா” ஆசையாக அழைத்தான் அவன். வெட்கத்துடன் நிமிர்ந்தவள்,

“லைட்டை ஆப் பண்ணிட்டு வா கார்த்திக்” என அழைத்தாள்.

“அடி கள்ளி! இத முதல்லயே சொல்லறதுக்கென்ன? உன் வீட்டுல உள்ளதுங்க எல்லாம் என்னை கலாய்ச்சி எடுத்துருச்சுங்க” முறுக்கிக் கொண்டான் அவன்.

“இதெல்லாம் வீட்டுல உள்ளவங்க ஏற்பாடு தான். அண்ணி ஸ்பேர் கீ குடுத்துருப்பாங்களே” சிரித்தாள் அவள்.

ஆசையாக அவளை நெருங்கவும், கதவு தட்டப்படவும் சரியாக இருந்தது. வெளியே இருந்தே,

“டேய் மாப்புள்ளை! ஹ்ம்ம் ஹ்ம்ம்! ஜமாய்” என சிரித்தான் வேந்தன்.

“ஒழுங்க போயிருடா. வெளிய வந்தேன் தங்கச்சி புருஷன்னு கூட பார்க்க மாட்டேன்” என உள்ளிருந்தே கத்தினான் கார்த்திக்.

லைட்டை அடைத்துவிட்டு டேபிள் லைட்டைப் போட்டவன் லட்டுவின் அருகில் நெருங்கி அமர்ந்தான். அவள் முகத்தை ஏந்தி,

“எத்தனை வருஷ கனவுடி இது. என்னால இன்னும் நம்ப முடியலைடி பட்டுக்குட்டி” என்றான்.

அவனை இருக்கி அணைத்தவள், கன்னத்தில் அழுத்தமாக கடித்தாள்.

“ஆஆஆ! ஏன்டி இப்படி கடிச்சு வைக்கிற?”

“நீதானே நம்ப முடியலைன்னு சொன்ன. அதனால கடிச்சு வைச்சேன். வலிக்குது தானே? அப்ப நம்பு, இது நிஜம்தான்” என சிரித்தாள்.

“கேடி! இருடி உன்னை என்ன செய்யறேன்னு பாரு” என அவள் மேல் பாய்ந்தான். சட்டென நகர்ந்தவள்,

“முதல்ல எங்கத்தைய என்ன பண்ணேன்னு சொல்லுடா என் சிப்சு” என கேட்டாள்.

படுத்தவாறே,

“ரொம்ப ஒன்னும் பண்ணல. பொம்பளையா போய்ட்டாங்களே. திருட்டு மாதிரி செட் பண்ணி, கூரான கம்பி வச்சு ரெண்டு கைளயும் பல கோடுகள் இழுத்துவிட்டேன். அந்தக் கைதானே உனக்கு சூடு போட்டுச்சு. முதல்ல பொசுக்கிறலாமான்னு பார்த்தேன். மனசு வரலடா”

கண் கலங்கி விட்டது லட்டுவுக்கு.

“கை சரியாக பல மாசமாகுமாம். இந்த தண்டனை போதும்டா கார்த்திக். இதுக்கு மேல நம்ம வாழ்க்கையில எந்த துன்ப சம்பவத்தைப் பத்தியும் நினைக்க கூடாது. ஒன்லி லவ். சரியா?”

“லவ் வேணும்னு சொல்லிட்டு இப்படி எட்டி இருந்தா எப்படி? கிட்ட வாடி என் பொண்டாட்டி” என்றவன் அவளை தூக்கி தரையில் விட்டு இடுப்பைப் பற்றிக் கொண்டு பாட ஆரம்பித்தான்.

“ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் கேக்கு உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சேலை கட்டும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
உன் விரல்லுல மருதானி இப்போ வைக்க போறேன் ரெடியா நீ” என அவன் நிறுத்த, தொடர்ந்து கிறக்கத்தில் லட்டு பாடினாள்.
“டேய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
ஏணி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே”

என பாடிக் கொண்டே இருவரும் கட்டிலில் பாய்ந்தனர். அங்கே நிறைவாக ஒரு ஜல புலா ஜங்ஸ் அரங்கேறியது.

மறுநாள் அதிகாலை வேந்தனும் கார்த்திக்கும் மட்டும் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் இன்னும் எழுந்து வந்திருக்கவில்லை. வேந்தன் கார்த்திக்குக்கும் சேர்த்து காபி கலந்து கொடுத்தான்.

“தேங்க்ஸ் மச்சி”

“நமக்குள்ள எதுக்குடா இந்த தேங்கஸ். விடுடா. அப்புறம் மச்சி, முகம் அப்படியே ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதேன்ற மாதிரி டால் அடிக்குது” என கிண்டல் செய்தான்.

அழகாக வெட்கப்பட்ட கார்த்திக்,

“ஓட்டாத மச்சி. எனக்கு வெக்கமா வருது” என்றான்.

“இந்த கர்மத்துக்கு பேரு தான் வெக்கமா? மிடிலடா சாமி.”

காப்பியைக் குடித்தவாறே வேந்தனை நோக்கிய கார்த்திக்,

“மச்சி உன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கனும்டா” என்றான்.

“எதுக்குடா? பால்ல பலானத கலந்து குடுத்ததுக்கா?” என கூலாக கேட்டான்.

குடித்துக் கொண்டிருந்த காப்பி புரை ஏறியது அவனுக்கு.

“எப்படிடா தெரியும்?”

“ஏன்டா வென்ட்ரு, நார்மல இருக்கறதுக்கும் ட்ரக்கோட இன்புளுவன்ஸ்ல இருக்கறதுக்கும் வித்தியாசம் தெரியாதாடா? உனக்கு புத்தி ஏண்டா இப்படி போச்சு?”

“அது வந்து மச்சி,” திக்கினான் கார்த்திக்.

“முதல்ல தெரியல. அப்புறம் மறுவாரத்துல தனியா யோசிச்சு பார்த்ததுல புரிஞ்சுச்சு நீ தான் என்னமோ பண்ணியிருக்கன்னு.”

“உனக்கு கோபம் வரலியாடா?”

“வந்துச்சே. உன்னைப் புடிச்சு துவைச்சு காய வைக்கனும்கற அளவுக்கு கோபம் வந்துச்சு. ஆனா நீ இப்படி செஞ்சதுனால தான் நான் யோசிக்கவே ஆரம்பிச்சென். அப்புறம் தான் என் லவ்வ புரிஞ்சுகிட்டேன். அதனால உன்னை மன்னிச்சு விட்டுட்டேன். நீ இன்னும் எந்த அளவுக்குப் போறேன்னு பார்க்கத்தான் ரோஜாவ மடக்க உன் கிட்டயே ஐடியா கேட்டேன். நீ தில்லாலங்கடி பண்ணுவன்னு தெரியும். ஆனா என் ரோஜா மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. பிடிக்காததையே நான் செஞ்சா கூட அவ அத பிடிச்சத மாத்திக்குவா. என் டார்லிங்டா அவ. அதனால அவளுக்கு கூஜா தூக்குவேனே தவிர எதிர்த்து நிக்க மாட்டேன்.” சிரித்தான் வேந்தன்.

“மன்னிச்சிரு மச்சி. மேடம் உன் மேல ரொம்ப கிரேஷா இருந்தாங்க. நீ நல்லவன்னு எனக்கு தெரியும், ஆனா அவங்கள அட்ஜஸ்ட் பண்ணிக்குவியான்னு எனக்கு சந்தேகம் இருந்துகிட்டே இருந்தது. உன் பேமிலிய முன்னிருத்தி அவங்கள ரெண்டாவதா ஆக்கிருவியொன்னு ஒரு கலக்கம். இவ்ளோ கஸ்டப்பட்டவங்க இனிமேலாச்சும் நல்லா இருக்கனும்னு நினைச்சேன். உங்களுக்குள்ள கசமுசா நடந்துட்டா நீ கண்டிப்பா அவங்கள விடமாட்டேன்னு தான் அப்படி செஞ்சேன். தப்புதான், ஆனா என் தங்கச்சி நல்லதுக்காக இப்படி மாமா வேலை பார்த்துட்டேன். “ வேதனை அவன் குரலில்.

“விடுடா மச்சி. நான் இதெல்லாம் பெருசா எடுதுக்கல. நீ எனக்கு நிறைய நன்மைதான் செஞ்சிருக்க. என் தங்கச்சிய லவ்ஸ் விட்டது மட்டும் என்னால அப்போ ஏத்துக்க முடியல. பிளேபாய் இமேஜ் உள்ளவனுக்கா என் லட்டுன்னு ஒரு கடுப்பு. அப்புறம் ஆள் வச்சி போலோ பண்ணப்ப தானே தெரியுது நீ ஒரு வெத்துவேட்டுன்னு” கடகடவென சிரித்தான் வேந்தன்.

“லட்டுவ பார்த்த இந்த கண்ணுக்கு ஊர்வசி கூட ஊசி போன வடைதான் மச்சி. உயிர் மண்ணுக்கு, உடல் லட்டுக்கு”

“அடச்சீ, அசிங்கம் புடிச்சவனே.” துப்பினான் தன் நண்பனை.

“மச்சி, எனக்கு ஒரு வாக்கு மட்டும் குடு மச்சி. மேடத்தை என்னிக்கும் கண் கலங்காம பார்த்துக்கனும். செய்வியா?”

“அத விட எனக்கு வேற என்னடா வேலை. இந்த உடல், உயிர் ரெண்டுமே என் காதல் ரோஜாவுக்கு தான்டா.”

“காலையிலேயே ஏன்டா ரெண்டு பேரும் சலிமாவ வீடு முழுக்க ஊத்திக்கிட்டு இருக்கீங்க?” என்றபடியே வந்தார் இந்து.

“சலிமாவா?” என் இருவருமே மண்டை காய்ந்தார்கள்.

“அதான் ஜொள்ளு. இங்லீசுல சொன்னேன்”

“ஓ! சலிவாவா?” என்றான் கார்த்திக்.

“அந்த சலிமாதான் மாப்பிள்ளை. நீங்க ரெண்டு பேரும் அப்படியே பொண்டாட்டி தாசனா இருக்கீங்க. என் பெரிய மாப்பிள்ளைதான் கொஞ்சம் கெத்தா இருக்காரு” என மகனையும் மருமகனையும் வம்பிழுத்தார் இந்து.

“யாரு கெத்து? உங்க பெரிய மருமகனா? அங்க படில பாருங்க” என காட்டினான் கார்த்திக்.

அங்கே அனுவை கைகளில் ஏந்தியபடி படிகளில் இறங்கி கொண்டிருந்தான் வீரா.

கீழே இவர்கள் மூவரும் சிரித்த சத்தம் தூங்கிக் கொண்டிருந்த மற்ற அனைவரையும் எழுப்பி விட்டது.

மெல்ல விழித்த தேவி, வேந்தன் இல்லாததைப் பார்த்து போனை கையிலெடுத்தாள்.

“ஹலோ”

“சொல்லுங்கம்மா”

“எப்படி இருக்காரு அந்த ஆளு?”

“என்னத்தமா சொல்லுறது. உடம்பெல்லாம் தண்ணி கட்டியா வந்துருக்கு. பார்க்கவே அருவருப்பா இருக்கு. ஹாஸ்பிட்டல் போனாரு. என்னமோ சிங்கள்ஸ்னு (shingles) சொன்னாங்களாம். மருந்து குடுத்துருக்காங்க. வீட்டை விட்டு வெளிய எங்கும் போறது இல்ல. ரூம்லயே அடைஞ்சி கெடக்காரு. அரிக்குது போல. சொரிஞ்சிகிட்டே இருக்காரு. சொரிஞ்சா கட்டியில உள்ள தண்ணி பட்டு மத்த இடங்களுக்கும் பரவுது. பாவமா இருக்குமா” பேசியது ராகவன் வீட்டில் வேலை செய்யும் சமையல்கார அம்மா.

“சரி விடு. நீ கவனமா பார்த்துக்க” என போனை வைத்தவள் உதட்டில் ஒரு ரகசிய சிரிப்பு. எழுந்து குளித்தவள், கீழே இருந்த சந்தோச ஜோதியில் சென்று ஐக்கியமாகினாள்.
 
Last edited:
சில வருடங்களுக்குப் பிறகு

“மலர்மேரி, இந்திரக்குமார்!” மாடியிலிருந்து கத்தினாள் தேவி.

“எஸ் அம்மா” கோரசாக வந்தது குரல். இருவருக்கும் ஐந்து வயது ஆகி இருந்தது.

“பெட்டைம் ஆச்சு. வந்து படுங்க”

“பாட்டி கதை சொல்லுறேன்னு சொன்னாங்க. கேட்டுட்டு வரோம்” குமார் பதிலளித்தான். அவன் அப்படியே வேந்தனின் மறு உருவம். ஆனால் குணம் மட்டும் தேவியைக் கொண்டு பிறந்திருந்தான். மலரோ அச்சு அசல் தேவியைக் கொண்டிருந்தாள். ஆனால் வேந்தனை போலவே அனுசரித்துப் போகும் குணம்.

“சரி, இருங்க நானும் வரேன்” என்றவள் பிள்ளைகளுக்கும் தனக்கும் தேவையான போர்வை தலையணைகளை எடுத்துக் கொண்டு இந்துவின் அறைக்கு சென்றாள். அங்கே ஏற்கனவே அனுவும், லாவண்யாவும் தத்தம் பிள்ளைகளுடன் இருந்தனர். அனுவுக்கு ஒற்றை மகள், அனுரேகா, வயது நான்கு. லட்டுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கவின்ராஜ் மூன்று வயது, இரண்டாவது சரண்யா இரண்டு வயது, வயிற்றில் ஒன்று எட்டு மாதம். கார்த்திக் தீயாய் வேலை செய்திருந்தான்.

வேந்தனோ இரட்டைக் குழந்தைகளை சிசேரியன் முறையில் பெற்றெடுத்த மனைவியிடம் அடுத்த பிள்ளை இன்னும் ஐந்து வருடம் கழித்து தான் என்றுவிட்டான். வீராவோ பிள்ளைப் பெற்று செத்துப் பிழைத்து வந்த மனைவியிடம், இனிமே பிள்ளை பேச்சுக்கே இடமில்லை என சொல்லிவிட்டான். லட்டு மட்டும் பிரசவ வார்டுக்கு போவதும் தெரியாது பெற்றுவிட்டு வருவதும் தெரியாது. புருஷனுக்கும் மனைவிக்கும் அதில் நல்ல பொருத்தம் இருந்தது. பிள்ளைகள் அனைவரையும் இந்துவே பார்த்துக் கொண்டார். மற்ற வேலைக்கு எல்லாம் ஆள் இருந்தது. பிள்ளைகளை மட்டும் வேலைக்காரர்களிடம் விடமாட்டார். களைப்பாக இல்லையா என கேட்டால் ‘பிள்ளைகள் இன்பம், பேரப்பிள்ளைகள் பேரின்பம்’ என சொல்லிவிடுவார். இப்பொழுது எல்லோரும் ஒன்றாக தேவியின் வீட்டிலேயே இருந்தனர்.

இந்துவின் அறையில் கட்டில் இருக்காது. ஜப்பான் காரர்கள் போல் கீழேயே ரூமை அடைத்து மெத்தைப் போடப் பட்டிருக்கும். அந்த ரூமுக்கு சமாதான குடில் என பெயரிட்டிருந்தனர். புருசன் மனைவிக்குள் சண்டை வந்தாள், பெண்கள் தங்களது தலையணையை தூக்கி கொண்டு வந்து இந்துவின் ரூமில் அவருடன் படுத்துக் கொள்வார்கள். அநேகமாக அவர் ரூமில் யாராவது இருந்துக் கொண்டே தான் இருப்பார்கள். இரண்டு நாளுக்கு மேல் சண்டை நடந்தால், இவர் சமாதானப் படுத்தி அனுப்பி வைப்பார். பேரப் பிள்ளைகளும் பாட்டியின் மேல் பாசத்துடனே சுற்றுவார்கள். அவர் இடுப்பில் எப்போதும் ஒரு குழந்தை உட்கார்ந்து கொண்டே இருக்கும்.

“பாட்டி, எனக்கு காக்கா வடை கதை வேணும்” கேட்டாள் அனுரேகா.

“வேணா! வேணா! அந்தக் கதையே எத்தனை தடவ தான் கேக்குறது” மற்ற எல்லோரும் கத்தினார்கள்.

ரேகாவின் சோக முகத்தைப் பார்த்த குமார்,

“பாட்டி காக்கா கதைய முதல்ல சொல்லுங்க. அப்புறம் வேற கதைக்கு போங்க” என பெரிய மனுசன் போல் சொன்னான். ஓடி வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டாள் ரேகா.

“தேங்க்ஸ்டா குமாரு” என அழகாக சிரித்தாள் அவள்.

“இட்ஸ் ஓகே” என அவளை நன்றாக மடியில் அமர்த்திக் கொண்டான் அவன்.

இந்து கதையை முடித்ததும்,

“எனக்கு தேவதை கதை வேணும் பாட்டி” என கைத்தூக்கினாள் மேரி.

“ஆமா ஏஞ்சல் கதை, ஏஞ்சல் கதை” என மேரியின் மடியில் வந்து அமர்ந்து கொண்டான் கவின். அவளைவிட இரண்டு வயது குறைவு அவனுக்கு. ஆனாலும் அவள் பின்னாலேயே ஏஞ்சல் ஏஞ்சல் என சுத்துவான். கார்த்திக் அடித்தும் பார்த்துவிட்டான், லட்டு கடித்தும் பார்த்து விட்டாள். அவன் ஏஞ்சல் பைத்தியத்தை யாராலும் நிறுத்த முடியவில்லை. சின்ன பிள்ளைகள் தானே என்று இவர்களும் விட்டு விட்டார்கள்.

அவர்கள் கதை கேட்டுக் கொண்டிருந்த வேலையில் ஒவ்வொருத்தராக வேந்தன், கார்த்திக், வீரா மூவரும் நுழைந்தார்கள். வேந்தன் இப்பொழுது தேவியிடம் வேலை செய்யவில்லை. அவளின் உதவியால் சொந்தமாக இண்டிரியர் கம்பேனி ஆரம்பித்து நடத்துகிறான். அவனுக்கு உதவியாக லாவண்யா இருக்கிறாள். தேவி இன்னும் அவள் கம்பேனியில் தான் இருந்தாள். கார்த்திக் அவளுக்கு கீழ் தான் வேலை செய்கிறான். வேறு பிஸ்னஸ் ஆரம்பித்துக் கொடுக்கிறேன் என கூறியும் மறுத்துவிட்டான் அவன். வீரா தனியாக செக்குரிட்டி சர்விஸ் வைத்து நடத்துகிறான். அனு அட்மினிஸ்ட்ரேஷனில் அவனுக்கு உதவியாக இருக்கிறாள்.

ராகவன் இறந்து இரு வருடம் ஆகியிருந்தது. உடல் வலியும் ,அரிப்பும் , வீட்டிலே அடைந்து கிடக்க வேண்டிய நிலைமையும் அவர் மனதை சிதைத்துவிட்டது. கார்த்திக் அடிக்கடி அவரை போய் கவனித்துக் கொண்டாலும் அவர் மனம் வெம்பி தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கு கூட தேவி அவரை எட்டிப் பார்க்கவில்லை.

அப்பாக்களை பார்த்தவுடன் பிள்ளைகள் ஓடி சென்று அவர்களைக் கட்டிக் கொண்டார்கள். கவின் மட்டும் மாமா என வேந்தனைக் கட்டிக் கொண்டான். அவன் மாமா செல்லம். மீண்டும் எல்லோரும் இந்துவை சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.

“எல்லாரும் வந்தாச்சு. இப்போ பேமிலி பாட்டு டைம். ஓன் டூ த்ரீ” என எடுத்துக் கொடுத்தார் இந்து.

“பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வதை போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வளைந்திருப்போம் நாணலை போல்தானே
ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே
அடை மழையாக பெய்யும் சந்தோசம்
ஆசை ஆசையாய் இருகிறதே இதுபோல் வாழ்ந்திடவே
பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே
நம்மை காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும்
சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும்
ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும்
சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம்”

சந்தோசமாக பாடியவர்கள், இந்துவை சுற்றியே மனநிறைவோடு படுத்துக் கொண்டார்கள்.

தூங்காமல் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்த பேரக் குழந்தைகளை,

“யாருடா அங்க பேசுறது? ங்கொய்யால! எழுந்து வந்தேன், தக்காளி பேஜாரா ஆயிரும்” என மிரட்டினார். அவர் தக்காளியை கேட்டு எல்லோரும் கலகலவென சிரித்தார்கள். இந்த சந்தோஷம் என்றென்றும் அவர்கள் வாழ்வில் நிலைக்க வாழ்த்தி விடைபெறுவோம்.





முற்றும்.
 
Last edited:
Back
Top