எபி 5

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்

இப்ப உள்ள அண்ட்டி ஹீரோ கதை தலைப்புகளுக்கு எல்லாம் இந்தப் பாட்டு முன்னோடியா இருந்திருக்குமோ!!!! எனக்கு ரொம்பப் பிடிச்சப் பாட்டு இது!


அத்தியாயம் 5



“ஊஷ்! ஊஷ்” எனப் பந்து பறக்கும் சத்தமும்,

“ஹ்ஹா! ஹ்ஹா!” எனப் பந்தை அடிப்பவர்கள் கொடுக்கும் சத்தமும் அந்த இடத்தை வியாபித்து நின்றது.

அது சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற க்ளப்பின் டென்னிஸ் அரங்கம். அங்கே ஆக்ரோஷமாக டென்னிஸ் பந்தை விடாமல் அடித்துக் கொண்டிருந்தான் சக்தி அமரன். உடல் வியர்வையால் குளித்திருக்க, போட்டிருந்த வெள்ளை நிற டீ ஷர்ட் உடலோடு ஒட்டிக் கொண்டு அவனது உடல் அழகை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

அவனுக்கு எதிராய் விளையாடிக் கொண்டிருந்த ரவீந்திரன் களைத்துப் போனான். சீறிப் பாய்ந்து வந்த பச்சை நிறப் பந்தை, அடித்தவனிடமே திருப்பி அனுப்பப் படாதபாடு பட்டான்! முயன்று விளையாடியவன், ஒரு கட்டத்தில் வலது கையை மேலே தூக்கி, சரண்டர் என்பது போல காட்டி விட்டு, தரையில் மடிந்து அமர்ந்து விட்டான்.

அவனை நோக்கி வந்த சக்தி,

“என்னடா! அதுக்குள்ள அவுட்டாகிட்ட?” எனக் கேட்டான்.

நண்பனின் அருகே அமர்ந்து கொண்டவன், கையில் வைத்திருந்த எனெர்ஜி பானத்தைக் கடகடவென அருந்தினான்.

“மனுஷன் மாதிரியாடா விளையாடற நீ!” என மூச்சு வாங்கியபடியே கேட்டான் ரவீ.

“நான் நல்லாத்தான் விளையாடறேன்! உனக்குத்தான் தெம்பில்ல உடம்புல! உன் கட்டில் எக்ஸர்சைஸ் அளவில்லாம போகுது போல! அதான் இந்த எக்சஸ்சைஸுக்கு உடம்பு ஒத்துழைக்க மாட்டுது!” என ரவீயின் முதுகில் படீரென ஒன்று வைத்தபடியே பேசினான் சக்தி.

“அந்த உடற்பயிற்சில இன்பம் இருக்குடா! இந்தப் பயிற்சில இம்சைத்தான் இருக்கு! பொண்ணுக் கூட பண்ணுற பயிற்சில புத்துணர்வு கிடைக்கும்! உன் கூட பண்ணுற பயிற்சில புத்தூருக்குத்தான் போகனும்! ஏன்டா இவ்ளோ வெறி?” எனக் கேட்டான் ரவீ.

“கொசு ஒன்னு என்னை டார்ச்சர் பண்ணிட்டே இருக்குடா! அடிச்சுத் தூக்கித் தூர போடலாம்னு பார்த்தா, கோலமயில் நடுவுல நின்னு வேணாம் வேணாம்னு தடுக்குது! ஒரே இம்சையா இருக்குடா!”

“அந்தக் கொசுவ காதும், காதும் வச்ச மாதிரி ஹிட் அடிச்சுக் கொன்னுடவா?”

“அது போகுற போக்கப் பார்த்தா, யாரும் கொல்லாம தானாவே செத்துப் போய்டும் மச்சி! கைலாம் ஊசிக் குத்துன தடங்கள் ஊதா கலர்ல தெரியுது! தண்ணி வண்டி வேற! உசுரோட இருக்கற வரைக்கும் என் கிட்டருந்து ஒதுங்கிப் போய்ட்டா போதும்னு இருக்கு!” எனச் சலிப்பாக சொன்னான் சக்தி அமரன்.

“நாம கார் ஓட்டிட்டுப் போகறப்ப, எதிர்த்தாப்புல வாகனம் வந்தா ஒதுங்கி வழி விட்டுப் பாதுக்காப்பா பயணிக்கறது இல்லையா! அது போல நீயும் ஒதுங்கிப் போய்டுடா! டென்ஷன் ஏத்திக்காத!” என நண்பனின் தோளில் ஆதரவாய்த் தட்டினான் ரவீ.

கார், வாகனம் என நண்பன் பேசவும், அன்று சிவரஞ்சனி இவன் காரை மோதிய தினத்துக்குப் பயணித்தது சக்தியின் மனம்.

அவளை அடித்து நொறுக்கி விடும் வெறியில்தான் பெண்ணை நெருங்கினான் சக்தி அமரன். சிவரஞ்சனியின் அருகில் போனதும்தான் கவனித்தான், அவள் நெற்றி ஓரத்தில் இருந்து லேசாய் இரத்தம் வருவதை. இடித்த வேகத்துக்கு ஸ்டீயரிங் வீலில் தலை மோதி இருந்தது போல! இரத்தம் வருவதை உணர்ந்தவள், அசட்டையாகக் புறங்கையால் அதைத் துடைத்தாள்.

“ஸ்டுப்பிட்! போதைல கார் ஓட்டக் கூடாதுன்னு தெரியாது உனக்கு?” எனச் சத்தம் போட்டான் இவன்.

கோபமாய் அருகில் போனவனுக்கு, ரத்தத்தைப் பார்த்ததும் இன்னும் கோபம் அதிகரித்தது.

“போதைல கார் ஓட்டக் கூடாது! ஆனா போதைல நடு ரோட்டுல டான்ஸ் மட்டும் ஆடலாமா மிஸ்டர் மேன்லி?” எனக் குளறியபடி கேட்டவள்,

“என் கூட ஒரு டான்ஸ் ஆடறியா ப்ளீஸ்!” என்றபடி அவன் கைப் பற்றிக் கொண்டாள்.

“அழகிய அசுரா

அழகிய அசுரா அத்துமீற

ஆசையில்லையா!” எனப் பாடியபடியே அவன் கையைப் பிடித்துக் கொண்டு இவளாகவே ஆடியவள், தடுமாறி, சரிந்து கீழே விழுந்தாள்.

தன் முன் விழுந்து கிடக்கும் பெண்ணவளைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்ட சக்தி அமரன், குனிந்து அவளைத் தூக்கினான்.

“இம்சைக்குப் பொறந்த இடியட்!” என முனகிக் கொண்டே அவளை வீட்டுக்குள் தூக்கிச் சென்றான்.

அதற்குள் சில பாதுகாவலர்கள் அவர்கள் அருகே ஓடி வந்தார்கள். சத்தம் கேட்டு மஞ்சரியும் ரங்க நாயகியும் கூட வெளியே வந்திருந்தார்கள்.

“என்னாச்சு?” எனப் பதட்டமாக மஞ்சரி கேட்க,

“என் கார இடிச்சிட்டு, இவ மயக்கம் போட்டுட்டா! டாக்டருக்குப் போன் பண்ணு! நான் சோபால உங்கக்காவ படுக்க வச்சிட்டுப் போறேன்” என்றான்.

உள்ளே வந்து சோபாவில் அவளைக் கிடத்தியவன், தனது சட்டையைக் குனிந்துப் பார்த்தான். வெள்ளை நிற ஷர்ட்டில் அங்கங்கே திட்டுத் திட்டாய் சிவப்பு ரத்தம்.

“ம்ப்ச்” எனச் சலித்துக் கொண்டான் சக்தி.

“மன்னிச்சிருங்க தம்பி! வேற சட்டை எடுத்துட்டு வரச் சொல்றேன்” என்ற ரங்க நாயகி கலங்கியக் கண்களுடன் பெரிய மகளின் நெற்றிக் காயத்தைத் தன் சேலையால் ஒற்றி ரத்தப் போக்கை நிறுத்த முனைந்தார்.

“பரவால ஆண்ட்டி! நான் கிளம்பறேன்!” என்றான் சக்தி.

போன் பேசி விட்டு வந்த மஞ்சரியைப் பார்த்து,

“நான் வரேன்டா!” என மெல்லியக் குரலில் சொல்லி, அவளுக்கானப் பிரத்தியேகமான புன்னகையை வழங்கினான் இவன்.

அவளும் சரியெனத் தலை அசைத்தாள். நகரப் போனவனின் பேண்ட்டின் ஒரு பக்கத்தை இறுக்கமாகப் பற்றி இருந்தாள் சிவரஞ்சனி. குனிந்து அவள் கையை விடுவித்தவன்,

“குடிகாரக் குப்பி” என முணுமுணுத்தபடி விலகி நடந்தான்.

மஞ்சரியின் ட்ரைவரும் லீவில் இருந்து வந்திருக்க, இவனுக்கு பெண்ணவளின் தரிசனம் கிடைக்காமல் போனது. அவளிடம் இருந்து பதில் வரும் என எதிர்ப்பார்த்து ஏமாந்து போனவனுக்கு அவள் மேலும் கோபம் வந்தது. மஞ்சரியின் அலைப்பேசி எண்ணைக் கண்டுப்பிடித்து, அழைப்பெடுத்தான் சக்தி அமரன்.

“ஹலோ!” என அவள் சொன்ன நொடி, படபடத்து விட்டான் இவன்.

“நானே வந்து பிடிச்சிருக்குன்னு சொல்லவும், தவிக்க விட்டுப் பார்க்கறியா மஞ்சு? புடிச்சா புடிக்கிதுன்னு சொல்லு! அடுத்த ஸ்டெப்புக்குப் போறேன்! புடிக்கலைன்னா புடிக்கலைன்னு சொல்லு! அடுத்த ஆளுக்குப் போறேன்! இப்படி ஒன்னும் சொல்லாம என்னைப் புலம்ப விடாத”

“சக்தி! நான் பார்க்க மாடர்னா இருக்கலாம்! ஆனா என்னோட சில சிந்தனைகள் எல்லாம் கொஞ்சம் பழமையானது! ஒரே காதலன், அவனே கணவன்ற பாலிசி எனக்கு! சும்மா பிடிச்சிருக்குன்னு பழகிட்டு, நாள பின்ன சரி வரலன்னு கழட்டி விட்டுட்டுப் போக முடியாது என்னால! டைம் எடுத்துக்கலாம் சக்தி! ப்ரெண்டா பழகிப் பார்க்கலாம்! பிறகு நெக்ஸ்ட் ஸ்டேப் போகலாமா இல்லையான்னு முடிவெடுக்கலாம்! லைக் யூக்கும், லவ் யூக்கும் நடுவுல கொஞ்ச நாள் இருந்து பார்க்கலாம் சக்தி! ப்ளீஸ்”

சற்று நேரம் அமைதி இவனிடம்.

“மஞ்சு!”

“ஹ்ம்ம்”

“இது வரைக்கும் பொண்ணுங்க யாரையும் லைக் யூ கேட்டகரில கூட நான் வச்சிருந்தது இல்ல! யூ ஆர் தி ஓன்லி வான்(one)! ஒத்துக்கறேன்! உன் மேல எனக்கிருக்கற அட்ராக்‌ஷனுக்காக இந்த டீலிங்குக்கு ஒத்துக்கறேன்! பேசிப் பழகாம தூர நின்னா, லைக் யூல இருந்து ரிவர்ஸாகி நீ எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன ஸ்டேஜ்கு போய்டும் பேபி! சோ அடிக்கடி மீட் பண்ணி பழகிக்கலாம்!” எனப் பேச்சை முடித்திருந்தான்.
 
Last edited:
அன்றிலிருந்து வீக்கேண்டில் சில மணி நேரங்கள் இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்வார்கள். அவள் கண்களில் தெரிந்த சிநேக பாவம் கொஞ்சம் கொஞ்சமாய், ஸ்ருங்கார பாவமாய் மாற உவகையின் உச்சத்தில் நின்றான் சக்தி.

“டேய் மச்சி!” எனச் சத்தமாய் குரல் கேட்க, நினைவலைகளில் இருந்து வெளியே வந்தான் சக்தி அமரன்.

“என்னடா?”

“கிளம்பலாமா, இல்ல இன்னொரு ரவுண்டு போலாமான்னு எவ்ளோ நேரமா கேக்கறேன்! கனா கண்டுட்டு இருக்க நீ”

“மச்சி”

“என்னடா?”

“காதல்ல விழுந்துட்ட பொண்ணோட சிம்ப்டம்ஸ்லாம் எப்படிடா இருக்கும்?”

“அதை என் கிட்ட ஏன்டா கேக்கற?”

“நீதானே மச்சி நம்ம கேங்லயே காதல் மன்னன்! பத்துக்கும் மேல லவ் பண்ணிருக்கியே!”

“உன் மேல லவ் இருந்தா, உன்னைப் பார்த்ததும் அவ கண்ணுல மின்னல் வெட்டும்! உன் மேல இருந்து பார்வைய அவளால அகற்றவே முடியாது! நீ பேசறத, வாய்ல ஈ போகறது கூட தெரியாம கேட்டுட்டு இருப்பா! உன்னைப் பத்தி, குடும்பத்த பத்தின்னு நோண்டி, நோண்டி விசாரிப்பா! பொருள் வைக்க முடியாத பை, இஸ் தொப்பைன்னு நீ மொக்க ஜோக் சொன்னாலும் விழுந்து புரண்டு சிரிப்பா! இது மாதிரி அடுக்கிட்டே போகலாம் மச்சி!”

“இது எல்லாமே இருக்கு மச்சி!”

“அப்படிங்கற!! காங்கிராட்ஸ்டா மச்சி! அப்போ ட்ரீட் குடு! இன்னிக்கு டிஸ்கோதே போலாமா?” என ஆர்ப்பரித்தான் ரவீ.

“இனி தண்ணி, தம்மு எல்லாம் திரை மறைவிலத்தான் மச்சி!”

“பொண்ணு கிடைச்சதும் நண்பன மட்டும் கழட்டி விடாம நல்ல பழக்கங்களையும் கழட்டி விட்டுடறீங்கடா! டூ பேட்”

“நான் இப்படித்தான்னு யார் ஏத்துக்கறாங்களோ இல்லையோ, என்னோட பெட்டர் ஹால்ப் ஏத்துக்கனும் மச்சி! குறை நிறையோட ஏத்துக்கறதுதானே லவ்!”

“அப்புறம் ஏன்டா ஒளிவு மறைவு?”

“அன்பு பாசக் கண்ணாடி வச்சிப் பார்க்கும்! அதுல குறைகள் கண்ணுக்குத் தெரியாது! அரசியல் பூதக் கண்ணாடி வச்சிப் பார்க்கும்! அதுல குறைகள் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்! இந்தச் சக்தி அரசியல்ல கால் ஊணனும்னா நல்லவன் மாதிரி, உத்தம சீலன் மாதிரி சீன் போட்டுத்தான் மச்சி ஆகனும்” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தான் ரவீ.

நண்பனைப் பார்த்துக் கண் சிமிட்டினான் சக்தி அமரன்.

“நீ போற போக்கைப் பார்த்தா, சாதிச்சிடுவ போலிருக்கே! நான் கூட, இதுவும் நீ கத்துக்கிட்ட காலிகிராஃபி, ஜூடோ, ட்ரம் மாதிரி ஒரு டெம்ப்ரவரி டைம் பாசிங்னு நெனைச்சேன் மச்சி” என்றவன் நண்பனை இறுக்கமாய் அணைத்து,

“ஆல் தி பெஸ்ட் வருங்கால முதலமைச்சரே” என்றான்!

அந்த நேரம் சக்தியின் தொலைப்பேசி அழைத்தது. மஞ்சு எனும் பெயர் வர, புன்னகையுடன் அழைப்பை ஏற்றான்.

“சக்தி! அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்காரு” எனப் பதட்டமாகச் சொன்னாள் சிவமஞ்சரி.

(உயிராவாயா???)
 
Last edited:
Eppaum suspens la midikkurengala mam, hero - heroine ( sakthi- ranjani)ippdi iruntha eppam like panni eppam love panni next eppam pokurathu mam
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 5)


இவன் என்னமோ சின்சியராத்தான் காதலிக்க ஆரம்பிச்சிட்டான். ஆனா, மஞ்சரி கொஞ்சம் தயங்குறாளோ...? போகட்டும்,
இந்த ரஞ்சனியும் இல்ல போதையில இருக்கும்போது மட்டும் அவனோட கொஞ்சி, குலாவுறா, டான்ஸ் ஆடுறா.
அதே போதை தெளிஞ்சப்பிறகு ஒரேயடியா பாயுறா, மோதுறா.
மோதலும் ஒருவகை காதல் தானே...?


இப்ப ரஞ்சனி மஞ்சரி ரெண்டு பேருல யாரை உயிராவாயான்னு கூப்பிடறான்னு புரியலையே..?
எனக்கென்னவோ, ரஞ்சனி தான் உருகுதே, மருகுதேன்னு அந்த இடத்தை புடிப்பான்னு எனக்குள்ள இருக்கிற பட்சி லைட்டா கூவுது. கரெக்ட்டா ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
ரஞ்சினிக்கு அப்டி என்ன தான் ஆச்சு.. ஏண் இப்பிடி நடந்துக்குறா..

அப்புறம் என்ன.. தலைமை ஹாஸ்பிடல்.. நெக்ஸ்ட் தலைமை தாங்க வேண்டி தானா 🤷
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏதோ நம்மாளை டிஸ்டர்ப் பண்ணுதுபோலயே 🙄🙄🙄 இவனைய முன்னமே பாத்திருப்பா போல. ரோட்டுல ஆடுனதை சொல்லறாளே.
அடப்பாவி என்றாளு செத்துப் போயிருவானு சொல்லறியாடா😤😤😤😤😤😤😤😤.

இதுல தொரைக்கு லவ் சிம்டம்ஸ் பத்தி ஆராய்ச்சி வேற 😑😑😑😑 உன்ற லவ் இப்புடிதான் டா ஆகப் போகுது.
ஏன்னா உன்ற மாமனாரு உன்க்கு ஆப்பூ அடிக்கப் போறாரு அதான் ஆஸூபத்திரில இருக்காரு😎😎😎
 
அக்கா தங்கை போட்டியா
வ்ந்துருமோ
இப்ப மாமனார் ஆஸ்பத்திரில
அப்ப ஒரு கல்யாணம் உறுதி
 
ரஞ்சனிக்கு என்ன தான் பிரச்சனை உடம்பை கூட கெடுத்து வைக்கிற அளவுக்கு போதைல மூழ்கி கிடக்குறா 🤔🤔

நம்மாளுக்கு இப்போ தான் எதிர்பக்கம் இருந்து ரெஸ்பான்ஸ் வர ஆரம்பிச்சு இருக்கு...😎. அதுக்குள்ள லவ்க்கு ஆப்பு வச்சுடுவாரோ தலைவரு 😳😳😳😳
 
Back
Top