எபி 9

VanishaAdmin

Moderator
வணக்கம் டியர்ஸ்,

WhatsApp Image 2025-04-14 at 2.52.50 PM.jpeg

அத்தியாயம் 9



தொலைக்காட்சி, சோசியல் மீடியா எங்கும் இன்ஸ்பெக்டர் கொலையானதே வைரல் நியூசாக ஓடிக் கொண்டிருந்தது.

“பட்டப் பகலில், கூட்ட நெரிசலில் தூரத்தில் இருந்து ஸ்னிப்பர் துப்பாக்கி மூலம் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை!”

“பாதுகாப்புக் கொடுக்கும் காவலாளிக்கே இந்த நிலைமை என்றால், பட்டாளியின் நிலை என்ன?”

“நேர்மைக்கு நடு நெற்றித் துப்பாக்கிச் சூடுதான் பரிசா?”

“தமிழக அரசே! துக்கம் நிகழ்ந்தும் இன்னும் தூக்கமா?”

பல வகையான கேப்ஷன்களில், ஹேஷ்டேக்குகளில் இணையம் தீப்பற்றிக் கொண்டது.

உடற்பயிற்சி முடித்து, சத்துமாவு கஞ்சிக் குடித்தபடியே தொலைக்காட்சியில் அந்த இன்ஸ்பெக்டர் ஜெய்ராமின் வாழ்க்கை வரலாறு ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி அமரன். அவன் அருகே வந்து அமர்ந்தார் அருள்மணி.

“என்னப்பா யோசனையா இருக்க?”

“ஏன்பா ஏன்? என் ஆசையென்னா அவ்ளோ பொல்லாத ஆசையா? எனக்கேன் இந்த ஏமாற்றம்?” எனக் கேட்டான் இவன்.

“என்னப்பா சொல்ற?”

“எனக்கு சல்யூட் அடிக்காம செத்துட்டான்பா அந்த இன்ஸு! அதை நெனைச்சாலே வெக்ஸாகுது! இரிட்டேட்டா இருக்கு!”

“விட்ரா மவனே! உனக்கு மரியாதை வைக்க அவனுக்குக் குடுத்து வைக்கல! நாம வேணும்னா அவனோட பெரிய அதிகாரிய சல்யூட் வைக்க சொல்லி மனச ஆத்திக்கலாம்” என மகனது தோளைத் தட்டிக் கொடுத்தார் அருள்மணி.

“உங்க ரெண்டு பேருக்கும் மனசாட்சியே இல்லையா? உயிர் ஒன்னு அனாமத்தா போய்டுச்சு! அதுக்குத் துக்கம் கொண்டாடலைனாலும் போகுது! இப்படி பேசிட்டு இருக்கீங்களே!” எனக் கடிந்து கொண்டார் சங்கரி.

“என் மகன ஜட்டியோட போலிஸ் ஸ்டேஷன்ல பார்த்தப்ப, என் உசுரும்தான்டி போச்சு! வந்துட்டா பெரிய தர்ம தேவதை மாதிரி” எனச் சிலிர்த்துக் கொண்டார் அருள்மணி.

“ப்பா!!! அந்த ஜட்டி மேட்டர விட்டு ஒழிங்கப்பா! நான் மறந்தாலும், அடிக்கடி அதை சொல்லியே என் மானத்த வாங்கறீங்க! ஸ்டேசன்ல ஒரு தடவைத்தான் மானம் போச்சு! அதை நீங்க சொல்றப்பலாம் இன்ஸ்ட்டால்மெண்ட்ல மானம் போகுது! ப்ளீஸ்ப்பா” என்றான் சக்தி அமரன்.

“சரி விட்ரா மகனே! இனி ஜட்டின்னு ஒரு வார்த்தை என் வாய்ல இருந்து வராது!” என்றவர் மகனைக் கட்டிக் கொண்டார்.

“நீங்களே இவனைக் கட்டிட்டுத் திரிஞ்சா போதுமாங்க?” எனக் கடுப்பாகக் கேட்டார் சங்கரி.

“இப்ப என்னடி உன் பிரச்சனை! அந்தப் பக்கம் வந்து உக்காந்து நீயும் கட்டிக்க உன் மகன! சும்மா எங்க பாண்டிங்க பார்த்து ஸ்டமக் பர்ன் ஆக வேண்டியது!”

“மனுஷி என்ன சொல்ல வரேன்னு கவனிக்காம உடனே எகிறாதீங்க!”

“என்னவாம்?”

“அவனைக் கட்டிப் புடிச்சுக்க ஒரு பொண்ணைப் பாருங்கங்க! அவனையே இன்னும் எத்தனை நாளுத்தான் கொஞ்சுவீங்க! நெஞ்சுல தூக்கிப் போட்டு விளையாட பேரக் குழந்தை ஒன்னு வேணாமா?” எனக் கேட்டார் சங்கரி.

“அவன் பச்சைப் புள்ளைடி! அவனுக்குப் போய் கல்யாணமா?”

“டாடி! நான் பச்சைப் புள்ளைலாம் இல்ல! இப்ப கல்யாணம் பண்ணி வைங்க! அடுத்தப் பத்து மாசத்துல அம்மா கேட்ட மாதிரி பேரப் புள்ளை ஒன்னை நான் ரிலீஸ் பண்ணி காட்டறேன்” எனக் கிண்டல் தொனியில் சொன்னான் சக்தி.

“அப்படியா?”

“பின்ன எப்படியாம்! என்ன இருந்தாலும் மகன் மனசு ஒரு தாய்க்குத்தான் கிளியரா புரியுது! நீங்க அய்யா, சாமி, கண்ணுன்னு கொஞ்சறதுக்குத்தான் லாயக்கு! சக்திக்கு வயசாகுதே, இளமை வீணாகுதே, பருவத்தே பயிர் செய்ய வைப்போம்னு யோசிச்சிருக்கீங்களா?” என ஒரு பக்கப் புருவத்தை ஏற்றிச் சிரிப்புடன் கேட்டான்.

“பருவத்தே பயிர் செய்யனுமா? நீ புல்லு பூண்டு நடப் போறியா? இல்லை புருஷன் வேலைப் பார்க்கப் போறியா?” என நக்கலாகக் கேட்டார் அருள்மணி.

“புருஷன் வேலைப் போட்டுக் குடுங்க! உடனே உங்க மருமக வயித்துல புல்லோ பூண்டோ முளைக்க நான் ஏற்பாடு பண்ணறேன்”

மகனின் கிண்டல் பேச்சில் வாய் விட்டுச் சிரித்தார் அருள்மணி.

“சரிடா சரி! சீக்கிரம் பொண்ணுப் பார்க்கற வேலைல இறங்கிடறேன்”

“அதுக்கு அவசியமே இல்லைப்பா!”

“ஏன்டா சக்தி! பொண்ண நீயே பார்த்துட்டியா?” எனக் கேட்டார் சங்கரி.

“ஆமாம்மா”

“யாருடா அது?” என ஆர்வமாகக் கேட்டார் அவர்.

“எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச ஆளுதான்”

பெற்றவர்கள் இருவரும் மகன் முகத்தையே பார்த்திருந்தனர்.

“ப்பா! எனக்கு சிவமஞ்சரிய பிடிச்சிருக்குப்பா!”

“யாரு சிவமஞ்சரி?” எனக் கேட்டார் சங்கரி.

அருள்மணியோ யோசனையாக மகனைப் பார்த்தார்.

“சுப்பு அங்கிள் மகம்மா”

“தில்லையோட மகளா?” என ஆர்வமாகக் கேட்டார் சங்கரி.

“இல்லம்மா! ரெண்டாவது வைஃப் மக”

“ஓஹோ!” என்ற சங்கரியின் சுதி இறங்கி இருந்தது.

“அரசியலுக்குப் போறேன்னு நின்ன! நீ சொன்ன காரணங்கள் ஒரு வகையில எனக்கு ஏற்புடையதா இருந்ததுனால, பிடிக்கலனாலும் ஒத்துக்கிட்டேன்! ஆனா அவனோட மகள நம்ம வீட்டு மருமகளா எப்படிடா ராஜா கொண்டு வரது! எனக்கு என்னமோ சரியாவேப் படலடா! சுப்பு நல்லவந்தான்! கொஞ்சம் சுயநலம் அதிகம்! அவனோட நட்பு சரிப்பட்டு வராதுன்னுதான் நான் ஒதுங்கி நின்னுட்டேன்! கொஞ்ச நாள் முன்னாடி கட்சி நிதின்னு காசு கேட்டிருந்தான். நான் நழுவிட்டே இருந்தேன்! அதோட கேக்கறதையும் விட்டுட்டான்! உன்னைக் கொண்டு போய் அவன் கிட்ட சேர்த்தப்ப, காசு குடுக்கல ஆனா உதவி மட்டும் வேணுமான்ற மாதிரி எந்தச் சுணக்கமும் காட்டாம அரவணைச்சுக்கிட்டான். எல்லாமே ஓகேத்தான். ஆனாலும் ஓர் அரசியல்வாதியோட வெளிய நின்னு உறவுக் கொண்டாடறது வேற! வீட்டுக்குள்ளயே கொண்டு வந்து விளக்கேத்த வைக்கறது வேறடா!” என்றார் அருள்மணி.

“அவர் கூடவே இருக்கேனேப்பா! சில விஷயங்கள்ல, பொய் புரட்டுன்னு செய்றாருத்தான். அதை எனக்குத் தெரிய விடாம பார்த்துக்க முயற்சி பண்ணறாரு! ஆனாலும், கார்மேகம் அங்கிள் குடும்பத்தோட டூர் போய்ருக்கற இந்த டைம்ல கட்சி ஆபிஸ்ல எல்லாமே பார்க்கற எனக்கு அவரோட ஆக்டிவிட்டிஸ்லாம் நல்லா தெரியுதுப்பா! ரோட் போடறதுக்கு டெண்டர, இவரோட ஆளுங்கள பினாமியா வச்சு, இவரே எடுக்கறாரு! டோல்கேட் மேனேஜ் பண்ணறவங்கள செலெக்ட் பண்ணதுக்கு பெரிய அமவுண்ட் லம்ப்பா வாங்கிருக்காரு! எல்லா இடத்துலயும் கைய வச்சிருக்காருப்பா! அவர் செஞ்சித்தான்பா ஆகனும்! வேற வழியில்ல! அவர விட மேல இருக்கறவங்களுக்குக் கப்பம் கட்டனும்! கீழ இருக்கறவங்கள சொகுசா பார்த்துக்கனும்! மக்களுக்கும் செய்யனும்! வேற என்னப்பா வழி இருக்கு? அரசியல்னா இப்படித்தான்பா! அவரே என் கிட்ட மன வருத்தத்தோட என் கைகளும் கறை படிஞ்ச கைகள்தான்னு ஒத்துக்கிட்டாருப்பா! எனக்கு அவரோட ஆளுமைப் பிடிச்சிருக்கு! அவரோட பலம் பிடிச்சிருக்கு! அவருக்கு மருமகனானா சீக்கிரம் ஒரு படி மேலப் போய்டுவேன்! மோரோவர் எனக்கு மஞ்சுவ பிடிச்சிருக்குப்பா! பொண்ணுக்குப் பொண்ணுமாச்சு, பதவிக்குப் பதவியுமாச்சு! என்னைப் புரிஞ்சுக்கோங்கப்பா!”

மகன் முகத்தில் பிடிவாதத்தைப் பார்த்த அருள்மணி, மனைவியை நோக்கினார். அவரோ முகத்தில் பிடித்தமின்மையை அப்பட்டமாகக் காட்டினார். குடும்பத் தொழிலில் புகுத்தாமல் மகனைக் கொண்டு போய் அரசியலில் நுழைத்ததுதான் ஏற்கனவே அவருக்குப் பிடித்தமில்லையே! இப்பொழுது அந்த அரசியல் குடும்பத்தில் இருந்தே பெண் கொண்டு வருவதை விரும்பவில்லை சங்கரி.

“சக்தி! கல்யாணங்கறது பெரிய கமிட்மெண்ட்டா! அதுல ஆதாயத்தப் பார்க்கக் கூடாது! ஆத்மார்த்தத்த மட்டும்தான் பார்க்கனும்! பதவிக்காக இந்தக் கல்யாணம்னா, நீ காலம் முழுக்கக் கல்யாணமாகாம இருந்தா கூட பரவால்லன்னு சொல்லிடுவேன்” என்றார் சங்கரி.
 
அமைதியாக அவர் முகத்தை வெறித்தான் மகன்காரன்.

“அம்மா! மஞ்சுதான் இந்த வீட்டு மருமக!” என்றவன், தகப்பனைப் பார்த்து,

“போய் பொண்ணு கேளுங்கப்பா! துக்க வீட்டுல, சீக்கிரமா ஒரு மங்களக் காரியம் நடந்தா நல்லதுன்னு சுப்பு மாமாவ கன்வீன்ஸ் பண்ணுங்க! வெளி ஆளுங்களுக்குத் தெரியாம, வீட்டுக்குள்ளயே மோதிரம் மாத்தி சின்னதா ஒரு நிச்சயம் வச்சிப்போம்! மஞ்சு வேற இன்னும் லைக்லயே நின்னு ப்ரோபோசல இழுத்தடிச்சிட்டு இருக்கா! சோ, சீக்கிரமா இந்த ஈவண்ட அரேஞ் பண்ணுங்க டாடி! நான் இப்போதைக்கு எம்.எல்.ஏ ஆகனும்! இல்லை, அட் லீஸ்ட் வார்ட் கவுன்சிலாராச்சும் ஆகனும்! அதுக்கு இந்தக் கல்யாணம் ஓர் அனுகூலமா இருக்கும்” எனச் சொன்னவன் கிளம்பிப் போய் விட்டான்.

“என்னங்க இப்படிச் சொல்லிட்டுப் போறான்! இவன் நாம பெத்தப் புள்ளைத்தானா? உங்க கிட்ட இருக்கற காதல் ஜீன் இவன் கிட்ட எங்கங்க போச்சு? கல்யாணத்த என்னமோ கட்சி மீட்டிங் ரேஞ்சுக்குப் பேசிட்டுப் போறான்! எனக்கு ஒன்னும் புடிக்கலங்க!”

“என் மகனாச்சே! காதல் அணுக்கள்லாம் உள்ளுக்குள்ள இருக்கும்டி! இல்லாமலா அந்தப் புள்ளய பிடிச்சிருக்குன்னு சொல்வான்! லவ்வையும் லைஃபையும் கரேக்டா லீட் பண்ணுவான்! கவலைய விடு! இன்னிக்கு நல்ல நேரம் என்னன்னு பாரு! ரெண்டு பேரும் போய் பேசிட்டு வந்துடலாம் சுப்பு ரத்தினம் வீட்டுல!”

“இன்னிக்கேவா?”

“அவன் எள்ளுன்னா நாம எண்ணெய்யா நிக்க வேணாமாடி! அந்தப் பொண்ணு மனசு மாறிடும்னு நெனைக்கறான் போல! அதான் லைக்கு லவ்வுன்னு என்னமோ சொல்லிட்டுப் போறான்! மருமக பின் வாங்கறதுக்குள்ள கல்யாண பந்தத்துல இழுத்துப் போட்டுடுவோம்! அதுக்கு மேல உன் மகன் பார்த்துப்பான்!”

“என்னவோ போங்க! அப்பனுக்கும் மகனுக்கும் பட்டாத்தான் புத்தி வரும்! வாழ்க்கைல பொண்டாட்டி சரியா அமையனும்! நான் அப்படி அமையவும்தான் நீங்க இந்தளவுக்கு சாதிச்சு நிக்கறீங்க! சரியா அமையலைனா போண்டா டீக்கு கூட சிங்கி அடிக்கனும்! உங்க மகனுக்கு அந்தச் சூழ்நிலை வராம இருக்கனும்னு நான் கடவுள வேண்டிக்கறேன்!”

“அந்த நிலைமை நம்ம மகனுக்கு வராதுடி! அவன் புறாவுக்கே பெல்லடிக்கற பரம்பரைல இருந்து வந்தவன்! எதையும் நின்னு சாதிப்பான்! அரசியலாகட்டும், அந்தப்புரமாகட்டும்!”

நிச்சயத்தார்த்தத் தினமும் வந்தது! சக்தி பாத்ரூம் போய் வந்த கேப்பில் அவனைப் பிடித்து நிறுத்திய ரஞ்சனி,

“ஒழுங்கு மர்யாதையா அவள வேணாம்னுட்டு, என்னைக் கட்டிக்க! இல்லைன்னு வை!!!” என மிரட்டினாள்.

“என்னடி செய்வ?”

“ஜட்டி மேட்டரில் போலீஸ் டெட் பாடி!! அப்படின்னு கேப்ஷன் போட்டு போஸ்ட் போடுவேன்! போஸ்ட்டர் ஒட்டுவேன்! இன்ஸ கொன்னது நீதான்னு ஊருக்கு உரக்கச் சொல்வேன்! எனக்கு இந்த ஸ்வீட் எனெர்ஜி(சக்தி) வேணும்! அதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன் நான்”

(உயிராவாயா???)

(இன்னிக்கு முழு எபி இல்ல! முக்கா எபிதான்! நல்ல ஃப்ளோ வந்தது! பிறகு பாப்பாவ பிக் அப் பண்ண போய்ட்டு, அப்படியே மார்க்கேட் போய்ட்டு வந்து எழுத உக்காந்தா மைண்ட்ல ஒன்னும் வரல! அதான் முக்கா எபி! அட்ஜஸ்ட் கரோ டியர்ஸ்! கதை என்னமோ வேகமா போகிற ஃபீல் எனக்கு! சட்டு சட்டுன்னு காட்சிகள் மாறுது! இவ்ளோ வேகமா போனா, கதைப் பட்டுன்னு முடிஞ்சிடும் போல! எனக்கு இழுத்தடிக்கவும் வரல! இந்தக் கதைய பெருசா எழுதனும்னு ஆசை! பார்ப்போம் எப்படி என்னை இழுத்துட்டுப் போகுது கதைன்னு!)
 
நாங்க டிரெய்லர் னு சொல்வோம் னு தெரிஞ்சிக்கிட்டு நீங்களே முந்திக்கிட்டீங்க 😂😂😂

நிஜமா பரபரன்னு தான் போகுது..
ஆனாலும் அடுத்து என்ன னு தான் இருக்கு
 
ஊனாகி உயிரானாய்..!
எழுத்தாளர்: வநிஷா
(அத்தியாயம் - 9)


இப்பத்தானே அம்மையும் அப்பனும் பொண்ணு கேட்க போனாங்க, அதுக்குள்ள என்கேஜ்மெண்ட் டேட்டே வந்திடுச்சா...? இந்த ஸ்பீட்ல போனா புழூ பூச்சியென்ன, முதலையும் பாம்பையும் கூட கொண்டு வந்திடலாம்.
மஞ்சரி எப்ப லைக்ல இருந்து லவ்வுக்கு மாறினா...?


அது சரி, அந்த இன்சூவை கொன்னது யாருன்னு சொல்லவேயில்லையே...?
இந்த ரஞ்சனி வேற இன்சூவை கொன்னது சக்தி தான்னு போஸ்டர் ஒட்டி காட்டி கொடுத்துடுவேன்னு ப்ளாக் மெயில் பண்றா. அங்க என்ன தான்டா நடக்குது...? புரியலையே...?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
வனிம்மா லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட் டா வந்திருக்கீங்க.
😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣 நம்மாளு ஜட்டி மேட்டரை மவுண்ட் ரோட்டுல கட்அவுட் வச்சு சொல்லிடுவா போலயே.🤫🤫🤔🤔🤔🤔
 
😍😍😍

அடேய் சக்தி, ஜட்டி மேட்டர் ரஞ்சனிக்கும் தெரிஞ்சு போயிருச்சே.. இதை வச்சு என்னத்தை எல்லாம் செய்ய போறாளோ? 🤷🤷🤦🤦

FB_IMG_1634458988291.jpg
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍.
வனிம்மா லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட் டா வந்திருக்கீங்க.
😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣 நம்மாளு ஜட்டி மேட்டரை மவுண்ட் ரோட்டுல கட்அவுட் வச்சு சொல்லிடுவா போலயே.🤫🤫🤔🤔🤔🤔
😜😜😜

 
ஜட்டி மேட்டரை வச்சு எனர்ஜியை ஆட்டயப் போட பார்க்குறா 🤭
 
Back
Top