VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

எபி பாடல்
இந்தப் பாட்ட உங்களுக்கு எல்லாம் டெடிகேட் செய்யறேன்! நன்றி டியர்ஸ், காத்திருந்ததுக்கு. என்னால லாப் எடுத்து உக்காரவே முடியலை, அவ்ளோ ஃபங்சன், வீட்டுல கெஸ்ட்னு செம்ம பிசி. இன்னிக்குத்தான் ரிலேக்ஸ் ஆனேன். உடனே மத்த வேலைலாம் விட்டுட்டு டைப்பிங்ல உக்காந்துட்டேன். ரியலி சாரி!!!
அத்தியாயம் 20
ஓவர் ஸ்ட்ரெஸில் இருந்தார் சுப்பு ரத்தினம். விசாரணை கமிஷன், எதிர் கட்சியின் பகிரங்கக் குற்றச்சாட்டு, சோசியல் மீடியாவின் கோர முகமென அல்லாடிப் போய் விட்டார். பாலம் இடிந்து விழுந்தது இவரால்தான் என ஆரம்பித்து, டோல்கேட் வசூலிக்க இவர் சாங்க்ஷன் செய்த நிறுவனத்திடமும் லஞ்சம் வாங்கி இருக்கிறார் எனத் தொடர்ந்து, எங்கெங்கு இவர் கட்சி கை நீட்டி இருக்கிறது என ஒவ்வொன்றாய் முடிவே இல்லாமல் வெளியாகிக் கொண்டிருந்தது! முதலமைச்சரே தொலைப்பேசியில் அழைத்து, வெளுத்து வாங்கி விட்டார் சுப்பு ரத்தினத்தை! அரசியலில் ஏற்பட்ட குளறுபடியால் அவரால் வீட்டின் பிரச்சனைகளைக் கவனிக்க முடியவில்லை. மஞ்சு எங்கே போனாள், மகனின் கொலையாளி யார், ரஞ்சு மறுபடி வீட்டில் வந்து ஏன் அமர்ந்திருக்கிறாள் என எதையும் அலசி ஆராயும் நிதானத்தில் இல்லை அவர்.
அந்த நேரத்தில் அவருக்குப் பக்க பலமாக(?) நின்றான் சக்தி அமரன்.
“இது எதிர்கட்சியின் சதின்னு அடிச்சுப் பேசுங்க மாமா! உங்க கட்சில உள்ள ஆளுங்கள விலை பேசி உங்களுக்கு எதிரா திருப்பிட்டாங்கன்னு அதையே திரும்பத் திரும்ப சொல்லுங்க! பத்து வாட்டி உண்மைப் போலவே காண்பிடன்ண்ட்டா பேசினா, கண்டிப்பா மக்கள் நம்பிடுவாங்க! சோசியல் மீடியால வெளி வர உங்களுக்கு எதிரான விஷயங்கள நம்மாளுங்கள வச்சி ஃபில்டர் பண்ணிட்டேத்தான் இருக்கேன்! நீங்க மனச விட்டுறாதீங்க! இதோட பெரிய விஷயமா, வேற எதையாச்சும் வைரல் ஆக்கிட்டா இதை மறந்துடுவாங்க இந்த மக்கள்!”
“அப்படிங்கற!! அப்போ நம்மாளுங்க மூனு பேரைப் பிடிச்சு, என் தலைவன் மாசில்லா தங்கம்னு போர்ட் பிடிக்க வச்சு, தீ குளிக்க வச்சிடலாமா?”
“மத்தவங்கள தீ குளிக்க வைக்கறதுல நீங்க கில்லாடி மாமா”
சக்தியை ஒரு மாதிரியாய் பார்த்தார் சுப்பு ரத்தினம்.
“சில வருஷங்களுக்கு முன்ன இப்படி நமக்காக கட்சி ஆளுங்க தீ குளிச்சிருக்காங்களே! அதை நெனைச்சு சொன்னேன்! ஆனா மாமா, அதெல்லாம் பழைய டெக்னிக். இப்போ அப்படி பண்ண வச்சா, உங்க மேலத்தான் காண்டு அதிகமாகும்! முட்டாள் அமைச்சருக்கு ஏத்த முட்டா தொண்டனுங்கன்னு பொங்குவாங்களே தவிர, பரிதாபப்பட மாட்டாங்க!” என்றான் சக்தி.
தாடையைத் தடவியபடி யோசித்தார் இவர்.
“பண்ணிடலாம் சக்தி! என் மேல இந்த லஞ்ச கேசு நிக்காம இருக்க எதாச்சும் பண்ணிடலாம்! விசாரணைக் கமிஷன்ல உள்ளவங்க டீட்டேல் எடுத்தாச்சுல்ல! அதை வச்சு எதாச்சும் பண்ண முடியுதான்னு பார்க்கலாம்! அதுக்கு முதல்ல இந்த விஷயம்லாம் நம்மள மீறி எப்படி வெளிய போச்சுன்னு பார்க்கனும்! இப்போ நீ கிளம்பு சக்தி! எனக்கு ஸ்ட்ரெஸ் ரிலீவ் பண்ணனும்!” என்றவர், கெஸ்ட் ஹவுசின் அறையில் புகுந்து கொண்டார்.
சக்தி அங்கிருந்து கிளம்பும் போது, ஒரு கார் உள்ளே வந்து கொண்டிருந்தது. ரியர் வியூ கண்ணாடி வழி பார்க்கும் போது, பிரபல நடிகை ஒருத்தி இறங்கி வீட்டின் உள்ளே செல்வது தெரிந்தது. இவன் உதட்டில் கேலிப் புன்னகை ஒன்று முளைத்தது.
“யோவ் மாமா! நல்லா பண்றயா ஸ்ட்ரெஸ் ரிலீவூ!!”
கெஸ்ட் ஹவுசின் கேட்டைத் தாண்டி கார் வெளியேறியதும், இவன் வைத்திருக்கும் பர்னர் போனை எடுத்து கால் ஒன்று செய்தான் சக்தி. அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும்,
“சிவரஞ்சனி மேல எக்ஸ்ட்ரா கண்ணு வைங்க! அமைச்சர் சிம்பத்தி கிரியேட் பண்ண என்ன வேணா செய்யற நிலைல இருக்காரு! மகள போட்டுத் தள்ளி அனுதாபத்த சம்பாரிக்க முயற்சிக்கலாம்! சோ பீ எக்ஸ்ட்ரா கேர்ஃபூல்! அவங்க வீட்டுல நாம வச்சிருக்கற வேலைக்காரி கிட்டயும் விசயத்தை பாஸ் பண்ணிடுங்க! எக்காரணத்தக் கொண்டும் ரஞ்சனிக்குத் சின்னாதா கூட ஆபத்து வரக் கூடாது!” எனப் பேசி அழைப்பைத் துண்டித்தான்.
அதோடு இவனுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்தினான். அடுத்த அரசியல் வாரிசு இவன் என்பது மக்களுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. இவனைப் போட்டுத் தள்ளி விட்டு,
“என் கட்சியின் எதிர்காலத்தையே செல்லரிக்க வைத்து விட்டார்கள்” என அவர் முதலைக் கண்ணீர் வடிப்பதற்கும் சான்ஸ் இருக்கிறது எனப் புரிந்தே இருந்தது சக்திக்கு.
சதுரங்க விளையாட்டைப் போல, எதிராளியின் எடுத்த மூவ் என்னவாக இருக்கும் எனக் கணிப்பதே பெருங் கஷ்டமாய் இருந்தது இவனுக்கு.
சுப்பு ரத்தினத்தின் வீட்டில், சுவரில் மாட்டி இருந்த மகனின் படத்தைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் ரங்க நாயகி. அந்த நேரம் அவருக்கு வெளிநாட்டு அழைப்பு ஒன்று வந்தது.
“ஹலோ”
“அம்மா”
“மஞ்சு! மஞ்சு! எங்கம்மா இருக்க? நல்லா இருக்கியா?” எனப் பதட்டமாகக் கேட்டார் ரங்க நாயகி.
“பார்டா! எங்கம்மாவுக்கு அக்கறைலாம் கூட இருக்கு!”
“என்னம்மா இப்படிலாம் பேசற!” எனக் கண்ணீருடன் கேட்டார் இவர்.
“நீலி கண்ணீர் வடிக்காதம்மா!”
“மஞ்சும்மா! எனக்கு உன்னை விட்டா யாரும்மா இருக்கா! தம்பியும் என்னை விட்டுட்டுப் போய் சேர்ந்துட்டான்” எனத் தளுதளுத்தார் ரங்க நாயகி.
“அவன் போனதும், வேற வழி இல்லைன்னு என் கால புடிக்கிறியாம்மா! எனக்கு அம்மா, அப்பா யாருமே வேணா! ஒரு நல்ல உள்ளத்தோட ஹெல்ப்ல நான் வெளிநாட்டுக்கு வந்துட்டேன்! நிம்மதியா என் புருஷன் கூட வாழத் தொடங்கிட்டேன்! பெத்தயேன்ற கடமைக்காக போன் போட்டு நல்லபடியா இருக்கேன்னு சொல்றேன்! அவ்ளோதான்! எங்கிருக்கேன், எப்படி வாழ்றேன்னு எதையும் கேக்காதே! சொல்லவும் மாட்டேன்!” எனச் சிடுசிடுத்தவளுக்குக் கண்ணீர் வந்து விட்டது.
“உன் நல்லதுக்குதானேடி அப்பா சொன்னத ஏத்துக்கச் சொல்லி ஃபோர்ஸ் பண்ணேன்! அந்தச் சக்தியக் கட்டி இருந்தா, தங்கக் கடலுக்கே நீ சொந்தக்காரியா இருந்திருப்ப! அவன் உன் மேல வச்ச காதலுக்கு, அப்படியே உன்னை இழைச்சிருப்பான் வைரத்துலயும், தங்கத்துலயும்!”
சற்று நேரம் அந்தப் பக்கம் அமைதி. தொண்டையைச் செறுமிக் கொண்ட மஞ்சரி.
“உன்னை மாதிரியும், அப்பா மாதிரியும் காசு, பணம்னா பொணம் மாதிரி வாயைப் பொழப்பேன்னு நெனைச்சியாம்மா? முத்து மேல நான் ஆசை வச்சிருக்கேன்னு தெரிஞ்சும், நீதானே அப்பாட்ட சொல்லி, அவர ரஞ்சுக்குப் பேசி முடிச்ச! உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்மா!”