எபி 6

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg


அத்தியாயம் 6




அந்தத் தனியார் மருத்துவமனையில் அமைக்கப் பட்டிருந்த வி.வி.ஐ.பி விங்கில் பலத்தப் பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது. சாதாரண உடையில், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத மாதிரி, பாதுகாவலர்கள் அந்த மருத்துவமனையில் அங்கிங்கு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

மஞ்சரியின் தொலைப்பேசி அழைப்பை மீண்டும் அசைப் போட்டபடியே சுப்பு ரத்தினம் அனுமதிக்கப் பட்டிருந்த அறை நோக்கி நடந்தான் சக்தி அமரன். அவனோடு ஒரு பாதுகாவலரும் வந்தார்.

“என்னாச்சு மஞ்சு?”

“என்ன விஷயம்னே தெரியல சக்தி! அப்பா போன் பண்ணப்போ, ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்! இப்ப எதுவும் சொல்ல முடியாதுன்னு போன வச்சிட்டாரு! நாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்னா, வீட்டுல உள்ள சீஃப் செக்கியூரிட்டி எங்கேயும் இப்போதைக்கு வெளிய போகக் கூடாதுன்னு தடுத்துட்டாரு! என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னே தெரியல! அம்மா அழுதுட்டே இருக்காங்க!” எனப் பதட்டமானக் குரலில் சொன்னாள் மஞ்சரி.

“எந்த ஹாஸ்பிட்டல்னு தெரியுமா?” எனக் கேட்டான் இவன்.

அவள் மருத்துவமனைப் பெயரைச் சொன்னதும், விசாரித்து விட்டு வருவதாகக் சொல்லி அழைப்பை நிறுத்தினான்.

“என்னாச்சி மச்சி?”

“என் வருங்கால மாமனார் ஹாஸ்பிட்டல்ல இருக்காராம்டா! என்ன ஏதுன்னு தெரியல! நான் உடனே கிளம்பனும்! கார்ல மாற்றுடுப்பு வச்சிருப்பேன்! எடுத்துட்டு வந்திடுடா! நான் இங்க க்ளப்லயே ஷவர் பண்ணிடறேன்” என ஓடினான் சக்தி அமரன்.

காரை செலுத்தும் போதே சுப்பு ரத்தினத்தின் பி.ஏ இவனுக்கு அழைப்பெடுத்திருந்தார். மருத்துவமனைக்குச் சக்தியை வரச் சொன்னவர், வார்ட் நம்பர், தளம் எல்லாம் சொல்லி, கீழே பாதுகாவலர் ஒருவர் அவனுக்காகக் காத்திருப்பார் எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.

அறையை நெருங்கியதும்,

“நீங்க உள்ள போங்க சார்! வேற யாருக்கும், இன்க்ளூடெட் மீ, இங்க அனுமதி இல்ல” எனச் சொல்லிக் கீழே போய் விட்டார் அந்த செக்கியூரிட்டி.

சுப்பு ரத்தினத்துக்கு என்ன ஆனதோ, ஏதானதோ எனப் பதட்டமாக இருந்தது இவனுக்கு! கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன், அதிர்ந்து போனான். அங்கே கட்டிலில் படுத்திருந்தது சுப்பு ரத்தினமல்ல! அவரது சீமந்தப் புத்திரன் திலகன். உடலில் ஓரிடம் விடாமல் கட்டுப் போடப் பட்டிருக்க, பிணம் போல் கிடந்தான் அவன். மானிட்டரில் ஓடிய கோடுகள் மட்டும் இல்லா விட்டால் உயிரற்ற உடல் என்றே சொல்லி விடலாம். அவன் அருகில் கண்கள் கலங்க, உடல் நடுங்க அமர்ந்திருந்தார் சுப்பு ரத்தினம்.

“மாமா” என மெல்ல அழைத்தான் இவன்.

“பாருங்க மாப்பிள்ளை என் மகன! உடையாத எலும்பில்லையாம் உடம்புல! சிதைச்சுப் போட்டிருக்கானுங்க! இருபதே வயசுத்தான்! என் ஆஸ்த்திக்குரிய ஆண் வாரிசு! யார் வம்புக்கும் போக மாட்டான்! அவன் உண்டு, அவன் படிப்பு உண்டுன்னு இருப்பான்! இவனுக்குப் போய் கொலைக் காட்டுக் காட்டிருக்கானுங்களே! தாங்கவே முடியலப்பா” என்றவருக்குக் கண்களில் கண்ணீர் விடாமல் வழிந்தது.

வேகமாய் அவரை நெருங்கிய சக்தி, ஆதரவாய் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். கம்பீரமாகப் பார்த்த ஒரு மனிதரை அப்பொழுதுதான் கலங்கியத் தோற்றத்தில் பார்க்கிறான் சக்தி.

“மாமா! கண்ட்ரோல் பண்ணிக்கோங்க! என்னாச்சு? எப்படியாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்டான் சக்தி.

இவனால் கண் கொண்டு திலகனைப் பார்க்க முடியவில்லை. அவனிடம் அவ்வளவாகப் பேசியதில்லை சக்தி. கண்ணில் படும் போது அளவான சிரிப்பைக் கொடுத்து விட்டுக் கடந்து போய் விடுவான் அவன். அமைதியானச் சுபாவம்.

சுப்பு ரத்தினம் மகன் முகத்தை வெறித்தபடி இறுகிப் போய் அமர்ந்திருக்க, பி.ஏதான் நடந்ததைச் சொன்னார்.

“திலகன் தம்பி காலேஜ் மேட்ஸ் கூட பாண்டிச்சேரிக்கு ட்ரீப் போறதா சொல்லிட்டுப் போனாரு சக்தி! ரெண்டு நாள் நல்லா சுத்திருக்காங்க! நிறைய போட்டோஸ்லாம் எடுத்திருக்காங்க! நேத்து நைட், தம்பியோட போன்ல இருந்து சாருக்கு மேசேஜ் வந்திருக்கு! இவர் எடுத்துப் பார்த்தா, எங்கயோ ஒரு பாழடைஞ்ச பங்களால தம்பியைத் தலைக் கீழாத் தொங்க விட்டிருக்கற போட்டோ வந்திருக்கு! உடம்புல ஒட்டுத் துணி இல்ல! படத்துக்குக் கீழ அட்ரஸ் அனுப்பி, ‘வந்து அள்ளிட்டுப் போ’ன்னு மேசேஜ்! வெளிய விஷயம் கசியாம ஐயா சில நம்பிக்கையான ஆட்கள வச்சி இங்க கொண்டு வந்து அட்மிட் பண்ணிட்டாரு! அந்த இடத்துல தம்பியோட போனோ, போட்டிருந்த சட்டையோ எதுவுமே இல்ல! அங்க வச்சி அடிச்சதுக்கான எந்தத் தடயமும் கூட இல்ல!”

“போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணீங்களா அங்கிள்?”

“ஐயா வேணான்னுட்டாரு!”

“ஏன் மாமா?” எனக் கோபமாகக் கேட்டான் சக்தி.

அவனை நிமிர்ந்து பார்த்தவர்,

“இந்த மாதிரி விஷயம்னு வெளிய கசிஞ்சா, என்னென்னவோ ஸ்பெகுலேட் பண்ணி வைரல் ஆக்கிடுவாங்க சக்தி! இத்தனை நாள் நான் கட்டிக் காப்பாத்திட்டு வந்த என்னோட அரசியல் இமேஜ் டெமேஜாகும்! அடுத்த வருஷம் தேர்தல் வேற வருது!” என்றார்.

“புள்ளைய விட, அரசியல் இமேஜ் முக்கியமாகிடுச்சா மாமா?” எனக் கொதித்தான் இவன்.

“இள ரத்தம், அதான் கொதிக்கற! பெத்தவன் எனக்குக் கோபம் இல்லையா சக்தி! செஞ்சவன வெட்டிப் பொலி போடனும்ங்கற அளவுக்குக் கொதிக்குது! ஆனா இது கோபத்தக் காட்டற நேரமில்ல! விவேகத்தக் காட்டற நேரம். ட்ரீப்புக்குப் போனவன், இன்னும் ட்ரீப்ல இருக்கறதாவே இருக்கட்டும்! வீட்டுல உள்ளவங்களுக்குக் கூட இப்போதைக்கு எதுவும் தெரிய வேணாம்! நானே வீட்டுக்குப் போனதும் சொல்லிக்கறேன்! உன்னை ஏன் அழைச்சிருக்கேன்னா, எனக்கு உன்னோட ஹெல்ப் தேவைப்படுது சக்தி”

“சொல்லுங்க மாமா! நான் என்ன செய்யனும்?”

“நம்ம ஐ.டி விங்ல வேலைப் பார்க்கறவங்க பெரிய கில்லிங்கன்னு சொன்னல்ல, அவனுங்கள வச்சி எதாச்சும் கண்டுப் புடிக்க முடியுதான்னு பாரு! தம்பி போனு சிக்னல் கடைசியா எங்கிருந்தது, இப்ப எங்கிருக்கு இப்படிலாம் எதாவது ட்ரேஸ் பண்ண முடியுதான்னு பாரு! அவன் கூட ட்ரிப்புக்கு போன ரெண்டு பயலுங்கள பிடிச்சு கொடாவுன்ல அடைக்கச் சொல்லிருக்கேன்! பிரிச்சு மேஞ்சும் கூட அவனுங்களுக்கு ஒன்னும் தெரியாதுன்னு சாதிக்கறானுங்க!”

“அதெப்படி மாமா தெரியாம போகும்? விசாரிக்கற விதத்துல விசாரிச்சா, விஷயம் தானா வெளிய வரும்! நான் போய் அவனுங்கள பார்க்கறேன்!”

“சரிப்பா! நம்மால எதுவும் முடியலைனா, பிறகு ரகசியமா போலிஸ நாடலாம்! இவன காதும் காதும் வச்ச மாதிரி சிங்கப்பூருக்கு ட்ரீட்மெண்டுக்குக் கொண்டு போறதுக்கு ஏற்பாடு செய்ய சொல்லிருக்கேன்! பி.ஏ அதைப் பார்த்துப்பாரு! நீ கட்சி ஆபிச கொஞ்சம் கவனிச்சுக்கோ! கார்மேகம் லீவ்ல போய்ருக்கறதுதான் உனக்குத் தெரியுமே!”

“நான் பார்த்துக்கறேன் மாமா! நீங்க அமைச்சரா இல்லாம, சில நாளுக்காச்சும் இவனுக்கு அப்பாவா இங்கயே இருங்க!” என்றவன், திலகனை வருத்தத்துடன் பார்த்து விட்டுக் கட்சி ஆபிசுக்குக் கிளம்பினான்.

கட்சி கட்டிடத்தில் ஐ.டி விங்குக்காக ஓர் அறையை ஒதுக்கித் தந்திருந்தார் கார்மேகம். அதனுள்ளே சக்தி நுழைய,

“வாங்க பாஸ்!” என வரவேற்றனர் இவன் வேலைக்குச் சேர்த்திருந்த ஹேரி, சாம் எனும் இளைஞர்கள் இருவரும்.

அவர்களிடம் விஷயம் இதுவெனச் சொல்லாமல், போன் சிக்னல் மேட்டரை மட்டும் சொன்னான் சக்தி. அதோடு திலகனின் சோசியல் மீடியா அக்கவுண்ட்களை கொஞ்சம் நோண்டிப் பார்க்கச் சொன்னான். அவர்கள் இருவரும் வேலையில் இறங்க, மஞ்சரிக்கு மேசேஜ் ஒன்றைத் தட்டி விட்டான் இவன்.

“ஆல் ஓகே பேபி! அப்பா இஸ் ஃபைன்! அப்புறம் வீட்டுக்கு வந்திடுவாரு”

இவனது மேசேஜைப் பார்த்ததும் உடனே அழைத்து விட்டாள் மஞ்சரி.
 
Last edited:
“ஹலோ! சொல்லு மஞ்சு”

“நெஜமா ஆல் ஓகேவா? முன்ன பேசனப்ப அப்பா குரலே சரியில்லாம இருந்தது சக்தி”

“ஒன்னும் பிரச்சனை இல்லைடா! நீ எதையும் வர்ரி பண்ணிக்காதே! சாப்பிட்டியா நீ?” என அக்கறையாகக் கேட்டான் இவன்.

“சாப்பிடவே தோணல சக்தி!” எனச் சோர்வாகச் சொன்னாள் மஞ்சு.

“உங்கக்கா சாப்பிட்டாளா?”

“ஏன் அவள பத்தி கேக்கறீங்க?”

“பதில் சொல்லு பேபி!”

“ரெண்டு ப்ளேட் பிரியாணி! ரசமலாய் ரெண்டு கப்!”

“பார்த்தியா மஞ்சு! தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறடா! வயித்துக்கு கஷ்ட நஷ்டம் ஏதும் தெரியாது! டாண்ணு டைமுக்கு பசி எடுத்திடும்! அது கிட்ட போய், அப்பாக்கு உடம்பு முடில, பிள்ளைக்குக் காய்ச்சல், புருஷனுக்கு வேலைப் போச்சுன்னு சமாதானம் சொல்ல முடியுமா? சொன்னாலும்தான் கேக்குமா! போய் சாப்பிடு போ! இதுல மட்டும் உங்கக்கா மாதிரி இருந்துக்கடா! இப்போ எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு! வில் கால் யூ லேட்டர்! பாய் பேபி! லைக் யூ”

பேசி முடித்தவன், நாற்காலியை வேலைப் பார்க்கும் இருவரின் அருகில் நகர்த்திப் போட்டு அமர்ந்தான்.

“பாஸ்! அந்தப் போனோட சிக்னல் கடைசியா காட்டுக்குள்ள இருக்கற இந்த வீட்டுப் பக்கம்தான் காட்டுது! நேத்து நைட் பத்து மணிக்கு மேல போன் ஆஃப் பண்ணப் பட்டிருக்கு!” என மேப்பில் ஓரிடத்தைக் காட்டினான் ஹேரி!

சென்னையைத் தாண்டி பாண்டிச்சேரி போகும் வழியில் ஒரு காட்டில் இருந்தது அவ்வீடு!

“அந்த வீட்டு ஓனர் வெளிநாட்டுக்குப் போனப்ப ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாரு! வாரிசு யாரும் இல்லாம, வீடு அப்படியே பாழடைஞ்சு போச்சு! பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதை கட்டி விட்டதுல அங்க கஞ்சா அடிக்கறவனுங்க கூட போகறத நிறுத்திட்டானுங்க!”

“ஏன்டா ஹேரி! சிம்ம வெளிய எடுத்துட்டா கூட போன் எங்கிருக்குன்னு கண்டுப் புடிக்க முடியும்னு படிச்சேன்! அப்படி உன்னால அது எங்கிருக்குன்னு கண்டுப் புடிக்க முடியாதா?”

“ட்ரை பண்ணேன் பாஸ்! முடியல! ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டா ரொம்பவே கஷ்டம் பாஸ்! நான் எதுக்கும் ஒரு கண் வச்சிட்டே இருக்கேன், எப்பவாச்சும் ஆன் ஆகுதான்னு!”

“சரிடா!”

“பாஸ்! இங்க பாருங்க!” என அழைத்தான் சாம்.

அவனது மானிட்டரைப் பார்த்த சக்தி அமரன், அதிர்ந்து போனான்!

“அடங்கொக்கமக்கா!”



(உயிராவாயா???)
 
இவனுங்க மொகரகட்ட எல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவனுங்க மாதிரி தெரியலையே😏... அக்கா ஏதோ சோக்கா வேல பாத்துருக்கா போலயே🤔😏 இல்லனா 2 ப்ளேட் பிரியாணி அதுவும் இனிப்புடன் எங்கயோ இடிக்குதே🤔🤔... ஆனாலும் கடைசில ரைட்டர் ட்விஸ்ட் பண்ணிடுவாப்ல.. Will wait and watch
 
நிஷ்லிங், இப்போலாம் வெறும் டிரெய்லர் தான் போடறீங்க🙄

ஐஸ்கிரீம் ஆர்வமா சாப்பிட ஆரம்பிக்கும்போதே பிடுங்கிறீங்க😒

ஏன் இப்போ ஒரு புது கேரெக்டர்😲
சக்தி மானிட்டர்ல என்ன பார்த்தான்😨

நாளைக்கே அடுத்த எபி வேண்டும் 😣
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 6)


அச்சோ...! இது என்ன ஒண்ணும் அறியாத புள்ளை மேல பாய்ஞ்சிருக்காங்க...?
இந்த திலகன் நிசமாவே ஒண்ணும் அறியாத அப்பாவி புள்ளையா, இல்லை அறிஞ்ச புள்ளையா...? அக்கா எப்படியோ அதே வழியில இவனும் முன்னேறி போயிட்டானோ...?
அது சரி, இது பசங்களால ஏற்பட்ட விளைவா ? இல்லை சுப்பு ரத்தினத்துக்கு கொடுக்கப்பட்ட மிரட்டலா...? அப்படின்னா, திலகன் விஷயத்தை கமூக்கமா மூடி மறைச்சா, நெக்ஸ்ட் அடி சுப்புரத்தினத்தோட பொண்ணுங்க மேலேயோ, இல்லை பொண்டாட்டி மேலேயோ, இல்லை அவருக்கே விழாதுன்னு என்ன க்யாரண்டி...? ஒண்ணும் புரியலையே...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
😍😍😍

எனக்கு என்னமோ திலகனுக்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் சக்தியா இருக்குமோ? 🤔🤔 இப்ப சுப்பு வேற கட்சி ஆபிச சக்தியை பார்த்துக்க சொல்றாரு..ஒருவேளை கட்சிக்குள்ள சீக்கிரமா நல்ல பதவிக்கு வரணும்னு இவனே பண்ணி இருப்பானோ? 😒😒
 
அருமையான டீ பதிவு வனிம்மா. இப்புடிக்கா திரும்பி அப்புடிக்கா பாத்தா தொடரும் ன்னு இருக்கு ப்பா.😔☺️☺️☺️🤭🤭🤭
நம்மாளு பிரியாணி ரசமலாய் ன்னு வெளுத்து வாங்கி இருக்கறதை பாத்தாக்க ஆஸூபத்திரில படுத்தவனுக்கு நடந்த சம்பவம் தெரியும் 😝 😝 போலயே.
 
இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு? அப்போது எதிரிங்களா? இல்ல இவனே ஏதாவது வினையை இழுத்து விட்டிருக்கானா?
 
திலகனும் பெரிய அக்கா மதிரிதானா ?. சக்தி கேப்பில் மனதை புரிய வைக்கிறான்.
 
😍😍😍

எனக்கு என்னமோ திலகனுக்கு நடந்த சம்பவத்துக்கு காரணம் சக்தியா இருக்குமோ? 🤔🤔 இப்ப சுப்பு வேற கட்சி ஆபிச சக்தியை பார்த்துக்க சொல்றாரு..ஒருவேளை கட்சிக்குள்ள சீக்கிரமா நல்ல பதவிக்கு வரணும்னு இவனே பண்ணி இருப்பானோ? 😒😒
எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு
🤔😁🥹
 
என்ன இப்டி ஒரு டுவிஸ்டு... கார்மேகம் லீவ்... சக்திய பாத்துக்க சொல்றது... அக்கா பிரியாணி வித் ரசமலாய்..🙄🧐 எல்லாமே இடிக்குதே... உனக்கு உதாரணம் சொல்ல வேற ஆளு இல்லையா டா.. நீ ஏன் எப்போ பாரு அவள நினைச்சுட்டு இருக்க 🤷 யாரு பண்ணி இருந்தாலும் இப்டி பண்றது சரி இல்ல தானா..☹️ ஒரு வேலை இவனும் அக்காவ ஃபாலோ பண்ற தறுதலையோ 🤔🤔🤔🤔
 
மாமனாரை படுக்கப் போட்டு கல்யாணத்த முடிப்பீங்கன்னு பார்த்தா மச்சானை அடிச்சு பிரிச்சு ஒட்டு போட்டு போட்டுருக்கீங்க...🤭🤭🤭🤭.

யார் இப்படி பண்ணியிருப்பா அக்கா வேற பிரியாணி ரசமலாய் ன்னு என்ஜாய் பண்ணிட்டு இருக்கா 🙄🙄🙄 அவளுக்கு தெரிஞ்சு இருக்குமோ 🤨
 
Back
Top