VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

பங்கீ ஜம்ப்பிங்
எபி பாடல்
இந்தப் பாட்டுக் கேக்கறப்ப அவ்ளோ இனிமையா இருக்கும். அப்படியே யாரோ நெற்றியை வருடித் தூங்க வைக்கறது போல ஃபீலாகும்! ஜானகி பாடற இள மேனி உன் வசமோ, அப்படியே அவங்க வசம் இழுக்கும் நம்மல! அழகே நீ எங்கே, என் பார்வை அங்கேன்னு யேசுதாஸ் பாடறப்ப அப்படியே உருகிடுவோம்!
அத்தியாயம் 4
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனும் அமைதியாய் வர, அதில் பயணித்தவளும் அமைதியாய் வர, யேசுதாஸும் ஜானகியும் மட்டும் தங்களது மயக்கும் குரலால் இனிமையைப் பரப்பியபடி அவர்களுடன் பயணித்தனர்.
“கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக” என ரம்மியமாய் காதை நிறைத்தது பாடல்.
காரில் ஏறியதிலிருந்தே இது போலத்தான் பல ரகமாய் காதல் சொட்டும் பாடல்கள் ஒலியேறிக் கொண்டிருந்தன. போன் வழி ஸ்போடிஃபை கனேக்ட் செய்து உருக்கமான காதல் ரசம் சொட்டும் பாடல்களை போட்டு விட்டிருந்தான் சக்தி அமரன். அன்று மட்டுமல்ல, அவள், அவன் காரில் பயணிக்க ஆரம்பித்த இந்த ஒரு வாரமாய் இதுதான் நடக்கிறது.
அவள் காரில் ஏறி அமரும் போது சின்னதாய் ஒரு புன் முறுவல் தருவான். இவள் ஹாய் என்றால் பதிலுக்கு ஒரு ஹாய் வரும்! பிறகு காரோட்டவே பிறப்பெடுத்தவன் போல சாலையிலே இருக்கும் அவன் கவனம். இவளும் அதற்கு மேல் எதுவும் பேசிக் கொள்ளமாட்டாள். காலேஜ் வாசலில் இறக்கி விடுபவன், அதே சிறிய முறுவலுடன் பாய் எனச் சொல்லிக் கிளம்பி விடுவான். மாலையில் காலேஜ் முடிந்ததும் அவளை ஏற்றிக் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டுக் கிளம்பி விடுவான்.
முதன் முதலில் அவளைப் பார்த்தப் போது அவன் கண்களில் தெரிந்த மின்னலைக் கவனித்திருந்தாள் சிவமஞ்சரி. இந்த ஒரு வார பயணத்தில் ஏதாவது வழிவான், சிரிப்பான், சில்மிஷங்கள் செய்யப் பார்ப்பான் என இவள் பயந்திருக்க, அவனோ அவள் எண்ணங்களைப் பொசுக்கி இருந்தான்.
‘நல்லவன்தான் போல!’ என மனதினுள் எண்ணிக் கொண்டாள் இவள்.
யூத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்குச் சக்தி அமரனைத் தெரிந்திருக்கும். இன்ஸ்டாவில் அவனுக்கு நிறைய பெண்களே ஃபோலோவர்களாக இருந்தார்கள். ஒரு போட்டோவோ, ரீல்ஸோ எது போட்டாலும், லைக்ஸ் அண்ட் கமேண்ட் பிய்த்துக் கொள்ளும். இவளும் ஃபேக் ஐடியில் அவனை ஃபோலோ செய்து கொண்டுதான் இருந்தாள். ஒரு நாள் பப்பில் பரவசமாய் இருப்பான். மறுநாள் கங்கை ஆர்த்தியில் பக்திமயமாய் நிற்பான். ஒரு நாள் கடலோரத்து தொங்கும் ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருப்பான். மறுநாள் மலை உச்சியில் பங்கீ ஜம்ப்பில் தொங்கிக் கொண்டிருப்பான். இவன் இப்படித்தான் எனக் கணிக்க முடியாத அவனது பெர்சனல் வாழ்க்கையை மிகவுமே ரசித்தாள் சிவமஞ்சரி. அவனிடம் பேசிப் பழக ஆவல் இருந்ததுதான். ஆனாலும் ஒரு தயக்கம்.
‘அழகு இருக்கு! பணம் இருக்கு! மில்லியன்ல பாலோவர்ஸ் இருக்காங்க! கண்டிப்பா ஈகோ புடிச்சவனாத்தான் இருப்பான். நாமும் இளிச்சிட்டுப் பின்னால போய் இவன் ஈகோவுக்குத் தீனிப் போட்டுடக் கூடாது!’ எனத் தள்ளியே இருந்தாள்.
ஆனாலும் மனது கேட்கவில்லை. அவனது வேலையெல்லாம் ஒதுக்கி விட்டு ட்ரைவர் வேலைப் பார்ப்பவனைக் கண்டு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பது, அவனை அவமதிப்பது போல இருக்க,
“சக்தி சார்” என அழைத்தாள் இவள்.
“கூப்டியா மஞ்சரி?” எனக் கேட்டான் சக்தி.
“ஆமா சக்தி சார்! நானே பேச ஆரம்பிக்கலனா ஒரு மாசம் ஆனாலும் உங்க பக்கம் இருந்து ஹாய் பாய் தவிர ஒன்னும் வராதுன்னு தெரிஞ்சிருச்சு! அதான் நானே ஒரு ஸ்டேப் எடுத்து முன்னுக்கு வச்சேன்” எனச் சொல்லிப் புன்னகைத்தாள் பெண்.
சற்று நேரம் அமைதியாய் இருந்தவன்,
“சாரி மஞ்சரி” என்றான்.
“எதுக்கு சாரி? பேசறதும் பேசாததும் உங்க இஷ்டம்தானே! அதுக்கெல்லாமா சாரி சொல்வாங்க”
“எனக்கு உன் மேல சின்னதா கோபம்”
கொஞ்சமாய் திரும்பி அமர்ந்து, கார் ஓட்டுபவனை ஆழ்ந்து பார்த்தாள் இவள்.
“ஏன் சக்தி சார்? எனக்கு ட்ரைவர் வேலைப் பார்க்கறது உங்க இமேஜ்கு ரொம்பக் கேவலமா இருக்கோ?”
“சேச்சே! அப்படிலாம் இல்ல மஞ்சரி. அந்த வீணாப் போனவளுக்காக நீ என்னைத் திட்டிட்டேல்ல, அதுல சின்னதா கோபம் எனக்கு”
சிவமஞ்சரிக்கெனத் தனியாய் ஒரு ட்ரைவர் இருந்தார். மிகவும் நம்பிக்கையான ஆள் அவர். தனது கிராமத்தில் ஏதோ பிரச்சனை என அவர் போயிருக்க, மஞ்சரியை யாரை நம்பியும் விட மனதில்லை சுப்பு ரத்தினத்துக்கு. இவரே அழைத்துப் போய் வரலாம் என்றால், கோவையில் நிகழ்ச்சி ஒன்றுக்குத் தலைமைத் தாங்க அழைத்திருந்தார்கள். அதோடு அங்கேயே சில நாட்கள் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை.
சுப்பு ரத்தினம் அழைத்தார் என அவர் வீட்டுக்கு இவன் போயிருந்த போதுதான் பெற்றவர்களுக்கும் மகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.
“அக்காவ மட்டும் அப்படியே சுதந்திரமா விட்டுட்டு என்னை மட்டும் ஏன்பா பொத்திப் பொத்தி வளக்கறீங்க? எனக்குக் கார் ஓட்ட முடியும். லைசென்சும் வச்சிருக்கேன்! பிறகேன்பா என்னைத் தனியா காரெடுக்க விட மாட்டறீங்க” எனக் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தாள் சிவமஞ்சரி.
“ஏன்னு உனக்குத் தெரியாதாடி? வீட்டுல இருந்து வெளியாகறப்பவே நாலு பூச்சாடிய இடிச்சு, தோட்டக்காரன உரசின்னு எங்களுக்குப் பீதிய கிளப்பிட்ட! உன் கைல காரைக் குடுத்துட்டு, நாங்க உசுர கைல புடிச்சிட்டு இருக்கவா? உங்கக்காவ சுதந்திரமா விடறோம்னா, சரக்கு மப்புல இருந்தாலும், சரியா ஓட்டிட்டு வந்துடறா! அதோட அவ கிட்ட இதை செய் அதை செய்யாதேன்னு நாங்க வாயைத் திறக்கவா முடியும்?” என அங்கலாய்த்தார் ரங்க நாயகி.
“உங்க ரெண்டு பேருக்கும் நான்தான் இளிச்சவாய்! அக்காட்ட காட்ட முடியாத கெடுபிடிலாம் என் கிட்ட காட்டறீங்க!” எனக் கண்ணீரைத் துடைத்தபடி பேசியவள், வாசலில் பி.ஏவுடன் நின்றிருந்த சக்தி அமரனைப் பார்த்ததும் வேகமாய் டைனிங் ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.
“அட சக்தி! வாப்பா! வா! இன்னிக்கு நான் கோயம்புத்தூருக்குக் கிளம்பனும்னு உனக்குத் தெரியும்ல! போகிற முன்ன உன் கிட்ட ஒரு விஷயம் நேரா சொல்லிட்டுப் போகலாம்னுதான் வரச் சொன்னேன்” என்றவாறே இவனிடம் வந்தார் சுப்பு ரத்தினம்.
“சொல்லுங்க மாமா!”
“அதான்ப்பா நீ சஜஸ்ட் பண்ணிருந்தியே, நமக்குன்னு ஒரு ஐ.டி விங் வச்சிக்கலாம்னு!”
“ஆமாம் மாமா”
“நானும் யோசிச்சுப் பார்த்தேன்பா! முதல்ல எனக்குப் புடிக்கல! செய்யற வேலைக்கு எதுக்கு விளம்பரம்னு நெனைச்சேன்! பிறகு நீ சொன்ன பாய்ண்ட்டையும் அலசிப் பார்த்தேன்”
“விளம்பரம்னு ஏன் மாமா சொல்றீங்க! தெரியப்படுத்தல்னு எடுத்துக்கலாமே! இப்போ ஒரு ரைட்டரோ, இல்ல ஆர்ட்டிஸ்ட்டோ, யாரா இருந்தாலும், அவங்க இந்திந்த சாதனையைச் செஞ்சிருக்காங்கன்னு அவங்களே சொல்லிக்கறதுல தப்பென்ன மாமா? அவங்க சொல்லாம அது மத்தவங்கள எப்படிப் போய் சேரும்? இது என்னோட நூறாவது புத்தகம், இது கண்ணை மூடிட்டே நான் வரைஞ்ச ஓவியம்னு அவங்களே சொன்னால் ஒழிய மத்தவங்களுக்கு எப்படி அது தெரியும்? அதுக்குப் பேரு தற்பெருமையோ சுயதம்பட்டமோ இல்லை! பகிர்தல்! இப்ப இருக்கற காலக்கட்டத்துக்கு நீங்க இப்படி செஞ்சித்தான் ஆகனும்! இல்லைனா, நீ என்னடா செஞ்ச நாட்டுக்குன்னு நாக்கு மேல பல்லப் போட்டுப் பேசுவானுங்க! அதனாலத்தான் நீங்க செய்யற நல்ல காரியங்கள மீம், போட்டோஸ், செய்தின்னு பரப்பி விடுவோம்! பொய்யா எதையும் சொல்லலியே மாமா! உண்மையத்தானே வெளியிடப் போறோம்! ஓரோருத்தான் ஒன்னுமே செய்யாம வாயால வடைச் சுட்டு, ஊரையே ஏய்ச்சிக்கிட்டு இருக்கானுங்க!”
“சரிதான் மருமகனே! நீங்களே அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க! உங்க கண்காணிப்புக்குக் கீழ இருக்கட்டும் அந்த ஐ.டி விங்”
“பண்ணிடலாம் மாமா” என்றவன்,
“மாமா! நீங்க பேசனத கேட்டேன்! உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, சிவமஞ்சரிய நான் பிக்கப் பண்ணி ட்ராப் ஆஃப் பண்றேன்! என் மேல நம்பிக்கை இருந்தா அனுப்பி விடுங்க” என முடித்தான்.