எபி 14

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்



செம்மையா புடிக்கும் இந்தப் பாட்டு! டபுள் மீனிங்ல இருந்தாலும், நம்ம அனி பேபி கலக்கிருப்பான்!



அத்தியாயம் 14



பெண்கள் இருவரின் திருமணமும் ஒரே நாளில் நடக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார் சுப்பு ரத்தினம். காலை முகூர்த்தம் சின்னவளுக்கும், மாலை முகூர்த்தம் பெரியவளுக்கும் என முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்காக மிகப் பிரமாண்டமான மண்டபம் ஒன்றை புக் செய்திருந்தார் அவர்.

“அவரோட பதவியையும் நாம கன்சிடர் பண்ணனும்மா! நமக்காக வேற டைமிங்ல கல்யாணம் வைக்க அவரு ஒத்துக்கிட்டாரு! அதை நாம மதிக்கனும்ல! அவர் சொல்ற மண்டபத்துலயே கல்யாணத்த வச்சிக்கலாம்மா! மண்டபம் அவர் பார்த்ததா இருந்தாலும், ஏற்பாடுலாம் நாம பார்த்துப்போம்! சடங்கு, சாங்கியம் எல்லாம் நம்ம பக்கம் செய்யற மாதிரித்தான் செய்யப் போறோம்! மண்டபத்துக்கான செலவையும் அவர் கிட்ட குடுத்துடப் போறோம்! பிறகென்னம்மா பிரச்சனை!”

“பிரச்சனை ஒன்னும் இல்லடா சக்தி! உங்கப்பா பக்கம் ஜனக்கட்டு அதிகம். எல்லாரையும் நல்லபடி கவனிக்கனும்! அதோட பிஸ்னஸ் சர்கிள்ல இருந்து ப்ரேண்ட்ஸ், வாடிக்கையாளருங்கன்னு கூட்டம் இருக்கும்! அதான் யோசனையா இருக்கு. உங்க மாமனாரு பார்த்து வச்ச மண்டபம்னா, நாம எல்லாத்துக்கும் விட்டுக் குடுக்க வேண்டி இருக்கும். அவங்க சொல்றதுதான் சட்டமா வேற இருக்கும்! அதான் மொத்தமா நம்ம வீட்டுக் கல்யாணத்த நம்ம கைக்குள்ள வச்சிக்கலாம்னு தோணுச்சு”

“மாமா மண்டபம் பேசிருக்காரு! அவ்ளோதான்! வேற எதுலயும் அவங்கப் பக்கத்துல இருந்து ப்ரெஷர் வராது! அதுக்கு நான் கேரண்டி! நம்ம ஜனங்க எவ்ளோ பேர வேணும்னாலும் கூப்பிடுங்க! மண்டபத்துலயே ரூம் குடுங்க! பக்கத்துல ஹோட்டல் இருக்கு! அங்க கூட ரூம் போடுங்க! ஒன்னும் பிரச்சனை இல்லம்மா! காலைல நடக்கற எல்லாமே, மணமேடை அலங்காரத்துல இருந்து மணமாலை வரைக்கும் நம்மளோட பொறுப்புத்தான். அவர் சைட்ல என்ன செய்யனுமோ அத மட்டும்தான் அவர் செய்வாரு! என்ன கொஞ்சம் செக்கியூரிட்டிலாம் டைட்டா இருக்கும்! மினிஸ்ட்டர் வீட்டுக் கல்யாணம்னா சும்மாவாம்மா” என மூச்சைப் பிடித்துக் கொண்டுப் பேசினான் இவன்.

“அதான் சொல்றான்ல சங்கரி! சும்மா அவனைப் போட்டு டென்ஷன் பண்ணிட்டு இருக்க நீ! மாப்பிள்ளைடி அவன்! கொஞ்சம் அந்த ஃபீல அனுபவிக்க விடு!” என மகனுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்தார் அருள்மணி.

“உடனே வந்து மூக்கை நீட்டிருங்க! எதுக்காகப் பேசறேன், என்னத்துக்காகப் பேசறேன்னு எதையும் யோசிக்காதீங்க! மகன் சொல்லிட்டா அதான் வேதவாக்கு! மகன் பிறக்கற வரைக்கும் சங்கரி என் பைங்கிளின்னு பின்னால சுத்தனீங்க! நானும் என் புருஷன் போல ஒரு மனுஷன் உண்டான்னு பூமி மேல கால் நிக்காம மிதந்துட்டு இருந்தேன்! இவன் வந்து பொறந்தான், பொண்டாட்டி ஆறிப் போன பழைய டீயா போய்ட்டேன்! ஆகாசத்துல மிதந்த என்னை படார்னு இழுத்து பாழுங் கிணத்துல தள்ளி விட்டுடீங்க! இந்த வீட்டுல நானு உங்க மகனுக்கு பாலாத்திக் குடுக்கவும், பேம்பர்ஸ் மாத்தி விடவும் மட்டுமே நேந்து விட்ட வேலைக்காரியா மாறிப் போய்ட்டேன்!”

“ம்மா! எப்பவோ மாத்தன பேம்பர்ஸ எல்லாம் இப்ப ஏன்மா இழுக்கற!”

“ஆமாடா! நான் எது பேசனாலும் உனக்கும் உங்கப்பாவுக்கும் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்துன மாதிரித்தான் இருக்கும்! இனி மருமக வேற வரப் போறா! இப்பருந்தே வாய மூடிக்கப் பழகிடறேன்! நான் கட்டிக்கிட்டப் புருஷனும் சரியில்ல, பெத்துக்கிட்டப் புள்ளையும் சரியில்ல!” எனக் கோபித்துக் கொண்டு அறைக்குப் போய் விட்டார் சங்கரி.

“சங்கரி! ஏய் சங்கரி! பொசுக்குன்னு ஏன்டி கோச்சிக்கற! இரு பேசிக்கலாம்! சங்கு! சங்கி! சங்கி மங்கி!” என அவர் பின்னாலேயே ஓடினார் அருள்மணி.

அவரின் செல்ல அழைப்பான சங்கி மங்கி எப்பொழுதும் போல அன்றைக்கும் இவனுக்குப் பெரும் சிரிப்பை வரவழைத்தது.

இப்படியே சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் எனத் திருமண நாளும் நெருங்கி வந்தது. தனித் தனியாக வேறொரு நாள் ரிசப்ஷன் வைப்பது என முடிவெடுக்கப்பட்டிருந்தது இரு மணமகன் வீட்டிலும். ஆகையால் திருமணத்திற்கு முதல் நாள் இரவு வடநாட்டினர் போல இப்பொழுது தமிழ் நாட்டிலும் பிரபலமாகி வரும் சங்கீத் நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது.

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைகள் எனச் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர் அந்த நிகழ்வுக்கு. அதோடு பிரபலமாகி வரும் இசையமைப்பாளர் ஒருவரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது! ஆட்டம் பாட்டமெனத் திருமணக் களை வந்திருந்தது அவ்விடத்துக்கு.

சக்தி அமரனின் ஏற்பாட்டில் அந்த மண்டபமே சொர்க்கலோகம் போல ஜொலித்தது! ஒரிஜினல் பூக்களும், தங்கமாய் தகதகக்கும் அலங்காரப் பொருட்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த இடமே, தங்கம் விற்கும் குடும்பத்தின் தாத்பரியத்தை எடுத்துக் காட்டியது. மூன்று வேளையும் மணக்க மணக்க சூடான உணவு, நேரா நேரத்திற்கு காபி, ஜூஸ் என வந்திருந்தவர்கள் சிறப்பாகக் கவனிக்கப்பட்டனர்.

ரஞ்சனியை மணத்து கொள்ளப் போகும் முத்தையாவின் சொந்த பந்தங்கள் மஞ்சரியின் திருமணம் முடிந்ததும்தான் மண்டபத்திற்கு வந்து தங்குவதாக ஏற்பாடு! முத்தையாவும் அவன் குடும்பவும் மட்டும் அன்றே வந்திருந்தார்கள்.

“ஏன்டா மகனே அலைஞ்சிட்டே இருக்க! பாரு அந்தப் பையன! ஆட்டம் பாட்டம்னு கலக்கறான்! நாங்களாம் இல்லையா வேலையைப் பார்க்க! அதோட ஈவண்ட் மேனெஜ்மெண்ட் டீம வேற அப்பாயிண்ட் பண்ணிருக்க! அவங்க பார்க்க மாட்டாங்களா இதெல்லாம்! போ! போய் இந்த உடுப்ப மாத்திட்டு, ராஜா மாதிரி கிளம்பி வா! வந்து நீயும் ரெண்டு டான்ஸ போடு! நீ ஆடிப் பார்த்துப் பல நாள் ஆகிடுச்சு! மருமகள பாரு! உன்னையே ஏக்கமா பார்த்துட்டு உக்காதிருக்கு! போடா மகனே” எனச் சக்தியை அவனுக்கான அறைக்கு இழுத்துக் கொண்டுப் போனார் அருள்மணி.

“இப்போ என் ஆட்டம் முக்கியமாப்பா? நடக்கற ஏற்பாடுகள்ல எதாச்சும் சின்ன எரர் வந்தா கூட, உங்க வைஃப் டண்டணக்கா டான்ஸ் ஆடிருவாங்க!”

“அடப் போடா! என்னைக்கு அவ ஆடல சொல்லு! அவ பெர்பெஃக்டா இருக்கவும்தான்டா நாம பெப்பரெப்பேன்னு சுத்திட்டு இருக்கோம்! என்ன பிரச்சனைனாலும் அவ நம்ம பின்னாடி நின்னு பிடிச்சுத் தூக்கி விட்டுருவாடா மகனே! அம்மாவ பத்தி உனக்குத் தெரியாதா! நமக்காகவே வாழறவடா அவ! எதாச்சும் ஸ்ட்ரெஸ்ல சொன்னா, இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுடு! இப்போ போய் சமத்தா குளிச்சிட்டு, மாப்பிள்ளை கணக்கா வா” எனக் கதவைச் சாற்றி விட்டுப் போனார்.

புன்னகையுடன் குளித்து வந்தான் சக்தி அமரன். கோப்பர் வர்ணத்தில் பெண்கள் அணிவது போல டாப்ஸ் ஒன்று ஆண்களுக்கான பேஷனாக வெளி வந்திருந்தது! கழுத்திலும் கையிலும் வெள்ளை வர்ணத்தில் அழகிய பூ டிசைன் இருக்க, பேண்ட் வெள்ளை நிறத்தில் இருந்தது. உடையை அணிந்து மேலே இருந்த மூன்று பட்டன்களைப் போடாமல் விட்டவன், ஸ்டைலாய் முடியைச் சீவி விட்டான்.

அந்த நேரம் போன் அடித்தது. நண்பன் ரவீந்திரன் பெயர் தெரிய, அழைப்பை ஏற்றான் இவன்.

“மாப்புள்ள!”

“என்னடா?”

“நைட் பார்ட்டிக்கு எல்லாமே ரெடி! ஒரு ஹோட்டலோட டெரெஸ் சூவிட்ட புக் பண்ணிட்டேன்! வெளி ஆளுங்க கண்ணுப் படாம நமக்கான ப்ரைவட் பார்ட்டி! நம்ம பசங்க எல்லாம் வரானுங்க! தண்ணி, தம்மு, ஸ்ட்ரீப் டீஸ்(பெண் ஆட்டக்காரர்கள், ஆடிக் கொண்டே ஒவ்வொரு உடையாகக் கழட்டிப் போடுவது! வெளிநாட்டு ஆண்களின் பேச்சிலர் பார்ட்டியில் இது பெரும்பாலும் இருக்கும். இப்பொழுது நம் நாட்டிலும் இருக்கிறது! வெளியே தெரிவதில்லை! நம் நாட்டில் பெண்கள் கூட ஆண்கள் செய்யும் ஸ்ட்ரீப் டீஸ் அரேஞ் செய்வதாக கேள்வி!) எல்லாம் பக்காவா ரெடி பண்ணிட்டேன்! உன்னோட பேச்சிலர் டேவ பயங்கரமா செலிபிரேட் பண்ணறோம்! இன்னிக்கு ஒரு புடி!!!!” என ஆர்ப்பாட்டமாகக் கத்தினான்.

சக்திக்குப் புன்னகைப் பூத்தது.

“வரேன்டா! கொஞ்சம் லேட்டா வரேன்! நீங்க எனக்கு வேய்ட் பண்ணாம ஆரம்பிச்சிடுங்க!” என்றவன் அழைப்பை நிறுத்தி விட்டு மேல் மாடியில் இருந்து கீழே இறங்கினான்.
 
Last edited:
மகனைப் பார்த்த பெற்றவர்களின் மனம் பூரித்தது. அந்த நேரம் பாடல் ஒன்று ஒலிக்க, அழகாய் மேடையேறினான் சக்தி அமரன்.

“பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு

பூவ தொடுத்து சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சு”

இவன் மேடை ஏறுவதைப் பார்த்ததும் அந்தப் பக்கம் மஞ்சரி ஏறி வர, கீழே அமர்ந்திருந்தவர்கள் ஓவெனக் கத்தினார்கள். சிரித்த முகத்துடன் அவன் கை நீட்ட, புன்னகையுடன் மெல்ல நடையிட்டு வந்து அவன் கைக்குள் கை வைத்தாள் இவள்.

ஆரம்பித்தது அவர்களின் ஆட்டம். அவர்களோடு சேர்ந்து முத்தையாவும் இணைந்து கொள்ள, களைக் கட்டியது அவ்விடம். ஓர் ஓரமாகச் சரிந்து அமர்ந்து கொண்டு மேடையைக் கவனித்தாள் ரஞ்சனி! அவள் முகத்தில் இகழ்ச்சியான ஒரு புன்னகை. அவள் அருகே வந்து அமர்ந்தார் சங்கரி. என்ன என்பது போலப் பார்த்தாள் இவள்.

“நீ ஆடப் போகலியாம்மா?” எனக் கேட்டார் அவர்.

“எனக்குலாம் சரக்கப் போட்டாத்தான் ஆட வரும்! ரெண்டு நாளைக்குப் பாட்டிலைத் தொடக் கூடாதுன்னு சொல்லிட்டான் எங்கப்பன்! என் கைய பாரு, அப்படி ஆடுதுன்னு!” எனக் கடுப்பாகச் சொன்னாள் ரஞ்சனி.

“இதெல்லாம் விட்டுடக் கூடாதாம்மா? பொண்ணுங்க உடம்பு இந்தப் போதை, சரக்கயெல்லாம் தாங்காதும்மா! கல்யாணமாகப் போகுது! புள்ளக் குட்டிங்க ஊனமா பொறக்க சான்ஸ் இருக்கு! கொஞ்சம் உன் பழக்க வழக்கங்கள மாத்திக்கோயேன்மா!”

“எதுக்கு இப்ப அட்வைஸ்? உன்னோட பேரப் புள்ளைங்களா அப்படிப் பொறக்கப் போகுது? இல்லைத்தானே? தோ தளுக்குக் குலுக்குன்னு மேடைல ஆடறாளே, அவ உனக்கு முத்து முத்தா பேரக் குட்டிங்க பெத்துப் போடுவா! பிறகென்ன உனக்குப் பெரச்சனை! மனுஷனே நாக்கு நமநமங்குதேன்னு எரிச்சல்ல இருக்கான்! இங்க வந்து சரக்க விடு, முறுக்க விடுன்னு நொச்சுப் பண்ணிக்கிட்டு” என எகிறினாள்.

அருகில் தன் கணவருடன் அமர்ந்திருந்த ரங்க நாயகி,

“மன்னிச்சிருங்க சம்பந்தி! இவளுக்கு மூடு சரியில்ல! அதான் பட்டுன்னு பேசிட்டா! மனசுல எடுத்துக்காதீங்க!” எனச் சொல்லியபடியே அவளின் கைப்பற்றி அழைத்துப் போய் விட்டார்.

பெருமூச்சுடன் தன்னைக் கடந்து போனவளையே பார்த்திருந்தார் சங்கரி!

அன்றிரவு பேச்சிலர் பார்ட்டிக்குப் போய் விட்டு விடிகாலை நான்கு மணி போல்தான் திரும்பி இருந்தான் சக்தி அமரன். அவனது நண்பர்களில் ஒருவன்தான் அழைத்து வந்திருந்தான் இவனை! மூக்கு முட்டக் குடித்திருந்த சக்தி அமரன், தள்ளாடியபடி அவனுக்கான அறையில் போய் படுத்து விட்டான்.

காலையில் எட்டுக்கு முகூர்த்த நேரம். ஆறு மணிப் போல மகனுக்கு போன் போட்டார் சங்கரி. அழைப்பு ஏற்கப்படவேயில்லை. அவனை எழுப்பி விடுவதற்காக மணமகன் அறைக்குப் போனார் அவர். சங்கரி கதவைத் தட்ட, அறைக் கதவு திறக்கவில்லை.

“சக்தி! தம்பி!” என மெல்லமாய் அழைத்தார்.

பதிலே இல்லை. மறுபடி அவனது போனுக்கு அழைப்பு விடுத்தார். அதுவும் ஏற்கப்படவில்லை!

கொஞ்சம் சத்தமாய் அவன் பெயர் சொல்லி அழைத்தார். கதவையும் சத்தமாகத் தட்டினார். அருள்மணியும் அடுத்தடுத்த அறைகளில் இருந்த மற்றவர்களும் கூட வந்து விட்டார்கள்.

“என்ன சங்கரி?” எனக் கேட்டார் அருள்மணி.

“கூப்பிடப் கூப்பிடக் கதவைத் திறக்கலேங்க! போன் போட்டாலும் எடுக்கல!”

அருள்மணியும் சுப்பு ரத்தினமும் சேர்ந்து கதவைத் தட்ட,

“வரேன்!” எனக் குரல் கொடுத்தான் இவன்.

வெளியே அவன் வரவும், பதட்டமாய் ரங்க நாயகி ஓடி வரவும் சரியாக இருந்தது. கணவரின் காதில் அவர் என்னமோ மெல்லியக் குரலில் சொல்ல, சுப்பு ரத்தினத்தின் முகம் அஷ்டக் கோணலாகியது!

“என்னாச்சு மாமா?” எனத் தூக்கக் கலக்கத்துடன் கேட்டான் இவன்.

“மாப்பிள்ளை!” எனத் தயங்கினார் அவர்.

“என்ன சம்பந்தி?” என ரங்க நாயகியைக் கேட்டார் சங்கரி.

“பொண்ண காணோம்ங்க”

“யாரு ரஞ்சனியா?”

“இல்ல! மஞ்சரி”

“வாட்!” எனத் திகைத்தான் சக்தி அமரன்.

அவனது தூக்கக் கலக்கம், போதையெல்லாம் ஓடியே போயிருந்தது.

முத்தையாவின் தந்தையும் ஓடி வந்தார் அவ்விடத்துக்கு! அவர்களுக்கும் அந்தத் தளத்திலேயே அறைக் கொடுக்கப் பட்டிருந்தது.

“என் மகனையும் காணோம்ங்க! இந்த லெட்டர் இருந்தது டேபிள்ல” என நீட்டினார் அவர்.

பட்டெனப் பறித்து அதைப் படித்தான் சக்தி அமரன்.

“எங்களை மன்னிச்சிருங்க! ரஞ்சனியைப் பார்க்க வந்த நான் மஞ்சரிக் கிட்ட மனசைக் குடுத்துட்டேன்! அவளும்தான்! சக்தியைக் கட்டிக்கனும்னு அவளுக்கு டார்ச்சர் அவ வீட்டுல! ரஞ்சனியைக் கட்டிக்கிட்டா பணம் வரும்னு டார்ச்சர் எங்க வீட்டுல! அதான் யாருக்கும் சொல்லாம, நாங்க ஓடிப் போறோம்! எங்கள தேடாதீங்க!” என எழுதி இருந்தது அதில்.

ஆடிப் போய் விட்டார்கள் அனைவரும்! அப்படியே சரிந்து கீழே அமர்ந்து விட்டான் சக்தி அமரன்.

“மஞ்சு!” என அவன் வாய் முனகியது.

மகனின் நிலையைப் பார்த்துப் பொங்கி விட்டார் அருள்மணி.

“சுப்பு! நீ அமைச்சர்னா பெரிய பருப்பாடா? இப்படி என் மகன் மனச உடைச்சிட்டீங்களே? உனக்குத் தெரியாமையாடா இருந்திருக்கும் இந்தக் கர்மமெல்லாம்? இப்படி சபையைக் கூட்டி கழுத்தருத்திட்டியே! என் சாதி சனமேல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல கூடிருமேடா! என்னன்னு இந்த அவமானத்த நான் வெளிய சொல்வேன்? ஆசையாப் பெத்து வளத்த என் மகன் இப்படி மனசொடிஞ்சு கிடக்கானே! நீங்கள்லாம் நல்லா இருப்பீங்களா? நாசமா போய்டுவீங்கடா!” எனக் கத்தினார்.

“டேய் அருளு! எனக்குமே இதுலாம் தெரியாதுடா” என்றவர் மனைவியை ஓங்கி ஓர் அறை விட்டார்.

“உனக்குத் தெரியுமாடி இந்தக் கூத்தெல்லாம்?” எனக் கேட்டார் அவர்.

“எனக்கு ஒன்னுமே தெரியாதுங்க! சக்தி தம்பி கூட சந்தோஷமாத்தானே பேசிச் சிரிசா! இதுல ஏதோ பொய் இருக்குங்க! என்னன்னு பார்க்கலாம்ங்க! போலிஸ கூப்பிடுங்க”

“உங்க மக அந்த முத்தையா கூட ஓடிப் போனதுலாம் எங்களுக்கு தேவையில்லாத விஷயம்! போலிச கூப்பிடுங்க, ராணுவத்தக் கூடக் கூப்பிடுங்க! அதுக்கு முன்ன என் மகனுக்கு ஒரு வழிய சொல்லுங்க” எனக் கத்தினார் அருள்மணி.

மனைவி ஒரு பக்கம் அழ, சங்கரி மகன் அருகே அமர்ந்து அவனைத் தோள் சாய்த்துக் கொள்ள, அருள் எகிறிக் கொண்டிருக்க, முத்தையாவின் பெற்றோர் பயத்துடன் நின்றிருக்க, என்ன செய்வது எனத் தடுமாறினார் அமைச்சர். நாட்டு அரசியலை பதம் பார்ப்பவருக்குக் குடும்ப அரசியல் சவாலாய் நின்றது.

“என்ன சத்தம் இங்க? மனுஷன் நிம்மதியா தூங்க முடியுதா?” எனக் கொட்டாவி விட்டபடியே அறையில் இருந்து வெளியே வந்தாள் சிவரஞ்சனி.

சங்கரியின் பார்வை அவள் மேல் நிலைத்தது.

“எங்க வீட்டுக் கல்யாணம் நடக்கனும்! அது மஞ்சரியா இருந்தாலும் சரி ரஞ்சனியா இருந்தாலும் சரி” எனத் தீர்க்கமாய் சொன்னார் சங்கரி.

“அம்மா” என அலறி விட்டான் மகன்காரன்.

“பைத்தியமாடி உனக்கு?” என சவுண்ட் விட்டார் அருள்மணி.

“வெளிய நிக்கற ஒவ்வொருத்தனும் கல்யாணம் ஏன் நின்னிடுச்சுன்னு நாக்கு மேல பல்லப் போட்டு பேசுவானுங்க! என் மகனோட ஆண்மை வரைக்கும் அங்க பேசு பொருளாகும்! அதுல எனக்கு இஷ்டமில்லைங்க” எனக் கண் கலங்கியபடிச் சொன்னார் சங்கரி.

“பொண்ணு மாறனா மட்டும் பேச மாட்டாங்களாடி?”

“அப்பவும் பேசுவாங்கத்தான்! ஊர் வாய மூட முடியுமா? தங்கச்சி ஓடிட்டாலும், அக்காவ கட்டிட்டான்! கெத்துதான் இவன்னு பேசுவாங்க! முன்னத விட, இது எவ்வளவோ பரவாலங்க!”

“சங்கரி! மகன் வாழ்க்கைய அழிச்சுடாதடி”

“ஹலோ! என்னைக் கட்டிக்கிட்டா உங்க பீத்த மகன் வாழ்க்கை அழிஞ்சுப் போய்டுமோ! அப்போ சரி, அழிஞ்சுப் போகட்டும்! என்னை வச்சிக்கிட்டே என்னைப் பத்திக் கேவலமா பேசுவீங்களா? இருங்க! உங்க வீட்டுக்கு வந்து உங்கள ஆட்டி வைக்கறேன்! டாடி! தோ மஞ்சு, பஞ்சுன்னு காதல்ல எரிஞ்சுட்டு இருக்கானே, அவனைக் கட்டிக்க எனக்குச் சம்மதம்!” எனச் சத்தமாய் சொன்னவள்,

“ப்பா! கொஞ்சம் சரக்கு சொல்லேன்! ஒரே நடுக்கமா இருக்கு” என்றாள்.

சங்கரி பிடித்தப் பிடிவாதத்தில் அந்தக் கல்யாணம் நடந்து முடிந்திருந்தது.

அன்றைய இரவில், தனது பெட்ரூமில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி இருந்தான் சக்தி அமரன். அரை மணி நேரம் கழித்து அவன் அறைக் கதவு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த சிவரஞ்சனியைக் கோபத்துடன் முறைத்தான் அவன். அவளும் இவனை நிமிர்ந்து நேராய் பார்த்தாள். கோப முகம் மெல்ல, மெல்லப் புன்னகையைப் பூசிக் கொள்ள,

“வெல்கம் பார்ட்னர்!” என ஆரவாரமாக அழைத்தான் சக்தி அமரன்!

(உயிராவாயா???)



(சரியா எழுத்துப் பிழை பார்க்கல டியர்ஸ்! எபி கேட்டு கமேண்ட், இன்பாக்ஸ் மேசேஜ்னு நெறய வரவும் உக்காந்து எழுதனேன்! வீக்கேண்ட்னா வீடு எப்படி இருக்கும்னு தெரியாதது இல்லையே! அட்ஜஸ்ட் பண்ணி படிங்கோ! பெரிய எபிதான்)
 
அருமை 👌👌👌👌👌, சக்தி ♥️ரஞ்சனி பிளான் தான் போலவே ஏதோ இருக்கு என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
😍😍😍

அவளோட புன்னகை முகமும், இவனோட ஆரவாரமான அழைப்பும், ஒருவேளை சக்தியும், ரஞ்சனியும் முன்னாடியே ப்ளான் போட்டு இருப்பாங்களோ? 🤔🤔 எப்படியோ இனிமே ரெண்டு பேரும் "குடியும் குடித்தனுமுமா" இருப்பாங்க..😜😜
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
குடி குடியை கெடுக்கும் ன்னு சொல்லுவாங்க‌.
இப்ப பாத்தா இவன் என்னாமோ வெல்கம் பார்ட்னர் ன்னு சொல்லறானே??😯😯😯😯😯
அப்ப இரண்டு குடியும் ஒன்னுகூடி தான் எல்லா வேலையும் செஞ்சுதுங்களா?
இல்லை வேறவழியில்லாம தாலி கட்டி முடிச்ச கடுப்புல சொல்லறானா?🙄🙄🙄🙄🙄🙄
ரீடர்ஸ் மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 1000015093.jpg1000015092.jpg
 
ஆரம்பத்திலே இருந்தே மஞ்சுவ விட ரஞ்சனி ரோல் தான் அதிகம்.😊
இரண்டும் சேர்ந்து தான் கேம் பிளே பண்ணி இருக்கும்....😍🤩😛
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 14)


அடப்பாவி...! உன்னை நல்லவன் நினைச்சேனே, வல்லவன் நினைச்சேனே,
இப்படி எல்லா நினைப்புக்கும் ஒட்டுமொத்தமா வைச்சிட்டியேடா ஆப்ப. இதெல்லாம் உன் ப்ளான் தானா ? அப்ப மஞ்சரியையும் முத்தையாவையும் டிஸ்போஸ் பண்ணது உங்க ரெண்டு பேரோட கைங்கர்யம் தானா..?
ரஞ்சனியை பார்த்தாலே கடுவன்பூனை கணக்கா பொரிஞ்சு தள்ளுவியே...
அப்ப அதெல்லாம் வெறும் டூப்புத்தானா...? இதுல கழண்டிடும் போலயிருக்கே எங்க டாப்பு (மண்டை).


எதுக்குடா இதெல்லாம் பண்ணிங்க...? யாராவது வந்து சொல்லிட்டுப் போங்களேன்டா.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
யக்கா.. முடியல.. பிளிச்... பாவம் நாங்க😒 சொல்லிடுங்க.. எல்லா உண்மையும் சொல்லிடுங்க பிளீச்☹️☹️😪

என்ன தான் டா பன்ற... அடேய்.. மண்டை காயுதே😴😴🙄🙄 இவன் கோவத்துல கூப்புறான🤔🤔🤔

எம்மா மஞ்சு... என்னமோ காவிய காதல் போல போன எபில அடிதடி பண்ண🤷🤷🤷 இப்போ என்னமா உனக்கு🤭🤭🤭

ரஞ்சனி😲😲 நீ என்ன டிசைன்னோ போ🤷🤷🤷🤷
 
Back
Top