எபி 8

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

எபி பாடல்கள்

இதுவும் ஒரு சரக்குப் பாட்டுத்தான். தண்ணித் தொட்டித் தேடி வந்த கன்னுக்குட்டி பாடற முன்னமே இந்தப் பாட்டப் பாடிட்டாரு யேசுதாஸ்!




ஜானகிமா மாதிரி ஒரு ஒரு பாடகி இனி பிறந்து வரப் போறது இல்லை. குழந்தை மாதிரியே எவ்ளோ அழகா பாடிருக்காங்க, கேளுங்களேன்!!! மார்வலஸ்!!!!


அத்தியாயம் 8

“ஐயா!” என அழைத்தார் சுப்பு ரத்தினத்தின் பி.ஏ.

“சொல்லுயா”

“என்னதான் உங்க நண்பரோட மகனா இருந்தாலும், சக்தி தம்பிய ரொம்ப நம்பறீங்களோன்னு தோணுதுய்யா” எனத் தயங்கியபடிச் சொன்னார் பி.ஏ.

அவரிடம் தனது லாப்டாப்பை திருப்பிக் காட்டினார் சுப்பு ரத்தினம்.

“இவனோட இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் எல்லாத்தையும் அழிச்சு விட்டுரு சாம்! சிறு பொறி கூட யார் கண்ணுக்கும் படக் கூடாது! மினிஸ்டரோட அரசியல் வாழ்க்கையும், அவரோட மான மரியாதையும் இதுல அடங்கிருக்கு! அண்ட் ஓன் மோர் திங்! இங்க ரூமுக்குள்ள நடந்த விஷயம் ஏதும் உங்க வழியா வெளிய கசிஞ்சது!!!”

அன்றொரு நாள் ஐ.டி விங்கில் நடந்த சம்பாஷணைத் திரையில் ஓடியது.

“தன்னோட நிழலையே நம்பாதவன்தான் அரசியல்வாதி! திடீர்னு உங்க கூட இருக்கேன் மாமான்னு இவன் வந்து நின்னா, சந்தேகம் வரத்தானே செய்யும். ஒரு கண்ண அவன் மேல வச்சிட்டுத்தான் இருக்கேன். கட்சி அலவலகத்துல சக்தியோட நடமாட்டம், என் ரெண்டாவது பொண்ணோட பண்ணுற காதல் எல்லாமே எனக்குத் தெரியும்யா! போலிஸ் ஸ்டேஷன்ல விழுந்த அடி, அவன் தன்மானத்துக்கு விழுந்ததா நினைக்கறான்! நல்லதுதானே! வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல, விளையாட்டுத்தனத்த எல்லாம் விட்டுட்டு வீறு கொண்டு எழுந்து நின்னுத்தானே ஆகனும்! இப்ப நின்னிருக்கான்! அதை நமக்குச் சாதகமாப் பயன் படுத்திக்குவோம்! நல்ல பையன்! பாரம்பரியமானக் குடும்பம்! சொத்துபத்துக்குக் குறைவில்ல! கொஞ்சம் ஷேப் பண்ணா, சிறப்பான அரசியல்வாதியா வருவான்! இனி எனக்குன்னு அரசியல் வாரிசு யாரிருக்கா சொல்லு!” எனத் தொண்டையைச் செறுமியவர்,

“மருமகனாக்கி, எனக்குப் பிறகு வாரிசா கொண்டு வந்திருவோம்” என்றார்.

“நீங்க சொன்னா சரியாத்தான்யா இருக்கும்”

அந்த நேரம் அவரது பெர்சனல் போன் நம்பர் அடித்தது.

“ஐயா!”

“சொல்லு”

“மேடம்! மப்புல, பப்புல விழுந்து கிடக்கறாங்க! இன்னிக்கு ரொம்ப ஓவரா போய்டுச்சி! நான் தூக்கப் போனா, ரொம்ப கத்துறாங்க! அடிக்கறாங்க! வலுக்கட்டாயமா மத்தவங்களுக்கு சீனாகற மாதிரி எதையும் செய்ய வேணாம்னு வேற சொல்லிருக்கீங்க! இப்ப நான் என்ன செய்யட்டும்?” எனக் கேட்டான் சிவரஞ்சனிக்காக இவர் நியமித்திருந்த பாதுகாவலன்.

தலையைப் பிடித்துக் கொண்டார் சுப்பு ரத்தினம்.

“பப் மூடற வரைக்கும் வெய்ட் பண்ணு! ஆட்கள் வெளியானதும், அவ வாயைப் பொத்தித் தூக்கிப் பின்னாடி எக்ஸிட் வழியா கொண்டு வந்துடு காருக்கு! வீட்டுக்கு வந்ததும் ஒரு போன் பண்ணிடு எனக்கு” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

“தில்லை!!! நம்ப பொண்ணு என்னை எப்படி படுத்தி எடுக்கறா பாருடி! இதெல்லாம் பார்க்கக் கூடாதுன்னுதான் இவ்ளோ சீக்கிரம் என்னை விட்டுப் போயிட்டியா?” எனக் கலங்கியவரை அவரது பி.ஏதான் தேற்றினார்.

அந்த இருட்டானப் பப்பில், ஒதுக்குப் புறமான இடத்தில் கிடந்த சோபாவில் கவிழ்ந்து கிடந்தாள் சிவரஞ்சனி. கண்கள் மேலே சொருகி நிற்க உதடுகளோ,

“ஆகாயம் மேலே பாதாளம் கீழே

ஆனந்த உலகம் நடுவினிலே” என முனகிக் கொண்டிருந்தன.

சிவரஞ்சனியின் அருகே வந்த ஒருவன், சரிந்து அவள் பக்கம் அமர்ந்தான். அவனும் போதையில்தான் இருந்தான். அவள் போட்டிருந்த ஷார்ட் டாப்ஸ் விலகி ஆலிலை வயிற்றை அவன் கண்களுக்குப் படம் போட்டுக் காட்டியது. கண்கள் இன்னும் சிவந்து போக, அவனது கை அவள் வயிற்றை வருடி, மெல்ல ஊர்ந்து மேலேறியது. தன்னைச் சுற்றி நடப்பது என்ன என்பது கூட அறியாமல், புரியாமல் ஜாய்ண்ட்(போதை மருந்து கலந்த சிகரேட்) அடித்தப் போதையில் இருந்தாள் பெண்.

எப்பொழுதும் அவளைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். ஆண், பெண்ணெனப் பேதமில்லை! எல்லாம் அவிழ்த்து விட்டக் கன்று குட்டிகள். இவனும் கூட அவளது நண்பர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன்தான். அவன் வந்ததையோ, அவள் பக்கம் அமர்ந்ததையோ பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை, ஓர் ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்த அவளது பாதுகாவலன். அவனது கைகள் அத்து மீறுவதைப் பார்த்ததும்தான் அவசரமாக பாதுகாவலன் ஓடி வர, அதற்குள் இன்னொருத்தன் அவனது கை பிடித்து படக்கென மடக்கி ஒடித்திருந்தான்.

வலியில் அவன் கத்த வாயைத் திறக்க, பாதுகாவலன் கப்பென வாயைப் பொத்தி சத்தத்தை அடக்கி இருந்தான்.

“எவனோ ஒருத்தன் அட்வாண்டேஜ் எடுத்துக்கற வரைக்கும் என்னத்தடா புடுங்கிட்டு இருந்த?” எனச் சீறிய சக்தி அமரன் பளீரென பாதுகாவலனுக்கு ஓர் அறை விட்டிருந்தான்.

“அவங்க ப்ரேண்ட்தானேன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன் சார்” என்றவனுக்குக் கன்னம் தீயாய் எரிந்தது.

“பேக் டோர் எக்ஸிட் எங்க?”

“வாங்க சார்! நான் காட்டுறேன்” என்றவன் வலியில் மயங்கி இருந்தவனைக் கீழே தள்ளி விட்டான்.

அதற்குள் சக்தி, சிவரஞ்சனியை அலேக்காகத் தூக்கி இருந்தான்.

“யாரும் பார்த்து போட்டோ ஏதும் எடுக்கறதுக்குள்ள, வெளியாகனும்! எங்கள மறச்சாப்பல வா” எனச் சொல்லி வேகமாய் பாதுகாவலன் காட்டியப் பாதை வழி நடந்தான் சக்தி அமரன்.

பேக் டோர் வழி வெளியேறி ஒரு சந்தில் வந்து நின்றார்கள் இருவரும்.

“என் கார பப் நுழைவாயில்ல விட்டுட்டு வந்திருக்கேன்! காருக்குள்ள சாரோட செகண்ட் டாட்டரும் இருப்பாங்க! வேகமா போய், கார இங்க கொண்டு வா” என ஆர்டர் போட்டான் சக்தி.

பாதுகாவலன் வேகமாய் ஓட, ரஞ்சனியை இறக்கி மெல்ல நிற்க வைத்தான் இவன். அவள் பின்னால் சரியப் பார்க்க, தன் மேல் சாய்த்துக் கொண்டான் சக்தி அமரன். அவள் என்னவோ முனக, காதை அவள் வாய்ப் பக்கம் கொண்டு போனான்.

“மிஸ்டர் எனெர்ஜி(சக்தி)”

“என்ன? தெளிஞ்சிருச்சா?” என நக்கலாகக் கேட்டான் இவன்.

இன்னும் அவனை ஒண்டிக் கொண்டவள்,

“நான் வேணாமா சக்தி உனக்கு? அந்தத் தேஞ்சுப் போன மஞ்சுத்தான் வேணுமா?” எனக் குளறலாகக் கேட்டாள்.

“அவள பத்தி பேசுன, முகரையைப் பேத்துடுவேன்!”

அவன் இரு பக்கமும் கைப் போட்டு கழுத்தோடுக் கட்டிக் கொண்டவள், இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தள்ளாடினாள். அவள் விழுந்து விடாமல் இருக்க, ரஞ்சனியின் இடுப்பைப் பற்றிக் கொண்டான் இவன்.

“விழுந்து தொலைச்சிடாதே பிசாசே!”

அவனையே போதையாய் பார்த்தபடி இருந்தவள்,

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ சக்தி” என இளித்தபடி கேட்டாள்.

“ஓவர் மை டெட் பாடி!” எனச் சீறினான் இவன்.

“நல்லா பார்த்துப்பேன் எனெர்ஜி உன்னை! நானே சரக்க ஊத்தி கரேக்டான அளவுல சோடா சேர்த்து மிக்ஸ் பண்ணிக் குடுப்பேன்! ரெண்டு பேரும் பெட் ரூம்லயே சியர்ஸ்னு சொல்லி குடிச்சிக்கலாம்! குடிச்சிட்டு நல்லா கூத்தடிக்கலாம்! நம்ம லைப்ஃ எப்படி இருக்கும்னு சாம்பிள் ஒன்னு வேணும்னா காட்டவா?” எனக் திக்கிக் குளறிப் பேசியவள், சக்தி சுதாரிக்கும் முன் எம்பி அவன் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்தி இருந்தாள்.

எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக அப்படியே நின்றிருந்தான் சக்தி அமரன். சில நிமிடங்களில் விலகிப் புறங்கையால் வாயைத் துடைத்தவளைப் பார்த்து,

“உன் தங்கச்சிய லவ் பண்றவன மயக்கப் பார்க்கறியே, உனக்கு வெக்கமா இல்ல?” எனக் கேட்டான்.
 
Last edited:
“இதெல்லாம் எங்க குடும்பத்துல ஜகஜம் சக்தி! எங்கம்மா இடத்துல எங்க சித்தி இல்லையா இப்போ!” எனக் கேட்டு, கலகலவெனச் சிரித்தாள்.

“ஆனா நான் உங்கப்பன் இல்லடி! சக்தி அமரன்! ஒருத்திக்குத்தான் உடம்பையும் குடுப்பேன்! உயிரையும் குடுப்பேன்!”

“சோ ச்வீட்! லிப்ஸும் ச்வீட், லிப்ல இருந்து வர வார்த்தையும் ச்வீட்” எனக் கிறக்கமாய் சொன்னாள் இவள்.

“சீ! போடி!”

அதற்குள் அவர்களின் கார் வந்திருந்தது. பாதுகாவலனை அப்படியே போகச் சொல்லி விட்டு, இவளைப் பின் சீட்டில் கிடத்தினான் சக்தி அமரன். முன் சீட்டில் அமர்ந்திருந்தாள் சிவமஞ்சரி. ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்ததும், படபடவெனப் பொரிந்து தள்ளினான் இவன்.

“சோகமா இருக்கியேன்னு உன் கூட டைம் ஸ்பேண்ட் பண்ணலாம்னு வந்தேன். நீ என்னன்னா, அக்கா மேசேஜ் போட்டா! அவளுக்கு ஒன்னும் முடியலையாம்னு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்ட! உன் பேச்ச கேட்டு வந்ததுக்கு என் வாய்ல வாலிபால் ஆடிட்டா உங்கக்கா! சீச்சீ!”

“வாலிபால் வெளாட்டு இல்ல கோபால்! வாலிப வெளாட்டு!” என உளறினாள் பின் சீட்டில் படுத்திருந்தவள்.

“யூ ஷட்டப்! ஒரு வார்த்தை இனி உன் வாய்ல இருந்து வந்தாலும், பால்டாயில ஊத்தி விட்டுருவேன்” எனக் கத்தினான் சக்தி.

“என்ன சக்தி? என்னாச்சி?” எனக் கேட்டாள் மஞ்சரி.

“லைக்ல இருந்து லவ்வுக்குப் போக ட்ரை பண்ணிட்டு இருக்க நாம கூட இன்னும் ஒரு கிஸ் குடுத்துக்கல பேபி! உங்கக்கா, இன்னிக்கு என்னைக் கிஸ் பண்ணிட்டா! ஐ ஃபீல் டிஸ்கஸ்ட்டட்!”

“என்ன???” எனத் திகைத்தாள் மஞ்சரி.

“பச்சைப் பாப்பா! நாங்க பலாத்காரம் பண்ணிட்டோம்!” என முனகினாள் பின்னால் இருந்தவள்.

வீடு வரும் வரை அக்காவையும் தங்கையையும் வறுத்தெடுத்துக் கொண்டே வந்தான் இவன். சுப்பு ரத்தினம் இவர்களுக்காகக் காத்திருந்தார். கார் வந்ததும், ஓடி வந்தவர் பெரிய மகளைக் கைகளில் அள்ளிக் கொண்டார்.

இவனைப் பார்த்து,

“தேங்க்ஸ்டா மாப்பள” என்றார் அவர்.

பதி ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினான் இவன்.

“டாடி டாடி ஓ மை டாடி!” எனப் பாடியபடியே போனவளை முறைத்தபடி நின்றான் இவன்.

“சாரி சக்தி! இப்படிலாம் என் கிட்ட அவ உதவி கேட்டது இல்ல! தம்பி இல்லாததனால ரொம்ப வெக்ஸாகிட்டா போல! இந்த வீட்டுல அவன் கிட்டத்தான் ரெண்டு வார்த்தை நல்லா பேசுவா! அதான் உதவின்னு கேக்கவும், என்னால முடியலைன்னு சொல்ல முடியல! இனி உங்கள இவ மேட்டர்ல இன்வால்வ் பண்ண மாட்டேன் சக்தி! சாரி!”

“சாரிலாம் எதுக்கு பேப்! விடு! என்னமோ கோபத்துல திட்டிட்டேன்! என் கிட்ட உதவி கேக்காம வேற யார் கிட்ட நீ கேப்ப! லீவ் இட்! இனி இப்படி கோச்சிக்க மாட்டேன்டா! டேக் ரெஸ்ட்!” எனச் சொல்லி அவள் கன்னம் வருடியவன், நிற்காமல் கிளம்பி விட்டான்.

மறுநாள் அதிகாலையிலேயே இவனது அறைக் கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

“கம்மிங்!” எனக் குரல் கொடுத்தவன், கழட்டிப் போட்டிருந்த டீ ஷர்ட்டை எடுத்து அணிந்துக் கொண்டே போய் கதவைத் திறந்தான். அங்கே இவனது அப்பா அருள்மணி நின்றிருந்தார்.

“என்னப்பா?”

“டேய் தம்பி!”

“சொல்லுங்கப்பா! ஏன் இந்தப் பதட்டம்?”

“உன்னை ஜட்டியோட ஸ்டேஷன்ல உக்கார வச்சானே, அந்த இன்ஸ்பெக்டரு!”

“அவனுக்கு என்ன!” என எரிச்சலாகக் கேட்டான் இவன்.

“யாரோ அவன போட்டுத் தள்ளிட்டாங்கடா!”

“வாட்???”



(உயிராவாயா???)
 
மாமனாருக்கு மருமகன் நேரடியாக உதவியதால் மருமகனுக்கு மாமனார் மறைமுகமாக உதவுகிறார். ஆனால் அதில் ஒரு சந்தேகம் மூத்த மாப்பிளையா இளைய மாப்பிளையா
 
😍😍😍

இங்க ஹீரோவுக்கு யார் ஜோடின்னு நாங்க எல்லாம் குழப்பத்துல இருக்கும் போது, அந்த இன்ஸ்பெக்டரை போட்டு தள்ளிட்டு, அவனை யார் போட்டு தள்ளி இருப்பாங்கன்னு எங்களை அடுத்த குழப்பத்துல தள்ளி விட்ட ரைட்டருக்கு ஒரு ஓ போடுங்கப்பா..🤭🤭😁😁
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 8)


ஓ மை கடவுளே...! அதெப்படி...? யாரு அந்த இன்சுவை போட்டுத் தள்ளியது..? சுப்பு ரத்தினமா ?
இல்லை சிவ ரஞ்சனியா...?


அது சரி, சிவ ரஞ்சனி பேசறதை பார்த்தா, அவளோட பார்வை கூட சக்தி அமரன் மேலத்தான் இருக்கும் போலவே...?


இப்ப எங்களுக்குத் தான் சஸ்பென்ஸ் தாங்க முடியலை. சக்தி அமரனோட, அக்கா தங்கச்சி ரெண்டு பேர்ல யாரை ஜோடி சேர்த்து, சிவ சக்தி யா மாத்தப் போறிங்கன்னு தெரியலையே..?


எனக்கென்னவோ, அக்காகாரி தான் இந்த விஷயத்துல சதம் அடிச்சு சிவ சக்தி ஆவான்னு தோணுது. ஏன்னா, அத்தனை போதையில கூட அவனை உணருறான்னா... அவளுக்கு அந்தளவுக்கு அவள் மேல ஆசையிருக்குன்னுத்ததானே அர்த்தம். ஆனா, மஞ்சரி தெளிவா இருந்தும் டைம் கேட்டு இழுத்தடிக்கிறா. அப்படின்னா சிவ ரஞ்சனி தான் ரொம்ப கன்ஃபார்ம்மா இருக்கா. கரெக்ட்டா...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
ரஞ்சனி சிவரஞ்சனி
ஆட்டி வைக்கிற சக்தியை நீ
என்னமோ நடக்குது மர்மமா
இருக்குது 🙂↔️🤔🤩
 
Tittle vachu etho romantic love story ah irukum nu paatha inga enna adudhu adudhu murder 😱 enaku ennamoa iva podhaila ullava mathiri nadikkura thonudhu.. sakthi ku kiss Panntha vachu kandu pidippan thonudhu.... 🧐🧐 Unaku than pidikalaye thambi apram ean thalli udama kiss ah vangikittiyam 🤷🙄

Antha ins ah yaruppa poattadhu 🤷 ranjani thana 🤔🤔 onnumey puriyala ulagadhula 😴

Ean ma manju un akka mela pasam Iruka vendi than ana ava un varugala husband ah kiss Pannatha solran.. nee enna na apdiye Mannu mathiriye Iruka😲😲😂😂 enna than ma un kadhai.. nee ena America mappillai role ah🤷
 
சுப்பு பக்கா அரசியல்வாதி தான்....

ரஞ்சனி 🤣🤣🤣🤣🤣 எங்க ஹீரோ மேல இவளுக்கு ஒரு கண்ணு 🤭🤭🤪🤪🤪

சக்தி பெரிய அரசியல்வாதி ஆகி அவனுக்கு சல்யூட் அடிச்சு கார் கதவை திறந்து விடுறதுக்குள்ள இந்த போலீஸ் அ யார் போட்டு தள்ளுனது 🤔🤔🧐🧐
 
Back
Top