எபி 3

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

அத்தியாயம் 3



“அரசியல்னா ஈசி இல்லப்பா சக்தி! முழு மூச்சா இறங்கி வேலை செய்யனும். குடும்பம், உறவு, நட்பு எல்லாத்தையும் ஓரடி தள்ளி வச்சு உசுர குடுத்து களத்துல இறங்கனும். நேர்மையா இருக்கனும்னு நாம நினைச்சாலும் சந்தர்ப்பமும் சூழலும் கண்டிப்பா விடாது! இந்த ரெண்டு கையும் கறை படிஞ்ச கைகள்தான்! இல்லைன்னு சொல்லல! நாம நேர்மையா இருக்கனும்னாலும், நம்ம சுத்தி இருக்கறவங்க விட மாட்டாங்க! நம்மள செல்லாக்காசு ஆக்கிடுவாங்க! ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு சக்தி! என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு நான் நல்லவனாத்தான் இருக்கேன்! அவங்க எனக்குக் குடுத்த வாக்குகளுக்காக(ஓட்டு), நான் அவங்களுக்குக் குடுத்த வாக்குகள நிறைவேத்திக் குடுத்துட்டுத்தான் இருக்கேன். என் மனசாட்சி படி நான் நல்லவன்தான்! சேத்துல இருந்தாலும் செந்தாமரைன்னு வைய்யேன்” எனப் பேசிய சுப்பு ரத்தினத்தை மென் புன்னகையுடன் பார்த்திருந்தான் சக்தி அமரன்.

“உன்னைப் போல இளைஞர்கள் அரசியலுக்கு வரது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் ரொம்ப அவசியமான ஒன்னு! எல்லோரும் படிச்சிட்டு வெளிநாட்டு வேலைன்னு போய்ட்டா, நாட்டையும் நாட்டு மக்களையும் யார் பார்த்துக்கறது? களத்துல இறங்கனும்யா! புரையோடிக் கிடக்கற களைய எடுக்கனும்! அது இளைய சமுதாயத்தாலத்தான் முடியும்! எங்கள மாதிரி ஆட்கள் சுகர், பி.பி கூட போராடிக்கிட்டே என்னத்த புதுமைய புகுத்திடப் போறோம்? என்னத்த சாதிச்சிடப் போறோம் சொல்லு! நீ அரசியலுக்கு வரன்னு சொன்னதுல எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்குய்யா! மாமா கூடவே கொஞ்ச நாளுக்கு இரு! என்ன நடக்குதுன்னு கவனி! பிறகு உனக்கேத்தது போல நான் எதாவது செய்யறேன்! ஆனா சக்தி..” எனக் குரலைக் கொஞ்சம் கடுமையாக்கி இவன் முகம் பார்த்தார் சுப்பு ரத்தினம்.

“சொல்லுங்க மாமா!”

“காசு சம்பாதிக்கனும்ங்கற நோக்கத்தோட இதுல நீ நுழையனும்னு ஆசைப்பட்டா, அதுக்கு என்னோட கட்சி சரிப்பட்டு வராது! வாசல் அங்கத்தான் இருக்கு, இப்படியே எழுந்து வெளிய போய்டு!” எனக் கறாராகச் சொன்னார்.

“எங்க கிட்ட இல்லாத காசா மாமா! உங்களுக்குத் தெரியாதா எங்க நிலையைப் பத்தி! எனக்கு எதாச்சும் சாதிக்கனும் மாமா! கடைல போய் உக்காந்து கல்லால காசு எண்ணற வேலைலாம் எனக்குச் சரிப்பட்டு வரும்னு தோணல மாமா! ப்ரேண்ட்ஸ், ஜாலி, குடி, கும்மாளம்னு நெறய வருசங்கள வேஸ்ட் பண்ணிட்டேன்! எனக்குன்னு ஓர் அடையாளம் இல்ல! சக்தினா யாரு? சக்தினா நகைக்கடை அருள்மணியோட பையன்! அப்படித்தான் பார்க்கப்படறேன்! எனக்கு அது பிடிக்கல மாமா! சக்தினா யாரு? சக்தினா இன்னார்னு எனக்கொடு பேரு வேணும். அடையாளம் வேணும்! உங்களால அதை எனக்குக் குடுக்க முடியும்னு தோணுச்சு மாமா! அதான் உங்க கிட்ட வந்துட்டேன்!” என்றவனை வாஞ்சையாகப் பார்த்தார் சுப்பு ரத்தினம்.

“நான் நல்லவன், நான் நல்லவன்னு சொல்லிட்டுத் திரியறான் பார்த்தியா, அவன மட்டும் நம்பவே முடியாதுடா மருமவனே! அவனுக்குள்ளத்தான் எல்லா கேப்மாரித்தனமும் ஒளிஞ்சு கிடக்கும்! நான் இதையெல்லாம் பண்ணேன்! இனி திருந்தி நல்ல வழி வரப் பார்க்கறேன்னு ஒத்துக்கிட்டப்பாரு, அங்க தெரியுது உன்னோட நேர்மை! இனி நீ எங்களில் ஒருவன்!” என அவரிடத்தில் இருந்து எழுந்து வந்து சக்தி அமரனை அணைத்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.

இவனும் அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ஏன்டா மருமகனே! தண்ணி, தம்முன்னு எல்லாம் ஒத்துக்கிட்ட! பொண்ணு மேட்டர்லாம் ஒன்னும் கிடையாதா?” எனக் கிசுகிசுப்பாக அவன் காதோரம் கேட்டார் இவர்.

அவர்களைத் தள்ளி சில கட்சிக்காரர்கள் நின்றிருந்தார்கள்.

இவனும் மெல்லியக் குரலில்,

“ஆசைத்தான் மாமா! ஆனா எங்க!!!!! என் மம்மி, என் ப்ரேண்ட்ஸ் சர்க்கிள்லயே ஸ்பை வைச்சிருக்காங்க! நான் மட்டும் பொண்ணு கிண்ணுன்னு போனேன்னு வைங்க, தோல உரிச்சு தோரணம் கட்டிருவாங்க! எதுக்கு மாமா ரிஸ்க்கு! எங்கப்பா வேற ராமனா ஃபார்ம் ஆகிட்டாரு! அவரு மகன் ராவணனா போய் நின்னா அவர் மேல நான் வச்சிருக்கற பாசத்துக்கு என்ன மதிப்பு! அதான் சைட்டிங் மட்டும்! லேசா அங்கிங்க டச்சிங்! அவ்ளோதான். மத்தப்படி நான் அக்மார்க் கன்னிப் பையன் மாமா”

அவனது பேச்சைக் கேட்டு வாய் விட்டு நகைத்தார் சுப்பு ரத்தினம்.

“எப்போதும் இப்படியே இருந்திருடா மருமகனே! சபலத்துக்கு அடிமையாகிட்டா, சகலமும் போய்டும்!”

“அப்படியே ஆகட்டும் மாமா” எனப் புன்னகையுடன் சொன்னவனை வாஞ்சையாகப் பார்த்தார் இவர்.

சற்றுத் தள்ளி நின்றிருந்த ஆபிஸ் பொறுப்பாளர் கார்மேகத்தை அழைத்த சுப்பு ரத்தினம்,

“காரு! நம்ம பையன் இவன். கூடமாட ஒத்தாசையா வச்சிக்கோ! இதிது இப்படி, அதது அப்படின்னு சொல்லிக் குடு” எனச் சக்தியின் பொறுப்பைக் அவரிடம் ஒப்படைத்தார்.

“காரு கூட போய்யா! இன்னிக்கு எனக்கு நெறய மீட்டிங் இருக்கு! நான் போய்ட்டு வந்துடறேன்” என வெளியேறினார் சுப்பு ரத்தினம்.

கரை வேட்டி அணிந்த சில பாடிகார்ட்களும், சுப்பு ரத்தினத்தின் பி.ஏவும் இன்னும் கட்சியில் சில முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் அவருடன் வெளியேறினார்கள்.

அந்தக் கார்மேகம் தனது ஐம்பதுகளில் இருந்தார். சாந்தமான முகம்.

“வாய்யா! முதல்ல ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்” என இவனை அழைத்தார்.

அவரோடு நடந்தவன்,

“அங்கிள்! நீங்க ரொம்பக் காலமா இங்க வேலைப் பார்க்கறீங்களா?” எனக் கேட்டான்.

நின்று அவனை ஆழ்ந்து பார்த்தக் கார்மேகம்,

“இவன் என்னடா நமக்கு இதெல்லாம் சொல்றதுன்னு நீ நினைக்காம இருந்தா, ஒரு விஷயம் சொல்லவாப்பா நானு?” எனச் சம்மதம் கேட்டார் அவர்.

“சொல்லுங்க அங்கிள்!”

“இந்த அங்கிள்தான் பிரச்சனை! இங்க யாரையும் அங்கிள், அண்ணா, தம்பின்னு முறை வச்சுக் கூப்டு பழகாதே! அப்புறம் அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க! தலை மேல ஏறிடுவாங்க! வாங்க, போங்கன்னு பேசு! நல்லா பழகு! அக்கறை இருக்கோ இல்லையோ, இருக்கற மாதிரி காட்டிக்கோ! ஆனா மனசால யாரயும் நெருங்கிடாத! ஓன் ஸ்டேப் தள்ளியே நில்லு! எவர வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் கழட்டி விட்டுட்டு முன்னுக்குப் போய்ட்டே இருக்க வேண்டிய துறை இது! தூர நிறுத்திப் பழகறப்ப, ஈசியா இருக்கும் அப்படி முன்னேறிப் போக”

“மிஸ்டர் கார்மேகம்! மனசால தூர நிறுத்திப் பழகனாலும், அவங்க நமக்கு நெருக்கமானவங்க மாதிரி ஒரு ஃபீல் தரனும்! அப்பத்தான் அவங்க தலைல நாம மொளகா அரைக்க, வாண்ட்டட்டா தலையைக் காட்டுவாங்க! அரசியல்ல உங்க மெத்தட்லயே போய் பூவைப் பூன்னும் சொல்லலாம், இல்ல என் மெத்தட்ல போய் பூவைப் புய்ப்பம்னும் சொல்லலாம்! எப்படி சொன்னா என்ன, நமக்குப் பூ மாலை கழுத்துல விழுந்தா பத்தாதா கார்மேகம் அங்கிள்?” எனக் கண் சிமிட்டிச் சொன்னவனை ஆவெனப் பார்த்தார் இவர்.

அதற்குள் கட்டிடத்துக்கு வெளியே இருந்த டீக்கடை வந்திருக்க,

“மாஸ்டர், டீ ரெண்டு! அங்கிளுக்கு கொஞ்சம் சுகர் தூக்கலா போட்டு!” எனச் சொன்னான் சக்தி.

“இப்போ என்னை அங்கிள்னு கூப்பிடறது உன் மெத்தட்ல தோளுல துண்டைப் போட்டு முதுகுல கும்மாங்குத்து குத்துறதுக்கா?” எனக் கேட்டார் இவர்.

“சேச்சே! நீங்க எவ்ளோ நல்லவருன்னு எனக்குத் தெரியாதா அங்கிள்! சோசியல் சயின்ஸ் படிச்சு, அதுல போலிடிக்கல் சயின்ஸ்ல செம்ம ஸ்கோர் வாங்கிட்டு, எங்க மாமா கிட்ட குப்பைக் கொட்டறீங்க இத்தனை வருஷமான்னு தெரிஞ்சுத்தான் வச்சிருக்கேன்! மாமா மேடைல பேசற அனல் பறக்கும் ஸ்பீச்லாம் எழுதி குடுக்கறது நீங்கத்தான்னும் தெரியும்! இந்த ஆபிஸ் ஸ்மூத்தா ஓடுதுனா அதுக்கு மூலக்காரணம் நீங்கத்தான்னும் தெரியும்! அவ்ளோ முக்கியமானப் பொறுப்புல இருந்தும் சின்னதா ஒரு வீடு, ஸ்காலர்சிப்ல இஞ்சினியரிங் படிக்கற மகன், ஸ்கூல் போற மக, வீட்டரசியா இருக்கும் மனைவின்னு ரொம்ப ஆர்ப்பாட்டமில்லாத சராசரி வாழ்க்கை வாழ்றீங்கன்னும் தெரியும்!” என ஆழ்ந்த குரலில் சொன்னவன்,

“இந்த மாதிரி ரோட்டுக் கடைலலாம் டீ குடிச்சது இல்லை அங்கிள்! வயித்த கலக்கி விடாதுல்ல?” என்று அப்பாவியாய் கேட்டான்.
 
இவன் பாவியா, அப்பாவியா என்பது போலப் பார்த்தார் கார்மேகம்.

அவர் கையில் டீ கிளாசைத் திணித்தவன்,

“குடிங்க அங்கிள்! நான் முகம் பார்க்கற கண்ணாடி மாதிரி! சிரிச்சிட்டே பார்த்தா, நானும் சிரிப்பேன்! முறைச்சிட்டே பார்த்தா நானும் முறைப்பேன்! சில சமயம் மண்டைக் கிறுக்குப் புடிச்சிக்கும் எனக்கு! அந்த டைம்ல சிரிச்சிட்டே பார்த்தா, நான் முறைப்பேன்! முறைச்சிட்டே பார்த்தா, நான் இன்னும் டபுளா முறைப்பேன்!” என்றான்.

‘ஐயோ!! மண்டைக் கோளாறு புடிச்சனவ கொண்டு வந்து என் கிட்ட கோர்த்து விட்டுருக்காங்களே! அது சரி! அரசியலுல்ல வந்துதான் எல்லாருக்கும் கோளாறு பிடிக்கும்! இவன் கோளாறோடே வந்திருக்கான்! நல்லா பொருந்திக்குவான்’ என மனதைத் தேற்றிக் கொண்டார் கார்மேகம்.

இப்பொழுதெல்லாம் பத்து மணி வரை சுகமானத் தூக்கம் என்பதை விட்டொழித்திருந்தான் சக்தி! காலையில் ஆறுக்கே எழுந்து கொள்பவன், வீட்டிலேயே வைத்திருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறான். முன்பும் கூட செய்வான்தான். பீர் அடித்து தொப்பை வைப்பது போல இருந்தால், விடாமல் அது குறையும் வரை ஜிம்மில் பலி கிடப்பான். பிறகு ஒரு சோம்பேறித்தனம் வந்து விடும்! மீண்டும் அதே போல குட்டித் தொப்பை வரும் வரை, ஜிம் கதவு மூடிக் கிடக்கும்.

இந்த வயதில் கூட கட்டுமஸ்த்தான உடலமைப்பைக் கொண்டிருக்கும் சுப்பு ரத்தினத்தை ரோல் மாடலாய் வரித்துக் கொண்டதில் இருந்து, அவரைப் போலவே உடலைப் பேணும் ஆர்வம் வந்திருந்தது இவனுக்கு. மகனின் மாற்றங்கள் சங்கரியின் கண்களில் படத்தான் செய்தன! ஆனாலும் அவன் தேர்ந்தெடுத்தப் பாதையை எண்ணிக் கலக்கமாய் இருந்தது அந்தத் தாய்க்கு.

“அப்பா கூட கடைக்குப் போனமா, வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுத்தமா, சீக்கிரமா கல்யாணத்த முடிச்சமா, புள்ள குட்டின்னு வாழ்ந்தமான்னு இல்லாம ஏன்டா உனக்கு இந்தப் பொழப்பு?” எனப் புலம்பித் தள்ளி விட்டார் சங்கரி.

“மனுஷன் என்னா மிஷினாமா? பணம் ப்ரோடியூஸ் பண்ணனும், புள்ளக் குட்டி ப்ரோடியூஸ் பண்ணனும்னு எத்தனைக் காலம்தான் அவனை ஒரு கூட்டுக்குள்ள அடைச்சி வைப்பீங்க! சும்மா இருந்தப்ப, வேலைப் பாருன்னு கத்துனீங்க! வேலைன்னு ஒன்னுல உக்காந்ததும், அது சரியில்லைன்னு கத்தறீங்க! உங்கள மட்டும் சட்டிஸ்ஃபை பண்ணவே முடியாதும்மா! என் வாழ்க்கையை என் இஷ்டம் போல அமைச்சுக்க விடுங்கம்மா! கொஞ்ச நாளானதும் நீங்க கேட்ட, கல்யாணம், புள்ளக் குட்டிக்குலாம் நானே ஏற்பாடு பண்ணறேன்” எனக் கொஞ்சலாய் பேசி, கன்னம் வருடி அவரைச் சமாதானப்படுத்தி இருந்தான்.

உடற்பயிற்சி முடித்தவன், தனதறையில் மாட்டி இருந்த பெரிய தொலைக்காட்சியில் செய்தி செனலை வைத்தான். போனில் அன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றிய செய்திகளை வாசித்துக் கொண்டே, காதை தொலைக்காட்சியில் வைத்திருந்தான். அந்த நேரம் மேசேஜ் ஒன்று வந்து விழுந்தது.

“சக்தி! இன்னிக்கு காலைல கொஞ்ச நேரம் வீட்டுக்கு வந்துட்டு போய்யா” என அனுப்பி இருந்தார் சுப்பு ரத்தினம்.

“வரேன் மாமா” எனப் பதில் போட்டான் சக்தி.

சுப்பு ரத்தினத்திடம் சேர்ந்ததில் இருந்து, காலையில் நேராய் அண்ணாநகரில் இருக்கும் கட்சி ஆபீசுக்குப் போய் விடுவான். அதற்கு மேல் அவன் நேரம் கார்மேகத்துடன்தான் கழியும். முதல் நாள் அப்பாவுடன் சுப்பு ரத்தினத்தின் வீட்டிற்குப் போய் அவமானப்பட்டதில் இருந்து அந்தப் பக்கம் போக வேண்டிய நிலை வந்திருக்கவில்லை.

அன்றைய தினத்தை நினைக்கும் போதே, தாடை இறுகிப் போனது இவனுக்கு.


“சாரிப்பா! சாரி! அவ தன்னிலைல இல்ல! அதான் இப்படிலாம் பேசிட்டா! ரொம்ப நல்லப் பொண்ணுப்பா!” எனச் சால்ஜாப்பு சொன்ன சுப்பு ரத்தினம், மனைவியிடம் ஜாடை காட்டினார்.

அவசரமாக மகளை நெருங்கி கைப்பற்றிய ரங்க நாயகி,

“வாம்மா! ரூமுக்குப் போகலாம்” என அழைத்தார்.

“அவனும் வருவானா ரூமுக்கு?” எனச் சக்தியைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

‘அடிங்க!!!’ என மனதில் கறுவியவன்,

“இன்னொரு நாள் பேசிக்கலாம் மாமா! இப்போ நாங்க கிளம்பறோம்!” என எழுந்து விட்டான்.

ரங்க நாயகியைத் தள்ளி விட்டு, இவன் அருகே தள்ளாடி வந்து இவன் கையைப் பற்றிக் கொண்டாள் அந்தப் பெண்.

“மிஸ்டர் மேன்லி! வா போலாம்” என மாடிப் பக்கம் இழுத்தாள் அவள்.

“ஹேய்! விடு என்னை!” எனச் சட்டென உதறினான் இவன்.

அவனது உதறலில், போதையில் இருந்தவள் சோபாவில் போய் விழுந்தாள். ஓடோடி வந்த சிவமஞ்சரி, தமக்கையைத் தோள் சாய்த்துக் கொண்டாள். நிமிர்ந்து சக்தியை முறைத்தவள்,

“அவ சுயநினைவுல இல்லைன்னு தெரிதுதானே! இப்படித்தான் ஹார்ஷா புடிச்சுத் தள்ளுவீங்களா? சென்ஸ் இல்ல? ஒரு பொண்ணுக் கிட்ட எப்படி நடந்துக்கனும்னு பேசிக் மேனர்ஸ் இல்ல?” எனப் படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.

“மஞ்சு! நம்ம மேல தப்ப வச்சிக்கிட்டு என்ன கோபம் வேண்டிக் கிடக்கு! அக்காவ ரூமுக்குக் கூட்டிட்டுப் போ” எனச் சத்தம் போட்டார் சுப்பு ரத்தினம்.

அழகி என சற்று முன் இவன் ஆராதித்தப் பெண் கோப முகம் காட்டி விட, சோபாவில் மல்லாக்க கிடந்து என்னமோ முனகிக் கொண்டிருந்த பெரிய பெண்ணை முறைத்தான் இவன்.

“வாக்கா!” என இவள் பெரியவளைத் தூக்க முயல, இன்னொரு பக்கம் வந்து பிடித்துக் கொண்டார் ரங்க நாயகி.

“நோ அக்கா, சொக்கா! கால் மீ ரஞ்சனி! சிவரஞ்சனி!” எனக் குளறலாய் சொன்னபடி அவர்களுடன் நடந்தவள், இவனைக் கடக்கும் போது கை நீட்டி அவன் வயிற்றைத் தடவி கண்ணடித்து விட்டுப் போனாள்.

“டிஸ்கஸ்டிங்!” என அன்றைய தினம் முணுமுணுத்தவன், இன்றும் அதையேதான் கத்திச் சொன்னான்.

(உயிராவாயா???)
 
Last edited:
அடேய் சக்தி... உன் சக்தி எல்லாம் இவ கிட்டயே வேஸ்ட் ஆகிடும் போலயே டா 🤣
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 3)


அட... இந்த சக்தி கார்மேகத்துக் கிட்ட அளக்குறதைப் பார்த்தா
இவனுக்கு அரசியலுக்கு வரதுக்கான எல்லாத் தகுதியும் இருக்கும் போலவே...?
எப்படியோ பையன் புழைச்சுக்குவான்னு தோணுது.


அதே நேரத்துல, இன்னொன்னும் தோணுது.
அநேகமா இவன் கத்துக்கிட்ட அரசியல் பாடத்தை வைச்சே
இவன் கழுத்துல துண்டைப் போட்டு தன் வீட்டு மருமகனா ஆக்கிடுவாரோ இந்த சுப்பு ரத்தினம்ன்னு தோணுது தானே.... ? அதுவும் சிவரஞ்சனியா, இல்லை சிவமஞ்சிரயான்னு அதுக்கும் ஒரு க்கு வைச்சிருக்காங்களோன்னு கூடத் தோணுது. அதான் முதல்லயே சொல்லிட்டாங்களே. அரசியல்ல உறவு, நட்பு, பாசம் இப்படி எதுக்கும் வால்யூ கிடையாதுன்னு. எப்ப வேணா, என்ன வேணா, எது வேணும்ன்னாலும் நடக்கலாம்ன்னு.
ஒருவேளை இதுவும் நடக்கலாம்ன்னு தோணுது.


இந்த சிவரஞ்சனி இப்படி போதைக்கு அடிமையானதே ஏதாவது பிரச்சினையாலத் தானோ...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Sollala.. nan sollala.. epdi vachanga paaru peru🤷 akka, thangai ku🙄 intha sakthi entha Siva kitta maatti muzhikka 🙄🙄 podhoa🧐

Neeye oru police ah pazhi vaanga arasiyal ku poi Iruka.. ithu la avaru advice solli unna thirutha pakkuraru.. neeyum oru appavi look kudukura... Antha nallavara ethula sikka vaippanoa 🤷
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாக்கற ஆளையெல்லாம் சைட் சீயிங் வந்தமாதிரி பாத்து சொள்ளூத்துனான்.
இப்ப இவனையப் பாத்து நம்மாளு ரூமுக்கு வருவானு கேட்டு அவனைய தொங்க வுட்டுட்டா.😆😆😆😆😆😆
சரி நம்மாளோட 😎😎😎😎 மாஸ் சீனுக்காக ஒரு சாங்கை போடலாம் 👇
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாக்கற ஆளையெல்லாம் சைட் சீயிங் வந்தமாதிரி பாத்து சொள்ளூத்துனான்.
இப்ப இவனையப் பாத்து நம்மாளு ரூமுக்கு வருவானு கேட்டு அவனைய தொங்க வுட்டுட்டா.😆😆😆😆😆😆
சரி நம்மாளோட 😎😎😎😎 மாஸ் சீனுக்காக ஒரு சாங்கை போடலாம் 👇

ஒரு கன்னிப் பையன் கையை பிடிச்சு இழுக்குறாளே அராத்து 😂 இவளுக்கு மாஸ் பாட்டான்னு நினைச்சு ஷாக் ஆயிட்டேன் 🤭
செம பொருத்தம் பாட்டுக்கும் உங்க ஹீரோயினுக்கும் 🤣🤣🤣🤣🤣
 
சக்தி கேடிக்கெல்லாம் கேடி 🤣 அரசியலுக்கு வர எல்லா தகுதியும் இருக்கு.... 🤭

ஆசையா சைட் அடிச்ச பொண்ணுகிட்ட திட்டு வாங்க வச்சுட்டா பெரிய பிசாசு 🤣
இவளுக்கு பயந்துகிட்டே தங்கச்சியை சைட் அடிக்கக் கூட வீட்டு பக்கம் வரலையே 🤧
 
அடேய் சக்தி... உன் சக்தி எல்லாம் இவ கிட்டயே வேஸ்ட் ஆகிடும் போலயே டா 🤣
அப்ப நாங்க இந்த பாட்டு பாடி சக்தி வாங்கிக்குவோம்..💪💪💪😁😁😁

 
Back
Top