எபி 18(பார்ட் 2)

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்


“அம்மா! அம்மா! ஏன்மா அழுகறீங்க?” எனக் கேட்ட மகளை இறுக அணைத்துக் கொண்டாள் தில்லை.

“அச்சோ செல்லம்! அம்மா அழுகலடா! கண்ணுல தூசி விழுந்துடுச்சு! நீங்க தூங்குங்க கண்ணுக்குட்டி”

“ஏ நாட்டி தூசி! எங்கம்மா கண்ணுல ஏன் நீ விழுந்த! அடிச்சிருவேன் பார்த்துக்கோ” என்ற குட்டி ரஞ்சனி, எழுந்து அமர்ந்து தில்லையின் கண்களில் ஓர் அடி வைத்தாள்.

“அடியே! என்னடி பண்ணற?”

“தூசிய அடிக்கறேன்மா”

மகளின் செய்கையில் சிரிப்பு வந்து விட்டது தில்லைக்கு.

“தூசி அம்மா கண்ணுக்குள்ளல இருக்கு! அதை அடிச்சா அம்மாவுக்கும் வலிக்குமே கண்ணா” என்றவளுக்கு இன்னும் அதிகமாய் கண்களில் மழை பொழிந்தது.

அவளது இரட்டை அர்த்த வார்த்தைகள் புரியாத சின்னவள், தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“பாப்பா!”

“என்னம்மா?”

“நாம ரெண்டு பேரும் தாத்தா வீட்டுக்கே போய்டலாமா?”

“தினம் அங்கத்தானே போறோம்” என்றவள் அவளது ஃபேவரேட் ஸ்பைடர்மென் பொம்மையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“தினம் போறோம்தான்! ஆனா நைட்டுக்கு இங்க வந்திடறமே! இனி நைட்டும் அங்கயே இருந்துப்போமா?”

“நோம்மா! அப்பாவ நைட்டுத்தானே பார்க்க முடியும்! அங்க இருந்தா, எப்படி அப்பாவ பார்க்கறது?” எனக் கேட்டவள்,

“அப்பா எங்கம்மா? அப்பா வேணும்! வேணும்!” என அழ ஆரம்பித்தாள்.

அந்த நேரம் அவர்களின் அறைக் கதவு திறக்கப்பட்டது. அங்கே சுப்பு ரத்தினத்தைக் காணவும், எழுந்து புயலென அவரை நோக்கி ஓடினாள் சிவரஞ்சனி. அப்படியே அலேக்காக மகளை அள்ளிக் கொண்டான் சுப்பு ரத்தினம்.

“என் செல்ல பாப்பா கண்ணுல எதுக்கு கண்ணீர்?” எனக் கேட்டு அழுத்தமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் சுப்பு.

“த்ரீ டேய்ஸ் அப்பாவ பார்க்கல! ஐ மிச்(ஸ்) யூ அப்பா!” என்ற மகளை தூக்கிப் போட்டுப் பிடித்த சுப்பு ரத்தினம், மனைவியைப் புன்னகையுடன் ஏறிட்டான்.

கண்கள் துடைக்கப்பட்டிருந்தாலும், மூக்கிலும் முகத்திலும் தெரிந்த சிவப்பு மனைவி அழுதிருக்கிறாள் எனப் பறை சாற்றியது அவனுக்கு. சட்டெனக் கட்டிலை நெருங்கியவன், மகளை கட்டிலில் விட்டு,

“பாப்பா! பொம்மைக் கூட விளையாடுங்க!” என்றான்.

அவளும் நகர்ந்து போய் விளையாட்டில் மும்முரமாகி விட, மனைவியின் அருகே அமர்ந்தான் சுப்பு.

“என்னம்மா? என்னாச்சி? நீயும் பாப்பா மாதிரி என்னை மிஸ் பண்ணுறியா? எலெக்‌ஷன் நெருங்குதுடாமா! உட்காரக் கூட டைமில்ல எனக்கு! இந்த நேரத்துல அடிக்கடி வீட்டுக்கு வர முடியல! என் அறிவாளி பொண்டாட்டி, ரொம்ப அண்டெர்ஸ்டேண்டிங்னு நெனைச்சேனே! இல்லையா?” எனக் கனிவாகக் கேட்டபடி அவள் தோள் அணைத்துக் கொண்டான் இவன்.

ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவன் முகம் நோக்கினாள் இவள்.

“என்னம்மா?”

ஒன்றும் இல்லை என்பது போல அவள் தலையாடியது.

மெல்ல நெருங்கி அவள் காதில்,

“ரொம்ப டென்ஷனா இருக்குடி தில்லை! நீ வேணும் எனக்கு! அதான் ஓடி வந்துட்டேன் வீட்டுக்கு! உன்னால மட்டும்தான் என்னை ரிலேக்ஸ் பண்ண முடியும்! பாப்பா எத்தனை மணிக்குத் தூங்குவா?” எனத் தாபம் இழையோட யாசிப்பாய் கேட்டான் அவன்.

“இப்போ தூங்கிடுவா!” என்ற தில்லையின் குரலில் கடலளவு துயரம் இருந்தது.

“உடம்பு முடியலையா? கஷ்டப்படுத்தறனா உன்னை?” எனக் கேட்டவனின் குரலில் கரிசனம் இருந்தது.

கணவனை முன்பு போல தன்னால் மகிழ்ச்சிப்படுத்த முடியவில்லை எனப் புரிந்துதான் இருந்தது தில்லைக்கு. உடல் நலக் குறைவு, அடிக்கடி வரும் மூச்சிரைப்பு எனத் திண்டாடித்தான் போனாள். ஆசையாய் தன்னை நாடும் சுப்புவை சில சமயங்களில் பாதியில் நிறுத்தி இருக்கிறாள்! ஓர் ஆண் மகனின், அதுவும் சுப்பு ரத்தினத்தைப் போல அதீத தாபம் கொண்ட ஆண் மகனை ஆசைக் காட்டி மோசம் செய்வது அவர்களுக்கு எவ்வளவு ஏமாற்றத்தையும், கஷ்டத்தையும் கொடுக்கும் என்பது தெரிந்துதான் இருந்தது. அதுவே இவளைக் கொல்லாமல் கொன்றது!

“நல்லா இருக்கேங்க! ரஞ்சு இப்போ தூங்கிடுவா! நீங்க முதல்ல போய் சாப்பிட்டு வாங்க” எனக் கணவனை அறையை விட்டு அனுப்பியவளுக்குத் துக்கம் பொங்கி வழிந்தது.

“அம்மா! அம்மா! ஓகேவா நீங்க?” எனக் கேட்ட மகளுக்காக முகத்தைப் புன்னகையாய் வைத்துக் கொண்டாள்.

அன்றிரவு மகள் தூங்கியதும், கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்தவளுக்கு மனம் விண்டு வலித்தது. சுப்பு ரத்தினம் உறங்கியதும் குளித்து வந்தவள், மகள் படுத்திருந்த ஒற்றைக் கட்டிலில் அவளை ஒண்டியபடிப் படுத்துக் கொண்டாள்.

“எனக்கு நீ போதும் கண்ணு”

“ஹ்ம்ம் மா” எனத் தூக்கத்தில் கூட மகள் பதில் கொடுத்தாள்.

மறுநாள் ரங்க நாயகி வந்திருந்தாள் இவர்கள் இல்லத்திற்கு. அன்றைய தினம் விடுமுறை தினமாகிக் போக, தில்லை மகளுக்கு ஏ,பி,சி,டி படித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சுப்பு ரத்தினம் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தார். சித்தியைப் பார்த்ததும் படிப்பதை விட்டு விட்டுப் பாய்ந்து ஓடினாள் குட்டி ரஞ்சனி.

“சித்தி!!!!”

“ரஞ்சும்மா” எனக் கத்தியபடியே சின்னவளைத் தூக்கிக் கொண்டாள் ரங்க நாயகி.

தங்கையை நிமிர்ந்து பார்த்தத் தில்லை,

“வாடி! ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டியா?” எனக் கேட்டாள்.

“எல்லாம் ஆச்சுக்கா!”

“சரி! ரெண்டு பேரும் விளையாடுங்க! சத்தத்த கொஞ்சம் குறைச்சுக்கோங்க! உங்க மாமா இன்னும் தூங்கறாரு! நான் கொஞ்ச நேரம் சாமி ரூம்ல தியானம் பண்ணிட்டு வரேன்”

“என்ன அதிசயமா இருக்கு! அரசியல் இன்னிக்கு ஆத்துல என்ன பண்ணுது?”

“போடி குறும்பி!” எனத் தங்கையைச் செல்லமாகக் கடிந்து கொண்ட தில்லை, பூஜையறைக்குப் போய் விட்டாள்.

ரங்க நாயகியும் ரஞ்சனியும் தோட்டத்துப் பக்கம் விளையாடப் போனார்கள். அன்றைய தினம் வீட்டில் சமையல்கார அம்மா மட்டுமே இருந்தார். இவர்கள் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடினார்கள். சற்று நேரத்தில்,

“ரஞ்சு! சித்தி போய் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்! நீ இங்கயே விளையாடு!” என வீட்டுக்குள் போனாள் ரங்க நாயகி.

எதிர்ப்பட்ட சமையல்கார அம்மாவிடம்,

“பாப்பாவ கொஞ்சம் பார்த்துக்கோங்க! நான் தண்ணிக் குடிச்சிட்டு வரேன்” எனச் சொன்னாள் ரங்க நாயகி.

“சரிங்க சின்னம்மா!” என்றவர் தோட்டத்துப் பக்கம் போய் விட்டார்.

அரை மணி நேரத்தில் வீட்டில் இருந்து புகையும், கதறும் ஓலமும் வர குட்டி ரஞ்சனி உள்ளே ஓடினாள்.

“காப்பாத்துங்க! எரியுது! எரியுது!” எனச் சத்தம் பூஜையறையில் இருந்து வந்தது.

பூசையறையின் கதவுப் பூட்டி இருந்தது. என்னவோ விபரீதம் எனப் புரிந்தது குட்டி ரஞ்சனிக்கு.

“அம்மா! அம்மா! அம்மா” எனக் கதறினாள் கதவின் இந்தப் பக்கம் நின்றுக் கொண்டு.

“செல்லம்! ஓடிப்போ! ஓடிப்போ! அங்க நிக்காதே!” எனக் கூச்சலிட்டாள் தில்லை.

“அம்மா! வாம்மா! வா!” என அழுதபடியே கத்தினாள் குழந்தை!

“ஐயோ! அம்மா! எரியுதே! காப்பாத்துங்க! ஏங்க! ஏங்க!” என அவரின் ஓலம் இன்னும் வேகமாய் கேட்க, சுப்பு, ரங்க நாயகி, சமையல்கார அம்மா எல்லோரும் ஓடி வந்தார்கள்.

அதற்குள் நெருப்பு கதவைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது.

“பாப்பாவ கூட்டிட்டு வெளிய ஓடு” என ரங்க நாயகியைப் பார்த்துக் கத்திய சுப்பு ரத்தினம், அந்தக் கதவை உடைக்க முனைந்தார்.

“ஐயோ மாமா! அக்காவ காப்பாத்துங்க!” எனக் கதறினாள் ரங்க நாயகி.

“பாப்பாவ சேஃப் பண்ணு! போ!” எனக் கர்ஜித்தவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு பிள்ளையை இழுத்துக் கொண்டு வெளியே ஓடினாள் ரங்க நாயகி.

சமையல்கார அம்மா அதற்குள் தீயணைப்புப் படைக்குப் போன் போட்டிருந்தார், அவரோடு சேர்ந்து பாத்ரூமில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைத்தார் சுப்பு. தீ வேகமாக பூசையறையில் இருந்து வெளியே பரவ ஆரம்பித்தது.

“கண்ணு! தில்லை! தில்லை” எனக் கத்தி அழுதபடியே தண்ணீரை வாரி வாரி ஊற்றினார் சுப்பு.

உள்ளே இருந்து சத்தமே வரவில்லை!

“தம்பி! நெருப்புப் பரவுது! வெளிய வாங்க! வாங்க!” என அவரை இழுத்தார் அந்த சமையல்கார அம்மா!

“ஐயோ! என் பொண்டாட்டிம்மா! என் பொண்டாட்டி” எனக் கதறினார் சுப்பு!
 
அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் உதவிக்கு வந்து விட்டார்கள். விடாப்பிடியாய் சுப்புவைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்தார்கள் அவர்கள். தீயணைப்புப் படையும் வந்து விட, தீ அரை மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தில்லையின் உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தார்கள்! வெள்ளைத் துணி மூடியிருக்க, சித்தியின் கையை உதறி விட்டு ஓடிப் போய் அந்தத் துணியை விலக்கிப் பார்த்தாள் சிவரஞ்சனி.

வெள்ளை முகத்தில் குங்குமம் துலங்க அழகாய் சிரிக்கும் அம்மா, அங்கே கரிக்கட்டையாய் கிடந்தாள்.

“அம்மா!!!!!!!!” என ஓலமிட்டக் குட்டிப் பெண், அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சிவரஞ்சனியின் கன்னங்களில் மெல்லியக் கீற்றாய் கண்ணீர். சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ரங்க நாயகி வெளியே வெறித்திருந்தார். அவர்களுக்கு முன்னால் ட்ரைவர் அருகே அமர்ந்திருந்த சுப்பு ரத்தினம் கண் மூடி சீட்டில் சாய்ந்திருந்தார். மூவரும் அவரவர் பழைய நினைவுகளில் மூழ்கிக் கிடந்தனர்.

சக்தியுடன் வாழ மாட்டேன் என வம்புச் செய்து அவர்களுடனே புறப்பட்டு வந்திருந்தாள் சிவரஞ்சனி. மூவரும் அவர்கள் இல்லம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரம் சுப்பு ரத்தினத்துக்கு ஒரு போன் கால் வந்தது.

“என்ன காரு?”

அந்தப் பக்கம் கார்மேகம் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார் சுப்பு ரத்தினம்.

வீட்டுச் சோபாவில் கால் மேல் கால் போட்டு, நியூஸ் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி அமரன்.

“இரண்டு நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்து பதினைந்து பேரைக் காவு வாங்கிய பாலம் கட்டப்பட்டதில் ஊழல்! அமைச்சர் சுப்பு ரத்தினம் லஞ்சம் பெற்றுக் கொண்டுப் பாலம் கட்டும் டெண்டரை தரமற்ற ஒரு நிறுவனத்துக்கு வழங்கியதாக தகவல் கசிந்துள்ளது!” என ஏற்ற இறக்கங்களுடன் செய்தி வாசிக்கப்பட்டது.

“இந்த மாமனோட மனசு

மண்ணாங்கட்டி போலே மக்கானது!!

யோ மாமோவ்!!!!!” எனக் குதூகலமாகப் பாடினான் சக்தி அமரன்!



(உயிரானாய்!!!)
 
தற்கொலையா கொலையா

உள்ளே இருந்தே மாமனை போட்டு கொடுக்கறானா சக்தி

ரஞ்சனியோடு சேர்ந்து அவன் போடும் அடுத்த பிளான் என்ன

மஞ்சரி என்ன ஆனாள்
 
தண்ணி குடிக்க போன ரங்கநாயகி.. அரைமணி நேரமா ஆகும்... தில்லை இரவே சரி இல்லை... ஏன் தாத்தா வீட்டுக்கு போலாம் சொன்னாங்க... தற்கொலை பண்ண நினைக்குறவங்க வெளி பக்கமா தாப்பா போடூவாங்க 🤷🤷🤷 காப்பாதுங்க சொல்வங்களா 😬😬😬 ஆனா தங்கை வரும் போது அவக்கிட்ட நல்லா தான் பேசுறாங்க 🤔🤔🤔 அப்போ குற்றவாளி சுப்பு மட்டும் தானா 🧐🧐 டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்...

சக்தி ஆட்டத்த ஆரம்பிச்சுட்டா போலயே... இதுல மஞ்சு, அவ தம்பி வேற ஏன் அப்டின்னு தெரியல
 
என்னம்மா இப்படி பண்றீங்களேமா???🤗
முடிச்சுக்கு மேல முடிச்சால்ல இருக்கு 🙄🙄

சுப்புதான் ஆரம்ப புள்ளின்னு தெரியுது....🤔
கூட்டணி உண்டா?? தனியாவா?? 🤔
கதை புரியுது ஆனா புரியல 😔😶🙃😨🥶
 
என்னவோ நடக்குது மர்மமா இருக்குது
யார் அந்த குற்றவாளி 👿
👿😎👽
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 18 Part II)


அப்படின்னா, இதெல்லாம் சுப்புரத்தினம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தின அரங்கேற்றமா...? இல்லை, மூத்தவளை கட்டிக்கிட்டாத்தான் சொத்து கிடைக்கும்ன்னு சொத்துக்காக நடத்திய அரங்கேற்றமா, ஏன்னா தில்லைக்கு மட்டும் தானே அவங்கப்பாவோட பிசினஸை ஹேண்டில் பண்ணத் தெரியுது.
அதுல ஏதாவது தகிடுத்தத்தம் பண்ணி எக்குத்தப்பா மாட்டிடுவோம்ன்னு பயந்துட்டானோ...? இல்லை
தில்லையால இனி தன்னோட தாம்பத்திய வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாதுன்னு திட்டம் போட்டு ரங்கநாயகியும், சுப்புரத்தினமும் போட்ட கூட்டு களவாணி கொலை திட்டமா..? இல்லை, தனியாவே அரங்கேற்றினாங்களா...? சுப்பு ரத்தினமா ? ரங்க நாயகியா ?
அது கன்ஃபார்ம்டா கொலைத்தான். ஏன்னா, பூஜை
அறை வாசல் ஏன் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது...? அதோட ரீயாக்சன் இப்ப மஞ்சரி திடிர்ன்னு காணாம போனது, பாலம் இடிஞ்சு விழுந்ததுன்னு எல்லாம் நடக்குதோ...? ரஞ்சனிக்கு எல்லாம் புரிஞ்சதாலத்தான் பொறுமையா இருந்து சக்தி அமரனோட கூட்டுச் சேர்ந்து ட்ராமாவ அரங்கேற்றுகிறாளோ...?


அப்படின்னா சக்தி அமரனும் ரஞ்சனியும் ஏற்கனவே லவ் பண்ணவங்கத்தானோ...?
வீட்டுக்குள்ள நுழைஞ்சு தன்னோட காதலிக்கு நியாயம் வாங்கி கொடுக்கிறதுக்காகவும்
தன்னை போலோஸ் ஸ்டேஷன்ன்ல ஜட்டியோட உட்கார வைச்சு அடிவாங்க வைச்சு அவமானப் படுத்தியதற்கும் ஒட்டுமொத்தமா பழி வாங்குற படலத்தை ஆரம்பிச்சிட்டானோ ? அதுக்காக போட்டதுதான் மஞ்சரியை காதலிக்கிற ட்ராமாவோ...?


"கேள்வியின் நாயகியே...
எந்தன் கேள்விகளுக்கு
பதில் என்னவோ...?"


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வனிம்மா உங்க ஸ்டோரில இந்த ஸ்டோரிதான் எபிக்கு எபி பிபிய ஏத்துது. தில்லையோட😱😱😱 நிலைமைக்கு யாரு காரணம் 🙄🙄🙄🙄?
ரங்கா வா? இல்லை சுப்பனா? இல்லை இரண்டும் கூட்டு களவானிங்களா?
தில்லையோட கண்ணீருக்கு காரணமென்ன?
சக்தியோட அடி வேற தொடர்ச்சியா கிடைக்குது சுப்பனுக்கு🫤🫤🫤
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 
😍😍😍

தில்லையோட கொலைக்கு காரணம் சுப்பு மட்டும் தானா? இல்ல ரங்காவும் கூட்டா? 🤔🤔 மாமனுக்கு எதிரா மாப்பிள்ளையோட ஆட்டம் ஆரம்பம் ஆயிருச்சு போல...😏😏
 
Back
Top