எபி 13

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்கள்



அத்தியாயம் 13



சாமான்ய மக்கள் அறிந்திருக்காத ஜவுளி மாளிகை அது! பெரும் பணக்காரர்கள், வி.ஐ.பிகள், நடிகர்கள் என மேல் தட்டு மக்கள் மட்டுமே வந்து போகக் கூடிய இடமது! அங்கு விற்கப்படும் ஜவுளிகள் உலகத் தரம் வாய்ந்தவையாக இருந்தன. அதற்கேற்றது போல விலையோ, மூக்கின் மேல் விரல் என்ன, மூச்சிருக்கிறதா என என நம்மைப் போன்ற மக்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு இருக்கும்.

சக்தி அமரனும் அவன் தாய் சங்கரியும், பெண் வீட்டினர் வரவுக்காக அக்கடையின் வாசலில் காத்திருந்தனர். மகனிடம் ஏதும் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்திருந்தார் சங்கரி.

“ம்மா”

பதில் இல்லை அவரிடம்.

“அம்மா!!!!”

“என்னடா?”

“இன்னும் அப்செட்டா இருந்தா எப்படிமா? தவமிருந்து பெத்த மகனோடக் கல்யாணம் வரப் போகுதேன்னு ஒரு கலகலப்பு இல்ல! ஒரு குதூகலம் இல்ல! ஓர் ஆனந்தம் இல்ல! வாட் இஸ் திஸ் மாம்!” எனக் கடிந்து கொண்டான் இவன்.

“கலகலப்பு, குதூகலம், ஆனந்தம்லாம் எப்படிடா வரும்! என்ன செய்யனும், ஏது செய்யனும்னு சிந்திச்சுத் திட்டமிடக் கூட டைம் குடுக்காம, இப்பவே வேணும் கல்யாணம்னு சாதிச்சிட்ட! சம்பந்தி வீட்டுல டைம் கேப்பாங்கன்னு பார்த்தா, அவங்களும் நீ ஊதுற மகுடிக்கு டான்ஸ் ஆடறாங்க! கடுப்பா இருக்குடா சக்தி!”

“ம்மா! உங்களோட வேலை, அழகா உடுத்திக்கிட்டு, நம்ம கடைல இருக்கற அற்புதமான நகை செட்டெல்லாம் மாட்டிக்கிட்டு, மணமேடைல தகதகன்னு நிக்க வேண்டியதுதான். மத்த வேலைலாம் நான் பார்த்துப்பேன்மா! ட்ரஸ்ட் மீ”

“என்னமோ போ! எல்லாத்துலயும் அவசரம் உனக்கு! பிறக்கறப்பயும், டாக்டர் சொன்னத விட ரெண்டு வாரம் முந்திக்கிட்டுப் பிறந்த! நான் இன்னும் நாள் இருக்கேன்னு, பீச் ரிசார்ட்ல உக்காந்து பீச்(peach) ஜூஸ் குடிச்சிட்டு இருந்தேன் அப்போ! உங்கப்பா பக்கத்துல அரை டவுசரோட உக்காந்துட்டு சன் பாத் எடுத்துட்டு இருந்தாரு! சட்டுன்னு வலி வந்திட, அந்த அரை டவுசரோடயே, ஒரு டீ ஷர்ட்ட மாட்டிக்கிட்டு, என்னைக் கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் ஓடுனாரு! அப்போ ஓட ஆரம்பிச்ச மனுஷன், இன்னும் உனக்காக ஓடிட்டேத்தான் இருக்காரு! படவா!” என எப்பொழுதும் சொல்லும் கதையை அப்பொழுதும் சொன்னார்.

வாய் விட்டு நகைத்தவன்,

“எனக்கே கல்யாணம் ஆகப் போகுது! குழந்தை குட்டின்னு வரப் போகுது! இன்னும் நான் பொறந்த கதையைப் பேசிட்டு திரியறீங்களே ம்மா” என்றான்.

“உனக்குப் பேரனே வந்தாலும் இந்தக் கதைய சொல்லறத நான் நிறுத்த மாட்டேன்டா! அதெல்லாம் பெத்தவங்களோட சுகமான நினைவுகள்” என்றவரின் தோளணைத்துக் கொண்டான் சக்தி அமரன்.

“லவ் யூமா”

“ஹ்க்கும்! இப்போ வருவா பாரு மஞ்சு! அவள வேணும்னா கொஞ்சு! என்னை விட்டுருடா!”

அதற்கும் மகன்காரன் அப்படி ஒரு சிரிப்புச் சிரித்தான். வாஞ்சையுடன் அவனைப் பார்த்திருந்தார் சங்கரி.

கல்யாணத்தை அடுத்த மாதமே வைத்துக் கொள்வது எனப் பேசி முடிவெடுத்திருந்தார்கள். ஒரேடியாக இரு பெண்களின் திருமணத்தை ஒரே மேடையில், ஒரே நேரத்தில் வைத்து விடலாம் என்றார் சுப்பு ரத்தினம். சங்கரி ஒத்துக் கொள்ளவே இல்லை.

“அண்ணா! எங்களுக்கு ஒத்தை மகன். அவனோட கல்யாணம் அவன மட்டுமே ஃபோகஸ் பண்ணி இருக்கனும்! அதோட ரெண்டு மேடையில ஒன்னா வைக்கற கல்யாணத்துல ஒரு ஜோடிதான் சுபிட்சமா வாழ்வாங்க! இன்னொரு ஜோடிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கும். பிரச்சனை வர ஜோடில என் மகன் இருந்திடக் கூடாது! அந்த முத்தையாவ விட மூத்தவன் என் மகன். அதனால சக்தியோட கல்யாணம் முதல்ல நடக்கட்டும். அதே நாளுல அடுத்த முகூர்த்தத்துல வேணும்னா இன்னொரு கல்யாணம் நடத்திக்கோங்க!” என ஒரே போடாய்ப் போட்டு விட்டார்.

அருள்மணியும் இந்த விஷயத்தில் மனைவி பக்கம் இருந்து கொண்டார். மந்திரியாய் இருந்தாலும், மாப்பிள்ளை வீடு என வந்து விட்டால் மரியாதைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும். சுப்பு ரத்தினமும் சங்கரியின் பேச்சுக்கு ஒத்துக் கொண்டு விட்டார்.

பெரிய மகளின் கிறுக்குத்தனங்களைத்தான் பார்க்கிறாரே! ஆகையால் சீக்கிரமாகவே இந்தத் திருமணங்களை முடித்து விட்டு, தேர்த்தலுக்கு ஆயத்தமாக முடிவெடுத்து விட்டார் அவர். திருமணப் பரிசாக மருமகனை அடுத்து வரும் வார்ட் கவுன்சிலர் பதவிக்கு நாமினியாக்க ஏற்பாடுகளைப் பார்த்து வைத்திருந்தார்.

கடை வாசலில் கார் வந்து நிற்க, அம்மா மகனின் பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது. ஆவலாக காரில் இருந்து இறங்குபவர்களைப் பார்த்திருந்தான் இவன். மாஸ்க் அணிந்து கொண்டு வந்த மஞ்சுவைப் பார்த்ததும் இவன் முகம் வருத்தத்தைக் தத்தெடுத்துக் கொண்டது.

அன்றைய தினம் மஞ்சரி, ரஞ்சனியை அறைந்திருக்க, தங்கையின் மோதிரத்தில் இருந்த கல் பட்டு அக்காவின் உதடு கிழிந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் இவன் சட்டையில் வழிய, வேகமாய் தன்னிடமிருந்து ரஞ்சனியை அப்புறப்படுத்த முயன்றான் சக்தி. அந்தக் குரங்குக் குட்டியை உதற முயன்ற வேகத்தில் இவன் கை முட்டி, பக்கத்தில் நின்றிருந்த மஞ்சரியின் மூக்கில் இடித்திருந்தது. அம்மாவென அவள் கத்த, இவனுக்குப் பதறி விட்டது.

“பேபி! பேபி” எனப் பதறியவன், தன்னிடமிருந்து பிரித்து ரஞ்சனியைத் பக்கத்தில் இருந்து சோபாவில் தள்ளி விட்டு இவளிடம் ஓடி வந்தான்.

“அச்சோ! சாரிடா! சாரி! அவள தள்ளி விடற வேகத்துல இருந்தேனே தவிர நீ கிட்ட வருவன்னு நினைக்கல! அச்சோ! மாமா! சீக்கிரம் ஃபர்ஸ்ட் அய்ட் கிட் கொண்டு வாங்க! என் பேபிக்கு மூக்குல இரத்தம் வருது! வேகமா டாக்டருக்குப் போன் போடுங்க” என ஆர்ப்பாட்டம் செய்து விட்டான்.

டாக்டர் வருவதற்குள் இவன் சின்னவளுக்கு முதலுதவி செய்ய, பெரியவளை சுப்பு ரத்தினம் கவனித்துக் கொண்டார்.

“ஏன் அடிச்சா அவ? ஏன்?” எனக் கத்திக் கொண்டே இருந்தாள் ரஞ்சனி.

“அவளோட புருஷன நீ எடுத்துக்கப் பார்த்தா சும்மா இருப்பாளா கண்ணு! ஏன்மா இப்படிலாம் பண்ணுற?” என நொந்து போய் பேசினார் சுப்பு ரத்தினம்.

“எங்கம்மா புருஷன இவ அம்மா எடுத்துக்கலையா? அது மட்டும் ஓகேவா?” எனக் குறுக்குக் கேள்விக் கேட்டாள் ரஞ்சனி.

“உங்கம்மா செத்துட்டாங்கடி! அதான் எங்கம்மா உன்னைப் பார்க்கனும்னு அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! அவங்க பண்ண தியாகத்துக்கு நல்லப் பாடம் கத்துக் குடுத்துட்ட நீ!” எனக் கத்தினாள் மஞ்சரி.

“அப்போ நீயும் செத்துப்போ! சக்திய நான் எடுத்துக்கறேன்” எனச் சொல்லிக் கோணலாகச் சிரித்தாள் ரஞ்சனி.

“ரஞ்சனி” என அதட்டினார் அமைச்சர்.

ரங்க நாயகியோ இரு மகள்களின் சண்டையில் கண்ணீர் உகுத்தபடி நின்றார்.

ரஞ்சனியோ குதூகலமாக,

“இந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக” எனச் சக்தியைக் காட்டிப் பாடினாள்.

“செருப்புப் பிஞ்சிடும் ராஸ்கல்” எனப் பொங்கிய சக்தி, மஞ்சரிக்கு டாக்டர் வந்து ட்ரீட்மெண்ட் செய்து முடித்ததும் கிளம்பி விட்டான்.

அடிக்கடி போன் செய்து பேசினாலும், மஞ்சரி வெளியே வரப் பிரியப் படாததால் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை! வீட்டிற்குப் போனால் அந்தப் பிசாசு இருப்பாளே என வீட்டிற்கும் செல்லவில்லை இவன். அதன் பிறகு இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறான் மஞ்சுவை.

வேகமாய் அவளை நெருங்கியவன், கைப் பற்றிக் கொண்டான்.

“எப்படிடா இருக்க? மூக்கு சரியாகிடுச்சா?” எனக் கேட்டான் சக்தி.

அடிக்கடி போனில் கேட்பதுதான்! வீடியோ கால் வரச் சொல்லி சரியாகி விட்டதா என ஆராய்வான். இவன் கைப்பட்டு சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வந்திருந்தது மஞ்சரிக்கு! இப்பொழுது குணமாகி விட்டாலும், இன்னும் மூக்கில் லேசாய் சிவப்பு இருக்கத்தான் செய்தது. அதை மறைக்கத்தான் அந்த மாஸ்க்.
 
“நல்லாச்சு சக்தி! விட்டா என் மூக்க கழட்டிப் புது மூக்கு வச்சிருவீங்க போல” என்றாள் இவள்.

“நீ ஓகேன்னு சொன்னா, ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்டா! நான் ஸ்பான்சர் செய்யறேன்! ஸ்ரீதேவி மாதிரி வேணும்னாலும் சொல்லு, செஞ்சிடலாம்!”

“எல்லாம் இருக்கறதே போதும் சக்தி!” எனப் புன்னகைத்தாள் இவள்.

“மாஸ்க் கழட்டிடு! நீ எப்படி இருந்தாலும் எனக்கு அழகுதான்! குறையே தெரியாது என் கண்ணுக்கு! ஒத போட்டுக்கிட்டு நீ சிரிக்கறயா, சிணுங்கறயான்னு கூட தெரிய மாட்டுது” எனக் கொஞ்சினான் இவன்.

“ஹ்ம்க்கும்” எனக் கணைத்தார் சங்கரி.

அவர் பக்கத்தில் புன்னகையுடன் நின்றிருந்தார் ரங்க நாயகி.

“பேசி முடிச்சிட்டா, புடவைப் பார்க்கப் போகலாமா?”

மாஸ்க்கை கழட்டி இருந்த மஞ்சரி,

“போலாம் அத்தை!” என வெட்கப் புன்னகையுடன் அவரைப் பின் தொடர்ந்தாள்.

அங்கே இவர்களுக்கு ராஜ மரியாதை. கல்யாணப் பட்டுக்கெனத் தனித் தளம் இருக்க, அங்கே போய் அமர்ந்தார்கள் பெண்கள் மூவரும். மஞ்சுவின் அருகே இவனும் அமர்ந்து கொண்டான்.

“நாங்க எடுக்கறோம்டா! நீ போய் உனக்கானத பாரு” என்றார் சங்கரி.

“நோ மம்மி! என் மஞ்சுக்கு எது நல்லாருக்கும்னு அவள விட எனக்குத்தான் நல்லா தெரியும்!” என்றவன் பொறுமையாய் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்.

“அந்த பிங்க் கலர் நல்லாருக்கு சக்தி”

“உன் ஸ்கின் கலருக்கு பிங்க் போட்டா எடுத்து குடுக்காது டார்லி! பத்தோட பதினொன்னா தெரிவ! சக்தியோட வைஃப் கட்டப் போற சாரி, ட்ரெண்டிங்ல சக்கைப் போடு போடனும் பேப்!”

“அதுக்கு நாமளே ஒரு சேலைய நெய்ய சொல்லிருக்கனும்” என்றாள் இவள்.

“சொல்லிட்டேனே!!! இப்போ பார்க்கறதுலாம் மத்த சடங்குகளுக்கு! கல்யாண சாரி கோல்டன் கலர்ல நானே டிசைன் பண்ணி நெய்யச் சொல்லி ஆர்டர் செஞ்சிருக்கேன். கல்யாண நாளன்னிக்குப் பார்க்கறப்ப அப்படியே அசந்துடுவ கண்மணி” எனக் கண் மூடி இரசனையாய் சொன்னான் சக்தி.

புன்னகையுடன் அவன் முகம் பார்த்திருந்தாள் இவள்.

“சக்தி” என அழைத்தவள், இரு தாய்மார்களையும் ஒரு நோட்டமிட்டாள்.

இருவரும் பிசியாக சேலைக் குவியலில் ஆழ்ந்து கிடந்தார்கள்.

“என்னம்மா?”

“ஐ லவ் யூ சக்தி”

இவன் முகம் ஸ்விட்ச் போட்டது போல மலர்ந்தது!

“கல்யாணமே வரப் போகுது! லவ் சொல்ல உனக்கு இவ்வளவு காலம் எடுத்திருக்கு” என்றவன் அவள் தோளணைத்துக் கொண்டான்.

பெண்கள் இருவரும் பார்ப்பதற்குள் அவனைத் தள்ளி விட்டாள் இவள்.

“பப்ளிக் சக்தி” என இவள் எச்சரிக்க,

“சரி! சரி! நெருங்கல!” என்றவன் கோபமாய் தள்ளிப் போய் அமர்ந்து கொண்டான்.

“சும்மா சும்மா சின்னப்புள்ள மாதிரி கோச்சிக்காதீங்க சக்தி” எனச் சமாதானப்படுத்த முயன்றாள் இவள்.

“என்னோட ஃபீலிங் புரியல உனக்கு! சில சமயம் என்னை நெஜமாவே லவ் பண்ணிக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டயா, இல்ல உங்கக்கா அந்த பைசன் என் மேல பாயறது பிடிக்காம பொறாமைல ஒத்துக்கிட்டியான்னு சந்தேகமா இருக்கு மஞ்சு!” எனப் பெருமூச்சு விட்டவன்,

“நீ பார்த்து எடு! எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு! நான் போய்ட்டு வந்திடறேன்! த்ரீ ஹவர்ல வந்து உங்க மூனு பேரையும் அழைச்சிக்கறேன்! பில்ல எனக்கு அனுப்பச் சொல்லிடு” எனச் சொல்லிக் கிளம்பி விட்டான்.

“சக்தி!” என இவள் அழைத்தும் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டான்.

“எங்கம்மா போறான்?” எனக் கேட்டார் சங்கரி.

“ஏதோ அர்ஜண்ட் வேலையாம்த்த! வந்திடறேன்னு சொல்லிட்டுப் போனாரு” என வருத்தத்தை விழுங்கிக் கொண்டுச் சொன்னாள் சிவமஞ்சரி.

நாட்கள் வெகு வேகமாக ஓடித் திருமண நாளும் வந்தது! ஐயர் கெட்டி மேளம் சொல்ல சிவரஞ்சனியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான் சக்தி அமரன். அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ரஞ்சனியோ கோல்டன் கலர் சாரியில் ஈயென அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

சக்தி அமரனுக்கு மிஸ்டர் விதி டெடிகேட் செய்த பாடல் இது!

“அடங்காத காள ஒன்னு

அடிமாடா போனதடி கண்மணி என் கண்மணி”

(உயிராவாயா???)

(நான் தூங்க வந்துட்டேன். சைட் சரியாச்சுன்னு மறுபடி எழுந்து போய் லாப் எடுத்து எபி போடறேன்! உங்க கமேண்ட போட்டு வைங்க! காலைல ஹார்ட் விடறேன்! நான் தூங்கிட்டேன்னு கமேண்ட் போடாம டபாய்க்கக் கூடாது!!! லவ் யூ ஆல்)
 
Superuuuu😁😁😁

எனக்கு என்னமோ தெரியல🤷 மனசு மஞ்சுவ ஹீரோயினா ஏத்துக்கவே இல்ல🧐 எப்டி இருந்தாலும் மாறும்னு எதிர் பாத்தேன்😂😂 மாறிட்டு 😁😁 அப்டி மாரலனா நமக்கு வாச்சது அவ்ளோ தான்னு நம்ப புருஷர ஏத்துக்கலயா 🤷🤷🤷 அப்டி ஏத்துப்போம் nu irundhean 😞😞 nalla velaī😂😂😂

anti hero va pidikuratha pola anti heroine ah ulla ரஞ்சனி பிடிச்சுட்டு போல🤷😁🤭🤭🤭 எதோ காரணம் இருக்கும் அவ இப்டி இருக்க🤔

அடேய் புடிக்கல புடிக்கல சொல்லிட்டு தாலிய கட்டிட்ட😱😱 உன் பேபிக்கு ரத்தம் வருது தான் அதுக்குன்னு இன்னொருத்திக்கு ரத்தம் வருதே அதை கண்டுக்க கூடாதுனு இருக்கா😬😬😬 இப்போ நல்லா மாட்டுனியா 😁😁😁

என்ன தான் நடக்குது🙄🙄
 
சக்தி ரஞ்சனி தான் ஜோடினு நினைத்தேன் திருமணம் நடந்துவிட்டது எப்படி 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 13)


நினைச்சேன், அப்பவே நினைச்சேன். பதிமூணாவது அத்தியாயத்துல டூவீஸ்ட் இருக்குன்னு சொன்னதுமே இதுவாத்தான் இருக்கும்ன்னு எதிர்பார்த்தேன். கடைசியில அதுவாத்தான் நடந்திருக்குது.


சைட் அடிச்சது,ட்ரைவராவேலை
பார்த்தது, லவ் பண்ணது, லவ் சொன்னது, நிச்சயம் பண்ணது, கல்யாணம் பேசியது, புடைவை செலக்ட் பண்ணது எல்லாமே
மஞ்சரிக்குத்தான், ஆனா தாலியை கட்டினது மட்டும் ரஞ்சனிக்கு அப்படித்தானே...?


எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க, ஒருத்தி புருசனை இன்னொருத்தியால கட்ட முடியாதுன்னு... அப்ப அதுக்கு அர்த்தம் புரியலை, ஆனா இப்ப புரியுது. இதான் தலை எழுத்து போல.


அது சரி, எப்படி இந்த டூவீஸ்ட் நடந்துச்சு. ஒருவேளை, ரஞ்சனியே மஞ்சரியை கடத்திட்டாளா, இல்லை போட்டு தள்ளிட்டாளோ...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Expected twist dhaan
Manjari mooku udaindhadhu ava ranjani ya adichadhukku dhaan
Saree select pannum bothu enna urgent work seri illaye
Ellam Shakti yin master plan dhaanu thonudhu
 
Sakthi edho golmaal panran. Minister ah kavuka potta plan. Mothama orae vaarisa maranum nu panran pola. Ranjani ku edho thani agenda irukku.
 
Back
Top