VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

அத்தியாயம் 18
“நீயேன்டி உம்முன்னு இருக்க! இதுல உன் தப்பு என்ன? அடுத்தவன் புருஷன வலைப் போட்டுப் புடிச்சியா? இல்ல கையப் புடிச்சு இழுத்தியா? பொண்ணுப் பார்க்க வந்துட்டு, உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுல என்ன தப்பு? நீ வேணாம்னு சொன்னா மட்டும் உன் தங்கச்சிய கட்டிடப் போறாரா என்ன? நீதான் வேணும் இல்லைன்னா கல்யாணமே வேணாம்னு சொல்லி, பிடிவாதமா கட்டிக்கிட்டாரு! நீயும் உங்கம்மா கண்ணீருக்காக ஒத்துக்கிட்ட! தாலி கட்டிப் பொண்டாட்டியாவும் ஆகிட்ட பிறகும் இந்தக் குற்றக் குறுகுறுப்பு, சோகம்னு வாழ்க்கையை கம்ப்ளீகேட் பண்ணிக்காதே! சந்தோஷமா வாழுடி!” என மெல்லியக் குரலில் கடிந்தாள் சங்கரி.
தில்லை மற்றும் சுப்பு ரத்தினத்தின் திருமண வரவேற்புக்குக் கணவன் மற்றும் மகனுடன் வந்திருந்தாள் சங்கரி. குட்டிப் பையன் சக்தி அமரனைக் கைகளில் ஏந்தி கன்னத்தில் முத்தமிட்டாள் தில்லை.
“அழகுக் குட்டிப் பையா! என் வீட்டுக்கு மாப்பிள்ளையா வரயாடா தங்கம்?” எனச் சின்னவனின் தலையைக் கோதிக் கொடுத்தாள் இவள்.
“மொதல்ல உங்கத்தைய ஒரு பொண்ண பெக்க சொல்லு! பிறகு சம்பந்தம் பேசலாம்” எனச் சொல்லி சிரித்தாள் சங்கரி.
அதற்குள் இன்னும் சிலர் வாழ்த்த வர, தோழியைச் சாப்பிடப் போகச் சொல்லி அனுப்பி வைத்தாள் தில்லை. கணவனின் உற்சாகக் குரல் கேட்க, அருகில் நின்றிருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள் இவள். பேரழகன் எனச் சொல்லி விட முடியாது என்றாலும், கம்பீரமாய் நின்றிருந்தான். பேச்சிலும், செயலிலும் ஓர் ஆளுமைத் தெரிந்தது.
தோழி சொன்ன அம்மாவின் கண்ணீருக்காகத் திருமணம் என்பது அப்பட்டமானப் பொய்யென்பது இவளது மனசாட்சிக்கு மட்டும் தெரியுமே! பாலைவனமாய் வரண்டுக் கிடந்த நெஞ்சம், அவன் ஒற்றைப் பார்வையிலும், ‘என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறயா தில்லை’ எனும் ஒற்றைக் கேள்வியிலும் பாலாறாய் பொங்கித் தளும்பி நிற்கிறதே! தனக்கு காதல், கல்யாணம், குழந்தை எல்லாம் வெறும் கானல் நீர் மட்டுமே என எண்ணியிருந்தவளுக்கு, கரும்புச் சாறாய் அல்லவா உள்ளே இறங்கி இருந்தது அவனது நேசத்தின் தித்திப்பு.
தில்லையின் பார்வையை உணர்ந்தவன், அவள் பக்கம் திரும்பிப் பார்த்தான். சட்டென வேறு புறம் திரும்பிக் கொண்டாள் தில்லை. மெல்லியப் புன்னகை முகிழ்க்க, அவளது கரத்தை இறுக்கமாய் பற்றிக் கொண்டான் சுப்பு ரத்தினம்.
“கள்ளப் பார்வை பார்க்க நான் என்ன காதலனா? கணவன்டி தில்லை! நேராவே பார்க்க உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு” எனச் சொல்லி நகைத்தான் அவன்.
இவளது குண்டுக் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயின. கீழே நின்று மகளைப் பார்த்திருந்த சபேசனுக்கும் அவர் மனைவிக்கும் அப்படி ஓர் ஆனந்தம். தன்னைப் பெண் பார்க்க வந்த சுப்பு ரத்தினத்தின் மேல் ஈர்க்கப்பட்டிருந்த ரங்க நாயகி, அக்காவின் மேல்தான் அவனுக்கு நாட்டம் எனப் புரிய, மனதைத் தேற்றிக் கொண்டு விட்டாள். அழகாய் உடுத்தி, வந்திருந்த தோழிகளுடன் அரட்டையடித்தப்படி அங்கும் இங்கும் ஓடியாடி விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டாள். தில்லையின் முன்னே, சுப்பு ரத்தினம் இவளிடம் மனதார மன்னிப்புக் கேட்டிருக்க, இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்பதைக் கருத்தில் கொண்டு சிரித்த முகமாக மன்னித்தும் விட்டாள்.
‘எனக்குன்னு அந்த ஆண்டவன் இவ்ளோ அழகான வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திருக்கான்! அன்பான பெற்றவர்கள்! பாசமானத் தங்கை! நேசம் மிக்க கணவன்! வேறென்ன வேணும் எனக்கு? இனி வாழ்க்கையை அனுபவிச்சு, ரசிச்சு வாழனும் என் புருஷனோட’ என எண்ணிக் கொண்டவள், தலை நிமிர்ந்து அழகானப் புன்னகையைக் கொடுத்தாள் கணவனுக்கு.
புகுந்த வீட்டுக்குப் போனவள் மிகச் சந்தோஷமாக வாழ்ந்தாள். சுப்புவின் பெற்றோர் மருமகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர்களது சொந்தக் கிராமத்துக்கு மூட்டை முடிச்சைக் கட்டி விட்டார்கள். இவர்கள் இருவர்தான் அந்த வீட்டில்! காதலும், காமமும் போட்டிப் போட மனைவியைக் கைகளில் வைத்துத் தாங்கினான் சுப்பு ரத்தினம். இப்படியெல்லாம் காதலை அனுபவிக்க வேண்டும் என எழுதி இருக்கவும்தான், இத்தனை நாட்களாய் சூனியமாய் இருந்ததோ வாழ்க்கை எனத் தோன்றியது தில்லைக்கு! கணவனைக் கவனித்துக் கொண்டதோடு, தந்தையின் தொழிலையும் பார்த்துக் கொண்டாள் இவள்.
ரங்க நாயகிக்கும் சீக்கிரமாய் திருமணம் செய்து விடலாம் என மாப்பிள்ளைத் தேடினார்கள். அவளோ ஒத்துக் கொள்ளவில்லை.
“ம்மா! எனக்குக் கொஞ்சம் டைம் குடுங்கம்மா! வெளிநாட்டுல போய் படிக்கனும்னு சொன்னேன்! கல்யாணம் பண்ணிக்கோன்னு ஒத்தைக் காலுல நின்னீங்க! பிறகு அதையும் விட்டுக் குடுக்கச் சொல்லிட்டீங்க! இப்போ மறுபடியும் கல்யாணம்னு வந்து நிக்கறீங்க! கொஞ்சம் வருஷம் போகட்டுமேம்மா! ப்ளீஸ்” எனக் கெஞ்சிய மகளை வாஞ்சையாய் பார்த்தார் சபேசன்.
“சரிடாம்மா! போய் படி! படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தப் பத்தி பேசிக்கலாம்!” என்ற சபேசனைக் கட்டிக் கொண்டாள் ரங்க நாயகி!
பெரிய படிப்பாளி இல்லை இவள். ஆனாலும் வெளிநாட்டில் தங்கிப் படித்தால் கெத்தாக இருக்கும் என்பது இவள் ஆசை! தோழிகள் சிலர் சிங்கப்பூர், ஆஸ்திரேலிய எனப் படிக்கப் போயிருக்க, இவளும் அது போல செல்ல ஆசைப்பட்டாள். பணத்துக்குப் பஞ்சமில்லை! அதோடு மகளுக்குச் செய்யவும் கெஞ்சத்தனமில்லை சபேசனுக்கு. ஆகவே, அமேரிக்கா புறப்பட்டாள் ரங்க நாயகி.
இத்தனை வருடம் பேச்சிலராக சுற்றிக் கொண்டிருந்த சுப்பு ரத்தினம், அடக்கி வைத்திருந்த ஆசையையும் மோகத்தையும் தில்லை மேல் திணிக்க, அவளுக்கோ வயிறு பெருக்க ஆரம்பித்தது! மகளின் மசக்கையைப் பற்றிக் கேள்விப்பட்ட சபேசனும் அவர் மனைவியும் ஜென்ம சாபல்யம் அடைந்தனர்.
சுப்பு ரத்தினமோ மனைவியைக் கொண்டாடித் தீர்த்து விட்டார். ஏற்கனவே குண்டானத் தேகம்! குழந்தை வளர, வளர பல இன்னல்களைக் கொடுத்தது தில்லைக்கு. கொஞ்சம் வேகமாய் நடந்தாலே மூச்சு வாங்கியது! ரத்த அழுத்தம் வேறு ஏறியது. அடிக்கடி மருத்துவமனையில்தான் வாசம் என்றாகிப் போனது! நல்லபடி பெற்றுப் பிழைக்க வேண்டுமே எனப் பயந்துதான் போனார்கள் சுப்பு ரத்தினமும், இவள் குடும்பமும்.
கட்சி வேலையாக அடிக்கடு சுப்பு ரத்தினம் வேறு வெளியூர்களுக்குப் போக வேண்டியது இருந்தது. அந்த நேரங்களில் தில்லையின் அம்மா இவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்வார். ஒரு வழியாய் சிவரஞ்சனியை சிசேரியன் மூலம் பெற்றெடுத்தாள் தில்லை நாயகி. குழந்தை எடைக் குறைவாய் இருந்தாள். அதோடு தில்லையாலும் எழுந்து வேலைகளைப் பார்க்க முடியவில்லை. வெளி வேலைகளக் குறைத்துக் கொண்டு, மனைவியையும் மகளையும் மாமியாரோடு சேர்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டார் சுப்பு ரத்தினம். தில்லை எழுந்து நடமாடவே சில மாதங்கள் பிடித்தது. கர்ப்பக் காலத்தின் எடையும் சேர்ந்து கொள்ள, இன்னுமே பருமனாய் ஆகிப் போனார் அவள்.