எபி 15

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்


இந்தப் பாட்டுல எஸ்.பி.பி தேன் மழை நீ ஹோய்னும் தேவதை நீ ஹோய்னும் சொல்றப்ப யப்பா, மனசு அப்படியே மயங்கும்!!! கேட்டுப் பாருங்களேன்!!!




அத்தியாயம் 15



“உல்லாசம் ஆயிரம்

உன் பார்வைத் தேன் தரும்

உன் நாணம் செவ்வானம்” எனப் பின்னாலிருந்து கேட்டக் குரலில் முகமெல்லாம் வெட்கப் பூக்கள் பூத்தது சங்கரிக்கு.

“தோ! வந்துட்டாரே உன் ரோமியோ! இவ்ளோ மாசமா பின்னாடி லோ லோன்னு சுத்தறாரே, போய் பேசினாத்தான் என்னவாம்! அநியாயம் பண்ணறடி நீ”

“வேணாம் தில்லை! ஏழைக்கேத்த எள்ளுருண்டைன்னு சொல்வாங்க! அந்த எள்ளுருண்டைக்கே வழியத்துக் கிடக்கோம் நாங்க! எனக்கெல்லாம் இந்த மைனர் வீட்டுக் கன்னுக்குட்டி சரிப்பட்டு வராது! நான் காலேஜூக்கு படிக்க வரதே உங்கப்பாவோட தயவுனால! ஒழுங்கா படிச்சமா, குடும்பத்த முன்னேத்தனமான்னு இருக்கனும்! இந்தக் காதல், கத்தரிக்காய்லாம் நான் கனவுல கூட நினைக்கக் கூடாதுடி” என்றவளின் குரலில் அப்படி ஒரு நிராசை.

ஆரம்பத்தில் சங்கரி தன்னைச் சுற்றி வரும் பணக்கார வீட்டு அருள்மணியைக் கண்டுக் கொள்ளாமல்தான் இருந்தாள். இவள் பக்கத்தில் இருந்து எந்தப் பதிலும் வராமல் போனாலும் கூட, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் எனப் போய் விடாமல், பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கும் அருள்மணியின் மேல் லேசாய் ஈர்ப்பு வரத்தான் செய்தது இவளுக்கு. அதோடு பார்க்கும் போதெல்லாம் கண்களாலேயே காதலைக் கடத்தும் அவன் கண்ணியம் இவளை அலைபாய வைத்தது! வேண்டாம் என அடக்கினாலும், அவன் பக்கம் மனம் சாயத்தான் செய்தது. தங்களது ஏழ்மையையும், மூத்தவளாய் தனக்கிருக்கும் பொறுப்பையும் எண்ணி நெஞ்சக் கதவை இறுக்க மூடிக் கொண்டாள்.

தில்லையின் வீட்டில்தான் கார் ட்ரைவராக வேலைப் பார்த்தார் சங்கரியின் தந்தை. மூத்தப் பெண் சங்கரி. அவளுக்குக் கீழ் ஆண் ஒன்றும் பெண் இரண்டுமாய் உடன் பிறந்தவர்கள் இருந்தார்கள். அவள் தந்தை எடுக்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்குமே பத்தவில்லை. சங்கரியின் அம்மாவும் கூட தொழிற்சாலை ஒன்றில் வேலைப் பார்த்தார். தில்லை மற்றும் அவள் தங்கை ரங்க நாயகி உபயோகித்தப் பழையத் துணிகளை அணிந்து வளர்ந்தவர்கள்தான் சங்கரியும் அவள் உடன் பிறப்புகளும்.

லட்சுமி வாசம் செய்யாத வீட்டில் சரஸ்வதியின் கடாட்சம் மட்டும் வஞ்சனையில்லாமல் கிடைத்தது. சங்கரி படிப்பில் கெட்டியாக இருந்தாள். ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வந்தும் குடும்ப சூழ்நிலையால் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம். தில்லைத்தான் தன் தந்தையிடம் பேசி, சங்கரி காலேஜ் போக உதவி செய்தாள். படித்தப் பள்ளி வேறு வேறாய் இருந்தாலும், அப்பாவோடு சில சமயங்கள் வீட்டுக்கு வரும் தன் வயதொத்த சங்கரியுடன் விளையாடி வளர்ந்தவள் தில்லை. ஆகவே தோழி மீது அவளுக்கு அன்பிருந்தது. அந்த வீட்டில் தில்லையும் அவள் அப்பாவும் ஒரு மாதிரி. பணம், அந்தஸ்த்து எல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சரி சமமாய் நடத்துவார்கள். ரங்க நாயகி அவள் அம்மாவைப் போல. தராதரம் பார்த்துத்தான் பழகுவாள். அதனாலேயே சங்கரி ரங்க நாயகியிடம் இருந்து ஒதுங்கியே இருந்து கொள்வாள்.

“இப்ப என்ன? அவனோட காதல் வேணாமா உனக்கு? அப்படின்னா பட்டுன்னு வெட்டி விடறதுதான் நல்லது! இப்படி பின்னால சுத்திட்டு இருக்க விடக் கூடாதுடி! நீ பேசாம இருந்தீனா, உனக்கும் பிடிச்சிருக்குன்னு நெனைச்சிக்குவாங்க!” என்ற தில்லை, தங்கள் பின்னால் வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தாள்.

“வேணா! ஒன்னும் பேசாத! போய்டலாம் தில்லை” என மெல்லியக் குரலில் சொல்லி தோழியின் கை பிடித்து இழுத்தாள் சங்கரி.

“சும்மா இருடி” என்ற தில்லை,

“ஹலோ மிஸ்டர் சுருட்டை முடி!” என அருளை அழைத்தாள்.

“சொல்லுங்க சிஸ்டர்!”

பேச்சு இவளிடம் இருந்தாலும் பார்வை முழுக்க சங்கரியிடம் இருந்தது அருளுக்கு. சுருண்டு முன்னால் வந்து விழுந்த முடியை ஸ்டைலாக டி. ராஜேந்தர் போல கோதிக் கொண்டான் அவன்.

ஓரக் கண்ணால் அதைக் கவனித்த சங்கரி, மயங்கப் பார்த்த மனதை கடிவாளமிட்டுக் கட்டி வைத்தாள்.

“சுருட்டை முடி உள்ளவங்கள எல்லாம் எங்க சங்கரிக்குப் புடிக்காதாம்! அதனால வேற ஆள போய் தேடுங்க லவ் பண்ண” என்றாள் தில்லை.

“அதை நீ சொல்லாதே! உன் ப்ரெண்டு சொல்லட்டும்!” என எகிறினான் தோழனோடு துணைக்கு வந்திருந்த சுப்பு ரத்தினம்.

“ஏய் ஒட்டடைக் குச்சி! உன்னை பேச்சு வார்த்தை நடத்த கூப்டாங்களா இப்போ?”

“ஏய் குண்டு பூசணி! உன்னை மட்டும் இவங்க நடுவுல பேச வெத்தலைப் பாக்கு வச்சு அழைச்சாங்களா?”

“யார பார்த்துடா பூசணின்னு கூப்ட?”

“யார பார்த்துடி ஒட்டடைக் குச்சின்னு கூப்பிட்ட?”

தில்லையும், சுப்பு ரத்தினமும் இவர்களுக்காக மோதிக் கொள்ள,

“வாடி போலாம்!” எனத் தில்லையின் கைப் பற்றி இழுத்தாள் சங்கரி.

“டேய்! லேடிஸ் கிட்ட என்னடா தகறாரு!” என சுப்புவின் தோளைப் பிடித்து இழுத்தான் அருள்.

அவர்களை விலக்க முனைந்த இவர்கள் இருவரின் கைகளும் லேசாய் உரசிக் கொண்டது! தம்தனதம்தனதம்தன என பின்னணி இசைக் கேட்க, அருளும் சங்கரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தபடி பிரமித்து நின்றனர். மற்ற இருவரும் போடும் சண்டை சங்கீதமாய் கேட்க, மெல்ல சங்கரியின் வலது கையைப் பற்றிக் கொண்டான் அருள். கையோடு உடலும் சேர்த்து நடுங்க, அருளை நிமிர்ந்து பார்க்காமல் தலை குனிந்து கொண்டாள் சங்கரி.

“சங்கரி”

“ஹ்ம்ம்”

“என்னை நிமிர்ந்து பாரேன்”

முடியாது எனத் தலை அசைத்தாள் சங்கரி.

“ப்ளீஸ் சங்கரி! இந்த ஒரு முறை நான் பேசறத கேட்டுடு! அதன் பிறகு நீ என்ன முடிவெடுத்தாலும் நான் ஒத்துக்கறேன்” என உருக்கமானக் குரலில் சொன்ன அருளை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள் சங்கரி.

“இங்க ரொம்ப சத்தமா இருக்கு! அங்க ஓரமா போய் பேசலாமா?” என அருள் கேட்டதற்கு சரியென மெலிதாய் தலையாட்டினாள் பெண்.

“நீ என்ன பெரிய பருப்பாடி?”

“நீ என்ன பெரிய செருப்பாடா?” என சண்டைச் சூடுப் பிடித்துக் கொண்டிருக்க, இவர்கள் இருவரும் ஓரமாய் ஒதுங்கினார்கள்.

“சங்கரிம்மா”
 
அந்த அழைப்பில் இவள் உடல் சிலிர்த்தது. அடியே பெரிய கழுதை, அவளே, இவளே எனக் கேட்டுப் பழகி இருந்தவளுக்கு சங்கரிம்மா எனும் அழைப்பு உயிர் வரை ஊடுருவியது. கண்கள் கலங்கும் போல் இருக்க, இன்னும் நன்றாகக் குனிந்து கொண்டாள்.

“உன் பின்னாடி சுத்திட்டு இருக்கற பார்த்து நான் ஒரு பொம்பள பொறுக்கின்னு நெனைச்சிருப்ப! நான் வயசுக்கு வந்ததுல இருந்து, உன் ஒருத்திய தவிர வேற யார் பின்னாடியும் போனது இல்ல சங்கரி! என்னமோ உன்னை அவ்ளோ பிடிக்குது எனக்கு! முதன் முதலா பஸ் ஸ்டாப்ல வச்சுப் பார்த்தேன் உன்னை! லட்ச அழகிகள்ல நீயும் ஒருத்தின்னு கடந்து போனேன்! அடுத்த தடவை, பைக்ல வந்த நான் மழை ஈரம் சறுக்கிக் கீழ விழுந்தப்ப நமக்கென்னன்னு போகாம ஓடி வந்து உதவி பண்ண! தாவணிய கிழிச்சு என் கைக்குக் கட்டுப் போட்ட! உன் முகத்துல தெரிஞ்ச பதட்டமும், பரிவும் என்னைப் பாதிச்சிருச்சு சங்கரி! இந்தப் பரிவான முகம் பாசமா, காதலா, அன்பா நம்மள பார்த்தா எப்படி இருக்கும்னு ஏங்க ஆரம்பிச்சிட்டேன்! இது பப்பி லவ் இல்ல சங்கரி! பக்கா லவ்! பர்பெக்ட் லவ்! என்னைப் புரிஞ்சுக்கோடாம்மா! உன் கடைக் கண் பார்வை என் மேல விழாதான்னு ஒவ்வொரு நாளும் தவிக்கிறேன்! துடிக்கிறேன்! என்னோட பணம், அந்தஸ்த்துத்தான் உன்னைப் பயம் காட்டுதுன்னா, அதைலாம் உனக்காக நான் விட்டுட்டு வர ரெடியா இருக்கேன்! ப்ளிஸ் சங்கரி! என்னை ஏத்துக்கோ” என்றவனின் கண்களில் சொட்டுச் சொட்டாய் கண்ணீர் வடிந்தது.

ஏற்கனவே அவன் மேல் அன்பிருந்தும், அதை வெளிக் காட்டாமல் நடமாடிய சங்கரிக்கு, அந்தக் கண்ணீர் துளிகள், நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகளாய் தெரிந்தன! தயக்கத்தை உதறி,

“அருள்” எனக் கதறியவள், அவன் நெஞ்சில் மாலையாய் விழுந்தாள்.

“சங்கரி! என் சங்கரி” என உருகிய அருள் அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

“அடியேய்! ஊமை ஊரைக் கெடுக்கும், பெருச்சாளி பேரைக் கெடுக்கும்னு எங்கம்மா சொல்வாங்க! ஊமைக் கோட்டான் மாதிரி இருந்துட்டு, கப்புன்னு கட்டிப் புடிச்சுட்டு நிக்கற! ராஸ்க்கல்” எனும் குரல் கேட்டு பட்டென விலகினாள் சங்கரி.

அங்கே பொய்யாய் முறைத்தபடி நின்றிருந்த தில்லையைப் பார்த்து அசடு வழிந்தவள், ஓடிப் போய் தோழியைக் கட்டிக் கொண்டாள்.

“என்னடா! லவ் சக்சஸ் ஆகிடுச்சா? வாழ்த்துக்கள்” எனச் சிரித்த முகமாய் நின்றான் சுப்பு ரத்தினம்.

இவர்கள் இருவரின் காதலுக்கு முதுகெலும்பாய் இருந்தவர்கள் தில்லையும் சுப்பு ரத்தினமும்தான். வீட்டினர் அருள், சங்கரியின் காதலை எதிர்க்க, ரிஜிஸ்ட்டர் திருமணத்துக்குச் சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களும் இவர்கள் இருவர்தான்!

அருளின் பெற்றவர்கள் கோவையில் இருக்கும் ஒரு கடையை அவர் பெயருக்கு எழுதி வைத்து விட்டு, உறவை விலக்கி வைத்து விட்டனர். சங்கரியின் குடும்பத்தினரோ சங்கரி என ஒரு பிள்ளையே தங்களுக்கு இல்லையெனச் சொல்லி முழுதாய் தலை முழுகி விட்டனர். காதலிக்கும் வரை கஷ்டம் தெரியவில்லை. கல்யாணம் காமத்தை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லையே! காசு பணம் வேண்டும் என்பதையுமல்லவா கற்றுக் கொடுக்கிறது! தன்னை நம்பி வந்த மனைவியை வைத்துக் காப்பாற்ற வேண்டுமே! அதற்காகவே ரோஷத்தைப் பார்க்காமல், தந்தை கொடுத்திருந்த கோவை கடையைப் பார்த்துக் கொள்ள கிளம்பி விட்டான் அருள் தன் ஆசை மனைவியுடன்! மகன் பிறக்கும் வரை கோவைத்தான் இவர்களை அரவணைத்துக் கொண்டது! அதன் பிறகு மீண்டும் சென்னை வாழ்க்கை.

சென்னைக்கு வந்த சில வருடங்களில் சுப்பு ரத்தினத்துக்கும் தில்லைக்கும் திருமணம் என இவர்கள் இருவருக்கும் அழைப்பு வந்தது.

“பாருங்களேன்! ஒட்டடைக் குச்சியும், குண்டுப் பூசணியும் கல்யாண வாழ்க்கைல இணையறாங்களாம்!” எனத் தங்கள் கல்லூரிக் காலக் கலாட்டாவைப் பற்றிப் பேசிச் சிரித்தார்கள் இவர்கள் இருவரும்.

திருமணத்துக்குப் போய் விட்டு வந்த அருள், அரசியல்வாதி சவகாசம் வேண்டாமென மெல்ல விலகிக் கொள்ள, மற்றக் குடும்பத் தலைவிகள் போல சங்கரிக்கும் தோழி, நட்பு எல்லாம் தூரப் போய் விட்டது! சில தடவைகள் வெளியே சந்தித்திருக்கிறார் தில்லையை! குட்டி ரஞ்சனியோடுத்தான் வருவார் தில்லை! நிறையப் பேசி இருக்கிறார்கள். சிரித்திருக்கிறார்கள். குடும்பக் கதைகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்! ஆனாலும் அடிக்கடி இது போல சந்திப்பெல்லாம் சாத்தியமாய் இருக்கவில்லை. அதன் பிறகு தில்லையின் இறப்புக்குத்தான் சென்றிருந்தார் சங்கரி! அங்கே கதறிக் கொண்டிருந்த குழந்தை ரஞ்சனியை நெருங்கியவர், அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டார்.

“அத்தே!!!” என ஏங்கி அழுதாள் அந்தக் குட்டி!

அவர் அருகே வந்த ரங்க நாயகி பட்டெனக் குழந்தையை வாங்கிக் கொண்டார்! அழுது கொண்டிருந்தவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே முழுதாய் மூடி வைக்கப்பட்டிருந்த தன் அக்காவின் உடலருகே அமர்ந்து கொண்டார். ரங்க நாயகியின் கண்களில் கண்ணீர் அதன் பாட்டிற்கு வழிந்தபடி இருந்தது. அதற்கு மேல் சங்கரி ரஞ்சனியை நெருங்கவில்லை. அந்தக் குழந்தை தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள் எனத் தெரிந்து கொண்டவருக்கு, எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் எனும் எண்ணம் மட்டுமே!

“ஓய் மாமியார்! காலங்காத்தால உக்காந்துட்டே இப்படித் தூங்கினா குடும்பம் விளங்கிடும்! ஓடிப் போய் எனக்கொரு காபி போட்டுட்டு வாங்க! போங்க! மண்ட வலிக்குது! அப்படியே உங்க மகன் கிட்ட சொல்லி வைங்க, என்னை டச் பண்ணக் கூடாதுன்னு! இத்தனை நாளா மஞ்சுமல் பாயா இருந்துட்டு படார்னு ரஞ்சுமல் பாயா மாறி என் மேல பாயப் பார்க்கறான்! குடும்பக் கட்டுப்பாடு பண்ணி விட்டிருவேன் பார்த்துக்கோங்க! இவனையெல்லாம் சகிச்சுட்டு என்னால இந்த வீட்டுல இருக்க முடியாது! நான் போறேன் எங்கப்பன் வீட்டுக்கு! நாளைக்கு டைவோர்ஸ் பேப்பர் வரும்! அந்த சகதிய(சகதிதான் சக்தி இல்ல) சைன் போட்டு விடச் சொல்லுங்க!” எனக் காட்டுக் கத்தாய் கத்த, உள்ளே வந்து கொண்டிருந்த அமைச்சரும் அவர் மனைவியும் திகைத்துப் போய் நின்றார்கள்.



(உயிராவாயா???)

(சக்திக்கு ரோமான்ஸ் வைப்பன்னு பார்த்தா முத்திப்போன அவன் அப்பனுக்கு வச்சிருக்கன்னு யாரும் சொல்லக் கூடாது!!! அவரும் ஆணல்லவா!!!!!!! அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்)
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 15)


உண்மையிலேயே அருள் & சங்கரி லவ், பப்பி லவ் கிடையாது தான், பக்கா லவ், பர்பெக்ட் லவ் தான். ஆனா, அந்த லவ்வை அவங்க பையன் சக்திக்கு ஏன் கொடுக்கலை..?
அப்படின்னா இது டுபாக்கூர் லவ்வோ...? ஓ மை காட்..! இது சகதிக்கு வந்த சோதனை யா ?
இல்ல எங்களுக்கு வந்த
வேதனை யா ?


அப்படி என்ன தான் நடந்துச்சுன்னு சொல்லுங்களேன். ஆனாலும் எங்க பொறுமையை ரொம்ப சோதிக்கிறிங்க, இப்படியே போனிங்கன்னா நாங்க எருமை மேய்க்க போயிடுவோம் பார்த்துக்கங்க சொல்லிட்டோம்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
கடைசி வரி வாசிக்கவும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ரஞ்சனி சக்தி காலையில் என்ன கோபம்.
 
சஸ்பென்ஸ் என்ன னு தெரிஞ்சிக்கலாம் னு வேலையை விட்டுட்டு ஓடி வந்தா, அநியாயத்துக்கு flashback ரீல் ஓட்றாங்களே நிஷ்லிங்

அடுத்த எபிலயாவது தெரியுமா இல்லயா

இவ வேற டிவோர்ஸ் கேட்கறா

என்ன தான் நடக்குது இந்த கதையில
 
😍😍😍

சின்ன சிறுசுங்களுக்கு கல்யாணம் நடந்துருக்கு, அடுத்து நடக்க போற சம்பவத்துக்கு ஒரு மஜாவான பாட்டு போடலாம்னு ஓடி வந்தா..😑😑😑

நேத்து வர நடந்த எல்லாம்
தெய்வம் செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு வெச்சா
தீந்துவிடும் வேதனை

 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
🙄🙄🙄🙄🙄 பார்ட்னர் க்கு விளக்கம் கிடைக்கும் ன்னு வந்தா
அருள் சங்கரியோட லவ்ஸ் சீனைப் போட்டு எங்களை ஏமாத்திட்டீங்களே வனிம்மா😔😔😔😏😏😏😏😏
வைஸூ மைண்ட் வாய்ஸ் 👇 👇
 
ஆக சஸ்பென்ஸ் இப்போ உடையாது 😬😬😬 நல்லது🤷🤷🤷 தில்லை சாவு தான் இவள மாத்திட்டோ 😒 இந்த ரஞ்சு வேற இப்போ என்னமோ சொல்லிட்டு இருக்க 😲 உண்மையாவா சக்தி 🤭🤭🤭
 
நல்ல நேரம் பார்த்திங்கம்மா flash back open பண்ண 🙄🙄

நைட்டு partnership என்னாச்சு தெரியல🤔🤔 காலங்காத்தால டைவர்சுன்னு கலவரத்த கூட்டுது புது மருமக 😇😡😡 மாமியாருக்கு flash back ஓடுது 😄😄
 
எல்லாரும் சண்டை நடக்குமா ரொமான்ஸ் நடக்குமா ன்னு ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருந்தா பெரிய பல்பா குடுத்துட்டாங்க சிஸ் 😂😂😂😂

பையன் மாதிரி இல்லை அப்பா நிஜமாவே காதல் மன்னன் தான்..... 😇

இந்த ஒட்டடைக் குச்சி அமைச்சர் மேலயும் சந்தேகம் வருதே 🤨🤨🤨🤨 என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔 எப்படி தில்லை இறந்தாங்க 🧐🧐🧐
 
Back
Top