VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,

அத்தியாயம் 7
“தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்”
சிவபுராணம் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க, ஒப்பாரி சத்தம் அந்த வீட்டை நிறைத்து நின்றது. வெளியே கட்சிக்காரர்கள் அழுதபடி நின்றிருக்க, வீட்டின் முன் பக்க வரவேற்பறையில் இறுகிப் போய் அமர்ந்திருந்தார் சுப்பு ரத்தினம். அவரைச் சுற்றி மற்ற துறை அமைச்சர்கள் சிலரும் இருந்தார்கள்.
சக்தி அமரனும், சுப்பு ரத்தினத்துக்கு மிக நம்பிக்கையானச் சிலரும் அங்கிங்கு ஓடி நடக்க வேண்டியக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வீட்டின் உள் வரவேற்பறையில் திலகனின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அமர்ந்து கதறி அழுதுக் கொண்டிருந்தார் ரங்க நாயகி. அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சரிக்கு அழுதழுது முகமெல்லாம் வீங்கிக் கிடந்தது.
பார்வை எங்கோ வெறித்தபடி இருக்க, கால் இரண்டையும் நெஞ்சருகே அணைத்துப் பிடித்தபடி முட்டியில் தலை வைத்து அமர்ந்திருந்தாள் சிவரஞ்சனி. அவளுக்கும் கண்கள் கலங்கித்தான் இருந்தன.
ட்வீட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா, செய்தி சானல்கள், பத்திரிக்கை என எல்லா இடங்களிலும் திலகனின் இறப்புச் செய்தி வெளி வந்திருந்தது. நியூஸ் சானல்களில் ஃப்ளாஷ் நியூசாக அமைச்சர் சுப்பு ரத்தினத்தின் மகன் சாலை விபத்தில் மரணம் எனச் செய்தி போட்டு சுப்பு ரத்தினத்தின் அரசியல் வாழ்க்கையும் அலசினார்கள். தொண்டர்களோ ஊரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் அடித்து ஒட்டித் தங்கள் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். சற்று முன்புதான் முதலமைச்சர் போன் செய்து சுப்பு ரத்தினத்திடம் தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.
மர்ம நபரோ/ நபர்களோ அடித்த அடியில் வெளிக் காயங்கள் மட்டுமல்லாது, உள் உறுப்புகளும் பலத்த சேதமடைத்திருந்தன திலகனுக்கு. சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அவன் உடம்பில் வலு இல்லை என டாக்டர்கள் சொல்லி இருக்க, சுப்பு ரத்தினம் பிடிவாதமாக இருந்தார்.
“மாமா! இண்டெர்னல் ப்ளீடிங் வேற இருக்குன்னு டாக்டர் சொல்றாரு! இப்போ கட்டில விட்டு, லேசா நகர்த்தறதே தப்பா போயிடலாம்! இங்க இல்லாத ஃபெசிலிட்டியா? நாமத்தான் சிங்கப்பூர் போகனும்னு இல்ல! அங்க இருந்து ஸ்பெஷலிஸ்ட் டாக்டர வர வைக்க ஏற்பாடு பண்ணிட்டேன்! இன்னைக்கு நைட்குள்ள வந்திடுவாரு!” எனச் சுப்பு ரத்தினத்தைச் சமாதானப் படுத்துவதற்குள் படாதபாடு பட்டு விட்டான் சக்தி.
அன்றைய இரவு சிங்கப்பூரில் இருந்து வந்த சைனிஸ் டாக்டருமே, இனி நம் கையில் ஏதும் இல்லையெனக் கூறி விட்டார். விடிகாலையில், திலகனிடம் லேசாய் அசைவிருந்தது. அந்த நேரம் சுப்பு ரத்தினத்தோடு அங்குத்தான் இருந்தான் சக்தி. திலகன் லேசாய் கண் திறந்து பார்க்க,
“மாமா! திலகன் கண்ணைத் திறந்துட்டான்” என நாற்காலியில் சாய்ந்து கண் மூடி இருந்தவரை எழுப்பினான் சக்தி.
மகன் அருகே வேகமாய் ஓடினார் சுப்பு ரத்தினம்.
“அப்பா!” என லேசாய் உதடு அசைந்தது.
“என் ராசா! உனக்கு ஒன்னுமில்லைய்யா! பொழச்சுக்குவ! அப்பா எப்படியாவது உன்னைக் காப்பாத்திடுவேன்” எனக் கண்ணீருடன் அவன் முகம் வருடினார் இவர்.
அவன் பார்வை சுப்பு ரத்தினத்தையும், அவர் அருகில் நின்ற சக்தியையும் ஒரு முறை வலம் வந்தது. பின் மெல்ல கண்கள் மேலே சொருக ஆரம்பிக்க, அவசர அழைப்பு பட்டனைத் தட்டிய சக்தி,
“திலகன்! திலகன்! ஸ்டே வித் அஸ்” எனக் கத்தினான்.
“தம்பி! ராஜா! ஐய்யா!” எனக் கதறினார் சுப்பு ரத்தினம்.
இதயத் துடிப்பைக் காட்டும் மானிட்டர், பீம்,பீம் எனச் சத்தமிட்டது. மேலேயும் கீழேயும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த கோடு நேர்க்கோடாய் பயணம் செய்ய ஆரம்பித்தது. அந்த நேரம் சிங்கப்பூர் டாக்டர், உள்ளூர் டாக்டர் எல்லோரும் ஓடி வந்தார்கள். அவர்கள் ஏதேதோ முயற்சி செய்தும் திலகனின் உயிர் அவனது தந்தையின் கண் முன்னே உடலை விட்டுப் பிரிந்து போனது!
“திலகா” எனக் கத்திக் கதறினார் சுப்பு ரத்தினம்.
சக்திதான் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவன் கண்களிலும் கண்ணீர்!
அதன் பிறகு உடலை வீட்டுக்குக் கொண்டு வருவதில் இருந்து, மற்ற சாங்கியங்கள், சடங்குகள் என எல்லாவற்றுக்கும் பி.ஏவுடன் சேர்ந்து இவன்தான் ஏற்பாடு செய்தான்.
இறுதி காரியங்கள் செய்வதற்கான நேரமாக, சக்தி இவனது தகப்பனுக்கு சிக்னல் காட்டினான். அருள்மணி சுப்புவின் சில சொந்தங்களுடன் போய் அவரை அழைத்து வந்தார். ஐயர் சொல்லித் தந்ததை பொம்மை போல் அப்படியே திரும்பச் செய்தார் சுப்பு ரத்தினம்.
“கடைசிக் கடைசியா என் மகன பார்க்கக் கூட விடலையே நீங்க!” எனக் கணவரைப் பார்த்துக் கதறினார் ரங்க நாயகி.
அம்மாவை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள் சிவமஞ்சரி. சாங்கியங்கள் எல்லாம் முடித்து, உடலைத் தூக்கினார்கள். ரங்க நாயகியும், மஞ்சரியும் கதறி அழுத அழுகை வந்திருந்தவர்களையும் அழ வைத்தது. ரஞ்சனி உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு அசையவில்லை. அவளால் அசையவும் முடியவில்லை. ஒரு மாதிரியான மயக்க நிலையில் இருந்தாள். எல்லோரும் திமுதிமுவென இவளை இடித்துக் கொண்டு வெளியே போக, உட்கார்ந்தவாக்கில் கீழே சரிந்திருந்தாள் ரஞ்சனி. சிலர் இவள் கையையும், காலையும் மிதித்தபடி போக, அந்தச் சுரணைக் கூட இல்லாமல் கருவறைக் குழந்தை போல சுருண்டுக் கிடந்தாள்.
எங்கிருந்தோ வந்த இரு கரங்கள் அவளை வாரி அள்ளிக் கொண்டன.
“தம்பி செத்தன்னைக்குக் கூட போதையாடி?” எனக் கடிந்து கொண்டவனின் கையில் அவளது கண்ணீர் துளிகள் தெறித்து விழுந்தன.
கீழே இருந்த கெஸ்ட் ரூமில் அவளைப் படுக்க வைத்த சக்தி அமரன், கூடவே வந்த வேலைக்காரியிடம்,
“உள்ளயே இருக்கட்டும்! வெளிய வராம பார்த்துக்கோங்க! வாசல்ல பத்திரிக்கைக்காரங்க, மீடியா எல்லாம் நிக்கறாங்க! அங்க வந்து நின்னு அமைச்சரோட மானத்த வாங்கிடப் போறா” எனச் சொல்லி விட்டுச் சென்றான்.
நாட்கள் விரைந்து ஓடி இருந்தன. திலகனுக்குக் கருமக்கிரியையும் செய்து முடித்திருந்தனர். காரியம் செய்த தினத்தன்று காலேஜ் போகும் ஏழை மாணவர்களுக்கு இலவசப் பாடப் புத்தகங்கள் கொடுக்க ட்ரஸ்ட் ஒன்று மகனின் பெயரில் ஆரம்பித்தார் சுப்பு ரத்தினம். அதை அமைச்சருக்கே சொல்லாமல், சோசியல் மீடியாவில் போட்டு அவருக்கு நல்ல பெயர் வரும்படி செய்திருந்தான் சக்தி அமரன்.
அவனைப் பார்க்க வேண்டுமெனச் சுப்பு ரத்தினம் வீட்டுக்கு அழைத்திருக்க, கட்சி ஆபிசில் இருந்து புறப்பட்டான் சக்தி அமரன். காரில் ஏறி அமர்ந்தவனுக்குத் திலகனின் விஷயத்தை அவரிடம் எப்படிச் சொல்வது என ஒரே சஞ்சலம். இத்தனை நாட்கள் துக்கத்தில் உழன்றுக் கொண்டிருந்தவர், ஓரளவு தேறி விட்டார் என்பதற்கு இந்த அழைப்பே சாட்சி எனப் புரிந்தது இவனுக்கு. அவனது இரு நண்பர்களையும் அடித்துப் பிழிந்து எடுத்தும் கூட ஒரு விஷயமும் வெளியாகி இருக்கவில்லை. ட்ரீப் முடிந்து அவர்களைப் பாண்டிச்சேரியிலே விட்டு விட்டு இவன் மட்டும் கிளம்பிப் போய் விட்டான் எனத்தான் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை இவனும் செக் செய்து பார்த்து விட்டான். பாண்டியில் அவர்கள் குடித்து விட்டுக் கவிழ்ந்து கிடந்த அறையில் இருந்துதான் சுப்பு ரத்தினத்தின் ஆட்கள் அவர்களைத் தூக்கி வந்திருந்தார்கள்.
‘திலகன் பண்ணிருக்கற காரியத்துக்கு, யாரன்னு சந்தேகப்பட!’ என எண்ணியவனுக்கு அன்று மானிட்டரில் பார்த்தக் காட்சிகள் மீண்டும் கண் முன்னே வந்து நின்றன.
“ங்கொக்கமக்கா! என்ன எழவுடா இது?”
“பாஸ்! உங்களுக்கு டார்க் வெப்னு(dark web) ஒன்னு இருக்கறது தெரியுமா?” எனக் கேட்டான் சாம்.
“கேள்விப்பட்டுருக்கேன்! அவ்ளவவா இண்ட்ரேஸ்ட் எடுத்துக்கல தெரிஞ்சுக்க”