VanishaAdmin
Moderator
வணக்கம் டியர்ஸ்,
பெண்ணாய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்னு சொல்வாங்க! ஆனா அந்தப் பொண்ணா பொறந்திட்டு நாம படற மன வேதனைகளும் உடல் வேதனைகளும் நமக்கு மட்டும்தான் தெரியும்! பீரியட், பிள்ளைப் பிறப்பு, மெனோபஸ் இப்படின்னு பல வகையான மனதை அழுத்தும் உபாதைகள் பெண்களுக்கு இருந்துட்டே இருக்கு. அதனால் வர டிப்ரெஷன், ஸ்ட்ரெஸ், பிபின்னு எதை சொல்ல எதை விட!
ரீசண்டா ஒரு ஃப்ரீ ஹெல்த் செக் அப்கு போய்ருந்தேன்! அங்க ப்ரெஸ்ட் செக் பண்ணாங்க! மானுவல்லாத்தான். மத்த டெஸ்ட்லாம் போன நான் அதுக்குப் போகனுமா வேணாமான்னு யோசிச்சிட்டே இருந்தேன். ஏற்கனவே நம்ம வாசகி ஒருத்தங்க இன்பாக்ஸ் வந்தப்ப, அவங்க விஷயத்தை ஷேர் பண்ணிட்டு, நீங்களும் டேஸ்ட் எடுத்து பாதுகாப்பா இருங்கன்னு சொன்னாங்க! அந்த ஞாபகம் வரவும், சரி போய்த்தான் பார்ப்போமேன்னு நெனைச்சேன். ஒரு பெரிய வேன்! அதுக்குள்ளத்தான் மறைவா டெஸ்ட் பண்ணாங்க! ஒரு லேடி நர்ஸ், என்னைப் படுக்க வச்சு, ரெண்டு மார்பையும் சுத்தி அமுக்கிப் பார்த்தாங்க! எனக்கு வெளிய கட்டி மாதிரியோ, இல்ல காம்புல நீர் வரது மாதிரியோ எதுவும் இருந்தது இல்ல. சோ நான் ரிலேக்ஷாத்தான் இருந்தேன். அங்கத்தான் ஒரு ட்விஸ்ட்! ஆக்சுவலி வெளியேத்தான் கட்டி இருக்கனும்னு இல்ல. மார்புக்கு உள்ளயும் இருக்கலாமாம். அவங்க சொன்னாங்க, எனக்கு ரைட் ஹேண்ட் சைட் ப்ரெஸ்ட்ல லம்ப்(கட்டி) இருக்குன்னு. அங்கயே ஒரு டாக்டரும் இருந்தாங்க! அவங்கட்ட போக சொன்னாங்க!
அந்த டாக்டர் என்ன சொன்னாங்கன்னா, 35 வயசாகிட்டாலே இதெல்லாம் செக் பண்ண ஆரம்பிச்சிடனும். எனக்கு 46 ஆச்சி! ஆனா சொந்தமா நாமே வீட்டுல செய்யற ப்ரெஸ்ட் டெஸ்ட் கூட நான் செஞ்சது இல்ல! இதைப் பத்தின ஒரு விழிப்புணர்வு இல்ல! என்ன வாழ்க்கை வாழறோம்னு ஒரே கவலையா போச்சு! நீங்க ஒரு மாமோகிராம் டெஸ்ட் எடுத்துடுங்க! அதுல லம்ப் என்ன மாதிரியானதுன்னு தெரியும்னு சொல்லிட்டாங்க டாக்டர்! மனசே பாரமாகிட்டது! என்னன்னவோ நெனைப்பு. பாப்பாக்கு இப்பத்தானே 13, எனக்கு ஒன்னுன்னா அவள யாரு பார்ப்பா! நான் படுத்துட்டா என்னை யாரு பார்ப்பா! இப்படி அப்படின்னு!
பிறகு ஒரு மெடிக்கல் செண்டர்ல அப்பாயிண்ட்மேன்ட் ஃபிக்ஸ் பண்ணேன் மமோகிராம் செய்ய! என்ன செய்வாங்க, எப்படி செய்வாங்கன்னு ஒரு ஐடியாவும் இல்ல. நெட்ல தேடிப் பார்த்துக்கிட்டேன்! இப்படி டெஸ்டுனு போகிறப்ப என்ன செய்யனும்/ என்ன செய்யக் கூடாது?
1) பாடி ஸ்ப்ரே/ டியோ/ பவுடர் போடாதீங்க
2) கழுத்துல உள்ள தாலில இருந்து, சங்கிலி வரை கழட்டிடுங்க
3) மாரல் சப்போர்ட்டுக்கு யாரயாச்சும் கூப்பிட்டுப் போங்க!
4) பீரியட் டைம்ல போகாதீங்க
(இதெல்லாம் நான் கூகுள் பண்ணி பார்த்தது)
கிளினிக் உள்ள போய் அடையாள அட்டைக் குடுத்துப் பதிஞ்சாச்சு! பக்கு பக்குன்னு வேய்ட் பண்ணிட்டு உக்காந்திருந்தேன். பிறகு மாடி ரூமுக்கு அழைச்சிட்டுப் போனாங்க! இதான் அந்த ரூம்.

என்னோட பேரு!!!

மமோகிராம் மிசின் இப்படித்தான் இருக்கும்.

உள்ளுக்குப் போனதும் மேல மொத்தமா எல்லாத்தையும் கழட்டிட சொல்லிட்டாங்க. போட்டோஸ்டேட் செய்யற மாதிரி தட்டையா இருந்த இடத்துல ஒரு பக்க மார்ப வைக்கனும்! மேல உள்ள பாகத்த நகர்த்தி கீழ வரைக்கும் கொண்டு வந்து நம்ம மார்ப நடுவுல வச்சி அமுக்கறாங்க! ரொம்ப அழுத்தமா இருக்கும் அந்த அமுக்கு! பல்லைக் கடிச்சிக்கிட்டு வலியைப் பொறுத்துக்கிட்டேன்! முதல் தடவைனால கொஞ்சம் பயமா இருந்தது! பிறகு அதை ஸ்கேன் பண்ணுறாங்க!

நெக்ஸ்ட் வலது பக்க மார்புக்கும் அதே போல ப்ராசஸ்! மேல கீழ முடிஞ்சதுல!
இப்போ லெப்ட் அண்ட் ரைட் சைட் எடுக்கறாங்க! மிசின 180 டிகிரிக்குத் திருப்பி, நம்மள படுக்கற மாதிரி நிக்க சொல்லி மார்ப பிடிச்சு அதுல வச்சு சைட் ஸ்கேன் செய்யறாங்க! அதுக்கும் ஒரு அமுக்கு! நெக்ஸ்ட் ரைட் ஹேண்ட் சைட் மார்புக்கும் சைட் அமுக்கு! வலது பக்கம் எனக்கு சரியா படம் விழுகலையாம்! மறுபடியும் செஞ்சாங்க! கண்ணு கலங்கிடுச்சு! ஒரு வழியா முடிச்சுட்டு பணம் கட்டிட்டு (இங்க மலேசிய ரிங்கிட் 150.00) வீட்டுக்கு வந்துட்டேன்! ரெண்டு நாள் இருந்தது அந்த வலி.
பிறகுதான் வருது அந்தக் காத்திருப்பு நேரம். உடனே ரிசால்ட் குடுக்க மாட்டங்களாம்! எனக்கு இன்னிக்குத்தான்(21/5/2025) கிடைச்சது ரிசால்ட்! அப்போ நெனைச்சு பாருங்க எவ்ளோ மன உளைச்சல்ல இருந்திருப்பேன்னு. இன்னிக்கு தனியாத்தான் போனேன் ரிசால்ட் வாங்க! படபடன்னு அடிக்குது நெஞ்சு! உள்ள போய் உக்காந்தா தமிழ் ஆம்பள டாக்டர்! ரைட்டு!
"உங்காருங்கம்மா!" (எதே!!! அம்மா??????)
"ஹலோ டாக்டர்"
"எதுக்காக இந்த டெஸ்ட் எடுக்க நெனைச்சீங்க?" (யோவ்! ரிசால்ட்ட சொல்லுய்யா! இப்ப குறுக்கு விசாரணைத் தேவையா?)
பதில் சொல்லியாச்சு.
பேப்பர பிரிச்சுப் பார்த்துட்டு, என் முகத்தப் பார்த்தாரு. இன்னும் படபடபட!!!!!!!!
"ரிசால்ட்லாம் நல்லா இருக்குமா! பயப்படத் தேவையில்ல!!!"
இழுத்துப் பிடிச்சிருந்த மூச்ச அப்போத்தான் வெளிய விட்டேன்!
"தேங்க் யூ டாக்டர்!!!!!!!!!!"
"இனிமே ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செஞ்சிக்கிட்டா போதும்! ஆல் நார்மல்"
மனசு படபடப்பு அடங்கி ஒரு மாதிரி கால்ம் ஆகிட்டேன்! மனசுல பல சங்கல்பம்! இனி உடம்ப பார்த்துக்கனும்! ஒழுங்கா சத்தா சாப்பிடனும்! நடக்கனும்! இப்படின்னு ஆயிரம் எண்ணங்கள் முட்டி மோதுது! செய்யனும்! கண்டிப்பா செய்யனும்.
இந்தப் பதிவு வியூஸ்க்காக போட்டப் பதிவு இல்ல! என்னோட ரொம்ப பர்சனலான விஷயங்கள இங்க ஷேர் செஞ்சுருக்கேன்! எதுக்குன்னு கேக்கறீங்களா? என்னைப் போல விழிப்புணர்வு இல்லாம நீங்களும் இருந்துடக் கூடாதுன்னுதான்! இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நம்பறேன்! வரும் முன் காப்போம்!!!
டேக் கேர் டியர் ஆல்!

Last edited: