VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்
கதைல இந்தப் பாட்டு வரல. ஆனா பாட்டுக்கு முன்ன வரும் வசனம் இருக்கு. வரும்.வரும்.வரும்னு வரும் அந்த வசனம். யூடியூப்ல தேடனேன் கிடைக்கல! இந்தப் பாட்டு அவ்ளோ நல்லா இருக்கும். ஒரு வித சோகம் வந்து தாக்கிப் போகும். கேட்டுப் பாருங்களேன். குணா படத்துல எல்லாரும் கண்மணி பாட்டக் கேட்டா, நான் இந்தப் பாட்டத்தான் கேப்பேன்.
அத்தியாயம் 16
“மச்சி! மணியாச்சிடா! அப்பா வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு! கிளம்பலாம்டா!” என நண்பன் ரவீந்திரனை உசுப்பினான் சக்தி அமரன்.
“நைட் ஸ்டில் யங் மச்சி! நீ சக்தியா இல்ல சப்பாணியா? வீட்டுக்குப் போனும் ஆத்தா வைய்யும்னு பொலம்பிட்டு இருக்க! ம்ப்ச்! சுத்திலும் பாருடா! அந்தப் பொண்ண பாரு தொப்புள காட்டிட்டு எப்படி ஆடுதுன்னு! இந்தப் பொண்ண பாரு கைய மேல தூக்கி எப்படி சைட் போஸ் குடுக்குதுன்னு! தோ, தோ பாரேன் மினி ஸ்கேர்ட்ல வாழத்தண்டுக் கால! அச்சோ! அச்சோ! பிரம்மன் ஒரு கலாரசிகன்டா! பொண்ண படைக்கறப்ப மட்டும், போதை போட்டுருப்பான் போல!” எனக் கிறக்கமாகச் சொன்னான் இவன்.
நண்பன் காட்டிய திசையெல்லாம் இவன் பார்வையும் ஆர்வமாய் போனது.
அந்த நேரம் டீ.ஜே சிஸ்டத்தில் பாட்டு ஒலித்தது.
“பெண்கள் நாலு வகை
இன்பம் நூறு வகை வா!!!”
“போட்டான் பாரேன் சிட்டுவேஷன் சாங்க!”
“மச்சி! அப்பாவுக்குப் புடிச்ச பாட்டுடா! இந்தா போனு! நாலு ஸ்டேப் போடறேன்! ரெக்கார்ட் பண்ணு! ரீல்ஸ் ஏத்திடுவோம்” என உற்சாகமாக ஆடும் இடத்துக்குப் போனான் சக்தி.
ஒரே கூத்தும் கும்மாளமுமாக நேரத்தைக் கடத்தியவர்கள், ஒரு வழியாக அவ்விடத்தை விட்டுக் கிளம்பினார்கள். சக்தி, ரவீந்திரன் மற்றும் இன்னும் இரண்டு நண்பர்களும் அன்று பப்புக்கு வந்திருந்தார்கள். நண்பர்களில் சக்தி கொஞ்சம் தெளிவாக இருக்க, அவன்தான் காரை ஓட்டினான். கார் கண்ணாடியைத் திறந்து வைத்துக் கொண்டு, கத்திப் பாடியவாறு பயணித்தனர் நண்பர்கள் நால்வரும்.
“மச்சி! மச்சி! வருதுடா”
“என்னடா?”
“வாந்தி!!”
“அட நாசமாப் போனவனே!” எனக் கத்திய சக்தி, காரைச் சாலை ஓரமாக நிறுத்தினான்.
இறங்கி ஓடிய ரவீந்திரன், உவ்வேக் என வயிற்றில் உள்ளதை எல்லாம் சாலை ஓரமாகக் காலி செய்ய, தண்ணீர் பாட்டிலுடன் இறங்கினான் சக்தி. பின்னால் அமர்ந்திருந்த இருவரும் கூட தள்ளாடியபடி இறங்கினார்கள். நண்பனுக்கு முகம் கழுவி விட்டுத் தண்ணீரைப் புகட்டினான் சக்தி அமரன்.
“ஓசி குடின்னு ஓவரா குடிச்சா இப்படித்தான் மச்சி ஆகும்” எனக் கலாய்த்தான் இவன்.
“டேய் போடா! மாத்தி மாத்தித்தானே வாங்கித் தந்துக்கறோம்! ஓசி குடின்னு சொல்வியா என்னை?” என நண்பன் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் ரவீ.
சிரிப்புடன் நால்வரும் அப்படியே குளிர் காற்றை அனுபவித்தபடி ஓரமாய் நின்றார்கள். அந்த நேரம் பைக்கில் வந்த இருவர், இவர்களை நோக்கி வந்தார்கள். யாரென்பது போல பார்த்தார்கள் நண்பர்கள் நால்வரும்.
“ரோட்டுல என்னங்கடா ஆட்டம்?” என அதில் ஒருவன் கேட்க,
“ஓரமாத்தானே நின்னுட்டு இருக்கோம்! என்ன ஆட்டத்தப் போட்டத பார்த்தீங்க?” எனக் கேட்டான் நண்பர்களில் ஒருவன்.
“சரக்கடிச்சிட்டு ரோட்டுல நின்னு வம்பு பண்றீங்களா?”
“டேய்! பார்த்து பேசுடா! யாருடா வம்பு பண்ணாங்க?” என எகிறினான் ரவீ.
பளாரென அவனுக்கு ஓர் அறை விழுந்தது. மற்றவர்கள் அதிர்ந்து போக, சக்தி அடித்தவனை நோக்கிப் பாய்ந்தான். அவனும் தாக்குதலுக்குத் தயாராக இருக்க, அடிதடி ஆரம்பித்தது அங்கே. அவர்கள் இருவர், இவர்கள் நால்வர். போதையில் இருந்ததால், சரமாரியாக அடி விழுந்தது நண்பர்கள் நால்வருக்கும். அந்த நேரம்தான் போலீஸ் ஜீப் வந்தது.
இறங்கி வந்த இன்ஸ்பெக்டரை பார்த்து இந்த இருவரும் சல்யூட் வைக்க, பிறகுதான் தெரிந்தது அவர்கள் மஃப்டியில் வந்த போலீசென! சக்தி தாங்கள் எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை எனச் சொல்லியும், அந்த இன்ஸ்பெக்டர் காது கொடுத்துக் கேட்கவில்லை. நண்பர்கள் நால்வரும் நாயைப் போல ஜூப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள்.
ஸ்டேசனில் வைத்து, சட்டை பேண்ட்டையெல்லாம் உறுவிப் போட்டு, லத்தியால் பொழந்து கட்டி விட்டார்கள்.
“சார்! நாங்க ஒரு தப்பும் செய்யல” என எகிறிய சக்திக்கு மட்டும் இன்னும் பலமாய் கிடைத்தது பூசை.
இவர்கள் சொல்ல வந்ததைக் காது கொடுத்துக் கேட்காமல், வேண்டுமென்றே அடித்துத் துவைத்தார்கள். சக்திக்கு அப்போதே ஏதோ சரியில்லை எனத் தோன்றி விட்டது. ஜட்டியோடு நின்றது வேறு அவமானமாய் இருந்தது. அங்கே கொண்டு வரப் பட்டிருந்த பலானத் தொழில் செய்யும் பெண்கள் சிலர் இவனைப் பார்த்து விரசமாகப் பேச, காது கொண்டு கேட்க முடியவில்லை இவனால். பிறந்ததில் இருந்து தங்கத்தட்டில் வைத்துக் தாங்கப்பட்ட சக்தி, தகரத்துக்கும் கீழாய் நடத்தப்பட்டான் அங்கே.
அருள்மணி அங்கே வரும் வரை, பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான் அவன். தந்தை வந்ததும் முதலில் வீட்டுக்குப் போவோம் எனத்தான் இருந்தது அவனுக்கு. ஆனால் இந்த விஷயத்தை சும்மா விட்டு விடக் கூடாது எனச் சங்கல்பம் செய்து கொண்டான். குற்றமென எதையும் செய்யாதவர்களை இந்தப் பாடு படுத்துவார்களா எனக் கருவினான். காரில் ஏறி அமர்ந்ததும்தான் அவனது போன் போலிஸ் ஸ்டேஷனில் இருப்பதை உணர்ந்தான் சக்தி. அதை எடுக்க உள்ளே போகும் முன்னே, அவன் அருகே போனோடு வந்தார் ஏட்டு ஒருவர்.
“தம்பி! அந்தப் பக்கமா போய்டலாம் வாங்க” என மறைவாக ஓரிடத்தைக் காட்டினார்.
இவனும் அவரோடு போனான்.
“தம்பி! முக்கியமான ஒரு விஷயம் சொல்லனும்!” என்றவர் தலையைச் சொறிந்தார்.
வாலட்டை வெளியே எடுத்தச் சக்தி உள்ளே இருந்த பணம் மொத்தத்தையும் அப்படியே அவர் கையில் அள்ளி வைத்தான். வாயெல்லாம் பல்லானது அவருக்கு.
“உங்கள கட்டம் போட்டுத்தான் தூக்குனாங்க தம்பி”
“ஓஹோ!”
“தூக்க சொன்னது நம்ம அமைச்சர் சுப்பு ரத்தினம்தான்”
முகம் இறுகிப் போனது இவனுக்கு.