எபி 12

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்கள்





அத்தியாயம் 12



“நாடென்ன செய்தது நமக்கு

எனக் கேள்விகள் கேட்பது எதற்கு

நீயென்ன செய்தாய் அதற்கு

என நினைத்தால் நன்மை உனக்கு” எனப் பாடி நிறுத்தினார் சுப்பு ரத்தினம்.

கூட்டத்திற்கு வந்திருந்த ஜனம் மொத்தமும் சில்லறையைச் சிதற விட்டு, ஆரவாரமாகக் கை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மக்களோடு மக்களாக நின்றுக் கொண்டு, ஆளுமையாய் சுப்பு ரத்தினம் பேசிக் கொண்டிருப்பதை ரசித்திருந்தான் சக்தி அமரன்.

மக்களின் ஆரவாரம் அடங்கியதும், மறுபடியும் தனது சொற்பொழிவை ஆரம்பித்தார் சுப்பு ரத்தினம்.

“தூங்கும் போதும் சரி, விழித்திருக்கும் போதும் சரி, நாட்டுக்கும், என்னை நம்பி ஓட்டுப் போட்ட என் மக்களுக்கும் என்ன செய்யப் போறேன்னு மட்டும்தான் என்னோட செயலும் சிந்தனையும் இருக்கும். என் முன்னாள் மனைவி இறந்த துக்கத்தக் கூட மனசுக்குள்ள போட்டு புதைச்சிக்கிட்டு அந்தச் சமயத்துல நடந்த தேர்தல்ல முழு மனசோட களமிறங்கனேன்! துக்கத்திலும், துயரத்திலும் நான் முடங்கிப் போய்ட்டா, என் மக்களுக்கு யார் பொறுப்பு? அவங்களுக்கு யார் எல்லாத்தையும் எடுத்து செய்வா? நீ தோத்துட்டா, அவங்களாம் என்ன கதி ஆவாங்கன்னு, என்னை நானே தேத்திக்கிட்டு உங்க முன்ன வந்து சிரிச்ச முகமா நின்னேன்! சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும், சிரிக்காத நாளில்லையேன்னு வர பாடல் வரிய போல, உங்களுக்காக, உங்க நன்மைக்காக என்னுடையக் குடும்ப வாழ்க்கைய உள்ளுக்குள்ள பூட்டி வச்சிட்டு, மக்கள் பிரதிநிதியாக முழுசா மாறி நின்னேன்! இப்போ கூட, விபத்துல என் மகன் இறந்து போனது உங்களுக்குத் தெரியும்!” எனச் சொன்னவர், தொண்டையைச் செறுமிக் கொண்டுச் சற்று நேரம் அமைதியாகி விட்டார்.

அவ்விடமே நிசப்தமாகி போனது! எல்லோரின் பார்வையும் அவர் மேல்தான். கைக்குட்டையால் கண்களை ஒற்றி, சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டார் சுப்பு ரத்தினம்.

“மன்னிச்சிடுங்க மக்களே! புத்திர சோகம் ஆனானப்பட்ட தசரதனையே ஆட்டி வச்சிடலயா! நொந்து, வெந்து செத்துல்ல போனான் தசரதன். ராஜாவுக்கே அந்தக் கதினா, சாதாரண அற்ப மனிதன் என்னை விட்டு வச்சிடுமா என்ன? உங்களுக்குச் சேவை செய்யறதுலத்தான் என் சோகத்தை மறக்கறேன்! மகன் பேர்ல பல ட்ரஸ்ட்கள் தொடங்கி மாணவர்களுக்கு உதவி செய்யறதுல என் துக்கத்தைக் குறைக்கறேன்! உங்களோட ஆதரவுலயும், அன்புலயும் மீண்டு வந்திட்டே இருக்கேன் நான்! ஆனா பாருங்க, என்னோட சோகத்த கூட எதிர் கட்சிகள் கேலி கூத்தாக்கிட்டு இருக்காங்க! மக்கள ஓட்டுப் போடும் மிஷினா மட்டும் பார்க்கற அவங்களோட மனநிலையும் மிசின் போல கருணை இல்லாததாதானே இருக்கும்!” என ஆரம்பித்து எதிர் கட்சியைக் கிழித்துத் தோரணம் கட்டியவரை பிரமிப்புடன் பார்த்திருந்தான் இவன்.

பாடும் போது மக்களை ரசிக்க வைத்து, அவரது சோகத்தில் மக்களை அழ வைத்து, அவரது கோபத்தில் கேட்டுக் கொண்டிருப்பவர்களைக் கொந்தளிக்க வைத்து என அவர் செய்த சாகசங்களை வாய் பிளந்து பார்த்திருந்தான் சக்தி.

‘மனுஷன் அரசியல்வாதியா ஆகறதுக்காகவே பிறப்பெடுத்தவர்டா சாமி!’ என மனதில் அவரைச் சிலாகித்துக் கொண்டான்.

அன்றையக் கூட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து போகும் வரை அங்கேயே இருந்தான் சக்தி அமரன். சுப்பு ரத்தினம் பத்திரமாகக் கார் ஏறும் வரை கூடவே இருந்தவன், பின் அவர் பின்னாலேயே அவரது வீட்டுக்கு இவனது காரில் பயணப்பட்டான்.

காரில் அமர்ந்ததும் அன்றைய நாள் அவருக்குப் போன் செய்த நினைவுகள் அழையா விருந்தாளியாய் வந்து நின்றன.

“என்ன சக்தி உளறிட்டு இருக்க நீ?” எனக் கேட்ட சுப்புவின் குரலில் கோபம் இருந்தது.

“நேர்ல வரேன் மாமா! பேசலாம்!” என்றான் இவன்.

“வீட்டுக்கு வேணாம்! கெஸ்ட் ஹவுசுக்கு வா சக்தி”

“சரி மாமா” என அழைப்பைத் துண்டித்தான் இவன்.

சுப்பு ரத்தினத்தின் குரலில் அதிர்ச்சியும், கோபமும் ஒரு சேர இருந்தததைக் கேட்டவன்,

“இவரு இல்லைனா, வேற எவரு?” என முணுமுணுத்தான்.

சுப்பு ரத்தினத்தின் கெஸ்ட் ஹவுஸ் சென்னைக்குள்தான் இருந்தது. தனி பங்களாவாய், பலத்தப் பாதுகாப்புடன் இருந்தது அது. இவன் கார் வந்ததும் செக்கியூரிட்டி கேட்டைத் திறந்து விட்டான். சாலையின் இரு மருங்கிலும் வரிசையாய் அணிவகுத்து நின்றிருந்த பூச்செடிகளையும், அலங்கார விளக்குகளையும் ரசித்தபடி மெதுவாய் காரைச் செலுத்தினான் சக்தி அமரன்.

“வாழ்றய்யா மாமா!”

மற்ற அமைச்சர்களையோ, கட்சியில் முக்கியமானவர்களையோ, பெரும் பணக்காரர்களையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தப்பட்டது இந்த இரண்டு மாடி பங்களா! அந்தப் பங்களா சுப்பு ரத்தினத்தின் பினாமி ஒருத்தரின் பெயரில் இருந்தது! அடிக்கடி மதுபான விருந்தும் நடைபெறும்! மாது கூடும் விருந்தும் அமர்க்களப்படும். மாடல்களில் இருந்து, சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் என எல்லோரும் வந்து போகும் இடமது! சக்திக்கும் இதெல்லாம் தெரிந்துதான் இருந்தது.

இவனுக்காக வெளியே இருந்த சிட் அவுட்டில் காத்திருந்தார் சுப்பு ரத்தினம். அவசரமாய் இவன் அருகே வந்தவர்,

“என்ன விஷயம் சக்தி? யாரு இன்ஸ்பெக்டர்?” எனக் கேட்டார்.

“உள்ள போய் பேசலாம் மாமா” என்றவனின் கையில் திலகனின் லாப்டாப் இருந்தது.

“சரி வா!” என அவனை ஓர் அறைக்கு அழைத்துப் போனார் அவர்.

அறையின் உள் கட்டமைப்பைப் பார்த்தச் சக்தி அசந்து போய் நின்றான். ஒரு பக்கச் சுவர் முழுக்க கேபினெட் அடிக்கப் பட்டு பல வகை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறையில் நடுநாயகமாக வீற்றிருந்தது பெரிய கட்டில் ஒன்று! அதன் மேல் சிலிங்கில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது.

‘ங்கொய்யால! பார்த்துக்கிட்டே வேலை பண்ணுவானுங்க போல(டபுள் மீனிங்தான்!!!)’ என எண்ணியவன் வரப் பார்த்தச் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கினான்.

கட்டிலை விட்டுச் சற்றுத் தள்ளி சோபா செட் போடப் பட்டிருந்தது. அழகானத் திரைச் சீலைகள், மாடர்ன் ஆர்ட்கள், சாண்டிலியர் லைட் என அவ்வறை சொர்க்கலோகம் போல இருந்தது.

“உட்காரு சக்தி!” என்ற சுப்பு ரத்தினம்,

“ஸ்காட்ச் ஆர் ப்ராண்டி?” எனக் கேட்டார்.

“நீங்க உக்காருங்க மாமா! நான் மிக்ஸ் பண்ணறேன்” என்றவன் பார் டேபிள் அருகே போனான்.

சோபாவில் அமர்ந்து கொண்டார் சுப்பு ரத்தினம். அவர் என்ன குடிப்பார் எனத் தெரிந்து வைத்திருந்த சக்தி, ஸ்காட்ச்சில் கொஞ்சமாய் சோடா கலந்து ஐஸ் கியூப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தான். அவனுக்கும் அது போல கலந்து கொண்டவன், அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஒரு சிப் அருந்திய சுப்பு ரத்தினம், ரிலேக்‌ஷாக சோபாவில் சாய்ந்து கொண்டார்.

“இப்ப சொல்லுப்பா! என்ன விஷயம்?”

கையில் இருந்த கிளாசை ஓர் ஆட்டு ஆட்டி உள்ளிருந்த பானத்தை ஒரே கல்ப்பில் உள்ளே சரித்துக் கொண்டவன், லாப்டாப்பை ஆன் செய்தான்.

“திலகனோட கொலையைப் பத்தி இன்வெஸ்டிகேட் செஞ்சிட்டு இருந்தோம்ல! அதுல அவனோட லாப்டாப்ப கொஞ்சம் நோண்டிப் பார்த்தோம் மாமா! நம்ம திலகன், ரீசண்டா சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெய்ராம் இருக்கார்ல, அவரோட காண்டேக்ட்ல இருந்திருக்கான்”

இந்த விஷயத்தைப் பற்றி இவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. சக்தி போன் செய்து இவரிடம் பேசிய நொடியே, மறைவாய் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி ஃபுட்டேஜ் மூலம் ஐ.டி விங்கில் அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்பதைப் பார்த்து விட்டிருந்தார். அதற்கு மேல் சக்தி எதையும் அவர்களிடம் கலந்து கொள்ளாததால், இவருக்கு மேற்பட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

“காண்டேக்ட்ல இருந்தான்னு என்ன அர்த்தத்துல சொல்ல வர சக்தி?” எனத் தாடையைத் தடவியபடியே கேட்டார் சுப்பு ரத்தினம்.

“திலகன் ஒரு பொண்ண ஈவ் டீசிங் பண்ணான்னு கம்ப்ளேண்ட் போயிருக்கு ஜெய்ராம் வேலைப் பார்த்த ஸ்டேசன்ல! அதை அப்படியே வெளிய தெரியாத மாதிரி முடிச்சு விட்டுட்ட இந்த இன்ஸ்பெக்டர், இவன் கிட்ட பணம் கேட்க ஆரம்பிச்சிருக்காரு! திலகனும் கேட்டப்பலாம் குடுத்திருக்கான்! அதோட” என நிறுத்தினான் சக்தி அமரன்.

“சொல்லு சக்தி! எல்லாத்தையும் சொல்லு!”

“அதோட, என் கடமை எம்.ஜி.ஆர், தங்கப்பதக்கம் சிவாஜி, மூன்று முகம் ரஜினி, காக்கிச் சட்டை கமல், ஊமை விழிகள் விஜய்காந்த், வால்டர் வெற்றிவேல் சத்யராஜ் இப்படியான நீதி வழுவா காவலன் மாதிரி சீன் போட்டுட்டுத் திரிஞ்ச இந்த ஜெயராம் ஒரு பக்கா ஃப்ராடு மாமா! உங்க மகனுக்கு சில அண்டர் ஏஜ் பொண்ணுங்கள சப்ளை பண்ற வேலையும் பார்த்திருக்கான் இந்த மாமாப் பையன்!”

தலையை அழுந்தப் பற்றிக் கொண்டார் சுப்பு ரத்தினம்.

“ஓ! அவனுக்கும் இவனுக்கும் பிஸ்னஸ் லிங்க் இருந்திருக்குன்னு சொல்லு! அதை வச்சி அவன் என்னை மிரட்ட, நான் அவனைப் போட்டுத் தள்ளிட்டேன்னு நெனைச்சிருக்க!” எனக் கேட்டார் சுப்பு ரத்தினம்.

“பொதுவா அப்படி சந்தேகம் வரது இயல்புதானே மாமா! அப்படி நீங்கப் போட்டுத் தள்ளிருந்தா கூட அதுல தப்பே இல்ல! ஒரு வேஸ்ட் ஃபெல்லோக்கு சம்பளம் குடுக்கற தொல்லை அரசாங்கத்துக்கு ஒழிஞ்சதேன்னு சந்தோஷம்தான் மாமா!”

அமைதியாய் அவனை ஏறிட்டுப் பார்த்த சுப்பு ரத்தினம்,

“அரசியல், அதுல வர லாபம்! பதவி, அதுல வர பலம்னு என் வாழ்க்கையை அரசியலுக்கே விட்டுத் தந்துட்டேன் சக்தி! மனைவி, புள்ளைன்னு பார்க்க நேரம் ஒதுக்கல! புள்ளைங்க எதிர்காலத்துக்குச் சேர்த்து வச்சேனே தவிர, அவங்கள நல்ல குழந்தைகளா வளர்க்கத் தவறிட்டேன். ரங்காவும் தனியா என்ன செய்வா! அவளுக்குப் பெரியவளே பெரிய தலை வலியா இருக்க, சின்னதுகள அப்படியே விட்டுட்டா! ரஞ்சனி போதைப் பழக்கத்துல சிக்கிட்டான்னு தெரிஞ்சதுக்குப் பிறகுதான், நம்ம பொண்ணுங்கள கண்காணிக்கனும்னே தோண ஆரம்பிச்சது! அவங்களுக்குப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்ச நான், ஆம்பள பையன எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் பண்ணல! சுதந்திரமா விட்டேன்! நல்லா படிச்சான். ஸ்போர்ட்ஸ்ல நல்ல ஈடுபாடு! என் மகன போல உண்டான்னு அவ்ளோ பெருமை எனக்கு! ஆனா அவன் உள்ள இப்படி ஒரு கேடு கெட்டக் குணம் இருந்திருக்கும்னு தெரியாமே போச்சே!” எனச் சொல்லி சக்தியின் முன் உடைந்து அழுதார் சுப்பு ரத்தினம்.

“அழாதீங்க மாமா!” எனத் தேற்றினான் சக்தி அமரன்.

எழுந்து போய் அவருக்கு இன்னொரு கிளாஸ் மதுபானத்தை மிக்ஸ் செய்து கொண்டு வந்து கொடுத்தான் இவன். மடக்கென ஒரே வாயில் அதை தொண்டைக்குள் சரித்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.

“நான் இந்தக் கொலைய பண்ணல சக்தி! எனக்கென்னவோ நீ பண்ணிருப்பியோன்னு சந்தேகமா இருக்கு!” எனத் தீர்க்கமாகச் சொன்னார் சுப்பு ரத்தினம்.

பாட்டில் வாட்டரை அருந்த ஆரம்பித்த சக்தி, அவர் கூற்றில் புரை ஏற, லொக் லொக்கென இரும ஆரம்பித்தான்.

சிரிப்புடன் அவனைப் பார்த்திருந்த சுப்பு ரத்தினம், முதுகில் தட்டிக் கொடுத்தார்.

“மாமா! என்னைப் போய் எப்படி மாமா அப்படிலாம் நினைக்க முடிஞ்சது? நான்லாம் கொசு கடிச்சா கூட, அதை அடிக்க மாட்டேன்! தள்ளி விட்டுட்டு போய்டுவேன்! என்னைப் பார்த்துக் கொலை, மர்டர்னு பேசறீங்களே! அவ்வா! கடவுளுக்கே அடுக்காது மாமா!” என்றவன்,

“நம்ம பையன மாதிரி எத்தனைப் பேருக்கு மாமா வேலைப் பார்த்தானோ அந்த இன்ஸூ! அதுல யாராச்சும் போட்டுத் தள்ளிருப்பாங்க மாமா! ஆனாலும் இவன் மர்டருக்கும், நம்ம பையனோட மர்டருக்கும் எங்கயாச்சும் லிங்க் ஆகுதான்னும் பார்க்க சொல்றேன்!” என்றான்.
 
அவர்களுக்கென வறுத்தக் கோழி வர, அதை சைட் டிஷாக வைத்தபடி சரக்குப் பார்ட்டி நடந்தது மாமாவுக்கும் மருமகனுக்கும்.

“ஏன் மாம்ஸ்! உங்க பெரி......ய மவ இருக்காளே, அவ கஞ்சா குடுக்கின்னும் தெரிஞ்சப்பறமும் ஏன் எதாச்சும் செண்டர்ல கொண்டு சேக்கல? வீட்டுல வச்சிக்கிட்டு ஏன் மாரடிக்கறீங்க! போதைல இருக்கறப்பலாம் என்னைக் கட்டிக்கோ, கட்டிக்கோன்னு என் கற்ப கண்டம் பண்ணப் பார்க்கறா மாமா!” எனப் பாவமாய் சொன்னவனின் தோளில் தட்டிக் கொடுத்தார் இவர்.

“சேர்க்காம இருப்பனாப்பா! வெளி நாட்டுல கொண்டு போய் சேர்த்தேனே! ரெண்டே மாசம்தான் இருந்தா! ஒரு நாள் போன் போட்டு, என்னை வந்து கூட்டிட்டுப் போகல, என் சாவுக்குக் காரணம் அமைச்சர் சுப்பு ரத்தினத்தின் கொடுமையேன்னு ட்வீட்டர்ல போட்டுட்டு செத்துடுவேன்னு மிரட்டுனாப்பா! என் மானம் போகிற மாதிரி நடந்துக்காம இருந்தா சென்னைக்குக் கூட்டிட்டு வரேன்னு டீல் பேசி அழைச்சிட்டு வந்தேன்! என் தில்லை எனக்குன்னு விட்டுட்டுப் போன பொக்கிஷத்த ஒழுங்கா பார்த்துக்காத பாவியாகிட்டேன்! தில்லை என்னை மன்னிக்கவே மாட்டாப்பா!” என மீண்டும் அவர் அழ, அவரோடு சேர்ந்து இவனும் அழ என ஒரே அழுகாச்சி காவியமாகியது அந்நாள்!

காரைச் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு அதை நினைத்துச் சிரிப்பு வந்தது.

சுப்பு ரத்தினத்தின் வீட்டை அடைந்தவன், பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்த நொடி ஓடி வந்து குரங்குக் குட்டிப் போல சக்தியின் இடுப்பில் ஏறிக் கொண்டாள் சிவரஞ்சனி. வீட்டு ஹாலில் மற்றக் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

“மாமா! என்னால இனி இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது! எனக்கும் மஞ்சுவுக்கும் சீக்கிரமே கல்யாண ஏற்பாடு பண்ணுங்க! என் பொண்டாட்டிய நான் என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டா, கண்ட கருமாந்திரத்தோட தொடுகைய எல்லாம் சகிச்சுக்க வேண்டாம்ல!” எனக் கத்தினான் சக்தி அமரன்.

“நோ கருமாந்திரம்! ஒன்லி காதல் மந்திரம் எனெர்ஜீ!”

புயலென அவர்கள் அருகே வந்த மஞ்சரி, தன் அக்காவை ஓங்கி ஓர் அறை விட்டாள்!



(உயிராவாயா???)
 
ஏதோ விசயம் இருக்கு ரஞ்சனிகிட்ட அவள் நடிக்கிறளோ சக்திகிட்ட தன் குடும்பத்துகிட்டயும் 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
இது என்னடா இவனும் இல்லை அவனும் இல்லை
அப்ப யாருடா
இந்த குரங்கு குட்டி என்ன செய்ய போறா
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
🫤🫤🫤🫤😐😐😐😐😐
டேய் மாமனாரும் மருமகனும் சோடி போடுறீங்களா டா😤😤😤😤
அடுத்து இந்த சீனை விரைவில் எதிர் பாக்கலாம்.
.

ரஞ்சுவோட அம்மா செத்துப் போனதுக்கும் ரஞ்சு இப்புடி நடந்துக்கிறதுக்கும் ஏதாவது லிங் இருக்குமோ🙄🙄🙄🙄.
ஆத்தீஇஇஇஇ..... அக்கா காரிய அடிச்சிட்டாளே😱😱😱.
அடியேய் தொங்காச்சி அவ நல்லா இருந்தா சீனே வேற அதுகூட தெரியாதா உனக்கு 😬😬😬😬
👇👇 இந்த மாதிரி தான் இருப்பா.1000014781.jpg
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 12)


அடேயப்பா...! என்னவொரு மாமன் மருமகன் ரிலேஷன்ஷிப் டா...! சூப்பரா சரக்கடிக்கிறாங்க.
அதுசரி, மாமனும் இல்லை, மருமகனும் இல்லை... அப்ப வேற யாரு...?


எனக்கென்னவோ, இந்த ரஞ்சனியை பாம்புன்னு விலகி போகவும் முடியலை, பழுதுன்னு கடந்து போகவும் முடியலை.
இவளோட ஆக்ட்டிவிட்டீஸ் எல்லாமே வித்தியாசமா இருக்கு. போதையில இருக்கும் போது மட்டும் அவ கண்ணுக்கு எனர்ஜியா தெரியுற சக்தி, போதை இறங்குனவுடனே...
சகதியா தெரியுறான்.. அதெப்படின்னே புரியலை.
ஒருவேளை, இவ தான் அந்த இன்சூவை போட்டு தள்ளிட்டாளோன்னு கூட டவுட் வருது. இப்ப எதுக்கு அவன் இடுப்புல ஏறினான்னு தெரியலையே..? இடுப்பெழும்பை உடைக்கவா, இல்ல இடுப்பாட்டிட்டு திரியவா...? அட புள்ளைத்தாச்சியை தான்ங்க அப்படி சொன்னேன்.


விட்டா, இப்ப என் சக்தி தான்..
எனக்கு மட்டும் தான்னு....
காம்ப்படிஷனே நடக்கும் போல.


ஐடி விங்ல சுப்பு ரத்தினம் கேமரா வைச்சிருக்கிறது சக்திக்கு தெரியாமலா இருக்கும்...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
😍😍😍

கொலைகாரன் யாருன்னு தலையை எல்லாம் பிச்சுக்க முடியாது.😒😒 ஏதோ நம்மாள முடிஞ்சது மாமனுக்கும், மருமகனுக்கும் ஒரு பாட்டு போடறது தான்..🤭🤭😜😜

 
Adapavi😡😡 ins😬😬😬 nee periya ivanattam scene poatta🤷🤷 imputtu thana nee😡😡 adei sakthi🤔 avaru nee than panniyanu kekkurraru nee pecha maathurathu pola iruku🤷🤷🤷

Appoda manju silai ku uyir vandhuttu pola iruku 😏😂 unaku ava double ah thirumbi kududhu iruppa😂😂😂 ila sakthi kududhu irupan 🤷🤷

Ennada ithu.. entha pakkam ithu podhuney theriyama orey kankattu viththaiya iruku intha story😁😁
 
மாமனும் மருமகனும் ஜாடிக்கேத்த மூடி தான் 🤭🤭🤭🤭

அடப்பாவி இன்ஸு 😳 🥶 நல்லவன் மாதிரி சீன் போட்டியேடா 😡😡😡😡

யாரு தான் இவனை கொன்னது 🤔 நம்ம குடிகாரியா இருக்குமோ 😂😂😂😂

அக்கானு கூட பார்க்காம விட்டாளே ஒரு அரை 😅😅😅
இதுக்கு ரஞ்சனி எதிர்வினை எப்படி இருக்குமோ 🤓🤓
 
அவர்களுக்கென வறுத்தக் கோழி வர, அதை சைட் டிஷாக வைத்தபடி சரக்குப் பார்ட்டி நடந்தது மாமாவுக்கும் மருமகனுக்கும்.

“ஏன் மாம்ஸ்! உங்க பெரி......ய மவ இருக்காளே, அவ கஞ்சா குடுக்கின்னும் தெரிஞ்சப்பறமும் ஏன் எதாச்சும் செண்டர்ல கொண்டு சேக்கல? வீட்டுல வச்சிக்கிட்டு ஏன் மாரடிக்கறீங்க! போதைல இருக்கறப்பலாம் என்னைக் கட்டிக்கோ, கட்டிக்கோன்னு என் கற்ப கண்டம் பண்ணப் பார்க்கறா மாமா!” எனப் பாவமாய் சொன்னவனின் தோளில் தட்டிக் கொடுத்தார் இவர்.

“சேர்க்காம இருப்பனாப்பா! வெளி நாட்டுல கொண்டு போய் சேர்த்தேனே! ரெண்டே மாசம்தான் இருந்தா! ஒரு நாள் போன் போட்டு, என்னை வந்து கூட்டிட்டுப் போகல, என் சாவுக்குக் காரணம் அமைச்சர் சுப்பு ரத்தினத்தின் கொடுமையேன்னு ட்வீட்டர்ல போட்டுட்டு செத்துடுவேன்னு மிரட்டுனாப்பா! என் மானம் போகிற மாதிரி நடந்துக்காம இருந்தா சென்னைக்குக் கூட்டிட்டு வரேன்னு டீல் பேசி அழைச்சிட்டு வந்தேன்! என் தில்லை எனக்குன்னு விட்டுட்டுப் போன பொக்கிஷத்த ஒழுங்கா பார்த்துக்காத பாவியாகிட்டேன்! தில்லை என்னை மன்னிக்கவே மாட்டாப்பா!” என மீண்டும் அவர் அழ, அவரோடு சேர்ந்து இவனும் அழ என ஒரே அழுகாச்சி காவியமாகியது அந்நாள்!

காரைச் செலுத்திக் கொண்டிருந்தவனுக்கு அதை நினைத்துச் சிரிப்பு வந்தது.

சுப்பு ரத்தினத்தின் வீட்டை அடைந்தவன், பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்த நொடி ஓடி வந்து குரங்குக் குட்டிப் போல சக்தியின் இடுப்பில் ஏறிக் கொண்டாள் சிவரஞ்சனி. வீட்டு ஹாலில் மற்றக் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர்.

“மாமா! என்னால இனி இதையெல்லாம் பொறுத்துக்க முடியாது! எனக்கும் மஞ்சுவுக்கும் சீக்கிரமே கல்யாண ஏற்பாடு பண்ணுங்க! என் பொண்டாட்டிய நான் என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டா, கண்ட கருமாந்திரத்தோட தொடுகைய எல்லாம் சகிச்சுக்க வேண்டாம்ல!” எனக் கத்தினான் சக்தி அமரன்.

“நோ கருமாந்திரம்! ஒன்லி காதல் மந்திரம் எனெர்ஜீ!”

புயலென அவர்கள் அருகே வந்த மஞ்சரி, தன் அக்காவை ஓங்கி ஓர் அறை விட்டாள்!



(உயிராவாயா???)
Nirmala vandhachu 😍 😍 😍
 
Ranjani venumne pannura pola than irukku enekku… avalukku intha family da real face theriyum pola…
Adhan ellaraiyum asinga paduthura pola nadakkura…

Manjari nallavala kettavala???

Antha Inspector ah konnathu yaru??? Oru vela Thilagan ah kooda Shakti than konnana???
 
Back
Top