எபி 11

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

அத்தியாயம் 11

செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படும் இந்நாளில், செய்து முடிக்க முடியாத காரியம் என்பது மிகவுமே அருகி விட்டது! தொழில் நுட்ப வளர்ச்சியால், இறந்து போனவர்களைக் கூட நிழலாய் கொண்டு வந்து நம்மிடையே நிற்க வைக்க முடிகிறது! அப்படி இருக்கும் போது, திலகனின் லாப்டாப்பை பிரித்து மேய்வது என்பது சிரமமானக் காரியமா என்ன!

சக்தி அமரன் நியமித்த சீக்ரட் டிடெக்டிவ் ஒருத்தன், திலகனது அறையை எதாவது துப்புக் கிடைக்கிறதா என அலசி ஆராய்ந்தான். டிஜிடல் லாக் செய்யப் பட்டப் பெட்டி ஒன்றும், அவனது லாப்டாப்ப்பையும் கைப்பற்றியவன், சக்தி அமரனிடம் அதை ஒப்படைத்தான்.

“அந்தப் பையனோட கட்டில் ஹேட்போர்ட் பின்னாடி சீக்ரட் ஸ்பேஸ் ஒன்னு இருந்தது சக்தி சார்! அதுல நெறைய வகையான ட்ரக்ஸ் இருந்தது” எனச் சொன்னவன் அந்தப் போதைப் பொருட்களையும் இவனிடம் ஒப்படைத்திருந்தான்.

இவர்களிடம் சிக்கி இருந்த திலகனின் நண்பர்கள் இருவரையும் இன்னும் கஸ்டடியில்தான் வைத்திருந்தார்கள். மற்ற நண்பர்கள் கூட்டம், அவன் பழகிய ஆட்கள், காலேஜில் அவனது நடவடிக்கை இதையெல்லாம் விசாரிக்கச் சொல்லி அந்த டிடெக்டிவ்வை அனுப்பியவன், கைப்பற்றிய பொருட்களை ஐ.டி விங்குக்கு எடுத்துச் சென்றான். அங்கே சாமும் ஹேரியும் பிசியாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னடா வேலைப் போகுது?” எனக் கேட்டபடியே அவர்களுக்கு வாங்கி வந்திருந்த காபியைக் கொடுத்தான் சக்தி.

“எதிர் கட்சி தலைவர் மேல அவதூறு பரப்பிட்டு இருக்கோம் பாஸ்! கொஞ்சம் ஃபேமஸா இருக்கற முகநூல் பிரபலம், ட்வீட்டர் பிரபலம்லாம் அரசியல் போஸ்ட் போட்டிருந்தா, அங்க போய் சாணியடிக்கற மாதிரி நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு இருக்கோம்! யாரு கிட்ட என்ன வம்பு பண்ணோம்ங்கற டீட்டேல்லாம் எக்ஸல் ஃபைல்ல இருக்கு பாருங்க!” என்றான் சாம்.

மெலிதாக நகைத்துக் கொண்டான் சக்தி அமரன். ஒரேடியாய் துள்ளிக் கொண்டிருக்கும் கட்சி தலைவர் ஒருவரின் பெயரைச் சொன்னவன்,

“அவங்க கட்சிக்குன்னு ஃபேஸ்புக் பேஜ்லாம் இருக்கு பாரு, அங்க போய் நாலு ஐட்டம் வீடியோவ போட்டு விடுங்கடா! அந்த வீடியோல வைரஸயும் இணைச்சு விடுங்க! நாக்கத் தொங்கப் போட்டுட்டு தட்டிப் பார்க்கறவன் போன், கம்ப்யூட்டர்லாம் புட்டுக்கின்னு போகட்டும்! ஏதோ நம்மாள முடிஞ்ச சமூக சேவை” எனச் சொல்லி நக்கலாய் சிரித்தான்.

“பண்ணிடலாம் பாஸ்!” என இருவரும் கோரஸாகச் சொன்னார்கள்.

“அந்த வேலையை அப்புறம் பாருங்க! ஹாரி! நீ டிஜிடல் லாக் பண்ணிருக்கற இந்தப் பெட்டியைத் திறக்க முயற்சி பண்ணு! சாம்! நீ இந்த லாப்டாப்ல லாகின் செய்ய பாருடா! பாஸ்வர்ட் கேக்குது! எதாச்சும் பண்ணி ஓபன் பண்ணிக் குடு”

“ஓகே பாஸ்” என்றனர் இருவரும்.

அவர்கள் சக்தி கொடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்க, இவன் கட்சி ஆபிசை ஒரு வலம் வந்தான். அங்கிருக்கும் எல்லோருக்கும் மிகப் பழக்கமானவனாய் மாறி இருந்தான் சக்தி அமரன். இவனைப் பார்த்தவர்கள் புன்னகைத்து ‘வணக்கம் பாஸ்’ எனச் சொல்ல, இவனும் அவர்களுடன் அளவளாவினான். சாம், ஹாரி பாஸ் என அழைக்க, அதுவே எல்லோருக்கும் பழகி இருந்தது.

கார்மேகத்தின் அறைக்குப் போனவன்,

“என்ன அங்கிள், லீவு முடிஞ்சு ப்ரெஸா வந்திருக்கீங்க! உங்கள பார்க்கறப்ப அப்படியே பத்து வயசு குறைஞ்சுட்ட மாதிரி இருக்கு!” எனக் கலகலத்தான்.

அன்றுதான் விடுமுறையில் இருந்து வேலைக்கு வந்திருந்தார் கார்மேகம். அவனைப் பார்த்துப் புன்னகைத்தவர்,

“லீவ்னாலே ரெஸ்ட்டுத்தானேப்பா! ஓய்வும், நல்ல சாப்பாடும், ஊட்டியோட க்ளைமேட்டும் என்னை இளமையாக்கிடுச்சு போல!” என்றார்.

“அங்கிள்” என்ற சக்தி அமரன், உதட்டின் மேல் ஆட் காட்டி விரலை வைத்துக் கடித்தபடி, வலது காலை மட்டும் ஆட்டினான்.

“என்னப்பா சக்தி?” என ஒன்றும் புரியாமல் கேட்டார் இவர்.

“எனக்கு..”

“உனக்கு?”

“எனக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சு!”

“ஓஹோ! இப்போ நீ பண்ணுன ஸ்டண்டுக்குப் பேரு வெக்கமா?”

“ஆமா அங்கிள்”

“உன் வெக்கத்தைப் பார்த்து, வெக்கத்துக்கே வெக்கம் வந்திடும்! வேணா! விட்டுடு” என்றவர்,

“காங்கிராட்ஸ் சக்தி! பொண்ணு யாரு?” எனக் கேட்டார்.

“நம்ம மஞ்சுதான்!”

“அட! இனி நீ நம்ம மினிஸ்ட்டர் மருமகனா! அட்ரா சக்கை! வாழ்த்துக்கள்பா” என எழுந்து வந்து கட்டிக் கொண்டார்.

“வெளிய யாருக்கும் சொல்லல அங்கிள்! உங்கள பார்த்ததும் சொல்லாம இருக்க முடியல! என்னோட கைட், ஆசான், குரு எல்லாமே நீங்கத்தானே! இவ்ளோ குறுகியக் காலத்துல எவ்ளோ கத்துக்கிட்டேன் நான். நீங்க இல்லாதப்ப மாமாவுக்கு நானே ஒரு ஸ்பீச் எழுதி குடுத்தேன்னா பார்த்துக்கோங்க!”

“எது? நான் ஏற்கனவே இன்னொரு கூட்டத்துக்குப் பேச எழுதி குடுத்தத, அங்கிங்க மானே தேனேன்னு போட்டு காபி, பேஸ்ட் பண்ணி குடுத்திருக்கியே, அதா?” எனப் புன்சிரிப்புடன் கேட்டார் கார்மேகம்.

“இப்படிலாம் புண்படுத்தாதீங்க அங்கிள்! நானே எழுதனதுன்னு சொல்லி மாமாட்ட பேர் வாங்கிட்டேன்! ப்ளிஸ்! கெடுத்து விட்றாதீங்க” எனச் சொன்னவனைப் பார்த்துத் தலையை இடம் வலம் ஆட்டினார்.

“எப்போ இன்னொருத்தரோடத உன்னோடதுன்னு சொல்லி பேரும் புகழும் வாங்கிட்டியோ, இனிமே உனக்கு நான் சொல்லிக் குடுக்க வேண்டியது ஒன்னும் இல்லைன்னு நெனைக்கறேன்! யூ ஆர் அ பக்கா அரசியல்வாதி நவ் சக்தி”

கலகலவென நகைத்தான் சக்தி.

“தேங்க் யூ அங்கிள்” என்றவன் அவருக்கொரு சல்யூட் வைத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் யாரும் ஒட்டுக் கேட்கவில்லை என உறுதிப்படுத்திக் கொண்டு,

“நான் மட்டும் மினிஸ்ட்டர் ஆனேன், என்னோட பி.ஏ கண்டிப்பா நீங்கதான் அங்கிள்! தமிழ்நாட்டையே கலக்கிடலாம்” எனச் சொல்லிக் கண்ணடித்தான்.

“அதுக்கென்ன! கலக்கிடலாம்!” என்ற கார்மேகம், மற்ற வேலைகளைப் பார்க்கப் போனார்.

ஹாரியிடமிருந்து மேசேஜ் வர, அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போனான் சக்தி அமரன்.

“பாஸ்! பெட்டியைத் திறந்தாச்சு”

ஆவலாய் உள்ளே என்ன இருக்கிறது என எட்டிப் பார்த்தான் சக்தி அமரன். வெளி நாட்டில் திலகன் சேர்த்து வைத்திருந்த பணக் கணக்கின் விவரங்கள், சில தங்க நகைகள், பாஸ்போர்ட், ஆண்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் மருந்துகள் எனப் பலதும் இருந்தன அதன் உள்ளே!

தோடுகள், மோதிரங்கள், கை செயின், கொலுசு எனப் பெண்களின் நகைகளே அந்தப் பெட்டியில் இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தச் சக்தி,

“ட்ரோப்பிஸ்(trophies)” என முணுமுணுத்தான்.

“அப்படினா பாஸ்?” எனக் கேட்டான் ஹேரி.

“அவன் யூஸ் பண்ண பெண்கள் கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட பரிசுன்னு வச்சிக்கலாம்! அவங்க ஞாபகார்த்தமா வச்சிருக்கான்! சில சீரியல் கில்லர்ஸ் கொல்லப்பட்டவங்களோட விரல், கண்ணு, காது இப்படி உடல் பாகங்கள எடுத்து வச்சிப்பாங்க! இவன் அந்த அளவுக்குப் போகாம நகைகள மட்டும் எடுத்திருக்கான்!”

“ஏன் பாஸ், அந்தப் பொண்ணுங்கலாம் உசுரோட இருப்பாங்களா, இல்லை கொன்னுருப்பானா?” எனக் கேட்டான் ஹேரி.

“அந்த எழவு பிரச்சனைலாம் நமக்கெதுக்குடா! வெளில இவன் பேர் வர முடியாத அளவுக்குத்தான் எல்லாத்தையும் பக்காவா அழிச்சிட்டோமே! எவளாச்சும் கம்ப்ளேண்ட் பண்ணா, நம்ம லாயர் கிழி கிழின்னு கிழிச்சிட மாட்டாரு! பிரச்சனைன்னு ஒன்னு வராத வரைக்கும் கம்முன்னு கிடப்போம்”

“சர்தான் பாஸ்”

“பாஸ்! பாஸ்வர்ட் க்ரேக் பண்ணிட்டேன்! லாப்டாப் உள்ள போக முடியுது! இப்ப என்ன பண்ணனும்?” எனக் கேட்டான் சாம்.

“குட்! திலகன் வாட்சாப் இல்ல வேற எதாவது கம்யூனிகேஷன் ஆப், வெப்ல யூஸ் செஞ்சிருக்கானா பாரு! அப்படி இருந்தா, அவன் அழிச்ச எல்லா மேசேஜையும் மறுபடி ரீஇன்ஸ்ட்டால் பண்ணு! அந்த லாப்டாப் இண்டு இடுக்கெல்லாம் செக் பண்ணு!” என்றவன் சாம் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

தோண்டத் தோண்டப் புதையல் கிடைத்தது! கிளம்பும் போது லாப்ட்டாப்பை கையோடு எடுத்துக் கொண்டான் சக்தி அமரன். காரில் ஏறி அமர்ந்ததும் ப்ளூதூத் வழி சுப்பு ரத்தினத்துக்கு அழைப்பெடுத்தான் இவன்.

“ஹலோ சக்தி!”

“என்ன மாமா! இம்சைப் பண்ண இன்ஸ போட்டுத் தள்ளிட்டீங்க போல”

(உயிராவாயா?)

(லேட்டா வருவேன்னு சொல்லிட்டுப் போனேன்! இன்னிக்கு கொஞ்சம் டைம் கிடைச்சது! அதனால அவசரமா எழுதனேன்! சின்ன எபிதான்! உங்க பாசைல டீசர்!!!! ஓடிடுடா கைப்புள்ள!!!!!!)
 
Last edited:
மாமா, மருமகன், இன்னும் பல கேரக்டர்ஸ்...
யாரைப்பத்தியும் எந்த முடிவுக்கும் வரவிடாமலே நம்மள வேகமா இழுத்துட்டு போறாங்களே இந்த நிஷ்லிங் 😲🤔
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 11)

அடப்பாவி...! சின்ன புளளைன்னு சொல்லிக்கிட்ட என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கிறான் இந்த திலகன்.

அப்பன் சுப்பு ரத்தினமும் கறை படிஞ்ச கை.தான். இதோ இப்ப இன்சூவை போட்டுத் தள்ளினதும் இவரோட கைங்கர்யம் தான் போல.
பெரிய பண்ணு குடிகாரி ப்ளஸ் போதைக்காரி. அவளாவது கை படாத ரோசாவான்ங்கிறது அவளுக்கே வெளிச்சம்.
பையன் திலகன் அதை விட மோசம். சின்ன வயசுலயே தடம் மாறி, புணமாவும் ஆகிட்டான்.
இந்த மஞ்சரி எப்படின்னு தெரியலை. ஒருவேளை, இனிமேல் தான் தெரிய வருமோ...?

எனக்கொரு சந்தேகம்...? இந்த திலகனை கூட சுப்பு ரத்தினமே போட்டுத் தள்ளிட்டு ட்ராமா பண்ணுறாரோ...? அரசியல்ல சிம்பதி க்ரியேட் பண்றதெல்லாம் தண்ணி
பட்டபாடு தானே..? இல்ல அந்த செத்துப் போன இன்சூ தான் திலகனை தூக்கி வைச்சு செஞ்சிட்டாரோ...? அதுக்கான வெகுமானம் தான் இன்சூவை டெட் பாடி ஆக்கினதோ...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
இவன் நல்லவனும் இல்ல... இவன நம்பவும் முடியல... இவன் ஒரு தினுசாவே சுத்துரானே.. இவனுக்கு ஸ்பீட் ப்ரேக் சிவா தான் போடுவா போலயே..
 
திலகன் மோசமான பையன் போலவ,
அப்போ இன்றுவரை போட்டது மாமன் காரன் தானா?
 
அருமையான பதிவு 😍 😍 😍.
ஓ ஓ ஓஹோ அந்த இன்ஸை போட்டு தள்ளுன சுப்பந்தானா?
கேடிக்கே கேடியா இருப்பானுங்க போல.
படுபாவி பய இந்த திலகன் கொடூர சைக்கோவா இருப்பான் போலயே 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
கைப்புள்ள எங்களையெல்லாம் பாதில தலை சுத்த வச்சிட்டு
 
இன்ஸ் அ போட்டு தள்ளுனது சுப்பு தானா 😳 மாமனாரும் மருமகனும் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சின கேடியா இருக்கானுங்க 😧

இப்போ ஏன் அந்த சைக்கோ 😡 பத்தி தேடி துருவுறான் இதை வச்சு மாமனாரை லாக் பண்ண பார்ப்பானோ 🤔
 
இத்துணுன்டு பையன்
ரொம்ப பெரிய வேலை
எல்லாம் செய்து இருக்கான்
இந்த சுப்பு சரியான வில்லாதி
வில்லன் போல
 
வணக்கம் டியர்ஸ்,

View attachment 656

அத்தியாயம் 11

செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படும் இந்நாளில், செய்து முடிக்க முடியாத காரியம் என்பது மிகவுமே அருகி விட்டது! தொழில் நுட்ப வளர்ச்சியால், இறந்து போனவர்களைக் கூட நிழலாய் கொண்டு வந்து நம்மிடையே நிற்க வைக்க முடிகிறது! அப்படி இருக்கும் போது, திலகனின் லாப்டாப்பை பிரித்து மேய்வது என்பது சிரமமானக் காரியமா என்ன!

சக்தி அமரன் நியமித்த சீக்ரட் டிடெக்டிவ் ஒருத்தன், திலகனது அறையை எதாவது துப்புக் கிடைக்கிறதா என அலசி ஆராய்ந்தான். டிஜிடல் லாக் செய்யப் பட்டப் பெட்டி ஒன்றும், அவனது லாப்டாப்ப்பையும் கைப்பற்றியவன், சக்தி அமரனிடம் அதை ஒப்படைத்தான்.

“அந்தப் பையனோட கட்டில் ஹேட்போர்ட் பின்னாடி சீக்ரட் ஸ்பேஸ் ஒன்னு இருந்தது சக்தி சார்! அதுல நெறைய வகையான ட்ரக்ஸ் இருந்தது” எனச் சொன்னவன் அந்தப் போதைப் பொருட்களையும் இவனிடம் ஒப்படைத்திருந்தான்.

இவர்களிடம் சிக்கி இருந்த திலகனின் நண்பர்கள் இருவரையும் இன்னும் கஸ்டடியில்தான் வைத்திருந்தார்கள். மற்ற நண்பர்கள் கூட்டம், அவன் பழகிய ஆட்கள், காலேஜில் அவனது நடவடிக்கை இதையெல்லாம் விசாரிக்கச் சொல்லி அந்த டிடெக்டிவ்வை அனுப்பியவன், கைப்பற்றிய பொருட்களை ஐ.டி விங்குக்கு எடுத்துச் சென்றான். அங்கே சாமும் ஹேரியும் பிசியாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னடா வேலைப் போகுது?” எனக் கேட்டபடியே அவர்களுக்கு வாங்கி வந்திருந்த காபியைக் கொடுத்தான் சக்தி.

“எதிர் கட்சி தலைவர் மேல அவதூறு பரப்பிட்டு இருக்கோம் பாஸ்! கொஞ்சம் ஃபேமஸா இருக்கற முகநூல் பிரபலம், ட்வீட்டர் பிரபலம்லாம் அரசியல் போஸ்ட் போட்டிருந்தா, அங்க போய் சாணியடிக்கற மாதிரி நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு இருக்கோம்! யாரு கிட்ட என்ன வம்பு பண்ணோம்ங்கற டீட்டேல்லாம் எக்ஸல் ஃபைல்ல இருக்கு பாருங்க!” என்றான் சாம்.

மெலிதாக நகைத்துக் கொண்டான் சக்தி அமரன். ஒரேடியாய் துள்ளிக் கொண்டிருக்கும் கட்சி தலைவர் ஒருவரின் பெயரைச் சொன்னவன்,

“அவங்க கட்சிக்குன்னு ஃபேஸ்புக் பேஜ்லாம் இருக்கு பாரு, அங்க போய் நாலு ஐட்டம் வீடியோவ போட்டு விடுங்கடா! அந்த வீடியோல வைரஸயும் இணைச்சு விடுங்க! நாக்கத் தொங்கப் போட்டுட்டு தட்டிப் பார்க்கறவன் போன், கம்ப்யூட்டர்லாம் புட்டுக்கின்னு போகட்டும்! ஏதோ நம்மாள முடிஞ்ச சமூக சேவை” எனச் சொல்லி நக்கலாய் சிரித்தான்.

“பண்ணிடலாம் பாஸ்!” என இருவரும் கோரஸாகச் சொன்னார்கள்.

“அந்த வேலையை அப்புறம் பாருங்க! ஹாரி! நீ டிஜிடல் லாக் பண்ணிருக்கற இந்தப் பெட்டியைத் திறக்க முயற்சி பண்ணு! சாம்! நீ இந்த லாப்டாப்ல லாகின் செய்ய பாருடா! பாஸ்வர்ட் கேக்குது! எதாச்சும் பண்ணி ஓபன் பண்ணிக் குடு”

“ஓகே பாஸ்” என்றனர் இருவரும்.

அவர்கள் சக்தி கொடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்க, இவன் கட்சி ஆபிசை ஒரு வலம் வந்தான். அங்கிருக்கும் எல்லோருக்கும் மிகப் பழக்கமானவனாய் மாறி இருந்தான் சக்தி அமரன். இவனைப் பார்த்தவர்கள் புன்னகைத்து ‘வணக்கம் பாஸ்’ எனச் சொல்ல, இவனும் அவர்களுடன் அளவளாவினான். சாம், ஹாரி பாஸ் என அழைக்க, அதுவே எல்லோருக்கும் பழகி இருந்தது.

கார்மேகத்தின் அறைக்குப் போனவன்,

“என்ன அங்கிள், லீவு முடிஞ்சு ப்ரெஸா வந்திருக்கீங்க! உங்கள பார்க்கறப்ப அப்படியே பத்து வயசு குறைஞ்சுட்ட மாதிரி இருக்கு!” எனக் கலகலத்தான்.

அன்றுதான் விடுமுறையில் இருந்து வேலைக்கு வந்திருந்தார் கார்மேகம். அவனைப் பார்த்துப் புன்னகைத்தவர்,

“லீவ்னாலே ரெஸ்ட்டுத்தானேப்பா! ஓய்வும், நல்ல சாப்பாடும், ஊட்டியோட க்ளைமேட்டும் என்னை இளமையாக்கிடுச்சு போல!” என்றார்.

“அங்கிள்” என்ற சக்தி அமரன், உதட்டின் மேல் ஆட் காட்டி விரலை வைத்துக் கடித்தபடி, வலது காலை மட்டும் ஆட்டினான்.

“என்னப்பா சக்தி?” என ஒன்றும் புரியாமல் கேட்டார் இவர்.

“எனக்கு..”

“உனக்கு?”

“எனக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சு!”

“ஓஹோ! இப்போ நீ பண்ணுன ஸ்டண்டுக்குப் பேரு வெக்கமா?”

“ஆமா அங்கிள்”

“உன் வெக்கத்தைப் பார்த்து, வெக்கத்துக்கே வெக்கம் வந்திடும்! வேணா! விட்டுடு” என்றவர்,

“காங்கிராட்ஸ் சக்தி! பொண்ணு யாரு?” எனக் கேட்டார்.

“நம்ம மஞ்சுதான்!”

“அட! இனி நீ நம்ம மினிஸ்ட்டர் மருமகனா! அட்ரா சக்கை! வாழ்த்துக்கள்பா” என எழுந்து வந்து கட்டிக் கொண்டார்.

“வெளிய யாருக்கும் சொல்லல அங்கிள்! உங்கள பார்த்ததும் சொல்லாம இருக்க முடியல! என்னோட கைட், ஆசான், குரு எல்லாமே நீங்கத்தானே! இவ்ளோ குறுகியக் காலத்துல எவ்ளோ கத்துக்கிட்டேன் நான். நீங்க இல்லாதப்ப மாமாவுக்கு நானே ஒரு ஸ்பீச் எழுதி குடுத்தேன்னா பார்த்துக்கோங்க!”

“எது? நான் ஏற்கனவே இன்னொரு கூட்டத்துக்குப் பேச எழுதி குடுத்தத, அங்கிங்க மானே தேனேன்னு போட்டு காபி, பேஸ்ட் பண்ணி குடுத்திருக்கியே, அதா?” எனப் புன்சிரிப்புடன் கேட்டார் கார்மேகம்.

“இப்படிலாம் புண்படுத்தாதீங்க அங்கிள்! நானே எழுதனதுன்னு சொல்லி மாமாட்ட பேர் வாங்கிட்டேன்! ப்ளிஸ்! கெடுத்து விட்றாதீங்க” எனச் சொன்னவனைப் பார்த்துத் தலையை இடம் வலம் ஆட்டினார்.

“எப்போ இன்னொருத்தரோடத உன்னோடதுன்னு சொல்லி பேரும் புகழும் வாங்கிட்டியோ, இனிமே உனக்கு நான் சொல்லிக் குடுக்க வேண்டியது ஒன்னும் இல்லைன்னு நெனைக்கறேன்! யூ ஆர் அ பக்கா அரசியல்வாதி நவ் சக்தி”

கலகலவென நகைத்தான் சக்தி.

“தேங்க் யூ அங்கிள்” என்றவன் அவருக்கொரு சல்யூட் வைத்தான்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் யாரும் ஒட்டுக் கேட்கவில்லை என உறுதிப்படுத்திக் கொண்டு,

“நான் மட்டும் மினிஸ்ட்டர் ஆனேன், என்னோட பி.ஏ கண்டிப்பா நீங்கதான் அங்கிள்! தமிழ்நாட்டையே கலக்கிடலாம்” எனச் சொல்லிக் கண்ணடித்தான்.

“அதுக்கென்ன! கலக்கிடலாம்!” என்ற கார்மேகம், மற்ற வேலைகளைப் பார்க்கப் போனார்.

ஹாரியிடமிருந்து மேசேஜ் வர, அவர்கள் இருக்கும் இடத்துக்குப் போனான் சக்தி அமரன்.

“பாஸ்! பெட்டியைத் திறந்தாச்சு”

ஆவலாய் உள்ளே என்ன இருக்கிறது என எட்டிப் பார்த்தான் சக்தி அமரன். வெளி நாட்டில் திலகன் சேர்த்து வைத்திருந்த பணக் கணக்கின் விவரங்கள், சில தங்க நகைகள், பாஸ்போர்ட், ஆண்களுக்கு உணர்ச்சியைத் தூண்டும் மருந்துகள் எனப் பலதும் இருந்தன அதன் உள்ளே!

தோடுகள், மோதிரங்கள், கை செயின், கொலுசு எனப் பெண்களின் நகைகளே அந்தப் பெட்டியில் இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தச் சக்தி,

“ட்ரோப்பிஸ்(trophies)” என முணுமுணுத்தான்.

“அப்படினா பாஸ்?” எனக் கேட்டான் ஹேரி.

“அவன் யூஸ் பண்ண பெண்கள் கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட பரிசுன்னு வச்சிக்கலாம்! அவங்க ஞாபகார்த்தமா வச்சிருக்கான்! சில சீரியல் கில்லர்ஸ் கொல்லப்பட்டவங்களோட விரல், கண்ணு, காது இப்படி உடல் பாகங்கள எடுத்து வச்சிப்பாங்க! இவன் அந்த அளவுக்குப் போகாம நகைகள மட்டும் எடுத்திருக்கான்!”

“ஏன் பாஸ், அந்தப் பொண்ணுங்கலாம் உசுரோட இருப்பாங்களா, இல்லை கொன்னுருப்பானா?” எனக் கேட்டான் ஹேரி.

“அந்த எழவு பிரச்சனைலாம் நமக்கெதுக்குடா! வெளில இவன் பேர் வர முடியாத அளவுக்குத்தான் எல்லாத்தையும் பக்காவா அழிச்சிட்டோமே! எவளாச்சும் கம்ப்ளேண்ட் பண்ணா, நம்ம லாயர் கிழி கிழின்னு கிழிச்சிட மாட்டாரு! பிரச்சனைன்னு ஒன்னு வராத வரைக்கும் கம்முன்னு கிடப்போம்”

“சர்தான் பாஸ்”

“பாஸ்! பாஸ்வர்ட் க்ரேக் பண்ணிட்டேன்! லாப்டாப் உள்ள போக முடியுது! இப்ப என்ன பண்ணனும்?” எனக் கேட்டான் சாம்.

“குட்! திலகன் வாட்சாப் இல்ல வேற எதாவது கம்யூனிகேஷன் ஆப், வெப்ல யூஸ் செஞ்சிருக்கானா பாரு! அப்படி இருந்தா, அவன் அழிச்ச எல்லா மேசேஜையும் மறுபடி ரீஇன்ஸ்ட்டால் பண்ணு! அந்த லாப்டாப் இண்டு இடுக்கெல்லாம் செக் பண்ணு!” என்றவன் சாம் அருகிலேயே அமர்ந்து கொண்டான்.

தோண்டத் தோண்டப் புதையல் கிடைத்தது! கிளம்பும் போது லாப்ட்டாப்பை கையோடு எடுத்துக் கொண்டான் சக்தி அமரன். காரில் ஏறி அமர்ந்ததும் ப்ளூதூத் வழி சுப்பு ரத்தினத்துக்கு அழைப்பெடுத்தான் இவன்.

“ஹலோ சக்தி!”

“என்ன மாமா! இம்சைப் பண்ண இன்ஸ போட்டுத் தள்ளிட்டீங்க போல”

(உயிராவாயா?)

(லேட்டா வருவேன்னு சொல்லிட்டுப் போனேன்! இன்னிக்கு கொஞ்சம் டைம் கிடைச்சது! அதனால அவசரமா எழுதனேன்! சின்ன எபிதான்! உங்க பாசைல டீசர்!!!! ஓடிடுடா கைப்புள்ள!!!!!!)
Nirmala vandhachu 😍 😍 😍
Sema speed japan train pola 💐💐💐
 
கார்மேகத்துக்கு என்னவோ பங்கு இருக்கும் போலவே

ஏன் இன்ஸ்பெக்டரை அமைச்சர் முடிக்கனும்
வெளிய சொல்லாத விஷயங்களா
 
Back
Top