எபி 17

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

அத்தியாயம் 17



அலுவலகத்தில் வேலை முடித்து மெதுவாகவே வீட்டுக்குப் புறப்பட்டாள் தில்லை. அவள் அப்பாவின் கிரானைட் பேக்டரி இன்னொரு ஊரில் இருந்தாலும், அதன் ஷோ ரூமும் அலுவலகமும் சென்னையில்தான் இருந்தது. காலேஜ் படிப்பு முடிந்ததும் தந்தையுடன் சேர்ந்து அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தவள், அந்தத் துறை ஈர்த்து விட அதிலேயே ஒன்றி விட்டாள்.

என்னவோ மற்றப் பெண்களைப் போல திருமணம், குழந்தைக் குட்டி என மனம் செல்லவில்லை இவளுக்கு. சிறு வயதில் இருந்தே பருமனாக இருந்தவளை எல்லோரும் கேலி, கிண்டல் செய்து பெரிய குறையைப் போல அவள் மனதில் உருவேற்றி விட்டிருந்தனர். இவளது தங்கை வேறு இவளை விட அழகாய், சிக்கென்ற உடற்கட்டுடன் இருக்க, இவளுக்கு நிரம்பவே தாழ்வு மனப்பான்மை. தங்கை ரங்க நாயகி அழகழகாய் உடுத்திக் கொண்டு இவள் முன்னே அன்ன நடையிடும் போதெல்லாம் உள்ளுக்குள் உடைந்து போவாள் தில்லை நாயகி. அக்கா தங்கை இருவரும் குணத்தால் வேறு வேறாய் இருந்தாலும் பாசப் பிணைப்புடன்தான் வளர்ந்தார்கள். பெரியவளுக்கு அறிவைக் கொட்டிக் கொடுத்த இறைவன், சின்னவளுக்கு அழகைக் கொட்டிப் படைத்திருந்தான்.

காலேஜீல் படிக்கும் போது இவளுடன் சேர்ந்து படித்த பையன் ஒருவன் மேல் ஆசைப்பட்டாள் தில்லை. அவனும் அப்படி ஒன்றும் பேரழகன் எல்லாம் இல்லை. நன்றாகப் படிக்கக் கூடியவன். பார்க்க சுமாராய் இருந்தாலும், படிப்புத் தந்த களை இருந்தது அவன் முகத்தில். இவளுக்காக சங்கரிதான் தூது போனாள்.

அவனோ,

“அந்தக் குண்டு பீப்பா கண்ணாடில உடம்ப பார்க்கவே மாட்டாளா! உப்பிப் போன கன்னத்துல கண்ணு எங்க இருக்குன்னு தேடவே ரெண்டு நாள் ஆகும்! அவளுக்கு என் மேல கண்ணா!! கேக்கவே சகிக்கல! இனி காதல், கருமாந்திரம்னு என் பின்னாடி அவளுக்காக வந்த, அடி வெளுத்துருவேன். ச்சே!! நீ பேசக் கூப்பிட்டதும், நான் கூட உனக்குத்தான் என்னைப் பிடிச்சிருக்கோன்னு நெனைச்சு என்னென்னவோ கனவுலாம் கண்டுட்டேன்!” என எரிந்து விழுந்தான்.

“தில்லை கண்ணாடிப் பார்த்தாலான்னு கேக்கறியே, முதல்ல நீ அது முன்னாடி நின்னு உன்னை உத்துப் பார்த்திருக்கியா? உன் அழகுக்காக அவ உன் மேல ஆசை வைக்கல! அறிவுத் திறனுக்காக ஆசை வச்சா! அறிவு ஒருத்தனுக்குள்ள அன்ப விதைக்கனும்! ஆணவத்த இல்ல! நீயெல்லாம் அவ கால் தூசிக்கு சமம்டா! சீச்சீ! போடா போடா! ஆக்கங் கெட்ட கூவ!” எனத் தாறுமாறாகத் திட்டி விட்டு நேராகத் தோழியிடம் வந்தாள்.

படபடவென நடந்ததை எல்லாம் சங்கரி சொல்லி விட, நொருங்கிப் போன மனதை மறைத்து மெல்லியச் சிரிப்பொன்றை மட்டும் பதிலாய் உதிர்த்தாள் தில்லை. சுமாரான ஆணுக்கே தன்னைப் பிடிக்கவில்லையே என மனம் உடைந்து போக, அதற்கு மேல் ஆசை, காதல் என யார் மேலேயும் மனதை விடவில்லை தில்லை.

திருமண வயது வந்ததும், மாப்பிள்ளைப் பார்த்தார்தான் இவளது தந்தை. கட்டிக் கொள்ள சம்மதித்தவர்கள், வரதட்சணையாய் நிறைய கேட்க தில்லைக்கு மனம் ஒப்பவேயில்லை.

“அப்பா! எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்க ஆசையில்லப்பா! நம்ம பிஸ்னஸ கத்துக்கறேன்! ஆம்பள பையன் இல்லைன்னா என்ன! என் சாம்ராஜ்யத்தக் கட்டிக் காக்க என் பெரியப் பொண்ணு இருக்கான்னு சொல்வீங்களேப்பா! அதுக்கான பயிற்சிய எனக்குக் குடுங்கப்பா! சராசரி பொண்ணுங்க மாதிரி, கல்யாணம், குடும்பம், பிள்ளைக் குட்டின்னு என்னை ஒரு வட்டத்துக்குள்ள அடைக்காதீங்கப்பா! ப்ளீஸ்”

“அதது அந்தந்த வயசுல நடக்கனும் தில்லை! கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் புருஷனோட பிஸ்னஸ பாரு! யாரு வேணாம்னா! உனக்கு அப்புறம் உன் தங்கை வேற இருக்கா! எங்க கடைமைய நாங்க சரியா செய்யனும்ல!” என நடுவே வந்தார் தில்லையின் அன்னை.

“அவளுக்கு செய்யனும்னா முதல்ல செய்ங்கம்மா! எனக்கு இஷ்டமில்ல!” எனத் திடமாய் நின்ற மகளை பெற்றவர்கள் இருவரும் வருத்தமாய் பார்த்தார்கள்.

சின்னவள் வேறு இன்னும் காலேஜீல் படித்துக் கொண்டிருக்க, அந்தப் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வந்தது. அவ்வப்பொழுது அவள் அன்னை மனதைக் கரைக்க முயன்று கொண்டே இருந்தார். ஆனாலும் மசியவில்லை இவள். இப்படியே சில வருடங்கள் போக, சின்னவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அன்று மாப்பிள்ளை வீட்டினர் வருவதாக இருக்க, தில்லை நேரம் கழித்தே வீட்டுக்குக் கிளம்பினாள். வீட்டின் வெளியே இன்னும் சில கார்கள் நிற்க,

‘மாப்பிள்ளை வீட்டுல இருந்து இன்னும் கிளம்பலையோ! அப்பாட்ட ஒரு போன் போட்டுக் கேட்டுட்டு வந்திருக்கலாம்! இப்போ அவங்க முன்னுக்குப் போய் சிரிச்சு வேற வைக்கனும்’ என நொந்தபடியே காரை விட்டு இறங்கினாள்.

அவளுக்குப் பக்கவாட்டில் இருந்து பேச்சு சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தாள் தில்லை. ரங்க நாயகியும், அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளையும் தோட்டத்தில் பேசிக் கொண்டிருந்தனர். யார் மாப்பிள்ளை என இவளிடம் சபேசன் சொல்லித்தான் இருந்தார். அதை கேட்டதும் இவள் முகத்தில் புன்னகை மலர்ந்து நின்றது. ஆர்வமாய் இருந்ததுதான் அவனைப் பார்க்க! இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை இவள். தங்கை அவனுடன் சந்தோஷமாய் இருப்பாள் என்பது மட்டும் நிச்சயமாய் தெரிந்தது தில்லைக்கு.

நிறைய மாற்றங்கள் அவனிடம்! ஒல்லியாய் இருந்த தேகம் கட்டுமஸ்த்தாக மாறி இருந்தது. கலர் கூட கொஞ்சம் தூக்கலாகி இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, பேரழகாய் தெரிந்தான் அவன், சுப்பு ரத்தினம்.

“நம்ம பிஸ்னசுக்கு அரசியல்வாதி ஒருத்தன் மருமகனா இருந்தா நல்லதுதானேம்மா! அவனோட பதவிய வச்சு சில, பல காரியங்கள நடத்திக்கலாமே! அதோட பையன் நல்லா முன்னேறிட்டே வரான்! கொஞ்சம் நாம கை குடுத்துத் தூக்கி விட்டா, ஆஹா ஓஹோன்னு வந்திடுவான் கண்ணு!” என அவனைப் பற்றி விவரித்திருந்தார் சபேசன்.

யாரோ விடாமல் தன்னைப் பார்ப்பது போல இருக்க, சட்டென திரும்பிப் பார்த்தான் சுப்பு ரத்தினம். தில்லையைப் பார்த்தவனின் முகம் மலர்ந்து போனது. வேகமாய் அவள் அருகே வந்தவன்,

“ஏ பூசணி! எப்படி இருக்க நீ? அடிக்கடி உன்னை நினைச்சிப்பேன், கல்யாணமாகிப் புள்ள குட்டின்னு இருப்பியோன்னு. குழந்தை உன்னை மாதிரியே குட்டிப் பூசணியா இருக்கும்னு கற்பனைக் கூடப் பண்ணிருக்கேன்” எனச் சொல்லி ஆர்ப்பாட்டமாய் சிரித்தான்.

மெலிதாய் புன்னகைத்தாள் தில்லை நாயகி.

“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை சார்!” என்றவள், அவர்கள் அருகே வந்து நின்ற தங்கையைக் காட்டி,

“இவளோட அக்கா நானு! வெல்கம் டூ அவர் ப்பேமிலி” என முறுலித்தாள்.

அவளது குண்டுக் கன்னங்களிலும், சிவந்து தடித்துத் தெரிந்த உதடுகளிலும் சில விநாடிகள் அதிகமாய் நிலைத்தது அவன் பார்வை.
 
“கல்யாணமாச்சா தில்லை?” எனக் கேட்டவனின் குரலில் ஆர்வம் இருந்தது.

இல்லையெனத் தலையாட்டியவளைப் பார்த்து,

“என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறயா தில்லை?” எனப் பட்டெனக் கேட்டான் சுப்பு ரத்தினம்.

அக்கா தங்கை இருவருமே அதிர்ந்து போனார்கள்.

“உளறாதடா ஒட்டடைக் குச்சி!” என ஆத்திரப்பட்டத் தில்லை, விடுவிடுவென வீட்டிற்குள் நுழைந்து தனது அறைக்குள் தஞ்சமடைந்தாள்.

படபடவென வந்தது அவளுக்கு. இது வரை தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைத்திருந்தவளின் உள்ளம் ஓவென ஆர்ப்பரித்தது. சுப்புவின் கண்களில் தெரிந்த ஆர்வமும் ஆசையும் இவளைப் பாடாய் படுத்தின.

“என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறயா தில்லை?” எனும் வார்த்தைகளே மீண்டும் மீண்டும் காதுக்குள் வந்து மோதின.

அருள்மணியின் தோழன் என்பது மட்டுமே இவள் மனதில் பதிந்திருந்தது இவ்வளவு நாட்களாய். அவனோடு சண்டைப் போட்டிருக்கிறாள். வம்பு வளர்த்திருக்கிறாள்! பேசி சிரித்திருக்கிறாள். ஆனால் ஏற்கனவே பட்டிருந்த சூட்டுக் காயத்தால் இந்தப் பூனை எந்தப் பாலையும் ஆர்வமாய் நோக்குவதை விட்டிருந்தது! சுப்பு ரத்தினம் என்பவன் தோழனுக்கும், எதிரிக்கும் நடுவே நிற்கும் ஒரு மனிதன் என்றுதான் இது வரை இருந்திருக்கிறாள்.

அவளும் பெண்ணல்லவா! சுப்பு ரத்தினம் கேட்ட வார்த்தைகள் அவளுக்குள் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தின.

“தங்கச்சிக்குப் பார்த்த மாப்பிள்ளை அவன். வேணாம்டி! வேணாம்! ஏதோ, ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கவும், ஆர்வத்துல கேட்டுட்டான்! இப்போ கூட, அதை நெனைச்சு நொந்துருப்பான் அந்த ஒட்டடைக் குச்சி! மனச அலைபாய விடாதே தில்லை! ஓம் முருகா சரணம்! ஓம் முருகா சரணம்” என முனகிக் கொண்டே கட்டிலில் சுருண்டுப் படுத்துக் கொண்டாள் தில்லை நாயகி.

அன்றிரவு சாப்பிட்டு முடித்ததும், தில்லையைப் பேச அழைத்தார் சபேசன். இவளும் அமைதியாக ஹாலில் வந்து அமர்ந்தாள். அங்கே ரங்க நாயகியும், இவள் அம்மாவும் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தார்கள்.

“கண்ணு!”

“என்னப்பா?”

“இன்னிக்கு வந்திருந்தார்ல சுப்பு ரத்தினம்..”

“ஹ்ம்ம்”

“அவருக்கு உன்னைத்தான் பிடிச்சிருக்காம்”

உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாய் தரையை வெறித்தாள் தில்லை.

“தங்கச்சிய பார்க்க வந்தவருப்பா அவரு!”

“சின்னவளுக்கு ஆயிரம் மாப்பிள்ளை கியூ கட்டி நிப்பாங்க! ஆனா உனக்கு..” எனத் துக்கமாய் ஆரம்பித்த மனைவியை ஒற்றை முறைப்பால் அடக்கினார் சபேசன்.

“பொண்ணுப் பார்க்கத்தான்மா வந்தாங்க! நிச்சயம் பண்ணிக்க இல்ல! நீ வர கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் பொண்ணும் மாப்பிள்ளையும் பேசிப் பார்க்கட்டும்னு தோட்டத்துக்கு அனுப்பினோம்! அந்த நேரத்துல நீ வீட்டுக்கு வந்ததும், அவர் உன்னைப் பார்த்ததும், பழைய நேசம் மறுபடி துளிர் விட்டதும், எல்லாமே தெய்வ சங்கல்பம்தான்மா”

“பழைய நேசமா?” என அதிர்ந்தாள் இவள்.

“அப்படித்தான்மா என் கிட்ட தனியா பேசனப்போ சொன்னாரு! காலேஜ் டைம்லயே உன்னைப் பிடிக்குமாம்! ஆனா அதை காதல்னோ, நேசம்னோ யோசிச்சுப் பார்க்கற அளவுக்கு அவருக்கு அறிவு இல்லையாம். இவ்ளோ நாள் அரசியல், சுய முன்னேற்றம்னு இருந்தவருக்கு உன்னை மறுபடியும் பார்த்ததும் விட்டுட முடியும்னு தோணலியாம்! உங்க மகள என் கிட்ட குடுத்துடுங்க மாமா! கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துப்பேன்னு கெஞ்சறாருமா! என் மக முடிவுத்தான் என் முடிவுன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டேன்” என்றவரின் குரலிலும் மகள் சம்மதம் சொல்லி விட்டால் நன்றாக இருக்குமே எனும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

தங்கையை நிமிர்ந்து பார்த்தாள் தில்லை. அவள் முகம் அழுகையில் சிவந்து கிடந்தது.

“வேணாம்பா! ரங்கத்துக்கு அவர பிடிச்சிருக்கு போலிருக்கு”

“அவள பத்தி நீ கவலைப்படாதே! நீ முதல்ல இந்த வாழ்க்கையை ஏத்துக்க! ஆசையா விரும்பிக் கேக்கற பையன்! நல்லா வச்சிப்பாரு உன்னை! ஒருத்தி பட்ட மரமா நிக்க, இன்னொருத்திக்கு வாழ்க்கை அமைச்சுக் குடுக்கப் போறோமேன்னு உறுத்திட்டே இருந்தது! இப்போத்தான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு! தயவு செஞ்சு எங்களுக்கு மோட்சத்தைக் குடுடி தில்லை” என அழுது விட்டார் இவள் அம்மா.

இவளுக்கும் கூட கண்களில் கண்ணீர் வழிந்தது!

‘எதிரிகள்/கெட்டவர்கள் பிறப்பதில்லை! உருவாக்கப்படுகிறார்கள்’



(உயிரானாய்!!!)
 
Last edited:
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 17)


அப்படின்னா... யார் எதிரி ? யாரு உருவாக்கினாங்க...?
சுப்பு ரத்தினம் ரங்கநாயகியை உருவாக்கினானா ? இல்லை, ரங்க நாயகி சுப்புவை உருவாக்கினாளா...? இல்லை, ரெண்டு பேருமே கூட்டு களவானியா இருந்து, தில்லையை காரியம் முடிஞ்சதும் போட்டுத் தள்ளிட்டாங்களா...? அதே பஞ்சதந்திரத்தைத்தான் இன்னைக்கு ரஞ்சனியும் சக்தி அமரனும் கையில எடுத்திருக்காங்களா...?
ஏன்னா, சுப்பு ரத்தினம் பக்கா அரசியல்வாதியாச்சே, அவன் கிட்ட நியாயம், தர்மம், ஈவு, இரக்கம், பாசம், நேசம், காதல், நேர்மை எதையும் எதிர் பார்க்க முடியாது. அவன் கண்ணுக்குத் தெரிஞ்சதெல்லாம் பதவி ஆசை மட்டும் தானே..!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் சுப்புக் கொரங்கே உன்னை யெல்லாம் 😬😬😬😬😤😤😤😤 திட்டம் போட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு செஞ்சானா இல்லை வேற ஏதாவது காரணமா?
தில்லையோட வாழ்க்கைல கும்மியடிச்சிட்டானே.
 
ரங்கா தானா?. சுப்பு விசாரணை பண்ணிட்டு வந்த இருக்க வேண்டும். தில்லை பாவம்.
 
Ithu thappu thana.. thangaye pakka vandhuttu... Ava azhuthuttu vera nikkira... Epdi akka va samathaanam panranga😬😬😬 rendum koottu kalavaniya.. ranga and Subbu🤔🤔 தில்லை தான் பாவம் ☹️

Subbu ean ipdi pannanum... Ranga va kattunalum athey vasadhi avaruku varumey... Y.. thillai...🤔🤔 Athukum etho plan vachu iruparu antha aalu...😬😬 அனுதாப vote vangava😲🧐 apdi etho line naduvula வந்ததா niyabagam🤔🤔 pondatti இறந்தப்பவும் மேடை ஏறி செமயா பேசுனாருனு 🤷🤷🤷
 
😍😍😍

சுப்பு மட்டும் கெட்டவரா மாறினாரா? இல்ல ரங்காவையும் சேர்த்து மாத்திட்டாரா? ரெண்டு பேரும் சேர்ந்து தில்லையை ஏதாவது பண்ணிட்டங்களோ? அதான் ரஞ்சனி இப்படி இருக்காளோ? 🤔🤔
 
அப்ப ஆரம்பமே சுப்பு தான் போல
இதுல கூட்டு ரங்கியா
தில்லை அறிவும் தங்கச்சி
அழகும்னு சுப்பு அரசியல்வாதியாக யோசனையா
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
 
Back
Top